Day 6--(17/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
வணக்கம் டியர்ஸ்,

இன்றைக்கு ஆறாவது நாள்! ஹவுஸ் ஓனர் வைஃபுக்கு(அதாங்க நானு) இருமல், சளி, தொண்டையில் கீச் கீச்னு ஆரம்பிச்சிடுச்சு! அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அன்னிக்கும் காலைல எழுந்து கிளம்பியாச்சு. இன்னிக்கு எங்க பிளான்ல வடபழநி முருகன் வரார். தங்கமலருக்கு காலையில ஒரு அப்பாயிண்ட்மேன்ட்! முடிஞ்சதும் ஃபோரம் மால்ல சந்திக்கறதா ப்ளான். எங்களுக்கு ரைட் புக் பண்ணி குடுத்துட்டாங்க. அதோட காலையிலே நல்ல சட்னியோட செம்ம ப்ரேக்பஸ்ட்!!!

View attachment 131
இது அவங்க வீட்டு மொட்டைமாடி!!! என் ஹவுஸ் ஓனர் எவ்ளோ கலைத்துவமா போட்டோ எடுத்திருக்காரு பாருங்க!

முதல் நாள் ராத்திரி அம்மா போன் போட்டு, எனக்கு வேல் மாறல் புக்கும் ஒரு வேலும் வாங்கிட்டு வான்னு சொல்லி விட்டாங்க! அதெல்லாம் கோயில் முன்னாடியே கிடைக்கும்னு தங்கமும் சொன்னாங்க! தங்கமலருக்கு நாங்க மூனு பேரும் எப்படி அங்க போய் கைட் பண்ண ஆள் இல்லாம சமாளிக்கப் போறோம்னு ஒரே கவலை. Ticket எடுத்து போங்க, அப்போத்தான் முருகன கிட்டக்க பார்க்க முடியும்னு சொல்லித்தான் அனுப்பனாங்க.

கார்ல இருந்து இறங்கி கோயிலுக்குள்ள போனோம். நாங்க நுழைஞ்ச டைம்ல கூட்டம் இல்ல.

View attachment 132

View attachment 133

View attachment 134

View attachment 135

டிக்கேட் எடுத்துட்டு, விநாயகர கும்பிட்டுட்டு முருகன பார்க்கப் போனோம். கியூவே இல்ல. நிறுத்தி நிதானமா அழகன் முருகன கண் குளிர பார்த்தோம்! இந்தக் கோயிலுக்கு போயே ஆகனும்னு அடம் பிடிச்சேன் நானு! என்ன காரணம்னா ரமணிமா கதைல இந்தக் கோயில அடிக்கடி மென்ஷன் பண்ணிருப்பாங்க! அதோட நெறய கதைகள்ல கூட வரும், திருமணம் இங்க நடந்ததுன்னு. ஏன் நானே கூட இந்தக் கோயில பத்தி எழுதிருக்கேன்! ஆனா கோயில பார்த்தது இல்ல! சோ நேரா எப்படி இருக்கும்னு போய் பார்த்தாச்சு.

வெளிய வந்ததும்தான் ஞாபகம் வருது அம்மா சொன்னத வாங்கலன்னு! முருகன் பாதத்துல வேற வச்சி எடுத்துட்டு வான்னு ஆர்டர். வரிசையா இருந்த கடைகள்ல ஒரு சின்னப் பையன் கடைல போய் வேல் வாங்கனேன். அதுக்குப் பக்கத்துல புக் கடையும் இருந்தது. அப்பாவும் மகளும் அங்கயே நிக்க, நான் மறுபடி உள்ள ஓடினேன்! இப்போ பெரிய கியூ ஆகிடுச்சு! ஐயர் ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன், முருகன் பாதத்துல வைக்க முடியுமான்னு! அப்படி எதையுமே அவர் கிட்ட வைக்க முடியாதாம், உற்சவர் கிட்ட போங்கன்னு சொல்லிட்டாரு! அவர தேடி அலைஞ்சா, அன்னிக்கு விசேஷம் போல! அவ்ளோ கூட்டம் முண்டி அடிச்சிட்டு பூஜைல இருக்கு! எப்படியோ அடிச்சுப் புடிச்சு உற்சவர் பாதத்துல வேல வச்சி வாங்கிட்டு வந்தேன். வெளிய வந்தா, எப்பப்பா என்ன ஒரு கூட்டம். நல்ல வேளை நாங்க சீக்கிரமே வந்தோம்.

