அத்தியாயம் 6
பூந்தென்றலே நீ பாடிவா
பொன் மேடையில் பூச்சூடவா!!!
ஒரு காலத்தில் தன் ஒன்று விட்ட அக்கா வாழ்க்கைப்பட்டிருந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் செந்தாமரை. அழகான இரண்டு மாடி தனி வீடு. வீட்டைச் சுற்றிலும் மரங்கள், குழந்தை விளையாட இடம், நடுத்தர அளவில் நீச்சல் குளம் என ஏற்கனவே இவள் பார்த்த வீடுதான்.
ஓரிரு முறைதான் வந்திருக்கிறாள் இங்கே. சந்தோஷமாய் இவளை வரவேற்கும் நிவேதா இல்லாமல் போயிருக்க, மனது வலித்தது இவளுக்கு. அத்தோடு நிவேதாவிற்கு மாற்றாய் இவள் வந்திருக்க, நெஞ்சில் பாராங்கல் ஏறிக் கொண்டது போல ஓர் உணர்வு.
“சித்தி!” எனும் குரல் தனக்குள் போராடிக் கொண்டிருந்தவளை நிகழ் உலகத்துக்கு அழைத்து வந்தது.
“என்னம்மா?”
“தூக்கிக்கோங்க” எனக் கை இரண்டையும் நீட்டினாள் சின்னவள்.
மெல்லியப் புன்னகை முகத்தில் தவழ, பூக்குட்டியைத் தூக்கிக் கொண்டாள் தாமரை. மூவருக்கும் ஆரத்தி எடுப்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வீட்டினுள்ளே சென்றிருந்தார் அன்னபூரணி. இவர்கள் வாசலில் காத்திருந்தார்கள். அதியமான், கந்தன், தாமரையின் பெரியப்பா மூவரும் ஏற்கனவே உள்ளே சென்றிருந்தார்கள்.
“உங்க வீட்டுல உங்களுக்கு ஊஞ்சல் இருக்குல்ல, அது போல, அங்க பாருங்க, அது என்னோட ஊஞ்சல்! குட்டி ஊஞ்சல். நீங்க ஏறுனா டமார்னு விழுந்துடுவீங்க” என இவளிடம் சொன்ன பூந்தென்றல் தகப்பனிடம்,
“அப்பா! சித்திக்குப் பெரிய ஊஞ்சல் ஒன்னு கட்டிக் குடுங்க! பாவம்ல! அவங்க ஊஞ்சல ஊருலயே விட்டுட்டு வந்துட்டாங்க” என்றாள்.
“அதுக்கென்னம்மா! செஞ்சு குடுத்துடலாம்”
தாமரையின் பிடியில் இருந்து இறங்கித் தன் ஊஞ்சலை நோக்கி ஓடினாள் பூக்குட்டி.
“ஏன் தாமரை மேடம், உங்களுக்கு எதுக்கு ஊஞ்சல்? படத்துல கதாநாயகி சேலை முந்தானைக் காத்துல ஆட, கலகலன்னு சிரிச்சு கிட்டே, முழங்கால கொஞ்சமா காட்டி, இடுப்பை இன்ச் பை இன்ச்சா காட்டி நாயகன மயக்குவாங்களே, அது போல எதாச்சும் என்னை மயக்க பிளானா? கல்யாணத்துக்கு முன்ன சொன்னதுலாம் ஞாபகம் இருக்குல்ல? நோ பாஞ்சிங் பாஞ்சிங்! மனசிலாயோ?”
இவ்வளவு நேரம் அழுத்திக் கொண்டிருந்த சோகம் கோபமாய் மாற,
“பாஞ்சிப் புடிக்க நீங்க என்ன கவரிமானா? வெறும் கவரிங்மான்! ஓவரா பண்ணாதீங்க தினகர் சார்” என்றாள்.
