அத்தியாயம் 10
அழகுன்றது கண்ணுக்குதானே, மனசுக்கு இல்லையே
(படம் - காவலன்)
“என்னது? அம்மாவ காணோமா?”
தங்கை விளையாட்டுக்குக் கூட இப்படி பேச மாட்டாள் எனத் தெரிந்த வேந்தனுக்குத் தொண்டையில் பயப் பந்து உருள ஆரம்பித்தது. இந்த நேரத்தில் அவர்கள் மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனப் புத்தி எடுத்துச் சொல்ல அவசரமாக பைக்கை மீண்டும் காலேஜுக்கு விட்டான். லாவண்யாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவன், அனுவிடம் மீண்டும் என்ன நடந்தது என விளக்கமாகக் கேட்டான்.
“அண்ணா! கீரை வாங்க போறேன்னு சொல்லிட்டு கீழ போனாங்க. பிளாஸ்டிக் கூடையும் அவங்களோட குட்டி பர்ஸ் மட்டும்தான் எடுத்துட்டுப் போனாங்க. உனக்குப் பிடிக்கும்னு மசால் வடை செய்ய பருப்பு ஊறப் போடச் சொன்னாங்க. நானும் சொன்னதை செஞ்சிட்டு வெய்ட் பண்ணுறேன், வரவே இல்லை. கதவைப் பூட்டிட்டு கீழ போய் பார்த்தேன். அவங்கள காணோம். சுத்தி கொஞ்ச நேரம் தெருவுல இறங்கி நடந்து கூடப் பார்த்தேன். எங்கயும் காணோம்” என அழுதபடி சொன்னாள் அனு.
லட்டுவும் அழுகையை ஸ்டார்ட் செய்திருந்தாள்.
“ரெண்டு பேரும் அழாதீங்க. நடந்து வேற கடை எங்கயாச்சும் போயிருப்பாங்க. நான் போய் தேடிப் பார்க்கிறேன்!”
“இல்லண்ணா! கீழ தானே போறோம்னு சாதாரண புடவைத்தான் கட்டியிருந்தாங்க. கடைக் கண்ணிக்குப் போறதுன்னா அவங்க எப்படி போவாங்கன்னு உனக்குத் தெரியாதா?” என இன்னும் வேகமாக தேம்பினாள் அனு.
வேந்தனுக்கும் புரிந்தது. இந்து கடைக்கு பழம் வாங்க போவது என்றால் கூட, நன்றாக தலையை சீவி, பான்ட்ஸ் பவுடரை அப்பிக் கொண்டு, லாவண்யாவின் பர்பியும்மை போட்டுக் கொண்டு டிப் டாப்பாகத்தான் செல்வார். பிள்ளைகள் கிண்டல் செய்தால் கூட, வெளியே போகும்போது சுத்தப்பத்தமாக, அழகாக சென்றால் நான்கு பேர் மதிக்கிறார்களோ இல்லையோ, நம் மேல் நமக்கே மதிப்பு வரும் என அசால்ட்டாக அவர்களின் வாயை அடைத்து விடுவார். அவரைத் தனியாக விட்டால், வாங்கப் போன பொருளை விட்டு விட்டு, பிள்ளைகளுக்கு இது நன்றாக இருக்கும் அது நன்றாக இருக்கும் எனக் கை மீறி செலவு செய்து விடுவதால், வேந்தன் அவரைத் தனியாக எங்கும் அனுப்ப மாட்டான். அவனோ தங்கைகளோ யாராவது அவருடன் செல்வது வழமை. இந்து தன் மூன்று பிள்ளைகளால் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டு வரும் தாயாகிய சேய். அவரை காணோம் என்றவுடன் மூவரும் கலங்கித் தவித்தனர். தங்கைகளைப் பயமுறுத்தக் கூடாது என வேந்தன் தைரியமாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டான். உள்ளுக்குள் நொறுங்கிப் போய் இருந்தான் அவன். இந்துதான் அவனுக்கு எல்லாமே! அவனது முதல் குழந்தை அவர்.
“அண்ணா! அம்மாவுக்கு வெளி உலகமே தெரியாது. எங்க போய் என்ன பாடு படறாங்கன்னு தெரியலையே!” என்ற லாவண்யாவுக்குக் கண்ணீர் பெருகியது.
அம்மா வந்தால் தகவல் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, அவன் பைக்கில் தெருவையே சுற்றி வந்தான் வேந்தன். அதோடு அவன் மாமாவுக்கும் போன் செய்து கேட்டான் அங்கே இந்து வந்திருக்கிறாரா என. அவர் இவர்களுக்கு மேல் பதறி போய் அழுதே விட்டார். ஒற்றை தங்கையாயிற்றே.
வேந்தனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. மூளை மரத்து விட்டது. உடலும் உள்ளமும் ஓய்ந்து, அவர்கள் தெருவில் இருந்த வைஷ்ணவதேவி கோவில் வாசலில் அப்படியே அமர்ந்து விட்டான்.
அப்பொழுது கோவிலில் இருந்து வெளி வந்த இருவர், தேவி தரிசனம் அற்புதமாக இருந்தது எனப் பேசிக் கொண்டு வந்தார்கள். திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்த வேந்தனுக்கு கேட்டதெல்லாம் தேவி எனும் சொல்தான்.
“இதை எப்படி மறந்தேன்! எல்லாம் இவ வேலையாத்தான் இருக்கும். ராட்சசி! இருடி வரேன்” என உரக்கவே கத்திக் கொண்டு பைக்கை நோக்கி ஓடினான்.
கீரை வாங்க வந்த இந்துவை அட்ரஸ் கேட்பது போல் மூக்கில் மயக்க மருந்து துணி வைத்து லாவகமாக காரினுள் போட்டுக் கொண்டனர் அந்தக் கடத்தல்காரர்கள். பழைய டெக்னிக்தான் ஆனால் பக்காவான டெக்னிக்.
