அத்தியாயம் 1
“பிசிஓ (PCO) உள்ள பெண்களுக்கு, சினை முட்டைகள் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக (கட்டிகளாக) நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் நடப்பதில்லை”
அந்த பெரிய மாளிகையின் முன் ஆட்டோவில் போய் இறங்கினாள் சித்ரா பௌர்ணமி. கேட்டில் நின்றிருந்த செக்குரிட்டியிடம் பி.எம்.ஆர் பேங்கில் இருந்து வருவதாக தெரிவித்துவிட்டு காத்திருந்தாள். அவர் அவளது விவரங்களையும், பேங்க் ஐடி கார்டையும் எடுத்துக் கொண்டு உள்ளே அனுப்பினார்.
கேட்டை தாண்டி உள் பிரவேசித்தவள் மலைத்துப் போய் நின்றாள். மாளிகையின் அழகைப் பார்த்து அல்ல, கேட்டுக்கும் வீட்டுக்கும் இருக்கும் தூரத்தைப் பார்த்து!
‘கிளிஞ்சது போ! இந்த ஹை ஹீல்ஸ்ல நான் நாட்டியமாடிக்கிட்டே நடந்து போறதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆகிரும் போல’ என சலித்துக் கொண்டாள்.
சித்ரா பௌர்ணமி! பெயர்தான் ஓல்ட் டைப். ஆனால் அவள் நவீன யுவதி. மல்டி நேசனல் பேங்கில் கோல்ட் கிளையன்ட் சர்வீஸ் டீமில் பணி புரிகிறாள். முட்டிக்கு மேல் பழுப்பு நிற பென்சில் ஸ்கர்ட், கையில்லாத வெள்ளை சட்டை, அதன் மேல் பழுப்பு நிற பிளேசர் இது தான் அவர்களின் சீருடை. போனி டெயில் தான் அவர்களது முடி அலங்காரம். மேக்கப் போட்டு பொம்மை மாதிரி வேலைக்கு வர வேண்டும். க்ரூமீங், ட்ரான்ஸ்போர்ட், ஷூ கேர், யுனிஃபார்ம் கேர் என அனைத்துக்கும் தனி அலவுன்ஸ் வழங்கப் படுகிறது அவர்கள் பேங்கில்.
பெரிய அப்பா டக்கர்கள் தான் இவர்களது கிளையண்ட்ஸ். அவர்களின் கணக்கு வழக்குகளை, இவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் பணப் பட்டுவாடா, முதலீடுகள் அனைத்தையும் இவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். உலக சந்தை இவர்களின் கைப்பிடியில் இருக்க வேண்டும். எங்கே போட்டால் பணம் வரும், எப்படிப் போடுவது என அந்த பணக்காரர்களின் பணத்தை இன்னும் பெருக்குபவர்கள் இவர்கள்தான்.
சித்ரா பார்த்துக் கொள்வது வெளிநாட்டு வாடிக்கையாளர்களைதான். அவளது போதாத காலம் இந்த பிரகாஷ் கப்பூரின் ப்ரோபைலை கவனித்துக் கொள்ளும் ஆர்த்தி டிப்ரஷன் என நீண்ட மெடிக்கல் லீவுக்கு போய் விட்டாள். அதனால் அவளது வாடிக்கையாளர்கள் எல்லாம் டீமில் உள்ளவர்களுக்கு பிரித்து விடப்பட்டார்கள். கப்பூரின் அக்கவுண்ட் சித்ராவின் கீழ் வந்துவிட்டது. ஆர்த்தியின் வாய் மொழியில் இந்த கப்பூரை பற்றி கொஞ்சம் அறிந்து வைத்திருந்தாள் சித்ரா.
“சித்து, அவன் இங்க வர மாட்டான். அவன் இருக்கற இடத்துக்கு நாம தான் லோ லோன்னு அலையனும். ஒரு சைன் போட நம்மள டாக் மாதிரி ஓட விடுவான். மத்தவங்க மாதிரி மேம்போக்கா இருக்க மாட்டான். அவனோட பணம், எங்க போகுது எங்க வருது, இந்த ஃபண்ட்ல போட்டா எவ்வளவு ரிடர்ன் வரும், எவ்வளவு லாஸ் ஆகும் இப்படி நம்மள விட மார்க்கேட்டை கை விரல்ல வச்சிருக்கான். அவன் கிட்ட மட்டும் அசால்ட்டா இருக்க முடியாது. எனக்கு பிரஷர் வந்ததே இவனால தான். பார்த்து தங்கம்” என பயம் காட்டியிருந்தாள்.
