அத்தியாயம் 12
இந்த உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களையும்
என் தங்கச்சியா ஏத்துக்கிறேன் இனிமே! உன்னைத் தவிர!
(படம்- விண்ணைத் தாண்டி வருவாயா)
அந்த ஞாயிற்றுக்கிழமை வானம் சிறு தூரல் போட, அனைவருக்கும் அழகாய் விடிந்தது. வேந்தன் மட்டும் வீட்டு ஜன்னல் அருகே சிந்தும் தூரலை மன பாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவனுக்குத் திருமணம். தங்கைகளுக்கு முடித்துத்தான் தனக்கு எல்லாம் என்றிருந்தவன் வாழ்க்கையைப் புயல் புரட்டிப் போட்டிருந்தது.
பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் இருந்தவனுக்கு மாப்பிள்ளை களை வந்திருந்தது. முந்தைய நாள் வீட்டுக்கு வந்து அவனுக்கு க்ரூமிங் வேறு செய்திருந்தனர். மீசையை ட்ரீம் செய்து, முகத்துக்குப் பழ ஃபேசியல் செய்து, தலை முடியையும் சேரும் போட்டு பளபளக்க வைத்திருந்தனர். கடுப்பில் உள்ளுக்குள் கருவாடாக பொரிந்து கொண்டிருந்தான் வேந்தன்.
‘இந்த முகத்தைத்தானே வேணும்னா. அப்புறம் எதுக்கு ஆயிரெத்தெட்டு அலங்காரம்? காக்காய்க்குப் பவுடர் போட்டா வெள்ளை காக்காயாத்தானே ஆகும். என்னமோ மயில் ஆகிட போற மாதிரிதான் அட்டகாசம் பண்ணுறா. மேடமாம் மேடம், என்னை உசுரோட சுட்டுப் பொசுக்கற சூடம்’
மனதிற்குள்தான் புலம்ப முடிந்தது. அவனுக்கு வந்த ஆத்திரத்துக்கு மரியாதை எல்லாம் மண்ணுக்குள் போய்விட்டது.
அனு சந்தோஷமாக அலங்கரித்துக் கிளம்பி நின்றிருந்தாள். லாவண்யா புதுப் புடவை அணிந்து, நகை போட்டிருந்தாலும் அலங்காரம் என அலட்டாமல் சாதாரணமாகவே இருந்தாள்.
என்னதான் எல்லா ஏற்பாடும் தேவியே செய்திருந்தாலும், தாலியை மட்டும் வேந்தன் சென்று வாங்கி வந்திருந்தான். அவர்கள் குடும்பத்தில் அணியப்படும் அன்னலட்சுமி டிசைன் போட்ட தாலியை அலைந்து திரிந்து வாங்கினான். பத்தரிடம் சொல்லி செய்ய நேரம் இல்லாததால் பல கடைகள் அலைய வேண்டியதாகி விட்டது. அதோடு அவன் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஐந்து பவுனில் தாலி சங்கிலியும் வாங்கியிருந்தான். லட்டுவும் அனுவும் ஏதோ தங்களுக்குத் தெரிந்த அளவில் வரிசைத் தட்டுக்களை ரெடி செய்திருந்தனர். வேந்தன் அவர்கள் சைடில் யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. மெதுவாகச் சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
இன்னும் பதினைந்து நிமிடங்களில் இவர்களை அழைத்துப் போக வருவதாக கார்த்திக் போன் செய்திருந்தான். அவன்தான் மாப்பிள்ளை கார் டிரைவர். சிந்தனையில் இருந்த வேந்தன், கார்த்திக் விடாமல் அடித்த ஹாரன் ஒலியில் தன்னை மீட்டுக் கொண்டான்.
மூவரும் தட்டுக்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தனர். கார்த்திக் கீழே இறங்கி வேந்தனுக்கு முன் கார் கதவைத் திறந்து விட்டான்.
“ஏறு மாப்பிள்ளை!” என்றவன்தான் பார்ப்பதற்கு மாப்பிள்ளை போல் இருந்தான்.
முகம் பளபளவென இருந்தது. முடியை முன்னே ஸ்பைக் செய்து பின்னால் போனிடெய்ல் போட்டிருந்தான். அகலக் கரை வைத்தப் பட்டு வேட்டி கட்டி, ரோஜா வண்ணத்தில் ஜிப்பா அணிந்து ஜம்மென இருந்தான். லாவண்யா அவனைத்தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின்னால் கார் கதவை திறந்து விட்டவன்,
“மை பியூட்டிஃபுல் லேடிஸ், ப்ளிஸ் பீ சீட்டட்!” என்றான்.
