அத்தியாயம் 22(எபிலாக்)
நீதானே எனைத் தொடரும் நிழல்!
ஈப்போ நகரில் அமைந்திருந்த அந்தப் பெரிய மண்டபம், மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது.
“பாப்பா எங்கடா?”
“எந்தப் பாப்பாம்மா? பெரிய பாப்பாவா, சின்னப் பாப்பாவா?” எனப் புன்னகையுடன் கேட்டான் விஜய்.
“உன் பொண்டாட்டியத்தான் கேக்கறேன்! உன் மகத்தான் அவ தாத்தாங்க கிட்ட இருக்காளே” எனச் சொல்லி ஞானவேலையும், மனோகரையும் பார்த்தார் அகிலா.
இரண்டு வயதான விஜய் மற்றும் மதுவின் மகள் மதுமொழி, தாத்தாக்களின் செல்லம். இரு தாத்தாக்களிடமும் மாறி மாறித் தாவிக் கொண்டிருந்தக் குட்டியை வாஞ்சையாகப் பார்த்தனர் அம்மாவும், மகனும்.
இப்பொழுது வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் நடக்க முடிகிறது அகிலாவால். பேச்சும் ஓரளவுக்குச் சரளமாக வந்தது. அஸ்மி தன் குழந்தையுடனும் கணவருடனும் வந்து இவரைப் பார்த்துச் சென்றிருந்தது, மகன் மற்றும் மருமகளின் கனிவான கவனிப்பு, குட்டி மதுவின் வருகை எல்லாம் அவரை உற்சாகமாக நடமாட வைத்திருந்தது.
“அவ எத்தனை தடவை எகிறிட்டு வந்தாலும் உங்க பாப்பாங்கற அழைப்பு மட்டும் மாற மாட்டுது”
“ஏன்டா மாத்திக்கனும்! அவளுக்கே பாப்பா வந்துட்டாலும், எனக்கு அந்தப் பொம்மைக்குட்டி எப்பவுமே பாப்பாத்தான்”
“உங்க பாப்பாத்தான் அவங்க அண்ணா கல்யாணம்னு ரெக்க இல்லாம பறந்துட்டு இருக்காளே! இப்ப கூட ஐயரு என்னமோ கேட்டாருன்னு எடுக்கப் போயிருக்கா” என்றான் விஜய்.
மகேனின் திருமணத்துக்குக் குடும்பமாய் வந்திருந்தார்கள் இவர்கள். குழந்தையும் மதுவும் ஒரு வாரத்திற்கு முன்பே மனோகரின் வீட்டுக்குப் போயிருக்க, முந்தைய தினம்தான் பெற்றவர்களுடன் வந்து சேர்ந்திருந்தான் விஜய். இவன் இப்பொழுது வேறு ஒரு நிறுவனத்தில் இன்னும் பெரிய போஸ்ட்டில் இருந்தான். மதுஷாலினி பழைய இடத்திலேயே இன்னும் வேலை செய்கிறாள். அவளுக்கும் பதவி உயர்வு கிடைத்திருந்தது.
குழந்தைப் பெற்றிருந்த உடல் கொஞ்சமாய் சதைப் போட்டிருக்க, பட்டுச் சேலையில் தேவதை போல அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த மனைவியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தபடிதான் அமர்ந்திருந்தான் விஜய். ஒரு வாரப் பிரிவைக் கூட தாள முடியவில்லை இவனால். மதுவோ, ஏக்கப் பார்வைப் பார்த்தபடி வளைய வரும் இவனைக் கண்டுக் கொள்ளவேயில்லை.
‘வீட்டுக்கு வாடி! வச்சிக்கிறேன் உன்னை!’ எனக் கருவியபடித்தான் அவளைப் பார்த்திருந்தான் இவன்.
அகிலா மருமகளைத் தேடிப் போக, இவன் அருகே வந்து நின்றார் மனோகர். கையில் பிடித்திருந்த குட்டி மதுவைக் காட்டி,
“பசிச்சிடுச்சு போல! உதட்டைப் பிதுக்கறா மாப்பிள்ளை!” என்றார்.
இவனிடம் தாவி வர முயன்றாள் குழந்தை.
“ப்பா! மம்மம்!”
“இருடாம்மா! அப்பா பால் கலக்கிட்டு, குட்டி மதுவ தூக்கிக்கறேன்” என்றவன், எப்பொழுதும் வெளியே போகும் போது பிள்ளைக்காக எடுத்துப் போகும் பேக்கில் இருந்த சுடுநீர் ப்ளாஸ்க்கை வெளியே எடுத்து, பால் பவுடரை பாட்டிலில் கலந்து மிதமான சூட்டில் மகளுக்குப் பால் தயாரித்தான்.