‘சொன்ன வேலையச் செய்யப் போறோம். அவங்கப் பணம் அவங்களுக்கு முக்கியம். நூறு ரூபாய் வச்சிருக்கற நாமே எவ்வளவு கவனமா இருக்கோம். நூறாயிரம் கோடி வச்சிருக்கறவன் அப்படிதான் இருப்பான். வேலைய முடிச்சமா, வீட்டப் பார்க்க போனமான்னு இருப்போம். எதுக்கு டென்ஷன், எதுக்கு பி.பி? சித்து பாலிசி ஆல்வேய்ஸ் ஹேப்பி’ எனத் தாரக மந்திரத்தை சொல்லிக் கொண்டே நடந்தாள்.
வீட்டை அடைந்ததும் காலிங் பெல்லை அழுத்தினாள். ஐந்து நிமிடத்தில் ஒரு பெண்மணி வந்து கதவைத் திறந்தார்.
“கோன் ஹே?”
‘ஐயோ இந்தி! இது தெரியாததனால தானே என்னை ஓவெர்சிஸ் கஸ்டமர்ஸ பாத்துக்க போட்டாங்க. எங்க போனாலும் நம்மள துரத்துதே. எம்மா இது சென்னைமா. யூ தமிழ் நோ ஹே?’
“இஸ் கபூர் சார் இன்? ஐ எம் ப்ராம் பி.எம்.ஆர் பேங்க்”
“கியா ஹே?”
‘போச்சுடா! கியா மியா கியா மியான்னு கத்துதே. இதுகிட்ட பேசி இன்னிக்கு என் வேலைய முடிச்ச மாதிரிதான்.’
அவரின் பின்னாலிருந்து ஹிந்தியில் யாரோ பேசுவது கேட்டது. பின் அந்தப் பெண்மணி வெளியே வந்து சைகை காட்டி அவளை தோட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்கே இருந்த சிட் அவுட்டில் அமரும்படி கை காட்டினார்.
“ச்சாய்?”
‘ச்சாய்னா டீ தானே? எங்களுக்கும் நாலு இந்தி வோர்ட்ஸ் தெரியும்மா. பானி பூரி, டாஹி பூரி, பாவ் பஜ்ஜி இதெல்லாம் எனக்கும் தெரியும். தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் பய்யா தோ ப்ளேட்னு கரெக்டா சொல்லுவேன். அப்புறம் குத்தே, கபினே கூட தெரியும். ரேப் சீனுல வில்லனைப் பார்த்து ஹீரோயின் கதறி கத்துவாளே. மனப்பாடம் செஞ்சு வச்சிருக்கோம்ல’
இவள் பதிலுக்கு காத்திருந்தவரைப் பார்த்து வேண்டாமென தலையாட்டினாள். பின் அவர் உள்ளே சென்றுவிட்டார்.
‘வீட்டுக்குள்ள விடாம, இப்படி வெளிய உட்கார சொல்லிட்டான். அவன் வீட்டு பொருளை அபேஸ் பண்ணிருவேன்னு பயமா?’ தனக்குள்ளாகவே சிரித்தவள், சொகுசாக இருந்த அந்த நாற்காலியில் நன்றாக கால் நீட்டி அமர்ந்தாள். அமர்ந்ததும் பாவாடை மேலே ஏறிக் கொண்டு ‘என்னைப் பார் என் தொடையைப் பார்’ எனக் காட்டியது.
“இது ஒரு குஷ்டமப்பா” என முனகியவள் எழுந்து, பாவாடையைக் கீழே இழுத்து விட்டு, மீண்டும் அமர்ந்தாள். இப்பொழுதும் முழுதாக மறைக்கவில்லை, ஆனால் பார்க்க டீசண்டாக தான் இருந்தது.
கையில் வைத்திருந்த பைலை மேசை மேல் வைத்தவள், தோட்டத்தை ஒரு நோட்டமிட்டாள்.
‘வாவ்! அழகுன்னா அழகு அல்டாப்பு அழகு. கப்பூரூ கலா ரசிகன்டா நீ. கலாவ மட்டும் சொன்னா மாலா சீலா எல்லாரும் கோவிச்சுக்கப் போறாங்க. மாலா ரசிகன்டா நீ, சீலா ரசிகன்டா நீ. போதும்டா, அதுக்கு மேல முடியல.’
