அத்தியாயம் 18 (எபிலாக்)
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா!
“அப்பா!”
“என்னடா பூக்குட்டி?”
“பூபாலன என் கிட்ட குடுங்க! நான் கேரி பண்ணிக்கறேன்”
“பூந்தொட்டி பாரமா இருக்கான்டா! உங்களுக்குக் கை வலிக்கும்” என்றான் இவன்.
“அப்பா!!!” எனப் பல்லைக் கடித்தாள் எட்டு வயது பூக்குட்டி!
தினகரனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு வயதாகி இருக்கும் பூபாலனை பூச்சட்டி, பூந்தொட்டி என வாய்க்கு என்ன வருகிறதோ அந்த அடைமொழியில் அழைப்பது இவன் வழக்கம். அதில் கடுப்பாகிப் போவார்கள் அம்மாவும் மகளும். அவர்களை வம்பிழுப்பதற்காகவே பூரொட்டி, பூச்சுட்டி என விதவிதமாக வார்த்தைகளைத் தேடிப் பிடித்து மகனைக் கூப்பிடுவான்! அவனோ, தகப்பன் பெரிய விருதே கொடுத்து விட்டது போல கெக்கேபெக்கேவெனச் சிரித்து எச்சிலைத் தெறிக்க விடுவான்.
இந்தப் பூபாலன் அப்படியே தினகரனின் கார்பன் காபி. உருவத்தில் மட்டுமல்ல பேச்சிலும் தினகரன்தான் அவன். இப்பொழுதே அவன் பாஷையில் ஓயாமல் ஏதேதோ பேசுவான். அவன் தூங்கும் போது மட்டும்தான் வீடு அமைதியாக இருக்கும். இந்தக் குட்டியும் வரம் வாங்கிப் பிறந்தவன்தான். குடும்பமே அவனைக் கொண்டாடியது. எதிலும் ஒட்டாமல் இருக்கும் வேலன் கூட இவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவார். அப்படி ஓர் ஆள் மயக்கி இவன். வேலனே அப்படி என்றால் கந்தனைப் பற்றி சொல்லத்தான் வேண்டுமா? பேரனை அன்பாலும், அன்பளிப்புகளாலும் குளிப்பாட்டி விடுவார். தாமரையின் பிரசவம் தாய் வீட்டில்தான் என மருமகனிடம் சண்டைப் போட்டுத் திருச்சிக்கு அழைத்து வந்து எல்லாம் பார்த்தது அன்னபூரணிதான். கையோடு தினகரனும், பூக்குட்டியும் எக்ஸ்ட்ரா லக்கேஜாக கிளம்பி வந்ததை இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும்!
அதியமானோ, அச்சு அசல் தினகரனைப் போலவே இருக்கும் பேரனைத் தூக்கி வைத்துக் கொண்டு,
“ங்கொப்பன் மவனே ங்கொப்பன் மவனே
டண்டணக்கர டணக்கர டண்டணக்கர” எனப் பாடி மகனைக் கொஞ்சாத கொஞ்சலையெல்லாம் பேரனைக் கொஞ்சித் தீர்த்துக் கொள்வார்.
எல்லோரும் சின்னவனிடம் அன்பைப் பொழிந்தாலும், பூக்குட்டிக்குப் பிறகுதான் அவன் என்பது போலத்தான் நடந்து கொண்டார்கள். அதனாலேயே பூந்தென்றலுக்குத் தம்பியின் மேல் பொறாமையோ, போட்டியோ ஏற்படவில்லை.
தாமரைப் பெண்ணுள்ளே மொட்டு ஒன்று மலர்ந்திருக்கிறது எனத் தெரிந்த நொடியில் இருந்தே பூக்குட்டியை அதன் வரவிற்கு பழக்கப் படுத்த ஆரம்பித்திருந்தான் தினகரன்.
“பூக்குட்டி”
“என்னப்பா?”
“நீங்க அக்காவாகப் போறீங்கம்மா”
“நெஜமாவாப்பா? எனக்கு தம்பி பாப்பா வர போகுதா? சோ ஹேப்பி!! சோ ஹேப்பி” எனக் குதித்தாள் இவள்.