அனு முதலில் ஏறி உட்கார்ந்தாள். லாவண்யா மட்டும் உட்காராமல்,
“அண்ணா! இன்னொரு தட்டு எடுக்கனும், பழங்களை அடுக்க. மறந்துட்டேன்” என நாக்கைக் கடித்தாள்.
“சரி, இரு. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்றான் வேந்தன்.
“வேணாண்ணா. நீ ரிலேக்ஷா உக்காரு. நம்ப கார்த்திக் சார் வந்து எடுத்துக் குடுக்கட்டும்” என முன்னே நகர்ந்தாள்.
மற்ற நேரத்தில் எப்படியோ, இப்பொழுது அவனே ஒரு மன நிலையில் இல்லாததால் பேசாமல் அமர்ந்து விட்டான் வேந்தன்.
கார்த்திக் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அண்ணாச்சி செம்ம ஹேப்பி. விசிலடித்தபடியே, படி ஏறும் லட்டுவின் பின்னலழகை ரசித்தப்படி பின் தொடர்ந்தான்.
கதவைத் திறந்து கார்த்திக்கை உள்ளே விட்டுக் கதவை மூடினாள் லாவண்யா. கேள்வியாக நோக்கியவனை,
“வேட்டியைக் கழட்டு” என்றாள்.
ஆவென வாயைப் பிளந்தவன்,
“அடி கள்ளி! மாமன் மேல இம்புட்டு ஆசைய வச்சுகிட்டு எதுக்கு இந்தக் கோப வேஷம்? எனக்கும் ஆசைதான். இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னால இதுலாம் தப்பு லட்டும்மா” எனச் சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்து நின்று கன்னத்தைத் தடவினான்.
பட்டென்று அவன் கையில் ஒன்று போட்டவள்,
“கர்மம்! கர்மம்! பேச்சைப் பாரு! வாயில ஒன்னு போட்டுருவேன்” என்றாள் இவள்.
அவனைத் திட்டிக் கொண்டே வேந்தனின் அறைக்குச் சென்று ஒரு சாதாரண வெள்ளை வேட்டியை எடுத்து வந்தவள், அதை அவனை நோக்கி வீசினாள். நமது கேட்ச் மன்னனும் அதை அழகாக கேட்ச் பிடித்தான்.
“அந்தப் பட்டு வேட்டியைக் கழட்டிட்டு இதை கட்டு. மாப்பிள்ளை நீயா, எங்கண்ணானானே தெரியலை”
“அதெல்லாம் முடியாது போடி! நான் இப்படித்தான் வருவேன்” என இவனும் அடம் பிடித்தான்.
“அப்ப சரி! நீ செலக்ட் பண்ண இந்தச் சேலைய கழட்டி வீசிட்டு, சாதாரண சேலையை கட்டிக்கிட்டு வரேன்” என அவளது ரூமுற்கு செல்ல முற்பட்டாள் லாவண்யா.
“நில்லுடி. சேலைய அவுத்த கொன்னுப் போட்டுருவேன். அடம் பிடிச்சக் கழுதை” என அவளைத் திட்டிக் கொண்டே வேட்டியை கழட்டினான்.
பட்டாம்பட்டி டவுசரோடு அவனைப் பார்த்தவள் சட்டென அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள். அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“வெளிய தான் ஹை கிளாசா? உள்ள படா லோக்கலு போல” எனக் கிண்டலடித்தாள்.
அவனுக்கும் சிரிப்பு வந்தது.
“வேட்டி அவுந்து விழுந்துட்டா, என் மானத்தைக் காப்பாத்தத்தான் இந்த டவுசர். ஷோர்ட்ஸ் போட்டா உட்கார கஷ்டமா இருக்கு. அதுக்குத்தான் இந்த ஐடியா. சரி இப்பவாச்சும் கீழ போலாமா?”
“இன்னும் ஒன்னு. தலைய கலைச்சி சாதாரணமா சீவிட்டு வா”
“என்னடி ஓவரா போற! இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை? நான் நல்லா இருந்தாலும் உனக்குப் பிடிக்கல, நல்லா இல்லாட்டியும் பிடிக்கல. தலை சுத்துதுடி!”
“ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ இப்படியே வா. நான் போய் இந்த நகை நட்டையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு சும்மா வரேன்”
“அடச்சை!”
கடுப்பில் ஆவேசமாக பாத்ரூமுக்கு சென்றான் அவன்.
வெளியே வரும்போது, ஸ்பைக் எல்லாம் எடுத்து, வழித்துச் சீவி இருந்தான். பளபளவென இருந்த முகத்தையும் கழுவி துடைத்திருந்தான்.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 12
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.