அந்த அழகிய மாளிகையைச் சுற்றி பூந்தோட்டமாக இருந்தது. வண்ண வண்ணப் பூக்கள் கீழே சிதறி கிடந்தது பார்க்கவே அழகாக இருந்தது.
‘இந்த இடத்தை மட்டும் யாராவது டைரக்டர் பாத்துருக்கனும், நாயகிய பூ மேல படுக்க வச்சி டூயட் சீன் எடுத்துருப்பான்.’
கீழே விழுந்து கிடந்த கலர்புல் ஆர்கிட்களை அள்ளி மேலே தூக்கிப் போட்டு விளையாட வேண்டும் என எழுந்த பேராவலை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் சித்ரா.
அவள் அமர்ந்திருந்த சிட் அவுட்டுக்கு வலது புறத்தில் மீன் வடிவில் பெரிய நீச்சல் குளம் வேறு இருந்தது. மீன் சீலை பெரிதாக செய்யப்பட்டு அதன் வாயில் இருந்து தண்ணீர் நீச்சல் குளத்துக்குள் ஊற்றியது.
‘மீன் வாயில தண்ணீ ஊத்துன கப்பூர் வாழ்க. வாழ்றான்டா!’ மீன் வாயை வேடிக்கைப் பார்த்ததில், பக்கத்தில் ஆள் வந்து நின்றது கூட தெரியவில்லை அவளுக்கு.
தொண்டையைக் கணைக்கும் சத்தத்தில் சுதாரித்தவள், அருகில் கப்பூரைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து நின்றாள்.
“குட் மார்னிங் சார்”
“மார்னிங். பீ சீட்டட்” அழுத்தமான குரல்.
எழுந்தது போலவே அவசரமாக அமர்ந்தாள். அவள் நேரம் பாவாடை மீண்டும் மேலே ஏறி சதி செய்தது. அவள் எதிரே அமர்ந்தவனின் பார்வை அவளது கால்களை தொட்டு ஒரு நிமிடம் அங்கேயே நின்று பின் அவள் முகத்துக்கு வந்தது.
‘அடேய்! ஆர்த்தி, இந்த விஷயத்துல நீ ரொம்ப நல்லவன்னு சொன்னாளே. இது தான் நல்லவனுக்கு அழகா?’ முகம் மாறாமல் புன்னகைத்தவாறே, டேபிள் மேல் வைத்திருந்த பைலை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு முதலில் கொடுக்கப் பட்ட பயிற்சி.
“சார், நீங்க இன்வெஸ்ட் பண்ணப் போற புது ஃபண்ட்(fund) பத்திரமெல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன். சைன் வச்சிட்டீங்கனா இன்னிக்கு ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சுருவேன்” அவனின் கண்களைப் பார்த்து தெளிவான ஆங்கிலத்தில் பேசினாள்.
“கொஞ்சம் பொறுங்க. நான் இன்னும் பசியாறல. நான் சாப்பிட்டு முடிச்சதும் பேசுங்க” அவன் சொல்லி முடிக்கவும் ட்ரேயில் காலை உணவுடன் அந்தப் பெண்மணி வரவும் சரியாக இருந்தது. டேபிளில் தட்டை செட் செய்தவர் அவன் முகத்தைப் பார்த்தவாறு நின்றார்.
அவரிடம் இந்தியில் என்னமோ இவன் சொல்லவும், புன்னகையுடன் அவர் உள்ளே சென்றுவிட்டார். இவளுக்கு சுக்ரியா மட்டும் தான் விளங்கியது.
அந்த சைக்கில் கேப்பில் அவனை ஆராய்ந்தாள் அவள். பேங்க் ப்ரோபைல் போட்டோவில் மொழுமொழுவென வெள்ளையாக இருந்தான். பார்க்கவே இவளுக்கு பிடிக்கவில்லை. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு ரகம் இவள். வெள்ளையனே வெளியேறு கொள்கையின் தீவிர ரசிகை .
நேரில் பார்க்கவும் வெள்ளையாக தான் இருந்தான் ஆனால் மீசையும் தாடியும் இருந்தது ப்ரவுன் கலரில். மூன்று நாள் மழிக்காமல் விட்டால் எப்படி இருக்குமோ அப்படி வைத்திருந்தான். புது ஸ்டைல் போல. மற்றபடி மூக்கு, கண், காது எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது.