“தம்பிப் பாப்பாவா இருக்கலாம்! இல்ல தங்கச்சி பாப்பாவா இருக்கலாம்! எல்லாமே சாமி குடுக்கற பாப்பாத்தான்! இந்த வீட்டுக்கு ஏன் சாமி பாப்பாவ அனுப்பி வைக்கறாருன்னு உனக்குத் தெரியுமாம்மா?” எனக் கேட்டான் இவன்.
“எனக்கு வெளையாட ஆள் வேணும்னாப்பா?”
“அதுவும் ஒரு காரணம்! இன்னொரு ரீசன் என்னான்னா, இந்த வீட்டுலத்தான் ஓர் ஏஞ்சல் இருக்காம்! அந்த ஏஞ்சல் புதுசா வர பேபிய நல்லா பார்த்துக்குமாம்! புதுசா வர பேபிக்கு ஒன்னுமே தெரியாதுல்ல! சோ இந்த ஏஞ்சல்தான் அதுக்கு எல்லாம் சொல்லிக் குடுக்கும்னு சாமிக்குத் தெரியுமாம்! ஏ,பி,சி,டி, பாபா ப்ளேக் ஷீப் ரைம்ஸ், சீ சா வெளையாடறது எப்படி, ஸ்வீங் விளையாடறது எப்படி, ஒழுகாம ஐஸ்க்ரீம் சாப்பிடறது எப்படின்னுலாம் அந்த ஏஞ்சலால மட்டும்தான் சொல்லிக் குடுத்துப் பாசமா பார்த்துக்க முடியும்னு நம்பி நம்ம வீட்டுக்கு அனுப்பி விடறாராம்! அந்த ஏஞ்சல் யாருன்னு உனக்குத் தெரியுமாம்மா?”
“அந்த ஏஞ்சல் இந்தப் பூக்குட்டித்தான்! பூக்குட்டி வரப் போற குட்டிப் பாப்பாவ பாசமா பார்த்துப்பேன்! எல்லாம் சொல்லிக் குடுப்பேன்!” என ஆர்ப்பரித்தவளையும், அவளைக் கட்டிக் கொண்டக் கணவனையும் வாஞ்சையாகப் பார்த்திருந்தாள் செந்தாமரை.
குழந்தைப் பிறந்து வீட்டுக்குக் கொண்டு வந்ததும், அவனைத் தூக்கி மகளின் மடியில்தான் முதலில் வைத்தாள் செந்தாமரை.
“இவருதான் பூக்குட்டியோட தம்பி! அக்கான்னா இன்னொரு அம்மான்னு சொல்வாங்க! இனி நீங்கதான் தம்பிக்கு குட்டி அம்மா! எங்க பூக்குட்டியம்மா” எனச் சொன்னாள்.
முகம் சந்தோஷத்தில் விகசிக்க, குனிந்து தன் தம்பியை முத்தமிட்டாள் பூக்குட்டி! அவளுக்கு எப்படி தூக்குவது என இவள் சொல்லிக் கொடுக்க, தன் நெஞ்சில் போட்டு மெல்ல அணைத்துக் கொண்ட பூக்குட்டி,
“மை செல்லத் தம்பி!” என ஆசையாய் சொன்னாள்.
அவன் வளர வளர இவர்களின் பாச பந்தமும் வளர்ந்து கொண்டே வந்தது! வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அக்கா, அக்காவென அவனோடு இவள் பேசியிருக்க, பூக்குட்டியின் குரல் எங்கு கேட்டாலும் கண்களைச் சுழற்றி தேடுவான் பூபாலன். பேச்சு வந்த போது கூட முதல் வார்த்தையாய் க்கா எனத்தான் சொன்னான் அந்தச் சின்ன வாண்டு.
“பூந்தொட்டின்னு அவன சொல்லாதீங்கப்பா! எனக்குக் கோபம் வரும்!” என்றவள் கையை நீட்ட, மகளிடம் மகனைக் கொடுத்தான் தினகரன்.
