வணக்கம் டியர்ஸ்,
ரொம்பவே லேட்டாகிருச்சு! எனக்கும் பாப்பாக்கும் மாத்தி மாத்தி காய்ச்சல், சளி, இருமல்னு போய்ட்டு இருக்கு! அதான் லேட்!!!
இன்னிக்கு ஏழாவது நாள் பத்தி பார்ப்போம்.
காலைல நாலுக்கே எழுந்து கிளம்பி, லக்கேஜ்லாம் அடுக்கிட்டோம்! இன்னிக்கு அப்பாவும் மகளும் ஊருக்குக் கிளம்பறாங்க! எனக்கு உடம்பு முடியல! அதோட மனசு வேற கஷ்டமா இருக்கு பாப்பா கிளம்பறாளேன்னு. ப்ளான் போட்டப்போ ஒரு வைராக்கியம். என்ன இது எல்லாமே நான்தான் பார்க்கனுமா! எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா? நான் எதையும் அனுபவிக்கக் கூடாதான்னுலாம் போராட்டம்! ரெண்டு வருஷத்துக்கு ஒருக்க நான் லீவ் போடறேன்! அதுவும் ஒரே வாரம்! அதுக்கு விடமாட்டாங்களான்னு ஏதேதோ எண்ணம்! ஆனா அந்த லீவ் வரப்போ அச்சோ புள்ள என்ன பண்ணுவா, எப்படி சமாளிப்பா நாம இல்லாமன்னு கவலை வந்திடுது! எல்லா அம்மாக்களுக்கும் உள்ளதுதான் போல!!!
தங்கம் ஆட்டோ சொல்லிருந்தாங்க! ரெண்டு ரெண்டு ஆளா லக்கேஜோட கொண்டு போய் காலடிபேட் மெட்ரோல இறக்கி விட்டாரு அவரு! மெட்ரோ எடுத்து ஏர்போர்ட்டுக்கு ஒரு பயணம் நாங்க நாலு பேரும்! பாப்பா என் மேல சாஞ்சிட்டே தூங்கிட்டு வந்தா. அங்க போனதும் கட்டிப் புடிச்சு பாய் சொல்லியாச்சு! நல்ல வேள இவ அழுகல! அவங்க நாநா சொல்லிருப்பாரு போல, அழ கூடாதுன்னு!
View attachment 155
அப்பாவும் மகளும்
இங்க இன்னொரு விஷயம் பதிவு பண்ண விரும்பறேன்! இது ஏர் ஆசியா(Air Asia Flight) ஃப்ளைட் எடுக்கறவங்களுக்கு. ஹேண்ட் கேரி(hand carry) அதாவது நாம கைல புடிச்சு ப்ளைட் உள்ள தூக்கிட்டுப் போற பேக்குக்கு 7 கிலோ அலவ் பண்ணுறாங்க! ஆனா, அந்த ஏழு கிலோல உங்க ஹேண்ட் கேரி, லப்டாப்(laptop) பேக், கைபை எல்லாமே சேர்த்து அடங்கும்! அதனால இதெல்லாமே சேர்த்து 7 கிலோ வருதான்னு எடை போட்டுப் பார்த்துட்டே போங்க! இது என் அனுபவத்துல நடந்தது! இன்னும் விவரம் தெரியனும்னா ஏர்லைன காண்டேக்ட் பண்ணிக்கோங்க!
நாம செக் இன் (check in) பண்ணுற பேக்ல பேட்டரி(battery), பவர் பேங்க்(powerbank), லாப்டாப், போன், இதெல்லாம் இல்லாம பார்த்துக்கோங்க! ஹேண்ட் கேரி பண்ணுற பேக்ல லிக்குவிட் ஐட்டம் அதாவது குடிக்கற தண்ணி. லோஷன்(lotion), இது போல ஐட்டங்கள் இல்லாம பார்த்துக்கோங்க! சில ஏர்லைன்ல மினிமம் இவ்ளோன்னு அலவ் பண்ணுவாங்க! ஆனாலும் ஏன் ரிஸ்க்குன்னு நான் அப்படி ஏதும் ஹேண்ட் கேரில வைக்கல! ட்ராவல் ஒரு படபடப்புன்னா, இந்த லக்கேஜ் கிளியரேன்ஸ் எப்பவுமே எனக்கு டபுள் படபடப்புத்தான்!
