அத்தியாயம் 2
“ஒரு ஆண் தனது இரண்டாவது தாயையும்
ஒரு பெண் தனது முதல் குழந்தையையும் தேடுவதே காதல்”
(யாரோ சொன்னது)
அதே நாள் காலை.
லோட்டஸ் அபார்ட்மெண்ட், வில்லிவாக்கம்.
“காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா” எனப் பாடியவாறே தன் அம்மா இந்துவை பின்னாலிருந்து கட்டிக் கொண்டான் மலர்வேந்தன்.
“விடுடா வேந்தா. என் மேல எல்லாம் மசாலா வாசனை. உன் மேலயும் ஒட்டிக்கப் போகுது!” என மகனைத் தள்ளினார் அவர்.
“காலையில உன்னை வாசம் பிடிக்காம எனக்கு வேலை ஓடாதுமா” என்றவன் மூடி வைத்திருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்தான்.
“வாவ்! தோசை அண்ட் கார சட்னி. என் செல்ல அம்மா. ஊசி மிளகா அள்ளி போட்டீங்களா?” என ஆர்வமாக கேட்டான்.
“போட்டேன் போட்டேன். குடலு வெந்து போகிற அளவுக்கு போட்டேன். போய் கை கழுவிட்டு வந்து சாப்பிட உட்காரு”
அவன் மலர்வேந்தன். இந்துவின் மூத்த மகன். அவனுக்குப் பிறகு இன்னும் இரண்டு பெண்கள். இந்துவின் கணவர் இறந்து வருஷம் பத்து ஓடிவிட்டது. அண்ணன் தயவில் பிள்ளைகளைப் படிக்க வைத்தவர், அவர் வீட்டிலேயே சம்பளம் இல்லா வேலைக்காரியாய் வாழ்ந்தார். மகன் படித்து இப்போது இரண்டு வருடமாய் வேலையில் இருக்கவும், குடும்பத்தோடு இங்கே வாடகைக்கு வந்து விட்டிருந்தனர்.
“வேந்தா, லட்டு இன்னிக்கு சீக்கிரமா காலேஜ் போகனுமாம். என்னவோ ஸ்பேஷல் கிளாஸ் இருக்காம். உன்னை ட்ராப் பண்ண சொன்னாப்பா”
லட்டு, அவர்கள் வீட்டுக் கடைக்குட்டி லாவண்யா. முதல் தங்கை அனுசூயா காலேஜ் முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் வர சொல்லுங்கம்மா. இன்னிக்கு மேய்ன் ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு. சரியான டைமுக்குப் போகனும்” எனத் தோசையை கார சட்னியில் குளிப்பாட்டி உள்ளே தள்ளினான்.
“நான் ரெடிண்ணா. நீ சாப்டவுடனே கிளம்பலாம்” என வந்தாள் லட்டு.
“லட்டும்மா, அண்ணாவோட லேப்டாப்ப மூடி பேக்குல வச்சிடுடா. இதோ வரேன்” எனக் கை கழுவ சென்றான் வேந்தன்.
தாய் மீதும், தங்கைகள் மீதும் அளவு கடந்த பாசக்காரன். கோபத்தைக் கூட சிரித்தபடியேத்தான் காட்டுவான். லட்டுக்கு அண்ணாதான் எல்லாம். அவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். அனு மட்டும் அந்த வீட்டில் ஒரு தனித்தீவு. அமைதியானவள். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள். அவள் சுபாவமே அப்படிதான், அவள் அப்பாவைப் போல.
அண்ணனும் தங்கையும் மூன்றாவது மாடியில் இருந்து படியிலேயே இறங்கி பைக் பார்க் செய்திருந்த இடத்துக்கு வந்தார்கள். தங்கைக்கு ஹேல்மேட்டை மாட்டியவன், தானும் ஒன்றை மாட்டிக் கொண்டான்.
“அண்ணா, வேற பைக் மாத்த வேண்டியதுதானே? இந்த டி.வி.எஸ் 50 ஓல்ட் மாடலையே எவ்வளவு நாளைக்கு ஓட்ட போறே?” என எப்பொழுதும் கேட்கும் கேள்வியையே அன்றும் கேட்டாள் லட்டு.
“பைக் வாங்குனா புது செலவு லட்டு. அந்தக் காசு இருந்தா அனு கல்யாண செலவுக்கு சேர்க்கலாம்ல. உங்க ரெண்டு பேரையும் கரை ஏத்திட்டா, அப்புறம் எனக்கு பைக் என்ன காரே வாங்கிக்குவேன்” எனச் சிரித்தான் வேந்தன்.
“ஆமா, அப்பவும் இது மாதிரி ஏதாவது கதை சொல்லுவ. என்னைய நீ ஒன்னும் இப்படிக் கஷ்டப்பட்டு கரை ஏத்த வேணாம். என் செல்ல அண்ணனுக்கு நான் எந்தக் கஷ்டத்தையும் குடுக்க மாட்டேன். ஒன்னும் கேட்காம எனக்காக என்னைக் கட்டிக்க ஓர் இளிச்சவாயன் வராமலா போயிருவான்?” என்றவள், தன் மனக் கண் முன் வந்த, அந்த இளிச்சவாயனின் பிம்பத்தை அடித்து ஓரம் கட்டி விட்டு பைக்கில் ஏறினாள்.
தங்கையை காலேஜில் விட்டுக் கிளம்பிய பத்து நிமிடத்தில் பைக் மக்கர் செய்தது. ஓடிக் கொண்டிருந்த வண்டி அப்படியே நடு வழியில் நின்றுவிட்டது. இவனும் என்னன்னவோ செய்து பார்த்தான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. மீட்டிங்கிற்கு இன்னும் முப்பது நிமிடங்களே இருந்தன. வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து பக்கத்தில் இருந்த மெக்கானிக் ஷாப்பில் போட்டு விட்டு, அவசரமாக ஆட்டோ பிடித்தவன்,
“அண்ணா, ரோசா காண்ஸ்ட்ரக்ஷன் போங்க” என்றான்.
