Day 4--(15/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
வணக்கம் டியர்ஸ்,

நான்காவது நாள். சென்னைல இருந்து திருவண்ணாமலை கிளம்பறோம்!

ஏன் இந்தக் கோயில்?

சில வருஷமா சிவராத்திரிக்கு கண்ணு முழிக்கறேன் நான். பக்தி முத்திப் போச்சான்னு கேட்டா, அப்படியும் தெரியல! ஆனா அந்த நேரம் கண் முழிக்கறப்ப என்னவோ குட் வைப்ரேஷன் இருக்கு! ஆரம்பத்துல கண்ணு மட்டும் முழிப்பேன். சும்மா எதாச்சும் வீடியோஸ் பார்ப்பேன்! போகப் போக திருவாசகம் படிக்க ஆரம்பிச்சேன். லைவ்வா அன்னைக்கு சிவன் கோயில்ல சிவலிங்கத்துக்குப் பால் ஊத்தி அர்ச்சனைப் பண்ணறத பார்க்க ஆரம்பிச்சேன்! அப்படியே எஸ்.பி.பி பாடன சிவன் பாடல்களயும், ஓம் சிவோஹம் பாட்டையும் கேக்க ஆரம்பிச்சேன். அதெல்லாமே சிவராத்திரி டே மட்டும்தான். மறுநாள் நானா அதுன்றது போல லவ் ஸ்டோரி எழுத உக்காந்துருவேன் :)

அப்போத்தான் சிவன் தளமான திருவண்ணாமலைக்குப் போகனும்னு வித்து கொஞ்சம் கொஞ்சமா மனசுல விழ ஆரம்பிச்சது! அப்படியே ஆதி சிவன் சிலையைப் பார்க்கனும்னும் ஆசை! வீட்டுலயும், கேக்கறவங்க கிட்டயும் சொல்லிட்டே இருப்பேன், நெக்ஸ்ட் திருவண்ணாமலைத்தான்னு! கிட்டத்தட்ட ரெண்டு வருஷம்!!!! அடிக்கடி சொல்லுவேன்! இப்போ நடந்திடுச்சு!

காலைலயே செம்ம பசியாற(ப்ரேக்ஃபஸ்ட்ட நாங்க இப்படித்தான் சொல்வோம்)! எனக்குப் புடிச்ச இனிப்பு பனியாரம்! கூடவே கார பனியாரமும்! அதோட அப்பம்னு நெனைக்கறேன்! சாப்பிட்டத கூட மறக்கறேன்னா வயசாகிட்டு இருக்கு போல!!! :) தடபுடல் பண்ணிட்டாங்க தங்கம்!

நானு, ஹவுஸ் ஓனர், தங்கமலர், பாப்பா அண்ட் ட்ரைவர் கிளம்பிட்டோம் அண்ணாமலையான பார்க்க! முதல்ல ஒரு ஹோட்டல்ல டீ குடிக்க நின்னோம்! பிறகு போற வழில 99னு ஒரு கடைல நிறுத்தனாங்க! இந்தக் கடை சென்னைல இருந்து 99 கிலோமீட்டர்ல இருக்காமே! அங்க நெறைய பாரம்பரிய உணவு வகைகள்! கண்டு கொண்டேன் படத்துல கேள்விப்பட்ட வாழைப்பூ வடைய அங்க ட்ரை பண்ணி பார்த்தோம்! பிறகு பயணம் தொடர்ந்தது. லேசான தூறல் வேற. போகிற வழியெல்லாம் செம்ம அழகு.

View attachment 92

View attachment 91
தேசிங்கு ராஜா கோட்டையாம்!! ரோடு தாண்டி ராணியோட கோட்டைத் தனியா இருந்தது. இதென்ன ராஜாவும் ராணியும் தனியா இருக்காங்கன்னு பேச்சு வேற எங்களுக்குள்ள. ராஜா கோட்டைக்குக் கீழ குதிரைய பார்க் பண்ணிருப்பாராம். மேல இருந்து கரேக்டா அவர் குதிரைல குதிச்சு ஏறுவாராம்! நம்ம தங்கம் சொன்னாங்க! செம்மல்ல!!


