அத்தியாயம் 25
“லவ்வுக்கப்புறம் லைப் இல்லன்னா, 25 வயசுக்கப்புறம் எவனுமே வாழ மாட்டான்டா”
(படம் – ராஜா ராணி)
மீண்டும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டார்கள் அவர்கள். அவள் தாய்மை அடைந்திருக்கும் செய்தி கேட்ட தேவிக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அங்கேயே இரவு தங்கிச் செல்லலாம் என மற்றவர்கள் வற்புறுத்தியும் கிளம்ப வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றாள். வீரா அலுங்காமல் குலுங்காமல் காரை ஓட்டினான். மற்றவர்களை வீட்டில் இறக்கி விட்டு, வேந்தனும் தேவியும் மட்டும் அவர்கள் இல்லம் நோக்கிப் பயணப்படனர்.
தேவியின் மௌனம் வேந்தனைக் கொல்லாமல் கொன்றது.
“ரோஜா! களைப்பா இருக்கா? கொஞ்ச நேரம் படுத்துக்கறீயா?”
“பரவாயில்லை மலர். நேரா ஹாஸ்பிட்டல் போ”
“காலையில போய் ஃபுல்லா செக் அப் பண்ணிக்கலாம்மா”
“நோ! ஐ வாண்ட் டூ கோ நவ்”
வண்டி நேராக ஹாஸ்பிட்டல் சென்றது. போவதற்குள் அவள் எப்பொழுதும் கன்சல்ட் செய்யும் டாக்டரை போன் செய்து வீட்டிலிருந்து வரவழைத்தாள். அவள் மட்டும் டாக்டர் அறைக்குச் செல்ல முனைந்தவளின் கையைப் பற்றிக் கொண்டு தானும் உள்ளே நுழைந்தான் வேந்தன். அவனை ஆழ்ந்து நோக்கியவள், ஒன்றும் சொல்லாமல் அவனுடன் நுழைந்தாள்.
ரத்தம் எடுத்தவுடன், யூரின் டெஸ்டுக்கு அனுப்பினார் டாக்டர். முடிவுகளும் உடனுக்குடன் வந்தன. பணம் பதினொன்றும் செய்யுமே.
“காங்கிராட்ஸ் மேடம். உங்க பிரெக்னசி இஸ் கன்பர்ம். நீங்க கொஞ்சம் அனிமிக்கா இருக்கீங்க. அதுக்கு சில டேப்லட்சும், ஃபோலிக் அசிட் டேப்லட்டும் தரோம். கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நீங்க தாராளமா நார்மல் ரூட்டினை கண்டினியூ பண்ணலாம். டேக் கேர்” என டாக்டர் சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் வேந்தன்,
“அனிமிக்கா? டாக்டர்! அப்படினா குழந்தைலாம் வேணாம். என் வைஃப்தான் எனக்கு முக்கியம்” எனப் பதறினான்.
“இதெல்லாம் நார்மலா பிரெக்னண்ட் லேடிஸ்கு வரதுதான் சார். சத்தான பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் இதெல்லாம் சாப்பிட்டாலே போதும். நீங்க பதட்டப்பட வேண்டாம்” எனச் சொன்னார் டாக்டர்.
டாக்டர் கர்ப்பத்தை உறுதிபடுத்தியதைக் கேட்டு முகம் மலர அமர்ந்திருந்த தேவி, வேந்தனின் பேச்சைக் கேட்டு அவனை முறைக்க ஆரம்பித்து விட்டாள்.
“நாங்க வரோம் டாக்டர்!” என அவனின் கையைப் பிடித்து இழுத்தவள், கோபமாகவே வெளியேறினாள்.
மருந்துகளைப் பெற்றுக் கொண்டு, பணம் செலுத்தி வெளியேறினார்கள். காரில் மீண்டும் மௌனம். பேச வந்த வேந்தன் அவள் களைப்பாக வேன் சீட்டில் சாய்ந்திருக்கும் தோற்றத்தில் அமைதியாகி விட்டான்.
வீட்டுக்கு வந்தவள் சாப்பிடாமல் மாடியேறவும்,
“ரோஜா! வந்து சாப்பிடு. இந்த மாதிரி நேரத்துல பட்டினியா இருக்கக் கூடாது” என வற்புறுத்தி இரண்டு இட்லிகளை ஊட்டி விட்டான்.
ஒரு கிளாஸ் பாலையும் புகட்டி விட்டான். பிறகு அவள் பின்னோடு வந்தவனை,
“நீ சாப்பிடலயா மலர்?” எனக் கேட்டாள் மனைவி.
“இன்னிக்கு மனசும் வயிறும் நிறைஞ்சு இருக்கு ரோஜா. எனக்குச் சாப்பாடு வேணாம்”
அவன் கைப்பற்றி டைனிங் அறைக்கு இழுத்து சென்றாள் தேவி. அவன் செய்த மாதிரியே இரண்டு இட்லிகளை சாம்பாரில் குளிப்பாட்டி அவனுக்கு ஊட்டி விட்டாள். திருமணமான தினத்திலிருந்து, இன்றுதான் இவள் ஊட்டி விடுகிறாள். வேந்தனுக்கு மனம் குளிர்ந்து விட்டது.