“ஏய் ரெட் லோட்டஸ்! என்னைப் பத்தி என்ன வேணா பேசு! எனக்குச் சோறு போடற தொழில பத்தி எதாச்சும் பேசுன, மர்கயா சாலா பண்ணிடுவேன் பார்த்துக்கோ”
இருவருக்கும் வாக்குவாதம் போய் கொண்டிருக்க, ஆரத்தித் தட்டுடன் வந்து விட்டார் அன்னபூரணி. நல்ல பிள்ளைகள் போல் நின்று கொண்டனர் கணவன் மனைவி இருவரும்.
“குட்டிமா! அப்பா கூடவும், சித்தி கூடவும் வந்து சேர்ந்து நில்லு” என அன்னபூரணி அழைக்க, ஓடி வந்தாள் பூந்தென்றல்.
மகளைத் தூக்கி வைத்துக் கொண்டான் தினகரன். மூவருக்கும் ஆரத்திச் சுற்றியவர்,
“நான் போய் வெளிய கொட்டிட்டு வரேன்! ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ள போங்க” என்றார் அன்னபூரணி.
ஒரு சேர வலது கால் வைத்து வீட்டின் உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.
மீண்டும் உள்ளே வந்த அன்னபூரணி,
“பூஜை ரூமுக்கு வாங்க! சாமிக்கு விளக்கேத்திடலாம்” என அழைத்தார் இவர்களை.
கடவுள் படத்தின் முன்னே கண் மூடி, எல்லோரையும் நல்லபடி வைத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்ட தாமரை, விளக்கை ஏற்றினாள். பின் எல்லோருக்கும் திருநீரை இவள் கையாலேயே வைத்து விட்டாள். தினகருக்கு மட்டும் பட்டும் படாமல் பூசி விட்டவள், வெளியேற முற்படும் போதுதான் ஓரமாய் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் நிவேதாவின் படத்தைப் பார்த்தாள்.
அவள் படத்தின் முன்னே எப்பொழுதும் எரிவது போல, மின்சார விளக்கு ஒன்று ஒளி விட்டுக் கொண்டிருந்தது. மாலை சூட்டப்பட்டிருந்த அப்படத்தின் அருகே போனவள் மனதிற்குள்ளேயே,
‘பாப்பாவ நான் நல்லா பார்த்துக்குவேன்கா! மாமாவையும் என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா பார்த்துப்பேன்! அதுக்கான மன உறுதியையும், தெளிவையும் எனக்குக் குடுக்கா’ என வேண்டிக் கொண்டாள்.
இவள் கண் திறந்த போது, தினகரன் முன்னே நின்றிருந்தான். அவன் பார்வை மனைவியின் படத்தின் மேல் இருந்தது. கண்கள் இரண்டும் சிவந்திருக்க, முகம் இறுக்கத்தைத் தழுவி நின்றது. சற்று நேரத்தில் இவள் பக்கம் திரும்பியவனின் பார்வைப் பெண்ணவளைச் சுட்டுப் பொசுக்கியது.
‘நான் என்ன செஞ்சேன், இப்படி முறைக்கிறாங்க’ என எண்ணியவள், அவசரமாய் பூஜை அறையை விட்டு வெளியேறினாள்.
இவர்கள் இருவரையும் ஹால் சோபாவில் அமர வைத்துப் பாலும் பழமும் கொடுத்தார் அன்னம்.
“எதுக்குத்த இந்த ஃபார்மாலிட்டிலாம்?” எனச் சலித்துக் கொண்டான் தினகரன்.
“இது மட்டும் என் திருப்திக்காக! மத்த சடங்கு, சம்பிரதாயம்லாம் உங்க ரெண்டு பேர் இஷ்டம்தான்” என்றவரை மறுக்கவும் முடியவில்லை இவனால்.