அதற்குள் பத்து அப்பா சொல்லி விட்டாள் சின்னவள். மகளை மாமனாரிடம் இருந்து வாங்கி, வாகாகப் பற்றிக் கொண்டவன், அவளுக்குப் பால் புகட்ட ஆரம்பித்தான். மணமேடையில் இருந்து கணவனையும், மகளையும் கவனித்த மதுஷாலினிக்கு மெல்லியப் புன்னகை முகிழ்த்தது.
“சோ ஸ்வீட்டு, மை விஜய்!” என இவள் இதழ்கள் முணுமுணுத்தன.
திருமணமான நாள் தொட்டு, இன்று வரை அவள் வாழ்க்கையில் சந்தோஷ சாரலுக்குப் பஞ்சமில்லை. சில நேரங்களில் சூறாவளியாய் சுழன்றடிக்கும் அவன் அதிரடியிலும், சில நேரங்களில் ஆர்ப்பாட்டமில்லாமல் அரவணைத்துக் கொள்ளும் அவன் அன்பிலும் திண்டாடித்தான் போனாள் மதுஷாலினி. விஜய்க்கு எங்கும் எதிலும் எந்நேரமும் மது மயக்கம்தான். விடிந்ததும் தெளிந்து விடும் மயக்கமல்ல அது! பூமியில் இருந்து விடை பெறும் நாள் வரை அவனைக் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மயக்கம் அது.
மனைவியின் பார்வை வீச்சை உணர்ந்து, நிமிர்ந்து மேடையைப் பார்த்தான் விஜய். அங்கே இவனையே காதலாய் பார்த்தபடி இருந்தவளைக் கண்டவனுக்கு, முகம் மலர்ந்து போனது. மகளின் உள்ளங்கையில் முத்தம் வைத்து, அதை காற்றில் மனைவிக்கு ஊதி விட்டான் விஜய். கன்னத்தை திருப்பிக் காட்டி அதை ஏற்றுக் கொண்டதாக சைகை செய்தாள் இவள். அதைத் தற்செயலாகப் பார்த்து விட்ட சாரதா,
“இதுங்க ரெண்டும் இருக்குங்களே! கடவுளே! நான் எத்தனை தடவைத்தான் சுத்தி போடறதோ தெரியல! இன்னிக்கு வீட்டுக்குப் போனதும் மகேனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் சுத்தி போடறனோ இல்லையோ, இவங்க மூனு பேருக்கும் சுத்திப் போட்டுடனும்!” என முனகிக் கொண்டார்.
“ப்ரோ! ஷாலு உங்கள மேடைக்குக் கூப்பிட்டா” என வந்து நின்றான் நிவேதன்.
“என்னடா ப்ரோ! அண்ணான்னு கூப்பிடுன்னு எத்தனைத் தடவை சொல்றது” எனக் கடிந்து கொண்டான் ராஜா.
“ப்பா! நானு யூத்துப்பா! இப்படித்தான் கூப்பிடுவேன்! அண்ணாவ ப்ரோன்னு கூப்புட்டா தப்பொன்னும் இல்ல!” என்றவன் தன் அன்பு ஷாலுவின் மகளை அழகாய் தூக்கிக் கொண்டான்.
“விடுங்க மது மாமா! இத்தனை வருஷமா அவன் ஷாலுவ நான் லவட்டிட்டுப் போய்ட்டேன்னு கோச்சிட்டு இருந்தவன், இப்பவாச்சும் என் கிட்ட பேசறானே!” எனச் சொல்லி நிவேதன் தோளை அணைத்துக் கொண்டான் விஜய்.
மகேஷ், அவன் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் மேடையில் இருக்க, இவனும் மனைவியின் பக்கம் போய் நின்று கொண்டான். சாங்கியங்கள் எல்லாம் முடிந்து மகேன், அவன் அப்பா அவனுக்காகப் பார்த்திருந்த பெண்ணின் கழுத்தில் சந்தோஷமாகவே தாலியைக் கட்டினான். அவன் முகம் மலர்ந்து விகசிக்க, ஷாலுவின் கண்கள் கலங்கி நின்றன.
“அழாதடி! மகேன் சந்தோஷமா வாழ்வான்! அவன் முகத்துல வழியுற ஜொள்ளை நோட் பண்ணு! எண்ணி பத்தே மாசத்துல உன்னை அத்தையாக்கிறானா இல்லையான்னு பாரு” எனக் கிசுகிசுத்தான் விஜய்.
“உங்கள!” என முறைக்க முயன்றவள், அது முடியாமல் சிரித்து வைத்தாள்.