அயர்ன் செய்த சட்டை கசங்கி போய், வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டான் இவன். மீட்டிங் ஹாலை அடைந்த போது தேவி பேசும் சத்தம் கதவின் வெளியே வரை கேட்டது. மணியைப் பார்த்தான், பத்து நிமிடம் லேட். தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு கதவை இரு தடவை தட்டி விட்டு, பின் திறந்தான். என்னை நோக்கிப் பாயும் தோட்டா என்பது போல அவனை நோக்கி ஸ்டெப்ளர் பறந்து வந்தது. அழகாக கேட்ச் பிடித்தவன், மென்னகையோடு நிமிர்ந்து பார்த்தான். பத்ரகாளிபோல் அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள் ரோசாலியா தேவி.
சிரித்த முகத்துடன் இருந்த அவனைப் பார்த்தவள் இன்னும் காண்டாகி,
“கெட் அவுட்!” எனக் கத்தினாள்.
‘யாருடா அது நம்மள மாதிரியே கேட்ச் பிடிக்கிற ஆசாமி’ என எட்டிப் பார்த்தான் கார்த்திக்.
‘அட நம்ம வேந்தன். பய வசமா மாட்டிக்கிட்டானே’
கதவுக்கு வெளியே நிற்குமாறு அவனுக்கு ஜாடை காட்டினான் கார்த்திக். வேந்தனும் மீண்டும் கதவைச் சாத்திவிட்டு வெளியே நின்றான்.
அங்கே நடந்ததை மற்றவர்கள் ஒரு கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தங்கள் முதலாளியின் முன்கோபம் தெரியும். ஆனால் நேரில் பார்த்ததில்லை.
தேவி பேசி முடித்தவுடன் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அடுத்து லைப்ரரியின் வரைபடங்களைப் பார்க்க வேண்டிய நேரம்.
“நெக்ஸ்ட்” என்றவாறே கார்த்திக்கைப் பார்த்தாள் அவள்.
“மேடம்! இந்த பிரசெண்டேஷன் செய்ய வேண்டிய நம்ம சீஃப் இஞ்சினியர்தான் வெளிய நிக்கிறாரு. வர சொல்லவா?”
அதைக் கேட்ட தேவியின் பார்வையில் அனல் பறந்தது. கடுப்பில், வர சொல்லுமாறு தலையை மட்டும் அசைத்தாள்.
கதவைத் திறந்த கார்த்திக்,
“வாங்க வேந்தன். வந்து ஆரம்பிங்க” என அழைத்தான்.
உள்ளே வந்து லாப்டாப்பைப் பொருத்தி ஸ்கிரினில் வரைபடத்தை வர வைத்தவன், அதைப் பற்றி விளக்க ஆரம்பித்தான்.
கை தூக்கி அவனை நிறுத்திய தேவி,
“நேம்?” எனக் கேட்டாள்.
“மலர்வேந்தன் மேடம்”
“ஒகே மலர், கண்டினியு” என்றாள்.
அங்கே அமர்ந்திருந்தவர்கள் கையால் வாயை மூடிக் கொண்டு சிரித்தனர். நொந்து போனான் வேந்தன். அழகான தமிழ் பெயர் என இந்தப் பெயரை வைத்த தன் அப்பாவை மனதிற்குள்ளேயே தாளித்தான்.
“மேடம், கால் மீ வேந்தன்”
கார்த்திக்கை ஒரு முறைப்புடன் பார்த்தாள் தேவி. உடனே எழுந்து வேந்தன் அருகே சென்றவன் மெதுவான குரலில்,
“மாமு, இப்ப பேரா முக்கியம்? அவங்க வாயில வந்தத கூப்பிடட்டும். அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போவியா. தேவையில்லாம வேற எதையாச்சும் பறக்க வைக்காதே. அவங்க சார்ஜ் எடுத்து வர முதல் பிக் ப்ராஜேக்ட் இது. அடக்கி வாசிச்சு நல்ல பேரு வாங்குவியா. அவங்க அப்பா மாதிரி இல்ல இவங்க. டெரெர் பீஸ். பாத்து மச்சி” என்றான்.
“அதுக்குன்னு எப்படிடா மலர்ன்னு கூப்பிட்டா சும்மா இருக்கிறது?”
“அதானே உன் பேரு? அப்ப கம்முன்னு கெட” என்றவன் மீண்டும் அவன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
அதன் பிறகு ப்ரசென்டேஷன் வேகமாக நடந்தது. வேந்தன் பேசும் போது பார்வையை அவன் முகத்திலேயே பதித்திருந்தாள் தேவி. அவன் மேல் ஈர்க்கப்பட்டுப் பார்க்கவில்லை. அவன் பேசுவதை கிரகித்துக் கொள்ளத்தான் பார்த்தாள். அவள் கூர் விழி பார்வையில் வேந்தன் தடுமாறி நின்றான்.
‘யப்பா! என்ன பார்வைடா சாமி. அப்படியே ஆளை கிழிச்சு தொங்க விடற பார்வை’
முடிந்த அளவு அவளை பார்க்காமலே லைப்ரரியை எப்படிக் கட்டப் போகிறோம், எவ்வளவு நாள் எடுக்கும், தேவைப்படும் வேலை ஆட்களின் விவரம், பயன்படுத்தப் போகும் பொருட்களின் அளவு என கனக்கச்சிதமாக அலசி ஆராய்ந்தான்.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.