View attachment 94

அந்த மலைகள்ல யாரோ பெரிய பெரிய கல்லுங்கள உடைச்சிட்டு வந்து போட்ட மாதிரி அவ்ளோ அழகா இருந்தது வியூ!
View attachment 93

கிட்டத்தட்ட நாலு மணிக்கு திருவண்ணாமலைய வந்தடைஞ்சோம்! அன்றைக்கு அங்கயே தங்கறதா ப்ளான். ஹோட்டேல் ராமகிருஷ்ணால ரூம் புக் பண்ணிருந்தாங்க தங்கம். நல்லா டீசண்டா கிளீனா இருந்தது ரூம். லேட் லஞ்சுக்கு அந்த ஹோட்டல் ரெஸ்டாரண்டுக்கே போனோம்! லாஸ்ட் மீல் ரெண்டுத்தான் இருந்தது! சப்பாத்தி, பரோட்டோன்னு வாங்கி மீல்ஸையும் ஷேர் பண்ணி சாப்டுட்டு ரூமுக்கு போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட்!

View attachment 95

View attachment 96View attachment 97

View attachment 98

பிறகு கிளம்பியாச்சு அண்ணாமலையான பார்க்க! மழை சோன்னு இல்லைனாலும், தூறிட்டேத்தான் இருந்தது. ராஜ கோபுரம் வழியா உள்ள போயாச்சு! கூட்டம் இருந்தது! ஐம்பது ரூபாய் டிக்கேட் வாங்கினோம்! மெல்ல நகர்ந்து போய் அண்ணாமலையான் கிட்ட வந்துட்டோம்! ரெண்டாவது வரிசைல இருக்கோம் நாங்க. ஹவுஸ் ஓனர், பாப்பா, நானு, தங்கமலர்னு வரிசையா வந்தோம்! கிட்ட வந்ததும் ஜெகஜோதியா தெரியறாரு அண்ணாமலையார்!!!! மேனி சிலிர்க்குது! இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கக் கிடைக்குமான்னு ஏக்கம்! பூசாரி பாப்பாவ பார்த்து,

"என்ன பாப்பா அதுக்குள்ள போற! இன்னும் நல்லா பாரு! சாமிய பாரு"ன்னு சொன்னாரு!

அவளும் நகராம என் பக்கத்துலயே நின்னு பார்த்தா! அந்த கேப்ல எனக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சது அவர பார்க்க!! நன்றிப்பா, நன்றின்னு கண் கலங்க அண்ணாமலையானுக்கு நின்னு நன்றி சொல்லி, நல்லா தரிசனம் பண்ணிட்டு வந்தேன்!!!!

பிறகு உண்ணாமுலையம்மன பார்க்க போக இருந்தோம். அங்க இஷ்டத்துக்கு கியூவ வெட்டிப் போய்ட்டு இருந்தாங்க! செம்ம கூட்டம். இவ கியூவ பார்த்துட்டு நான் வரலன்னு ஆரம்பிச்சிட்டா. ஹவுஸ் ஓனரும் என் முகத்தை பார்த்தீங்! போகலைன்னா பரவால்லன்னு சொல்வேன்னு!! எனக்கும் கிட்டத்தட்ட சரி ரூமுக்கு போய்டலாம்னு தோணிடுச்சு!

"அவங்க ரெண்டு பேரும் உக்காரட்டும்! நாம போய்ட்டு வரலாம்"னு அசரீரியா ஒரு குரல்!!

வேற யாரு, நம்ம தங்கமலர்தான்! எங்கள விட்டா போதும்னு அப்பாவும் மகளும் சுவருல சாஞ்சி உக்காந்தாச்சு! நாங்க ரெண்டு பேர் மட்டும் கியூல போய் நின்னோம்! அப்படி ஒரு தள்ளு முள்ளு. எங்க முன்னுக்கு ஒரு பக்திமான் பையன் நின்னுட்டு இருந்தான். ஏற்கனவே அண்ணாமலையார் கியூல அவன பார்த்திருந்தோம்! தங்கமலர் ரெண்டு வார்த்தை பேசி இருந்தாங்க! இங்கயும் பார்க்கவும் இப்படி கியூ கட் பண்றாங்களேன்னு பேச்சு போச்சு! முட்டி மோதி கிட்ட போய்ட்டோம்! நாங்க நெருங்கின வேளைல இன்னொரு பக்கம் கேட் திறந்து விட்டாங்க! அந்தப் பையன் அக்கா என் கூடவே வாங்க, அம்மா நல்லா தெரிவாங்கன்னு கூப்டு போனான்! நாங்களும் அவன் கூடவே போனோம்! யப்பா! அவ்ளோ கிட்ட தரிசனம் கிடைச்சது அம்மனைப் பார்க்க! போக வேணாம்னு கிட்டத்தட்ட முடிவெடுத்துட்ட எனக்கு, அம்மனைக் கிட்டக்க பார்க்க ஒரு வாய்ப்பு! கடவுள் இல்லைன்னு யார் சொன்னது! யார் மூலமாச்சும் தங்கள் இருப்பைக் காட்டிட்டேத்தான் இருக்காங்க பெரும் சக்தியா!!!!!