இவங்க உள்ள நுழைஞ்சு லக்கேஜ் செக் இன் முடிக்கற வரைக்கும் நான் ஸ்ட்ரேஸ்லயே வெளிய உக்காந்திருந்தேன். 25 கிலோத்தான் லக்கேஜ் கேபசிட்டி வாங்கனோம்! நானும் நைட்டெல்லாம் அளந்துதான் அடுக்கனேன்! ஆனாலும் நாம அளக்கறதும், ஏர்லைன்ல அளக்கறதும் கண்டிப்பா மாறுபடும்! ஏர்லைன்ல போய் கூட காட்டுனா, எக்ஸ்ட்ரா பேய்மேண்ட் ரொம்ப அதிகமா வரும். ஒரு வழியா மேசேஜ் வருது, ஆல் கிளியர்னு. இருந்தாலும் அவங்க செக்குரிட்டி செக் முடிக்கற வரைக்கும் ஏர்போர்ட்லயே இருந்தோம். பிறகுதான் கிளம்பனோம்.
ஏர்போர்ட் மெட்ரோ கீழ ஒரு மோமோஸ் ப்ளேஸ்! அங்க போய் டீ குடிக்க உக்காந்தோம் நானும் தங்கமும். மோமோஸ் சாப்படறியான்னு இவங்க கேக்க, ஓகேன்னு சொல்லிட்டேன். வெஜிடேபிள் மொமொஸ்! டீ வந்து அரை மணி நேரம் ஆச்சு! ஐட்டத்த காணோம்! நாங்க வேற ரஷ்ல இருக்கோம்! லேட்டாகுமான்னு கேட்டுட்டு இல்லைன்னு சொல்லவும்தான் ஆர்டரே பண்ணோம்! ஒரு வழியா மோமோஸ் வந்தது. வேய்ட்டுக்கு வொர்த்துதான்! செம்ம டேஸ்ட்! அப்புறம் மெட்ரோ எடுத்து கிளம்பியாச்சு.
நான் மலேசியால இருந்து வரப்பவே சாரி ப்ளவுஸ் தைக்க ப்ளவுஸ் மேட்டீரியல் எடுத்துட்டு வந்தேன்! நேரா தங்கத்துக்குத் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போய்ட்டோம்! காஞ்சிபுரத்துல வாங்குன சாரி, கரும்பு சாரி எல்லாத்துக்கும் ப்ளவுஸ் தைக்க குடுத்தோம் அவங்கட்ட! அதுக்குப் பிறகு விடாப்பிடியா ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போய்ட்டாங்க தங்கம். என் குரல் மாறி ஸ்ரேயா கோஷல் குரல் வந்துட்டதுல மேடத்துக்கு கோடேர்ட்டல்!!
View attachment 156
டாக்டர் செக் பண்ணிட்டு BP பத்து பாயிண்ட் ஏறிருக்குங்கன்னு சொல்லிட்டாரு. நான் சிரிச்சுக்கிட்டே, சீக்கிரம் இறங்கிடும்! ரெண்டு BPயையும் இன்னிக்குத்தான் பேக் பண்ணி விட்டேன்னு சொன்னேன். அவருக்குப் புரியல! தங்கத்துக்கு ஒரே சிரிப்பு. நல்லா ரெஸ்ட் எடுங்கன்னு அவர் சொல்ல, இவங்க இன்னிக்கு வந்தே பாரத் ட்ரேன்னு சொல்லிட்டாங்க! அவரு ஒரு பார்வைப் பார்த்தாரு பாருங்க!!!ஹஹஹ!! நல்ல வேளை ஊட்டிக்குப் போறோம்னு நாங்க சொல்லல!!!அவ்வ்வ்வ்! நர்ஸ் ஊசியை ஒன்னு பச்சக்க்குன்னு குத்தி விட்டாங்க! எங்கன்னுலாம் கேக்க கூடாது!
அப்புறம் வீட்டுக்குப் போயாச்சு! காலை உணவு முடிச்சதும், மருந்து சாப்பிட்டுட்டு பேக்கிங் ஆரம்பிச்சாச்சு! கிட்டத்தட்ட ஆறு நாளுக்கான துணிலாம் எடுத்து வச்சேன். தங்கம் தலைக்கு ஹெர்பல் பொடி போட்டு விட்டாங்க! அந்த ஈரத்துக்கும், ஊசி போட்டதுக்கும், மருந்து சாப்பிட்டதுக்கும் சேர்த்து வச்சி கண்ணைக் கட்டிடுச்சு! அப்படியே தூங்கிட்டேன்! என்னமோ சொர்க்கத்துல இருக்கற மாதிரி ஃபீல்! தங்கம் கதவ தட்டறாங்க! கண்ண திறக்க முடியல! உடம்பு தள்ளாடுது சரக்கடிச்ச மாதிரி
ஒரு வழியா சொன்ன பேச்சு கேக்காத கையையும் காலையும் இழுத்து வச்சுக் குளிச்சுட்டு வந்து லஞ்ச் சாப்பிட உக்காந்தேன்! ரசம்!!!!! தங்கம் ரசம் வைக்கறதுல எக்ஸ்பெர்ட்!!! வேற ஒன்னுமே சைட் டிஷ் வேணாம்! வெறும் ரசத்துலயே சாதம் பிசைஞ்சு சாப்பிட்டறலாம்!