பாலை பாதி அருந்தி விட்டு தாமரையிடம் கொடுத்தான் தினகரன். அன்னபூரணி இவளையே பார்த்திருக்க, மடமடவென அருந்தி விட்டாள் இவள். வாழைப் பழத்தை அவன் சாப்பிட்டு விட்டுப் பாதி தர, மெல்லாமல் கொள்ளாமல் படக்கென விழுங்கி வைத்தாள் பெண். அதன் பிறகு ஆண்கள் அரசியல், விளையாட்டு எனப் பேச ஆரம்பிக்க, அன்னபூரணியைத் தொடர்ந்து சமையலறைக்குப் போனாள் தாமரை. அவளது வாலைப் பிடித்துக் கொண்டே வந்தாள் பூக்குட்டி.
சமையல் கூடம் பெரிதாய் மாடுலர் கிச்சன் என அழைக்கப்படும் புது ஸ்டைலில் இருந்தது. ஏர் ஃப்ரையர், ஓவன், புது விதமான அடுப்பு என மாடர்னாகவும் இருந்தது.
“வீட்டுல வேலை செய்ய ஒருத்தங்க வருவாங்க! புள்ளையப் பார்த்துக்கிட்டு, அவங்களே சமைச்சிடுவாங்க! வாரத்துக்கு ரெண்டு முறை வீட்டைச் சுத்தம் பண்ணவும், தோட்ட வேலை செய்யவும் ஆள் வருவாங்க. நீ மேற்பார்வைப் பார்த்தா மட்டும் போதும். ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்க! உங்கக்கா கல்யாணம் பண்ணிட்டு வந்து ஒரு வருஷம் என்னமோதான் இவங்களுக்கு சாப்பாடு போடறது, எல்லாம் பார்த்து செய்யறதுன்னு கவனிச்சா. குட்டி வயித்துல வந்ததும் மசக்கை வாந்தின்னு அதுவும் நின்னுடுச்சு. இவ பொறந்ததும் இவள பார்க்கன்னு பொழுது போச்சு! பிறகு உடம்பு முடியாம போய், இவங்க ரெண்டு பேருதான் அவளுக்கு எல்லாம் பார்த்தாங்க! மாப்பிள்ளை அவசர வெளி வேலைக்குப் போய்ட்டா, உங்க மாமனாருதான் நிவேதாவ ஹாஸ்பிட்டல் கூட்டிப் போறது, மருந்து வாங்கித் தரதுன்னு பார்த்துப்பாரு! நான் நம்ம வீட்டுல வச்சிப் பார்க்கறேன்னதுக்கு, இங்கதான் நல்ல ஹாஸ்பிட்டல்லு இருக்குதுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டாரு! நான் திருச்சிக்கும் சென்னைக்கும் மாறி மாறி ட்ரிப் அடிச்சிக்கிட்டு இருந்தேன்! உனக்கும்தான் எல்லா கதையும் தெரியுமே!” என மெல்லியக் குரலில் பேசிக் கொண்டே மதிய சமையலுக்கான காய்களை வெட்டினார் அன்னபூரணி.
சின்னவள் அதற்குள் ஓடிப் போய் அவளது விளையாட்டு சாமான்களைக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து விளையாட ஆரம்பித்திருந்தாள். வீட்டில் வேலை செய்பவருக்கு விடுமுறை கொடுத்திருக்க, அன்னமே சமையலைப் பார்த்தார். இவளும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே பாத்திரம் பண்டங்கள் எங்கு என்ன இருக்கின்றன என ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
“தாமரை”
“சொல்லுங்க பெரியம்மா!”
“நீ டீச்சர் வேலைக்குப் புதுசா போனப்ப, உடனே எல்லாத்தையும் கத்துக்கிட்டு சூப்பர் டீச்சர் ஆகிட்டியா?” எனக் கேட்டார்.