அவனுக்கு ஹைலைட்டே குட்டையாக இருந்த அவன் ப்ரவுன் கலர் தலைமுடி தான். என்ன, சுருட்டையாக இருந்தது. என்னை நீ சீவினாலும் சரி, சீவாவிட்டாலும் சரி நான் இப்படிதான் இருப்பேன் என சிலிப்பிக் கொண்டு நின்றது அது. சராசரி ஆண்களின் உயரம்தான். உயரத்துக்கேற்ற உடல்வாகு.
‘கப்பூரு, உனக்கு புருவம் கூட ப்ரவுனா இருக்குடா. இனிமே நான் உன்னை ப்ரௌனினு தான் கூப்புடுவேன்.’
“ஷேல் வீ?” எனத் தட்டை காட்டவும் தான், தன்னையும் சாப்பிட அழைக்கிறான் என புரிந்தது. காலை உணவாக இரண்டு இட்லியும், ஒரு ஓட்டை வடையையும் மொக்கிவிட்டு தான் வந்திருந்தாள். மறுப்பது டேபிள் மேன்னர்ஸ் இல்லை என அவளும் ஒரு தட்டில் சிறிய கேக் துண்டை எடுத்து வைத்துக் கொண்டாள்.
“எனக்கு காபி மிக்ஸ் பண்ணி குடு” என ஆங்கிலத்தில் கேட்டவன், டோஸ்ட் ப்ரட்டை சாப்பிட ஆரம்பித்தான். தான் கேட்டது நிஜம் தானா என நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சித்ரா. என்ன என்பதைப் போல புருவத்தை ஏற்றி இறக்கினான் அவன்.
கஷ்டப்பட்டு புன்னகைத்தவள் , கப்பில் கறுப்பு காபியை ஊற்றினாள்.
“சுகர் வேணாம். ஓன் ஸ்பூன் க்ரீமர் மட்டும் போடு. கரண்டில நல்லா கலக்கிரு. க்ரீமர் மேல மிதந்தா எனக்கு பிடிக்காது”
‘டேய்! நான் உன்னோட அக்கவுட் மேனேஜர்டா. உன் பொண்டாட்டி இல்ல. ஒரு கப் காபிக்கு என்ன அலப்பறை பண்ணுறான் பாரு. எல்லாம் என் நேரம்’ புன்னகையுடனே கப்பை நீட்டினாள்.
“உன் பெயர் என்ன?”
‘இவ்ளோ நேரம் பேரு கூட என்னான்னு தெரியாம தான் காபி கலக்க சொன்னியா? ராஸ்கல்! என்ன சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு’
“சித்ராபௌர்ணமி சார். யூ மே கால் மீ சித்ரா”
“டூ லாங். ஐ வில் கால் யூ சிமி”
‘சிமியா? இந்தப் பேர் வச்ச எங்க நைனா மட்டும் இங்க இருக்கனும், சிமின்னு கூப்புடற உன்னை சீவி இருப்பாரு’
“எஸ் யூ விஷ் சார்” மீண்டும் புன்னகையை ஒட்ட வைத்தாள்.
“சார்னு கூப்பிட வேணாம். எனக்கு பிடிக்கல. கால் மீ பிரகாஷ்”
‘என் டீம் மேனேஜர் அந்த ஜனகராஜ் மட்டும் இத கேட்டான், என்னை கிழிச்சிருவான்டா ப்ரௌனி.’
மேனேஜர் பெயர் ஜோன்ராஜ். அவனைப் பார்த்தாலே என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா ஜனகராஜ் ஞாபகம் வரும் இவளுக்கு. ஜனகராஜ் மாடுலேசன் மாற்றி மாற்றி ஒரே விஷயத்தைப் பேசுவதுபோல, தார்கேட் ரீச் ஆச்சா என இவனும் மாடுலேஷன் மாற்றி கேட்டு கேட்டு கொலை செய்வான். அதனால் தான் அந்தக் காரணப் பெயர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சேல்ஸ் தார்கேட் கேட்டு எல்லோரையும் அலறவிடுவான் அவன்.
“சாரி சார். கிளையண்ட ப்ரோபசினலா தான் ஹேண்டல் பண்ணனும். சோ பெயர் சொல்லி கூப்பிடக் கூடாது. பேங்க் பாலிசி” என நாசுக்காக மறுத்தாள் அவள்.
தட்டைக் கீழே வைத்தவன் போனை அழுத்தி,
“சீரி கால் ஜோன்” என்றான். போன் அடிக்கும் போது காலை ஸ்பீக்கரில் போட்டான். அந்தப் பக்கம் கால் எடுக்கப் பட்டது.