இவர்கள் மூவரும் கொடைக்கானலில் இருந்த ஒரு கைவினைப் பொருட்கள் விற்கும் கடை முன்னே நின்றிருந்தார்கள். அந்தக் கடையின் பக்கத்தில் சாக்லேட் கடைகள், டீ கடை, உணவகங்கள் என இன்னும் பல கடைகள் வரிசையாய் இருந்தன. கோடை விடுமுறைக்குக் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் வந்திருந்தான் தினகரன். சுற்றிப் பார்க்க வந்த இடத்தில், இந்தக் கடையில் க்ரோஷே செய்ய நூல் வாங்க வேண்டும் என நுழைந்திருந்தாள் செந்தாமரை. உள்ளே சின்னவன் அட்டகாசம் செய்ய, தினகரன் மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டான். தம்பியுடன் இருக்கப் போவதாகச் சொல்லி பூக்குட்டியும் வந்து விட்டாள்.
அக்கா தூக்கி விட்டதில் அப்படி ஒரு மகிழ்ச்சி சின்னவனுக்கு! அக்கா, அக்கா என அவள் தாடையைப் பற்றி சுற்றிலும் தெரிந்த ஆட்களை, பொருட்களை, வாகனங்களை எல்லாம் கை காட்டினான்.
“அது கார்! அது மரம்! அது அங்கிள்! அது ஆண்ட்டி” என அவன் கை காட்டிய எல்லாவற்றுக்கும் பெயர் கொடுத்தாள் இவள்.
மகனையும், மகளையும் புன் சிரிப்புடன் பார்த்திருந்தான் தினகரன். என் குழந்தைகள் என மனம் விம்மித் தணிந்தது அவனுக்கு. அவர்களை நெருங்கி இறுக்கி அணைத்துக் கொண்டவனுக்கு உலகமே தன் வசமான உணர்வு.
“தம்பிக்கு மூச்சு முட்டும், விடுங்கப்பா” எனச் சிணுங்கினாள் பூக்குட்டி.
பூபாலனோ தகப்பனின் முடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் எச்சில் முத்தங்கள் வைத்தான். இவர்கள் மூவரின் சேஷ்டைகளை கடையில் இருந்து வெளியே வந்திருந்த செந்தாமரை புன்னகையுடன் பார்த்திருந்தாள். அவளைப் பார்த்ததும் மூவரின் முகங்களும் ஒருங்கே மலர்ந்தன. சூரியனைப் பார்த்த்துதான் தாமரை மலரும். இங்கே தாமரையைப் பார்த்து சூரியனும்(தினகரன்) அவனது கதிர்களும்(குழந்தைகள்) மலர்ந்து சிரித்தன.
அவர்களை நெருங்கியவள்,
“ரொம்ப லேட்டாக்கிட்டனா? சாப்பிடப் போலாமா?” எனக் கேட்டாள்.
“லேட்டாலாம் ஆகலமா!” என உடனே அம்மாவுக்கு முட்டுக் கொடுத்தாள் பூக்குட்டி.
“அதானே! உங்கம்மாவ விட்டுக் குடுப்பியா நீ?” என மகளின் தலையைக் கலைத்து விட்டத் தினகரன், பூபாலனைத் தூக்கிக் கொண்டான்.
நால்வரும் அருகே இருந்த ஓர் இத்தாலியன் கடைக்கு உணவுண்ண போனார்கள். அங்கே பிட்சாவை ஓவனில் வைத்துச் செய்யாமல் பழைய முறைப்படி கட்டைகளை எரித்து சூடாக்கி அந்தச் சூட்டில் வேக வைத்துக் கொடுத்தார்கள். அவ்விடம் பெரிதாய், அழகாய், சிறுவர்களுக்கான விளையாட்டு இடத்தோடு இருந்தது.
குழந்தைகளுக்கான நாற்காலியில் அமர்த்தியதுமே, சேஷ்டைகளைத் தொடங்கி விட்டான் பூபாலன். டப்டப்பென மேசையை அடிப்பது, ஆ, ஓவெனச் சத்தம் போடுவது என ஆர்ப்பாட்டம் செய்தான்.