“அதெப்படி பெரியம்மா உடனேயே முடியும்! பல மாசமாச்சு, வேலையோட நெளிவு சுழிவுகள கத்துக்கிட்டு நல்ல படி ஸ்டூடன்ஸ்க்கு பாடமெடுக்க”
அவளை ஆழ்ந்து பார்த்த அன்னபூரணி,
“அது போலத்தான்டா கல்யாண வாழ்க்கையும். நெளிவு சுழிவுகள கத்துக்க நாளெடுக்கும்! மாமனார் இப்படி, புருஷன் இப்படி, புள்ள இப்படின்னு தெரிஞ்சுக்கவே பல மாசமாகிடும்! அவங்களுக்கு ஏத்தபடி வளையற எடத்துல வளைஞ்சு குடுத்து, நிமிர்த்த வேண்டிய இடத்துல நிமிர்ந்து நின்னு இந்தக் குடும்பத்த வழி நடத்தனும் நீ! சின்னதுல இருந்து உன்னைப் பார்க்கறேன்! உன்னால இவங்கள சமாளிக்க முடியும்னு நம்பித்தான் இந்தக் கல்யாணத்த நடத்தி வச்சேன்” என்றார்.
தலையை ஆமோதிப்பது போல ஆட்டிக் கொண்டாள் இவள்.
“எங்கம்மாவா இருந்திருந்தா இப்படி ரெண்டாவதா கல்யாணம் செஞ்சு வச்சிருப்பாங்களான்னு நீ யோசிச்சிருப்ப!”
“என்ன பெரியம்மா இப்படிலாம் பேசிக்கிட்டு”
“கண்டிப்பா சின்னதாவாச்சும் அந்த நெனப்பு வந்திருக்கும்டி! அப்படி நினைக்கறது தப்பும் இல்லை. நாங்களும் உனக்கு நல்லபடி கல்யாணமாகனும்னு எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம்! ஆனா அந்தக் கடன்காரப் பாவியால எதுவும் அமையல! அதான் உங்கப்பாவே வாயை விடவும் நான் கப்புன்னு புடிச்சுக்கிட்டு உனக்கும் மாப்பிள்ளைக்கும் கல்யாணத்த முடிச்சு வச்சுட்டேன். என் மாப்பிள்ளைன்னு நான் உயர்த்திப் பேசறேன்னு நெனைக்காதடி! அவர மாதிரி தங்கமானப் புள்ளைய பார்க்க முடியாது! நல்ல சம்பாத்தியம், சொந்த வீடு, காருன்னு வசதியா இருக்காரு! உன்னைக் கண் கலங்காம வச்சிப்பாருடி!”
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,
“அவருக்குக் கொஞ்ச காலம் எடுக்கலாம் நம்ம நிவேதாவ மறக்க! ஒன்னு மண்ணா வாழ்ந்தவங்களாச்சே! உடனே எல்லாம் மாறனும்னு நெனைக்காம விட்டுப் புடி! கொஞ்சம் கொஞ்சமா உன் கைக்குள்ள கொண்டு வா! சந்தோஷமா இரு! அவரயும் சந்தோஷமா வச்சிக்கோ! இதை நான் நிவேதாவோட அம்மாவா சொல்லல, உன்னோட பெரியம்மாவா சொல்றேன் கண்ணு!” எனத் தளுதளுத்தக் குரலில் சொன்னார்.
“எல்லாரையும் நான் நல்லா பார்த்துப்பேன் பெரியம்மா! நீங்க எனக்காகவோ உங்க மாப்பிள்ளைக்காகவோ கவலைப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க!” என ஆதுரமாகச் சொன்னாள் தாமரை.
அன்றைய சமையல் தடபுடலாக அமைந்தது. சாப்பிட்டு முடித்ததும், கடைக்குப் போக வேண்டும் எனக் கிளம்பினான் தினகரன். அவனோடு சேர்ந்து ஆண்கள் அனைவருமே கிளம்பினார்கள். இவர்கள் மூவரும் கீழே இருந்த கெஸ்ட் ரூமில் சற்று நேரம் படுத்து ஓய்வெடுத்தார்கள்.