ஒரு வழியாய் சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து, மகேனை மறு வீட்டுக்கு அனுப்பி விட்டு வீடு வந்து சேர மணி இரவு பத்தாகி விட்டது.
இவர்களோடேயே வீட்டுக்கு வந்து, எல்லோருக்கும் சுற்றிப் போட்டு விட்டுத்தான் தன் வீட்டுக்குக் கிளம்பி இருந்தார் சாரதா.
மதுமொழி களைப்பில் தூங்கி இருக்க,
“செல்லக் குட்டிய என் கிட்ட குடும்மா! நைட்டு நான் பால் கலக்கிக் குடுத்துப் பார்த்துக்கறேன்! நீங்க கிளம்பிட்டா, அவ ஞாபகமாவே இருக்கும்” என வந்து நின்றார் மனோகர்.
“இந்தாங்க பிடிங்க உங்க பேத்தியை! நான் ப்ளாஸ்க், பால் பவுடர் எல்லாம் ரெடி பண்ணி எடுத்துட்டு வரேன்!” என இவள் நகர,
“நான் எடுத்துத் தரேன் மது! நீ போய் முகம் கை, காலுலாம் கழுவு!” என அனுப்பி வைத்தான் விஜய்.
அகிலாவும், ஞானவேலும் கெஸ்ட் ரூமில் ஏற்கனவே உறங்கி இருந்தார்கள். இன்னும் சில சொந்தங்களை மேல் வீட்டில் படுக்க வைத்திருந்தார்கள் மகேஷோடு.
மனோகர் குழந்தையுடன் தன் அறைக்குள் நுழைந்து விட, தன்னைக் கடந்து போகும் மனைவியிடம்,
“சேலையை மட்டும் கழட்டிடாதே மதுக்குட்டி! நான் வந்து ஹெல்ப் பண்றேன்” என மெல்லியக் குரலில் சொல்லிக் கண் அடித்தான் விஜய்.
“செம்ம டயர்ட்ல இருக்கேன்! இன்னிக்கு நைட் கிட்ட வந்த, மதுஷாலினி மான்ஸ்ட்டர் ஷாலினியா மாறிடுவா பார்த்துக்கோ!” என விரல் நீட்டி சின்னக் குரலில் எச்சரித்து விட்டுப் போனாள் அவள்.
புன்னகையுடன் மகளுக்குத் தேவையானதை ரெடி செய்து மாமானாரின் அறைக்குக் கொண்டு போனான் விஜய். பேத்தி பக்கத்தில் படுத்திருக்க, மனோகர் சாய்ந்து அமர்ந்திருந்தார். மகளுக்கு மெலிதாய் கன்னத்தில் முத்தமிட்ட விஜய்,
“அப்புறம் மாமா! கடமைலாம் முடிச்சிட்டீங்க போல! இனிமே ஜாலி லைஃப்னு சொல்லுங்க” என வம்பிழுத்தான் மாமனாரை.
“அப்பான்னு அவதாரம் எடுத்துட்டாலே, கடமை நம்மை விட்டுப் போகாது மாப்பிள்ளை! பெத்த பிள்ளைங்களுக்கு எல்லாம் செஞ்சி முடிச்சிட்டு நிமிர்ந்தா, நாங்க இருக்கோம் தாத்தான்னு பேரப் புள்ளைங்க வந்து நின்னுடும்! நாங்களும் சந்தோஷமா அதுங்க பொறுப்ப ஏத்துக்கிட்டு அடுத்தக் கட்டத்த நோக்கிப் பயணிக்க ஆரம்பிச்சிடுவோம்!” என்றவர் பேத்தியின் கன்னத்தை அன்பாய் வருடினார்.
“நீங்க ஒரு பெஸ்ட் அப்பா மட்டும் இல்ல பெஸ்ட் தாத்தாவும் கூட” என மனதார சொன்னான் விஜய்.
மெல்லியப் புன்னகை அவர் முகத்தில்.
“படுங்க மாமா! டாண்ணு மூனு மணிக்கு அலாரம் வைக்காமலே எழுந்து அம்மா பால்னு சத்தம் குடுப்பா உங்க பேத்தி!” எனச் சொன்னவன், விடி விளக்கைப் போட்டு விட்டு வெளியேற போனான்.
“மாப்பிள்ளை” என அழைத்தார் மனோகர்.
“என்ன மாமா?”
“ரொம்ப நன்றி”
“எதுக்கு?”
“எங்க குடும்பத்து இளவரசிய உங்க குடும்பத்து மகராணியா வச்சி வாழ்றதுக்கு”
மெல்லியப் புன்னகை இவன் இதழ்களில்.