“டேய் பூச்சட்டி! உன்னை வைச்சிக்கிட்டு ஓரிடத்துல உக்காந்து நிம்மதியா சாப்பிட முடியுதாடா? உங்கம்மா உன்னாலயே பல கிலோ இறங்கிட்டாடா” எனப் புலம்பினான் தினகரன்.
கொஞ்சமாய் உடம்பு வைத்து, இன்னும் அழகாய் மாறி இருந்த செந்தாமரை, தினகரனை முறைத்துப் பார்த்தாள்.
“சும்மா! சும்மா! லுல்லாலாய்க்கு” என மெல்லியக் குரலில் சொல்லி அழகாய் புன்னகைத்தான் இவன்.
“நீங்க ரெண்டு பேரும் தேவையானத ஆர்டர் பண்ணுங்க! நான் போய் இவனை விளையாடற இடத்துல விட்டுட்டு வரேன்” என மகனைத் தூக்கிக் கொண்டுப் போனான் தினகரன்.
“அம்மா! நானும் போகவா? தம்பி என்னைத் தேடுவான்!” என எழுந்து கொண்டாள் பூக்குட்டி.
“சரிம்மா! உனக்கு சிக்கன் பெப்பரோனி பிட்சா சொல்லவா?”
“நீங்க எது சொன்னாலும் சாப்பிடுவேன்மா” என்ற மகளின் கன்னத்தை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தாள் இவள்.
அவள் விளையாடும் இடம் நோக்கிப் போய் விட, மெனு கார்ட்டை எடுத்துப் புரட்டினாள் செந்தாமரை. கணவனுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தது போல உணவைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்தவள், நாற்காலியில் வசதியாக சாய்ந்து அமர்ந்தாள். பார்வையோ விளையாட்டு இடத்துக்குப் போனது.
சின்னதாய் அங்குப் போடப்பட்டிருந்த சீசாவில் மகள் ஒரு புறம் அமர, இன்னொரு புறம் மகனை அமர்த்திக் கையில் பிடித்தபடி விளையாட்டுக் காட்டினான் தினகரன். சின்னவனுக்கு ஒரே ஆர்ப்பரிப்பு. புன்னகையுடன் மூவரையும் பார்த்திருந்தாள் செந்தாமரை. என் குடும்பம் இது என இவள் உள்ளம் உவகை கொண்டது!
கண்ணீரோடும், எதிர்கால வாழ்க்கையைப் பற்றியப் பயத்தோடும்தான் இந்தத் திருமணப் பந்தத்தில் அடி எடுத்து வைத்திருந்தாள் செந்தாமரை. இப்பொழுது கண்ணீர் காணாமல் போயிருந்தது. பயம் பறந்து போயிருந்தது! தினகரனுடனான இந்தப் பந்தம் இன்பத்தை மட்டுமே அள்ளித் தருகிறது என்றால் அது கடைந்தெடுத்தப் பொய்! இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். இரண்டு நாள் முகத்தைத் தூக்கி வைத்துச் சுற்றுவான் அவன். ஒரு வழியாய் அவன் இறங்கி வந்தால், இவள் இரண்டு நாட்கள் முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.
ஐந்தாவது நாள் இருவருமே ஈகோவைக் கடாசி விட்டு,
“மாமா!” என இவளும்,
“ஏம்மா!” என இவனும் பின்னிப் பிணைந்து கொள்வார்கள்.
அடுத்தச் சண்டை ஆரம்பிக்கும் வரை நீயின்றி நானே நீரில்லா வேரே என ஈஷிக் கொண்டுத் திரிவார்கள் இருவரும். தினகரன் என்பவனுக்கு இவள் இரண்டாவது மனைவி என்பது வருடா வருடம் நிவேதாவுக்கு அவன் திவசம் செய்யும் போது மட்டும்தான் ஞாபகம் வரும் தாமரைக்கு.
கணவனைக் காதலுடன் இவள் பார்த்திருக்க, மனைவியின் கண்கள் எய்த அம்பு சரியாய் அவனைத் தாக்கியதில் திரும்பித் தாமரையைப் பார்த்தான் அவன். ஒற்றைப் புருவம் ஏற்றி, என்ன என்பது போல கேட்டான் தினகரன். கொரியாக்காரர்கள் காட்டுவது போல இரு விரல்களால் இதய சிம்பலைக் காட்டினாள் தாமரை. அதே போல அவனும் காட்டி, கண் சிமிட்டினான்.
