அத்தியாயம் 11
“காதல நாம தேடி போனா அது காதல் இல்ல.
அதுவா நடக்கனும். நம்மல போட்டு தாக்கனும்
தல கீழா போட்டுத் திருப்பனும்”
(படம் – விண்ணைத் தாண்டி வருவாயா)
“சொல்லு! இப்ப நான் என்ன செய்யனும்?” எனக் கேட்டான் வேந்தன்.
கார்த்திக்கை ஒரு பார்வைப் பார்த்தாள் தேவி.
“மச்சி! மேடம் இந்த அளவுக்கு இறங்கி இருக்காங்கனா அவங்க உன் விஷயத்துல எவ்வளவு சீரியசா இருக்காங்கன்னு உனக்குப் புரியலையா? அவங்க சொல்லறதுக்கெல்லாம் தலைய ஆட்டிட்டு அம்மாவ காப்பாத்தற வழிய பாருடா. பாவம் அவங்க, தனியா அங்க என்ன பாடு படறாங்களோ? எனக்கு நினைக்கறப்பவே பக்கு பக்குன்னு இருக்கு!” என வராத கண்ணீரைத் துடைத்தான் அவன்.
“கல்யாணம்தானே? செஞ்சி தொலைக்கிறேன். என் அம்மாவ விடச் சொல்லு”
“அஸ்க்கு புஸ்க்கு! அம்மாவ விட்டவுடனே, குடும்பத்தோட ராவோட ராவா ஓடிட்டீங்கனா? நான் சொல்லல மாமு, மேடம் அப்படி ஃபீல் பண்ணுறாங்க”
“அப்படி நம்பாதவங்க, எதுக்கு என்னைக் கட்டிக்கனும்?”
“நம்பாம எல்லாம் இல்ல. ஒரு முன்னெச்சரிக்கைத்தான்”
“சரி! என்னை நம்பறதுக்கு நான் என்ன செய்யனும்?”
“மேடம்! சொல்லுங்க. வேந்தன் சார் என்ன செய்யனும்? எதுவா இருந்தாலும் பார்த்துச் செய்யுங்க. அவர் ரொம்ப நல்லவரு” என சர்டிபிகேட் ஒன்றையும் கொடுத்தான் கார்த்திக்.
‘செய்யுங்கன்ற வார்த்தைய அழுத்தி சொன்ன மாதிரி இருந்ததே’ எனக் கார்த்திக்கைக் கூர்ந்து கவனித்தான் வேந்தன். கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் போல் முகத்தைப் பாவமாய் வைத்திருந்தான் அவன்.
‘இவன நம்பலாமா? ஏற்கனவே இவனுக்கும் எனக்கும் ஆகாது’ வேந்தனின் நினைவுகள் பொங்கலுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளுக்குச் சென்றது.
அவர்கள் ஹாஸ்டலுக்கு வந்த இரண்டு நாட்கள் கழித்து லாவண்யா வேந்தனுக்குப் போன் செய்திருந்தாள். வேந்தனிடம் போன் இல்லை. அவசரத்துக்குக் கார்த்திக்கின் நம்பரைக் கொடுத்திருந்தான். தேவையில்லாமல் யாரும் அதில் அவனைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
“ஹலோ!”
“ஹலோ!”
“எங்கண்ணனை கூப்புடு!”
“லட்டு! நீயா பேசறது?” குஷியானான் கார்த்திக்.
“மண்ணெண்ண விளக்கெண்ண, யார் பேசுனா உனக்கென்ன?” எனக் கடுப்படித்தாள் லாவண்யா.
“அப்ப என் லட்டுதான் பேசறது. உன்னைத் தவிர இவ்வளவு ரைமிங்கா யாரால பேச முடியும். சொல்லுடா, என்ன வேணும்?”
“எங்கண்ணன கூப்புடு. உன் கிட்ட பேச நான் போன் பண்ணல”
“சரி, கூப்பிடுறேன். அதுக்கு முன்ன என் கிட்ட பாசமா ரெண்டு வார்த்தைப் பேச கூடாதா லட்டு?”
“பாசமாத்தானே. தோ! இப்ப பேசறேன். பேசறது என்ன கவிதையே படிக்கிறேன். அதுதான உனக்கு ரொம்ப பிடிக்கும்”
“கவிதையா? நீயே கவிதை மாதிரித்தானே இருக்க. அதனால கவிதை எல்லாம் வேணான்டா”
உள்ளுக்குள் அவனுக்குப் பயம். எங்கே மீண்டும் அருவா, கடப்பாறை எனக் கவிதை சொல்லி விடுவாளோ என.