“சொல்லுங்க பிரகாஷ் சார்” என தேன் தடவிய குரலில் பேசினான் ஜோன்ராஜ்.
“உங்க ஸ்டாப் சொன்னதச் செய்ய மறுக்கறாங்களே ஜோன். என்னோட ஃபண்ட்லாம் வேற பாங்க்குக்கு மாத்திரவா?” என அழுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
“இருங்க பிரகாஷ் சார். நான் சித்ரா கிட்ட பேசுறேன். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. நீங்க இல்லாம நாங்க இல்ல, இந்த பாங்க் இல்ல. உங்களுக்கு பிடிக்காத எதுவும் இங்க நடக்காது. நான் கியாரண்டி தரேன். கொஞ்சம் பொறுங்க நான் செட்டில் பண்ணுறேன்.” என பவ்யமாக பேசினான் அவன்.
“இருங்க சிமிகிட்ட குடுக்கறேன்” என்றவன் போனை நகர்த்தினானே தவிர ஸ்பீக்கரை ஆப் பண்ணவில்லை.
“சித்ரா!” ஜோன்ராஜின் குரலில் காட்டம்.
“சொல்லுங்க ஜோன்” நெளிந்தாள் சித்ரா.
“இந்த மாச தார்கேட் சேல்ஸ் நீ இன்னும் ரிச் பண்ணவே இல்லை. ஞாபகம் இருக்கா? கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல. அவர் இந்த ஃபண்ட் ட்ரன்சக்சன் சைன் பண்ணா எவ்ளோ லாபம் பேங்குக்கு வரும் தெரியுமா? அவர் சொல்லுறத கேக்குறதுக்கு என்ன?” கத்தியவன் பின் அமைதியான குரலில்,
“இந்த தார்கேட் ரிச் பண்ணா, கமிஷன்ல தங்கச்சிக்கு ஸ்கூட்டி வாங்கி தரனும்னு சொல்லிட்டு இருந்த.”
அவன் மேலும் அவளது நிலமையை பிட்டு பிட்டு வைப்பதற்குள் அவசரமாக,
“ஸ்பீக்கர்ல இருக்கு ஜோன். ஆபீஸ் வந்து பேசலாம்” என்றவள் கைநீட்டி போனை அடைத்தாள். இவன் முன்னே கமிஷன், தங்கை என தன் விஷயம் கடைப்பரப்ப பட்ட அவமானத்தில் முகம் சிவக்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவனோ நிதானமாக காபியை ரசித்து, அருந்திக் கொண்டிருந்தான்.
‘ஒன்னும் தெரியாத கப்பூரு, ராத்திரில குடிச்சானாம் ஐஸ் பீரு. நல்லவன் மாதிரி உட்கார்ந்துருக்கான் பாரு. சார்னு கூப்பிட்டது ஒரு குத்தமாடா? இதுல இந்த ஜனகராஜ் வேற நான் ஐட்டக்காரி மாதிரியும், எனக்கு அவன் மாமா வேலை பார்க்கற மாதிரியும்ல பேசறான். சொல்லுறத செஞ்சா என்னவாம்! கர்மம் பிடிச்ச வேலைய ரிசைன் பண்ணிட்டும் போக முடியல’
“காபி குடிச்சதும் இந்த ரெண்டு டாக்குமெண்டுலயும் சைன் பண்ணிருங்க பிரகாஷ். அப்புறம் பிரகாஷ் அடுத்த வாரம் நீங்க கேட்டிருந்த ராயல் மாஸ்டர் கார்ட் வந்துரும் பிரகாஷ். நான் உங்க ஆபிஸ்கு கூரியர் பண்ணிருறேன் பிரகாஷ்” இது தான் சாக்கென்று நொடிக்கொரு பிரகாஷ் போட்டு ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாள்.
அவனோ புன்னகையுடன்,
“தேங்க்ஸ் சிமி. நீயே எடுத்துட்டு வந்து குடுத்துரு. கூரியர் வேணாம். இட்ஸ் அ பிரிஸ்டிஜியஸ் கார்ட். தொலைஞ்சிறக் கூடாது பாரு” என்றான்.