அதன் பிறகு இரவு உணவைத் தாமரையே தயாரித்தாள். சுமார் எட்டு மணி போல வீடு வந்தவர்கள், சாப்பிட்டு முடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். சின்னவள் தூங்கி வழிய,
“வாடாம்மா குட்டி! இன்னிக்குப் பாட்டி கூட படுத்துக்கறீங்களா?” எனக் கேட்டார் அன்னபூரணி.
கண்ணைக் கசக்கிக் கொண்டே,
“சித்தி கூட!” எனச் சொன்னவள் தாமரையின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
எங்கே தூங்கி எழும் போது சித்தி விட்டு விட்டுப் போய் விடுவாளோ எனும் பயம் அந்தக் குட்டிக்கு.
“எப்போதும் போல என் கூடவே இருக்கட்டும் அத்தை” என்று விட்டான் தினகரன்.
மருமகன் பேச்சுக்கு மறு பேச்சு ஏது!
“போம்மா தாமரை! போய் படுங்க!” என்றார் அவள் பெரியம்மா.
தந்தையைப் பார்த்தாள் இவள். அவர் முகம் பல வருடங்களுக்குப் பிறகு மிகத் தெளிவாய் இருந்தது. புன்னகை முகத்துடன் போய் படுக்கும்படி மகளுக்குத் தலையசைத்தார் கந்தன்.
சின்னவள் இவள் கைப்பற்றிக் கொள்ள, இருவரும் படியேறி மாடிக்குப் போனார்கள். அங்கே மூன்று அறைகள் இருந்தன.
“எது பாப்பா உங்க ரூம்?” எனக் கேட்டாள் தாமரை.
“நம்ம ரூம் சொல்லுங்க சித்தி” எனச் சொல்லிப் புன்னகைத்தாள் பூக்குட்டி.
ஏற்கனவே இங்கு வந்திருந்த போது பெரியம்மாவுடன் கீழே இருந்த அறையில்தான் தங்கிக் கொண்டாள் தாமரை. மேலே கணவன் மனைவி ராஜாங்கம் என அங்கே சென்றது கிடையாது.
“அந்த ரூம்லதான் நானும் அப்பாவும் படுப்போம்! இப்போ நீங்க வரீங்கன்னு இந்த ரூமுக்கு மாறிட்டோம்! புது பெட், புது கப்போர்ட், எல்லாமே புதுசு” என்றபடியே கையைப் பிடித்து அறைக்குள் தாமரையை அழைத்துப் போனாள் பூந்தென்றல்.
ஏற்கனவே நிவேதாவுடன் வாழ்ந்திருந்த அறையை விடுத்து, இவளுக்காக வேறு மாற்றி இருப்பதை நினைத்து உள்ளுக்குள் என்னவோ செய்தது தாமரைக்கு. அந்த அறைக்குள் இரண்டு கதவுகள் இருந்தன. ஒன்று குளியலறைக்கு. மற்றொன்று பால்கனிக்கு. பால்கனி பக்கம் அழைத்துப் போன சின்னக்குட்டி,
“பால்கனில இருந்து அதோ அந்தப் படில ஏறுனா மொட்டை மாடி வரும்!” எனக் காட்டிக் கொடுத்தாள்.
“அதெல்லாம் நாளைக்குச் சித்திக்குக் காட்டிக் குடுப்பியாம்! இப்போ போய் லேசா உடம்பு கழுவி, வேற சட்டைப் போட்டுக்கலாம் வா” எனப் பாத்ரூமுக்கு அழைத்துப் போனாள்.
இவள் குளிக்க மட்டும்தான் வைத்தாள். துணியைத் தானே மாற்றுவேன் எனச் சொல்லி விட்டாள் பூந்தென்றல்.
“சித்தி!”
“ஹ்ம்ம்!”
“நம்ம டீல் ஞாபகம் இருக்கா?”