அவர் கண் விழித்த போது, ஒரு பெரிய வீட்டில் இருந்தார். ஹாலில் உள்ள சோபாவில் அவரைப் படுக்க வைத்திருந்தார்கள். மெல்ல எழுந்து உட்கார்ந்தவருக்குச் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. நன்றாக யோசித்ததும்தான் புரிந்தது அவர் கடத்தப்பட்டிருப்பது. இந்துவுக்கு அப்படி ஒரு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
அவர் அருகிலேயே இருந்த அந்த இரண்டு கடத்தல் பேர்வழிகளும் அவரின் சிரிப்பைப் பார்த்துப் பயந்து விட்டனர் அவருக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடித்து விட்டதோ என்று.
முகமூடி அணிந்து சிவப்பு சட்டையிலிருந்தவன் அவர் அருகில் சென்று,
“அம்மா, ஏன் சிரிக்கிறீங்க? உங்களுக்கு அடி கிடி ஏதாச்சும் பட்டுருச்சா?” எனக் கேட்டான்.
கடத்தச் சொன்னவர்கள் அவரை ஒரு கீறல் கூட இல்லாது பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்தனர்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை தம்பி. நீங்க என்னைக் கடத்தி வச்சிருக்கீங்களே, அதை நினைச்சு எனக்குச் சிரிப்பு வந்துருச்சு. நான் மயக்க மருந்து போட்டுக் கடத்தற அளவுக்கெல்லாம் வொர்த் இல்லப்பா. என் மகன் சாப்பாட்டுக் கையால காக்கா என்ன, ஈ கூட ஓட்ட மாட்டான். இப்படி இருக்கு எங்க குடும்ப நிலைமை. அப்புறம் எதுக்குப்பா வண்டியில பெட்ரோல் எல்லாம் போட்டு என்னைக் கடத்திட்டு வந்திருக்கீங்க?” என அதிசயமாகக் கேட்டார்.
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்மா. இது வேற டீலீங்” என்றான் நீல சட்டைக்காரன்.
“ஹ்ம்ம். அது சரி! சொன்ன கேக்க மாட்டிக்கிறீங்க. அப்புறம் உங்க இஷ்டம். மணி என்னப்பா ஆகுது?”
“மத்தியானம் 3 ஆகுது!” என்றான் சிகப்புச் சட்டை.
“சாப்பாட்டு நேரம் ஓடி போச்சே. இன்னும் நான் காலைச் சாப்பாடு, ஸ்னேக்கு, மதிய சாப்பாடு எதுவுமே சாப்படலியே” என கவலைப்பட்டார் இந்து.
அவர் கவலை அவருக்கு.
“டேய்! என்னடா மம்மி ஸ்னேக்கு எல்லாம் கேக்குது. இவங்க எது கேட்டாலும் சாப்பிட வாங்கி குடுக்கச் சொல்லி இருக்காங்களே. இப்ப பாம்பு கறி எங்கடா போய் தேடறது?” என மற்றொருத்தனைப் பார்த்துக் கேட்டான் சிகப்பு சட்டை.
“இரு, இரு! நான் வேற ஐட்டம் மாத்த முடியுமான்னு கேக்குறேன்” என்றவன் இந்துவிடம்,
“அம்மா, பாம்புக் கறி சொல்லி வச்சாத்தான் கிடைக்கும். டின்னருக்கு அத வாங்கித் தரேன். இப்ப பிரியாணி சாப்புடுறீங்களா?” எனக் கேட்டான்.
“பாம்பு கறியா?” என வாயைப் பிளந்தார் இந்து.
“ஆமாம்மா! ஸ்னேக்கு வேணும்னு இப்பத்தானே சொன்னீங்க”
“அடப் பாவிகளா! அது பாம்பு இல்லைப்பா! சிப்ஸு, ஆப்பிள், ஆரஞ்சு, இப்படி சாப்புடுவாங்களே அதை சொன்னேன்பா”
“ஓ அதுவா! சரிமா வாங்கிட்டு வரேன். வேற எதாச்சும் வேணுமா?” எனக் கேட்டான் நீல சட்டை.
நன்றாக யோசித்த இந்து,
“ப்பா! மட்டன் பிரியாணி வேணாம். நீங்க ஏற்கனவே என்னைக் கடத்தறதா சொல்லி இருந்தா கீரை வாங்க வரப்ப பீப்பீ மருந்தும் எடுத்துட்டு வந்துருப்பேன். மருந்து போடாம, மட்டன் சாப்பிட முடியாது!” என்றார்.
“பீப்பீ மருந்தா?” எனக் கேட்டான் சிவப்புச் சட்டை.
“அதான் ரத்த கொதிப்புக்குப் போடுவாங்களே பீப்பீ மருந்து. என்னப்பா நீங்க பச்ச மண்ணா இருக்கீங்க. ஒன்னுமே தெரிய மாட்டிக்கிது. எப்படித்தான் இந்தத் தொழில் செய்றீங்களோ தெரியல” என சலித்துக் கொண்டார் இவர்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இது நமக்குத் தேவையா என்பது போல் பார்த்துக் கொண்டனர்.
“நல்ல லேக் பீஸ் போட்டு பாய் கடை பிரியாணி வாங்கிட்டு வாப்பா. என் மகன், உடம்பு முழுக்க சீக்க வச்சிக்கிட்டு பிரியாணி சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டான். கெஞ்சி கேட்டா, புளியோதரை வாங்கி குடுத்து, இத பிரியாணின்னு நினைச்சிக்கிட்டு சாப்புடுங்கன்னு சொல்லுவான். இம்சை!”

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 10
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.