உணவும் வந்து விட, அதன் பிறகு சின்னவன் செய்த ஆர்ப்பாட்டத்தில் ரணகளமாகப் போனது அவர்களின் உணவு நேரம். ஒரு வழியாய் தங்கி இருந்த அறைக்கு வந்து சேர்ந்தார்கள் நால்வரும். பூக்குட்டி உடை மாற்றி விட்டு வர, அதற்குள் சின்னவனுக்கு இரவு உடை அணிவித்து விட்டிருந்தான் தினகரன். மறுநாள் சென்னைக்குக் கிளம்பப் போவதால், வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் பெட்டியில் அடுக்கினாள் செந்தாமரை.
“க்கா! கதே!” எனக் கதை சொல்லச் சொல்லி அக்காவைக் கேட்டான் பூபாலன்.
அவள் கதை சொல்ல ஆரம்பித்தால், அவன் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் எனக் கேட்டுக் கொண்டே இருப்பான். இவளும் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருப்பாள். பிறகெங்கே இருவரும் சீக்கிரமாய் தூங்குவது! தினகரன் மனைவியுடன் கச்சேரியை ஆரம்பிப்பது!
“இன்னிக்கு ரெண்டு பேருக்கும் அப்பா கதை சொல்லப் போறேன்” எனத் தினகரன் சொல்ல, பெட்டி அடுக்கிக் கொண்டிருந்தவள் நமுட்டுச் சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.
“ப்பா! கதே!” எனத் தினகரனைக் கட்டிக் கொண்டான் பூபாலன்.
“சரிடா, பூரொட்டி! ஒரே கதைதான் சொல்வேன்! சமர்த்தா தூங்கிடனும்” என அவனை மெத்தையில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்தப்படியே கதை சொல்ல ஆரம்பித்தான் தினகரன்.
தம்பியின் அருகே படுத்து அவன் மேல் கைப் போட்டுக் கொண்டாள் பூக்குட்டி.
“ஓர் ஊர்ல ஒரு கோழி இருந்துச்சாம்”
படக்கென எழுந்து அமர்ந்து கொக்கக்கோ, கொக்கக்கோ எனக் கோழி சவுண்ட் கொடுக்க ஆரம்பித்தான் சின்னவன்.
“ஆமாடா! கொக்கொக்கோ கோழிதான்! நீ படு” என அவனை மறுபடி அமுக்கிப் படுக்க வைத்தான் தினகரன்.
“அப்புறம்ப்பா” எனக் கதைக் கேட்டாள் பூக்குட்டி.
“அந்தக் கோழிக்கு நாய் ஒன்னு ப்ரேண்டா இருந்ததாம்”
மறுபடி எழுந்து கொண்ட பூபாலன்,
“லொல்லொல் டாக்” எனச் சத்தம் கொடுத்தான்.
“அடேய்! ஆமாடா! லொல்லொல் டாக்தான்! ஒழுங்கா படுத்துட்டே கேளுடா!”
“அந்தக் கோழிக்கும் நாய்க்கும் அடிக்கடி சண்டை வருமாம்”
தினகரன் எவ்வளவு அமுக்கிப் பிடித்தும் படுக்காமல் எழுந்து நின்று,
“கொக்கோக்கோ, லொல்லொல்! கொக்கோக்கோ, லொல்லொல்” என இரண்டும் சண்டைப் போடுவது போல மாறி மாறி அவன் மிமிக்ரி செய்ய, நொந்து போய் தலையில் கையை வைத்துக் கொண்டான் தினகரன்.
செந்தாமரைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அம்மா சிரிக்கவும் சின்னவருக்கு இன்னும் உற்சாகமாகி விட்டது! கட்டிலில் குதித்துக் குதித்து லொல்லொல், கொக்கோக்கோ என சத்தம் போட்டுக் கொண்டே இருந்தான். அவன் குதித்ததில் தூக்கக் கலக்கத்தில் இருந்த பூக்குட்டியும் எழுந்து அமர்ந்து கொண்டாள். இன்னும் உற்சாகமாகி அக்காவுடன் கட்டிப் பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டான் பூபாலன்.