“என்ன டீல்?”
“நீங்க நடுவுல, நான் சைட்டுல” எனக் கண்ணை உருட்டியபடியே சொன்னவள் ஓடிப் போய் ஓரமாய் படுத்துக் கொண்டாள்.
“கண்ணு! என் செல்லம்ல! கொஞ்ச நாளைக்கு நீ நடுவுல எப்பொழுதும் போல படுத்துக்கம்மா! அப்பா கை போடாம நான் பார்த்துக்கறேன்!” எனக் கெஞ்சவே செய்தாள் தாமரை.
எல்லாவற்றுக்கும் விட்டுக் கொடுக்கும் இந்தக் குட்டி மனுஷி, இதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளவேயில்லை.
“டீல் இஸ் அ டீல்! என்னைக்கும் மீறக் கூடாது! அப்பா அப்படித்தான் சொல்லிக் குடுத்திருக்காங்க”
“நான் ஓகே சொல்லவே இல்லையேடி இந்த டீலுக்கு”
“இப்போ சொன்னீங்க”
“எங்க சொன்னேன்?”
“நான் ஓகே சொல்லெவே இல்லையேன்னு சொன்னீங்கல்ல, அதுலத்தான் ஓகேன்னு வோர்ட் வருதே”
“அடியேய்! உங்கப்பனுக்கு மேல வருவடி நீ” என முணுமுணுத்தவளுக்கு எவ்வளவு அடக்கியும் சிரிப்பு வந்து தொலைத்தது.
“சித்தி சிரிச்சிட்டாங்க! டீல் ஓகேவாச்சி!” எனச் சொல்லியவள் தன் குட்டித் தலையணையை அணைத்துக் கொண்டு தூங்கியே விட்டாள்.
இவள் புன்னகையுடன் குளித்து விட்டு வந்தாள். தினகரின் முன் நைட்டியில் இருக்க சங்கோஜமாக இருக்க, தொள தொளவென ஒரு சுடிதாரை அணிந்து கொண்டவள், கட்டிலுக்கு அருகே இருந்த ரெக்லைனர் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அதில் இருந்த அலங்காரத் தலையணையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டவள், அதன் டிசைனை ஆராய்ந்தாள் அந்த நேரத்தில். தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும், அவன் வந்து மகள் ஏன் ஓரமாய் படுத்திருக்கிறாள் எனக் கேட்டால், பதில் சொல்ல இவள் விழித்திருக்க வேண்டுமே!
தாமரையைக் காக்க வைக்காமல் சீக்கிரமாகவே அறைக்கு வந்து விட்டான் தினகர். மகள் படுத்திருக்கும் இடத்தைப் பார்த்தவன்,
“என்ன தாமரை மேடம், என் மக ஏன் ஒட்டுக்கா படுத்திருக்கா? அவள தள்ளி வச்சிட்டு நடுவுல நீங்க படுத்து மேனகை அவதாரம் எடுக்க ப்ளானா? ஆனாலும் நான் விசுவாமித்திரர் இல்லைங்க, மயங்கி நிக்க!” என ஆரம்பித்தவன் முகத்தில் வந்து மோதி நின்ற தலையணையால் அதிர்ந்து போனான்.
“உங்களுக்குப் போய் மேனகை அவதாரமா? மெண்ட்டல் அவதாரம்தான் எடுக்கனும்! இப்படி பேசிட்டே இருந்தீங்கன்னு வைங்க, நெஜமாவே பாஞ்சி பிராண்டி வச்சிருவேன்” என்றவள் அவனுக்கு நிறைய இடம் விட்டு, சின்னவளை ஒட்டி தினகருக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.
“டைம் வேணும்னு கேட்டா, யாரு நம்மள மதிக்கறா” எனச் சத்தமாகவே முணுமுணுத்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த செந்தாமரை நடு இரவில்,
“அம்மா!!” வென அலறினாள்!!

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 6
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.