‘டேய்! டேய்! அடங்குடா. என்னையும் ஆர்த்தி மாதிரி அங்க இங்கன்னு அலைய விடனும். அதானே? வந்து தொலைக்கிறேன்’
“கண்டிப்பா நானே வரேன்”
ஒரு கப்பில் ஜீஸ் ஊற்றி அவளிடம் நீட்டியவன்,
“குடி சிமி. ஹீட்ல முகம் சிவந்துருச்சுப் பாரு”
‘அது ஹீட் இல்லடா, கொலைவெறி!’
“தேங்க்ஸ்” என வாங்கிக் கொண்டாள். அவள் குடிப்பதற்குள் பாரத்தை படித்துப் பார்த்து கையொப்பமிட்டான் அவன். பாரங்களை வாங்கிக் கொண்டவள்,
“நான் கிளம்பறேன்” என எழுந்தாள்.
“நானும் உன் பாங்க் இருக்கற வழியா தான் போகனும். ஷெல் ஐ ட்ராப் யூ?”
‘அடப்பாவி! அப்போ பாங்குக்கே வந்து சைன் வச்சிருக்க வேண்டியது தானேடா? ஏன்டா காலையிலயே வேகாத வெயிலுல என்னை இப்படி அலையவிட்ட? உனக்கு வேல பார்க்கற பர்ஸ்ட் டேலயே எனக்கு பி.பி வந்துரும் போல இருக்கே’
“கிராதகா!” வாய் விட்டு முனகினாள் சித்ரா.
“கம் அகேய்ன்?”
“க்ரேட்னு சொன்னேன் பிரகாஷ். போலாமா?”
‘நல்ல வேலை இவனுக்கு தமிழ் தெரியாது. இல்லைன்னா சீட்டைக் கிழிச்சிருப்பான். உனக்கு வாயடக்கம் வேணும் சித்ரா’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டு காரில் அமர்ந்தாள். மறவாமல் பைலை மடியில் வைத்துக் கொண்டாள். அவள் கஷ்டம் அவளுக்கு.
காரில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இந்தி பாடல்கள் மட்டும் பிளேயரில் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் மௌனத்தை சித்ராவின் போன் அடித்துக் கெடுத்தது. அவனைத் திரும்பிப் பார்த்தாள். பேசு என்பது போல் தலையாட்டினான். ஆன் செய்தவள்,
“சொல்லுடா”
“ஹ்ம்ம். சாப்பிட்டுட்டேன்”
“மூனு லிட்டர் தண்ணி தானே? குடிக்கறேன்”
“கால் இப்ப வலிக்கல. நேத்து நீ கல் உப்பு போட்டு சுடுதண்ணி ஒத்தடம் குடுத்ததும் நல்லா போச்சு”
“புது கிளையண்ட் பார்க்க போகனும் சொன்னேனே, அந்த கேணை கிறுக்கன் கூட தான் இருக்கேன்.”
“ஓவர் வெள்ளையா இருக்கான். பார்க்கவே வாந்தி கமிங்”
“ஐ லவ் யூ டூ”
எதிர்பக்கம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குசுகுசுவென பதிலளித்துவிட்டு போனை அடைத்துக் கைப்பையில் போட்டாள் சித்ரா.
“யார் போன்ல?” குரலில் ஒரு அழுத்தம்.
“ஆபிஸ்ல இருந்து கால்” என சமாளித்தாள். அவள் பாங்க் இருந்த வளாகம் வந்ததும், டபுள் சிக்னல் போட்டு காரை ஓரமாக நிறுத்தினான் பிரகாஷ்.
“பாய் அண்ட் தேங்க்ஸ்” என்றவாறே கார் கதவை மூடினாள் சித்ரா.
“ஓன் மினிட் சிமி” என அவள் பக்க ஜன்னலை இறக்கினான் பிரகாஷ்.
“யெஸ்”
“இனி நீ அடிக்கடி இந்த வெள்ளை கேணைக் கிறுக்கனை சந்திக்க வேண்டி இருக்கும். வாந்தி எடுக்க ரெடியா இரு” என அழகிய தமிழில் மொழிந்து விட்டு காரை பறக்கவிட்டான் அவன்.
கார் கிளப்பி விட்ட புழுதியைக் கூட கவனிக்காமல் வாய் பிளந்து நின்றாள் சித்ரா.
‘அடிப்பாவி ஆர்த்தி! அவனுக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி மேல போய்ட்டா வரைக்கும் சொன்னியே, தமிழ் தெரியும்னு சொன்னியாடி? வடை போச்சே!’

Author: VanishaAdmin
Article Title: Uyir Vidum Varai--EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.