அப்புறம் வழி கேட்டுட்டே ஃபோரம் மால் தேடுனோம். போன்லயும் மேப் பார்த்துட்டே போனோம். அங்க பார்த்தா நெக்சஸ் மால்னு இருக்கு! உள்ள போய் விசாரிச்சா, ஃபோரமத்தான் இப்போ நெக்சஸ்னு மாத்திட்டாங்களாம். நல்லா பெருசா அழகா இருந்தது. நுழைஞ்சதும் மெக்டோனல்ட்! அப்புறம் என்ன!!!!! மேடத்தோட சேர்ந்து எங்களுக்கும் அங்கத்தான் லன்ச்.

View attachment 136

View attachment 137

View attachment 138

இவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள நான் எழுந்து மால்ல ஒரு ரவுண்ட் வந்தேன். ட்ரேண்ட்ஸ்லாம் போய் பார்த்தேன்! ரொம்ப எக்ஸ்குளுசிவ்வா இருக்கற மாதிரி இருந்தது. ஒன்னும் வாங்கல. மேல மாடில ரொம்ப அழகான cinema இருக்கு போல! டிக்கேட் இருந்தாத்தான் விடுவேன் சொல்லிட்டாங்க! சோ போக முடியல.

அப்புறம் தங்கம் வந்ததும் வடபழநி மெட்ரோக்கு நடந்து போனோம். அங்கிருந்து வண்ணாரப்பேட்டை மெட்ரோல இறங்கி ரெண்டு ஆட்டோ எடுத்து சௌகார்பேட் வந்தோம்.

View attachment 139

பாப்பாவுக்கு கொஞ்சம் டாப்ஸ், accessories, பொட்டு, வளையல், ஜிமிக்கிலாம் வாங்கனும்னு லிஸ்ட் எடுத்துட்டு வந்திருந்தேன். மொட்டை வெயிலு :) ஹவுஸ் ஓனருக்கு வேற ஸ்டமக் football இன்னும் சரியாகல!!! இந்த களேபரத்துலயும் கொஞ்சமா வாங்கிட்டேன்! நம்ம பாப்பாவுக்கு பத்து செட்ல மூனு சூஸ் பண்ண தூக்கிப் போட்டா, ரெண்டே நிமிஷத்துல இது, இது, இதுன்னு மூனு டாப்ஸ் காட்டிட்டு அவ வேற பார்க்க போய்ட்டா! கடைக்காரனே இப்படி சூஸ் பண்ணற ஆள நான் பார்த்ததே இல்லைன்னுட்டான்!!!

View attachment 140

வாங்கி குடிக்கல! ஆனா போட்டோ எடுத்தேன்! தங்கம்ஸ் நாவல் பழம் வாங்கினாங்க. எனக்கு சளின்னு குடுக்காம மூனு பேரும் என் முன்னுக்கே சாப்பிட்டாங்க!!!! :(

பானி பூரி இடத்துக்குப் போனோம்! ஆனா சாப்பிடல! பாப்பா வேணாம்னுட்டா, இவரும் வேணாம்னுட்டாரு! எனக்கும் மூட் இல்ல! சோ சாப்பிடல. போன தடவை வந்தப்ப சாப்பிட்டேன்! ரொம்ப நல்லா இருந்தது.
 

Author: VanishaAdmin
Article Title: Day 6--(17/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
View attachment 141

View attachment 142

View attachment 143

அங்க முடிச்சிட்டு, மறுபடி மெட்ரோ போய் காலடிபேட்ல இறங்கிட்டோம்! அங்கிருந்து ஒரே ஆட்டோல நாலு பேரும் வீட்டுக்குப் போயாச்சு! இவங்க ரெண்டு பேர் ஓய்வெடுக்க, தங்கம் வீட்டுல வேலையைப் பார்க்க, நான் லக்கேஜ் அடுக்க ஆரம்பிச்சேன் அப்பாவுக்கும் மகளுக்கும். மறுநாள் அவங்க கிளம்பறாங்க.