“அப்படி பார்த்தா நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும் மாமனாரே! உங்க சொந்தத்த என் சொர்க்கமா தந்ததுக்கு!” என்றவனை வாஞ்சையாகப் பார்த்தார் மனோகர்.
அவன் சொன்னதைப் போலவே சேலையை அவிழ்க்காமல், கணவனுக்காகக் காத்திருந்தாள் மதுஷாலினி. விஜய் கதவடைக்க, ஓடி வந்து கட்டிக் கொண்டாள் தன்னவனை. இவனும் இறுக்கமாய் மதுவை அணைத்துக் கொண்டான்.
“நான் வந்ததுல இருந்து, என்னைக் கண்டுக்கவே இல்லை மேடம்! இப்போ மட்டும் என்ன ஒரே ஒட்டல், தொட்டலா இருக்கு?” எனக் கொஞ்சலாய் கேட்டான் விஜய்.
“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா, உங்களைக் கண்டுக்காம இருக்க! என் கிட்ட நீங்க வந்தாலே, எனக்கு எந்த வேலையும் ஓடாது! மைண்ட் ஃபுல்லா விஜய், விஜய்னு அலறும். பிறகெங்கே நான் கல்யாண வேலையைப் பார்க்கிறது! அதான் தள்ளியே நின்னேன்!” என்றவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
“பொசுக்கு பொசுக்குன்னு தூக்கறதே வேலையா போச்சு உங்களுக்கு” எனச் செல்லமாய் சலித்துக் கொண்டவள், அவன் கழுத்தில் முகம் பதித்துக் கொண்டாள்.
“அப்போலாம் என் செல்லக் குட்டிய எப்போ பாரு உங்கப்பா தூக்கிப்பாரு, உங்கண்ணா தூக்கிப்பான், உங்க மாமா தூக்கிப்பாரு! எனக்கு எவ்ளோ ஏக்கமா இருக்கும் தெரியுமா! அந்த ஏக்கத்தத்தான் இப்படி தூக்கித் தூக்கித் தீர்த்துக்கறேன்” எனச் சொல்லி நகைத்தான் இவன்.
“விஜய்!”
“என்னடி?”
“ஐ லவ் யூ”
“ஐ லவ் யு...வன் சங்கர் ராஜா” எனப் பதில் சொல்லி அவளைக் கட்டிலில் அலுங்காமல் இறக்கினான் விஜய்.
“எனக்கு எதிரியே அந்த யுவன்தான்! அப்போ லவ் சொல்ல விடாததால பழி வாங்குறேன் பேர்வழின்னு அடிக்கடி அவனை நம்ம இடையில இழுத்து விடறீங்க!” எனச் சிணுங்கினாள் இவள்.
“சேச்சே! இந்த இடையில வேற யாருக்கும் இடமில்லடி! என் சோல் ப்ரோபெர்ட்டி இது” என்றவன், சேலை மறைக்காத இஞ்சி இடுப்பில் அழுத்தமாய் இச்சொன்று பதித்தான்.
கணவனின் சேஷ்டையில் மயங்கிக் கிறங்கியவள், அவனைத் தன்னோடு இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
“மதும்மா”
“ஹ்ம்ம்”
“யாரோ செம்ம டய்ர்ட்னு சொன்னாங்களே!”
“அவ கிடக்கறா பைத்தியக்காரி”
மேலும் முன்னேறி அவள் கழுத்தில் அழுத்தமாய் முத்தமொன்றைப் பதித்ததவன் மீண்டும்,
“மதும்மா” என்றான்.
“ஹ்ம்ம்ம்ம்”
“யாரோ கிட்ட வந்தா மான்ஸ்ட்டர்ஷாலினியா மாறிடுவேன்னு சொன்னாங்களே!”
“அவ கிடக்கறா கீலாக்காரி”(பைத்தியம் மலாயில்)
“அப்போ என் செல்ல மதுவிலே சொர்க்கத்த தேடிடலாமா?”
“இன்னுமா நீ தேட ஆரம்பிக்கல?” எனக் கேட்டவள், அவனைக் கீழே தள்ளி எண்ணிலடங்கா முத்தமிட்டுக் கொல்ல, மதுவுண்ட மந்தியாய் மயங்கிக் கிடந்தான் மங்கையின் மணாளன்.
“சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான்
எல்லாம் உறவுதான்!”
விஜய்யின் சொர்க்கம் இவள்! மதுவின் மயக்கம் அவன்! பல போராட்டங்களுக்குப் பின் இணைந்த இந்தக் காதல் கிளிகள், என்றென்றும் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்க வாழ்த்தி விடை பெறுவோம்!
முற்றும்.

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 22(Epilogue)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.