“உன் கிட்ட பேசுனா கவிதை அருவி மாதிரி கொட்டுது. இதை நீ கண்டிப்பா கேக்கனும்”
“அப்படியா? சரி சொல்லுடா பட்டுக்குட்டி”
“ரோட்டுல விக்குது பண்டம்
செத்தா போடுவாங்க பிண்டம்
நீ ஒரு அறிவுக்கெட்ட முண்டம்
வீணாப்போன விளங்காத தண்டம்’ கவித, கவித நல்லா இருக்கா?”
“நானும் இதுக்கு பதில் கவிதை சொல்லுவேன். அப்புறம் நீ பேஜாராயிடுவன்னு விடுறேன். இரு உங்கொண்ணனைக் கூப்புடுறேன்”
அதற்கு மேல் கார்த்திக் பேச்சை வளர்க்கவில்லை. போனை வேந்தனிடம் கொடுத்து விட்டான்.
“சொல்லுடா குட்டி! எப்படி இருக்க?”
அங்கே லாவண்யா தேம்புவது கேட்டது.
“என்னடா செல்லம்? ஏன் அழறீங்க?” எனப் பதறினான் வேந்தன்.
‘அழறாளா? இப்ப நல்லா நக்கலாதானே என் கிட்ட பேசுனா. அதுக்குள்ள என்ன?’
மண்டைக்குள் மணி அடித்தது கார்த்திக்குக்கு.
அதற்குள் வேந்தன் பாடலைத் தொடங்கி இருந்தான்.
“சின்ன தங்கம் என் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது?”
பாடலைக் கேட்டு அழுகை இன்னும் வலுவானது. அவள் அழுவது கார்த்திக் காது வரை கேட்டது.
“என் பவுனு, சொல்லும்மா. இப்படி அழுதா அண்ணா என்னன்னு நினைக்கட்டும்?”
“அண்ணா நீ போனதுல இருந்து எனக்குச் சரியான காய்ச்சல். இப்பத்தான் கொஞ்சம் நல்லா ஆச்சு. உன் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேண்ணா. அதை நினைச்சுத்தான் எனக்குக் காய்ச்சல் வந்துருச்சு”
“ஐயோ, காய்ச்சலா? என்னடா திடீர்னு?” எனப் பதறினான் வேந்தன்.
“நீ பிரண்டுன்னு ஒரு தேவாங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியே”
“ஆமா, கார்த்திக். அவனுக்கென்ன?”
வேந்தனின் பார்வை அக்கு வேர் ஆணி வேராக கார்த்திக்கைத் துளைத்தது.
‘ஐய்யயோ! போட்டுக் குடுக்கறா போல இருக்கே. இவன் பார்க்கிறதே சரி இல்லையே’ என உஷாரானான் கார்த்திக்.
“அவன் என்னைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்லிட்டான்ண்ணா!” திரும்பவும் ஒப்பாரியை ஆரம்பித்தாள்.
வேந்தனின் கண்கள் கோவைப்பழம் போல சிவந்தன.
‘ஆண்டவா! கண்ணு ரெண்டும் கேப்டனை விட அதிகமா சிவந்துருக்கு. போனை வச்சிட்டு, அந்தப் படத்துல கேப்டன் குடலை உருவுவாரே, அந்த மாதிரி உருவிருவானோ’
மெல்ல நகர்ந்து கதவருகே நின்றுக் கொண்டான் கார்த்திக்.
“அழாதே லட்டு. அண்ணா என்ன சொல்லி இருக்கேன்? படிக்கிற வயசுல கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கனும். கண்டப் பொறுக்கிப் பயலுக வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசுவானுங்க. அதுக்கெல்லாம் மனசு சஞ்சலப் படக் கூடாது. நம்ம லட்சியத்தை நோக்கி போய்கிட்டே இருக்கனும். என் லட்டு, சாதிக்கப் பிறந்தவ. ஆண் படிச்சா அவன் குடும்பம் மட்டும்தான் முன்னேறும். அதுவே ஒரு பொண்ணு படிச்சா அவ குடும்பமும், அவள சார்ந்த சமூகமும் முன்னேறும்மா. கண்ணைத் துடைச்சிகிட்டு, அதோட சேர்த்து அவன் நினைப்பையும் துடைச்சிப் போட்டுட்டு போய் படிக்கிற வேலைய பாருடா” எனச் சமாதானப் படுத்தினான் வேந்தன்.
பேசி முடித்து போனை தூக்கி கார்த்திக்கின் கட்டிலில் போட்டவன்,
“ஏன்டா அப்படி செஞ்ச?” எனக் கடுமையாகக் கேட்டான்.
“அது வந்து மச்சி”

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 11
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.