மறுபடி ஆட்டோல பயணம்! செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு! வந்தே பாரத் ட்ரேன் டூ கோயம்புத்தூர்!!!!செம்மயான பயணம்! நல்ல கம்பர்டபிள் ஃபீல்! விண்டோ சீட் வேற!! அவ்ளோ அழகான சீனரிஸ்! கண்டிப்பா வாழ்க்கைல ஒரு தடவையாவது இந்த ஜேர்னிய நீங்க அனுபவிச்சுப் பார்க்கனும்! மருந்து மயக்கம்! ஆனாலும் தூங்காம கண்ணத் திறந்து வெளிய பார்த்துட்டே வந்தேன்!
View attachment 157

View attachment 158
View attachment 159
மசால் வடை, பட்டர் ஜேம் பன், மசாலா டீ பாக்கேட்! சுடுதண்ணி குடுப்பாங்க! அதுல நாமலே மிக்ஸ் பண்ணிக்கனும்! வடை செம்ம டேஸ்ட்டி! ப்ரெட்டும்தான்!
ஜெர்னி முழுக்க ஒரே பச்சை பசேல்! ஹவுஸ் ஓனரும் பாப்பாவும் மலேசியா ரீச் ஆகிட்டாங்கன்னு மேசேஜ் வந்ததும், மனசு ரிலேக்சாச்சு! அதுக்குப் பிறகுதான் நெறைய போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சேன்.
View attachment 160
டின்னருக்கு தோசை, கோழி குழம்பு வித் தயிர்! தயிர் நான் சாப்பிடல! தோசை கொஞ்சம் சுமார்தான். குழம்பு கொஞ்சம் காரம் என் டேஸ்ட்டுக்கு! ஆனாலும் சாப்பிட்டுட்டேன்!
கிட்டத்தட்ட எட்டு மணிக்கு கோயம்புத்தூர் ரீச் பண்ணோம்னு நெனைக்கறேன்! லேசான மழை! எங்க போனாலும் இந்த மழை என்னை ஃபோலோவிங்!!!!!!!!
View attachment 161
View attachment 162
View attachment 163
View attachment 164
குளிரான ஒரு காலநிலை! அன்னைக்கு நைட் தங்கமலரோட ப்ரேண்டோட ப்ரேண்ட் வீட்டுல தங்கறதா ஏற்பாடு! ஒரு பேச்சிலர் பையன். ரைட் புக் பண்ணி அவன் வீட்டுக்குப் போயாச்சு! ரொம்ப நல்லா பார்த்துகிட்டான் எங்கள. வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணி குடுத்து, வீடெல்லாம் சுத்தி காட்டி, நல்லா பேசனான். அவனோட பெட்ட எங்களுக்கு விரிச்சு விட்டுட்டு, பாவம் பையன் பாய்ல படுத்துக்கிட்டான்!
மறுநாள் நாங்க ஊட்டிக்கு ஸ்பெஷல் ட்ரேன்ல போறத பத்தி சொல்லிட்டு இருந்தோம்! எப்படி வித விதமா அந்த ஜேர்னி பத்தி கமேண்ட் போட்டிருக்காங்க, அதுல போறதுக்கு சைக்கிள்ல போயிடலாம்னுலாம் எழுதிருக்காங்கன்றத சொன்னோம்! அந்த ட்ரேய்ன் ஜெர்னிக்கு இவனும் டிக்கேட் ட்ரை பண்ணிட்டே இருக்கானாம்! கிடைக்கவே மாட்டுதாம்! பிறகு அவன் ஒரு வாசகம் சொன்னான்! என் டைரில இனி இது திருவாசகம்!!!!
"நல்லா இருக்கோ இல்லையோ! அதை நான் போய் பார்த்து அனுபவிச்சு தெரிஞ்சுக்கறேன்!" அப்படின்னு! சின்னப் பையன் வாயில இருந்து எவ்ளோ பெரிய வாழ்க்கைத் தத்துவம் பாருங்க! மத்தவங்க சொல்றாங்கன்னு எவ்ளோ விசயத்த நாம செய்ய வேணாம்னோ, பார்க்க வேணாம்னோ விட்டிருப்போம்! நான் நெறைய அப்படி மிஸ் பண்ணிருக்கேன்! ஆனா ஒரு தடவை பார்த்துட்டு சுயமா முடிவெடுங்கன்னு அவன் சொன்னது ரொம்பப் பிடிச்சிருச்சு!!!
நைட்டுக்கான மருந்து போட்டுட்டு படுத்தாச்சு!!!
அடுத்த நாள் ஜெர்னில அழகழகான போடோஸ்லாம் வரும்!
தொடரும்....
Author: VanishaAdmin
Article Title: Day 7--(18/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.