அம்மன தரிசிச்சிட்டு வர வழியில லட்டு குடுத்தாங்க பிரசாதமா! அதை கொண்டு வந்து பிச்சிப் பிச்சி சாப்பிட்டோம்! ஆயிரங்கால் மண்டபம் பார்க்கனும்னு குறிச்சு வச்சிருந்தேன்! ஆனா தரிசனம் முடிஞ்ச வரப்போ அதை மூடிட்டாங்க! வெளிய நின்னு எட்டி மட்டும் பார்த்தேன். அப்பவும் போன மடக்கிப் புடிச்சு ஒரு போட்டோ எடுத்துட்டு வந்தேன்.

View attachment 99

கோயில்ல ஒரு இடத்துல நிக்கறப்போ நாலு கோபுரத்தையும் ஒன்னா பார்க்கலாம்னு யூடியூப்ல சொன்னாங்க! அதை இவங்க மூனு பேர் கிட்ட சொல்ல, எப்படியோ கண்டுப் புடிச்சோம் அந்த இடத்த! அந்த வீடியோவ கண்டுப்புடிக்க முடியல!!!கிடைச்சா அடுத்து வர டேஸ்ல ஷேர் பண்ணறேன். வெளிய கடைத்தெருவுக்கு வந்ததும் மிடியம் சைஸ்ல உத்திராட்ச மாலையும், அம்மா கேட்டாங்கன்னு செந்தூரமும் வாங்கனேன்.

அப்புறம் டின்னர் பிரச்சனை ஆரம்பிச்சது! பாப்பாக்கு ராமகிருஷ்ணா ஹோட்டல்ல சாப்ட்ட அதே பரோட்டாத்தான் வேணுமாம்! ஹவுஸ் ஓனர், அதான் பகல்ல அங்க போயாச்சுல்ல வேற கடை பார்ப்போம்னு! ஒரு வழியா ஆகாஷ் ஹோட்டல்னு ஒரு இடத்துக்கு சாப்ட போனோம். அங்க டீ காபின்னு ஆர்டர் பண்ணிட்டு, டிபன் ஐட்டம் சொன்னோம்! செர்வ் பண்ண லேடி, எங்களுக்கு ஆத்தி குடுத்தாங்க டீய! நானும் பாப்பாவும் எப்பவுமே டம்ப்ளர், டபரால ஆத்த தெரியாம, டபரால ஊத்தி கொஞ்சம் கொஞ்சமா குடிப்போம்.

"எத்தனையோ இடத்துல டீ குடிச்சேன்! நீங்க ஒருத்தங்கத்தான் ஆத்தி குடுத்தீங்க!"ன்னு அவங்கட்ட நான் ஒரே ஃபீலீங்!!! யார்டா இது பைத்தியம்னு அவங்க சிரிச்சிட்டே போய்ட்டாங்க!

சாப்பிட்டு ரூமுக்கு போயாச்சு! நைட்டாச்சேன்னு மறுநாள் காலைல கிரிவலம் போலாம்னு ப்ளான் போட்டுட்டு படுத்தாச்சு! கிரிவலம்ல என்னை டேமேஜ் பண்ண சம்பவம்லாம் நடந்துச்சு! அதை நெக்ஸ்ட் போஸ்ட்ல பார்ப்போம்!!!

தொடரும்...
 

Author: VanishaAdmin
Article Title: Day 4--(15/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Aug 4, 2024
13
0
18
அண்ணாமலையார் அற்புதமான தரிசனம் கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் மா 💕.
 
  • Like
Reactions: VanishaAdmin