‘சோனமுத்தா போச்சா!’ எனப் பரிதாபமாய் தாமரையைப் பார்த்தான் தினகரன்.
அவன் பாவனையில் தாமரைக்கு இன்னும் சிரிப்புப் பொங்கி வந்தது. குழந்தைகள் இருவரும் கீழே இறங்கி வந்து இவளைக் கட்டிக் கொள்ள, ஆசையாய் இருவரையும் அரவணைத்துக் கொண்டாள் செந்தாமரை. எனக்கு ஏன் இந்தத் தனிமை என வாடி நின்றவளுக்கு வரமாய் வந்தவர்கள் அல்லவா இவர்கள் இருவரும். கண்கள் பொங்கி வர, இமையெனும் அணைப் போட்டு அதை தடுத்து நிறுத்தினாள் செந்தாமரை. இவள் அழுதால் மூவருமே கலங்கிப் போவார்களே!
“ரெண்டு பேரும் இன்னும் தூங்காம, என்ன அட்டகாசம்?” எனச் செல்லமாய் கடிந்து கொண்டவள், அவர்களைப் படுக்கையில் மீண்டும் படுக்க வைத்தாள். இப்பொழுது தினகரன் எழுந்து போய் பெட்டி அடுக்க, குழந்தைகளை அணைத்தபடி பாடினாள் செந்தாமரை.
“பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இதுதானடி”
ஐந்து நிமிடங்களில் இருவரும் தூங்கி இருக்க, புன்னகையுடன் எழுந்தவள் விளக்கை அணைத்து விட்டு, வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் கணவனைப் பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.
“ஒன்னும் வேணா போடி! ரெண்டையும் தூங்க வைக்க நான் பட்டப்பாடப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரிச்சிட்டு, இப்ப என்ன கட்டிப்புடி வேண்டிக் கிடக்கு உனக்கு” எனப் பொய்யாய் கோபப்பட்டவன், மனைவியை முன்னே இழுத்து மடியில் படுக்க வைத்துக் கொண்டான்.
சுகமாய் அவன் மடியில் தலை வைத்து முகத்தை அவன் வயிற்றில் புதைத்துக் கொண்டாள் தாமரை. ஆசையாய் அவள் தலை கோதினான் தினகரன்.
“மாமா”
“என்னடா?”
“சைலண்ட் மோட் போலாமா?” என இவள் கண்ணடித்துக் கேட்க, குனிந்து தன்னிதழலால் தாமரையின் இதழ் பற்றிக் கொண்டான் தினகரன்.
கட்டிலின் கீழ் இன்னொரு சிங்கிள் பெட்டில் இவன் படுத்திருக்க, அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்தாள் செந்தாமரை. களைத்துக் கலைந்து கிடந்தவளின் நெற்றியில் இதழ் பதித்தத் தினகரன்,
“ஐ லவ் யூடி லோட்டஸ்” எனக் கிசுகிசுப்பாகச் சொன்னான்.
“ஐ லவ் யூடா மாமா” என இவளும் சன்னக் குரலில் சொன்னாள்.
கைகள் அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள, அவனது பார்வை மனைவியவளை ஆதுரமாய் தழுவியது. தினகரனின் உதட்டில் அழகான முறுவல்.
காதல் எனும் பூ ஒரு தடவைத்தான் பூக்கும் என யார் சொன்னது?? இந்தத் தாமரைப்பூ அவனுள் காதலை மீண்டும் மலர வைத்திருந்தாளே! ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன் என்பது அவனைப் பொறுத்த வரை நூற்றுக்கு நூறு நிஜமல்லவா!
தினகரனின் வாழ்க்கையில் துளிர்க்க ஆரம்பித்த பிறிதோர் நேசமிது! அந்த நேசம் பெரும் விருக்ஷமாய் பூத்துக் குலுங்கி மனம் பரப்ப வாழ்த்தி விடை பெறுவோம்!
முற்றும்.

Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 18(Epilogue)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.