ஊட்டிய பிறகும் இன்னும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை,
“என்ன இன்னும் பார்வை?” எனக் கேட்டாள் தேவி.
“ரெண்டு இட்லி பத்தல ரோஜா!” எனச் சொல்லி அசடு வழிந்தான் வேந்தன்.
வாய் விட்டுச் சிரித்தவள்,
“பசிய வச்சிக்கிட்டு எதுக்கு இந்த பில்ட் அப் மலர்? நமக்கே ஒரு பிள்ளை வர போகுது. நீ இன்னும் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணுற” என்றாள்.
இருவரும் அசதி தீர குளித்து விட்டு வந்தார்கள். அபார்ட்மெண்டுக்கு போகாமல் தன் கூடவே தங்கி இருந்தவளை ஆசையாகப் பார்த்தான் வேந்தன். அந்த நேரத்தில் தலைக்குக் குளித்திருந்தாள்.
“இந்த நேரத்தில ஏன் தலைக்கு குளிச்ச ரோஜா? இங்க வந்து உக்காரு” எனச் சொல்லி ஹேர் டிரையர் கொண்டு அவள் கூந்தலை உலர்த்தினான்.
பின் இருவரும் எப்பொழுதும் போல் படுத்துக் கொண்டார்கள். திடீரென வலியில் அலறினான் வேந்தன்.
“ஏன்டி என்னைக் கிள்ளுன?”
“இல்ல மலர்! நடக்கறதெல்லாம் நிஜம்தானான்னு சோதிச்சுப் பார்த்தேன். நீ கத்தனவுடன்தான் கன்பர்ம் பண்ணேன்”
அவனுக்குச் சிரிப்பு வந்தது. எழுந்து பெட்சைட் விளக்கைப் போட்டவள் கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அவனும் அவளைப் போலவே அமர்ந்து கொண்டான். இருவருக்கும் இடையில் ஒரு தலையணையே வைக்கும் அளவுக்கு இடைவெளி இருந்தது.
“மலர், எப்படி மலர் இது சாத்தியம்? என்னால இன்னும் நம்ப முடியலை. ஓன் நைட்ல எப்படி ஸ்கோர் பண்ண?” முகம் முழுக்க ஆச்சரியமாகக் கேட்டாள்.
பலமாகச் சிரித்தான் வேந்தன்.
“நான் ஆம்பிள சிங்கம்டி!” எனக் காலரைத் தூக்கினான் வேந்தன்.
“ஏன் ஆம்பள சிங்கம் மட்டும்தான் பிள்ளை குடுக்குமா? ஆம்பள புலி, ஆம்பள எலி, ஆம்பள யானை, பூனை இதெல்லாம் பெத்துக்காதா?”
“இப்படி கேள்வி கேட்டா நான் என்னன்னு பதில் சொல்லுறது. ‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே’ அப்படின்னு வேணும்னா பாடலாம். கடவுள் குடுத்த வரம்டா இது”
“செய்யறதெல்லாம் நீ செஞ்சிட்டு கடவுள் மேல பழியைப் போடுற. பிராடு நீ!” எனக் கொஞ்சினாள் தன் கணவனை.
“எனக்கு நாள் தள்ளனப்ப ஒன்னும் தெரியலை. ஸ்ட்ரெஸ்ல அடிக்கடி இப்படி நடக்கும் மலர். உங்க அத்தை சொன்னப்ப கூட எனக்கு நம்ப முடியலை. அதான் முத வேலையா ஹாஸ்பிட்டல் போய் தெரிஞ்சுகிட்டேன். நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா மலர்? கடவுள் நேருல வந்தா ஒரு பக்தன் எவ்வளவு சந்தோசப்படுவானோ அதுக்கு மேல நான் ஹேப்பியா இருக்கேன். வானத்துல பறக்குறேன் மலர்”
“எனக்குப் புரியுதுடா! சில்க் மறுபடியும் பொறந்து வந்தா தமிழ்நாட்டு ஆம்பிள்ளைங்க எப்படி சந்தோஷப்படுவாங்களோ, அதுக்கும் மேல ஹேப்பியான மோமெண்ட் இது”
“சில்க்கா? யாரு அது மலர்”
“அது வந்துமா!” எனத் திணறினான் அவன்.
போனை எடுத்து கூகுள் செய்து பார்த்தவள், அவனை மொத்து மொத்தென்று மொத்தி விட்டாள்.
“நான் எவ்வளவு சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன், உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா? கார்த்திக் அடிக்கடி சொல்லுவானே, என்னது அது? ஹா, பிரிச்சு மேஞ்சிருவேன்! பீ கேர்புல்”
“ரொம்ப இமோஷனலா பேசுனியா, அதான் உன்னை ரிலாக்ஸ் பண்ணேண்டா. இப்ப கண்டினியூ பண்ணு ரோஜா” எனச் சமாளித்தான் வேந்தன்.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 25
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.