சௌகார்பேட்ல இருந்து சப்போஸ் மெரினா பீச்சுக்குப் போகற ப்ளான். இங்கத்தான் உடம்பு முடியலையே! அப்பவும் gold(தங்கம்) கேட்டுட்டே இருந்தாங்க போலாமன்னு! ஏன்னா ஹவுஸ் ஓனருக்கு எம்.ஜி.ஆர்னா உசுரு! அவரோட சமாதி பார்க்கனும்னு சொல்லிட்டு இருந்தாரு! ஏதோ ஒரு சமயம் வரோம்! ஏன் மிஸ் பண்ணனும்னு சொல்லிட்டே இருந்தாங்க! சரின்னு ரைட் புக் பண்ணி சரித்திரம் வாய்ந்த மெரினாக்கு கிளம்பியாச்சு.

View attachment 144

View attachment 145

View attachment 146
அன்றைக்கு முஹராம் பப்ளிக் ஹோலிடே! அவ்ளோ கூட்டம் பீச்ல. கடைகள் இருக்கற வழியா நடந்து போனோம்! சைக்கில் கேப்ல நான் துப்பாக்கில பலூன் வேற சுட்டேன் :) நான் அஞ்சு குண்டு, பாப்பா அஞ்சு குண்டு! கடலுக்கு நடக்கறோம், நடக்கறோம், நடந்துட்டே இருக்கோம்..பாப்பா டயர்ட் ஆகிட்டா! நாளைக்கு நான் கிளம்பறேன் இன்னுக்கு என்னை இப்படி நடக்க வைக்கறீங்கன்னு அழுகை! ஏற்கனவே நான் வரல, அவங்க ரெண்டு பேர்த்தான் மலேசியா கிளம்பி போறாங்கன்னு வேற அழுகை! நீங்களும் வாங்க எங்க கூடன்னு ஒரே சோகம்! இதுல பஸ்க்கின் ரோபின்ஸ் ஐஸ்கிரீம் கேட்டா! அதுதான் நம்ம நாட்ல இருக்கே, உனக்கு ஐபேக்கோ வாங்கித் தரேன்னு சொல்லி அதை வேற வாங்கிக் குடுக்கல! நேரம் ஒரு பக்கம் இடிக்குதுன்னா, போற இடத்துல இவ கேட்டது கிடைக்கனுமே!!

பீச்ல பத்தே நிமிஷம்தான் உக்காந்தோம்! எனக்குப் பத்தவே பத்தல! நான் மட்டும் போய் கால் நனைச்சிட்டு வந்தேன். பிறகு ரைட் புக் பண்ணி கிளம்பியாச்சு! அழுத களைப்புல மேடம் தூங்கிட்டா! மழை வேற! நல்ல வேளை ஒரு ஐபேக்கோ திறந்திருந்தது! அவங்க அப்பா ஓடிப் போய் பேக் பண்ணிட்டு வந்தாரு.

View attachment 147

வீட்டுக்கு வந்ததும் எழுப்பறேன், எழுந்துக்க முடியல அவளுக்கு! ஐஸ்க்ரீம் இருக்குன்னு சொன்னதும், படக்குன்னு முழிச்சாச்சு! அதைப் போட்டுக் குடுத்ததும்தான் முகத்துல லேசா சிரிப்பு. டின்னர் சாப்பிட்டுட்டு, ரூமுக்கு வந்தாச்சு! இவங்க ரெண்டு பேரும் தூங்க, நான் விடிகாலை ரெண்டு மூனு வரைக்கும் பேக் பண்ணி, வெய்ட் அளந்து பார்த்துன்னு ஒரே குதூகலமா போச்சு நேரம்!

மீதிய அடுத்தப் பதிவுல பார்க்கலாம்!!!!


தொடரும்....
 

kumarsaranya

Active member
Aug 4, 2024
52
-40
28
உங்க ஹவுஸ் ஒனர் போட்டோ ஷூட் சூப்பர் பொண்ணையும் ஹவுஸ்ஒனரையும் அனுப்பிட்டு நீங்க ஜாலியான ஊர் சுத்த போறிங்க
 
  • Like
Reactions: VanishaAdmin