Manjummel Boys--Malayalam

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
585
-2,661
93
வணக்கம் டியர்ஸ்,

படம் போன வருஷம் வந்திருந்தாலும், என்னமோ எனக்கு வாய்ப்புக் கிடைக்கல பார்க்க. நேத்துத்தான் ஹவுஸ் ஓனரும் நானும் உக்காந்து பார்த்தோம். சப்டைட்டில் இல்ல. ஆரம்பத்துல அவ்வளவா புரியல.

"நிறுத்திடலாமா?"

"பார்க்கலாம்! போகப் போக தமிழ்ல வருமாம். நான் ரிவ்யூல படிச்சேன்"

என்னடா இவனுங்க இப்படி சரக்கப் போட்டுட்டு அட்டகாசம் பண்றானுங்கன்னுதான் பார்த்தேன். குழில விழுவான் எவனோங்கற வரைக்கும் கதை தெரியும். ஆனா எங்க எப்போன்னு தெரில. நாங்களும் கொடைக்கானல் போயிருக்கோங்கறதால, தோ அந்த இடம், தோ இந்த இடம்னு சிலத அடையாளம் கண்டு ஒரே குதூகலம் வேற.

இவனுங்களும் குணா குகைக்குள்ள இல்லீகலா போய்ட்டானுங்க! படக் படக்குன்னு அடிச்சிக்குது மனசு. அச்சோ விழப் போறான். ஆனா எவன்னு தெரியலையேன்னு பதட்டத்தோட பார்த்தேன். எந்த முகாந்திரமும் இல்லாம சடக்குன்னு விழுந்துட்டான் இந்த சதீஷூ!!!! அடேய்! அதிர்ச்சியாகி நின்ன அவன் ப்ரேண்ட்ஸ் மாதிரியே நானும் அதிர்ச்சியாகி உக்காந்திருக்கேன்.

அவனுங்களோட பதட்டம், அழுகை, பயம், அதிர்ச்சி எல்லாமே நம்மளயும் பத்திக்கிச்சு! அச்சோ, அச்சோன்னு துடிக்கிது இதயம். போலிஸ் ஸ்டேஷன்ல இவனுங்க அடி வாங்குற கட்டம்லாம் முடியல எனக்கு. அதோட அவன் விழுந்த சீன கொஞ்ச நேரம் கழிச்சுக் காட்டனாங்க பாரு, ஆடிப் போய்ட்டேன். கண்ணுல தண்ணி ஊத்துது! அச்சோ, அச்சோன்னு ஒரே சத்தம் நானு. ஹவுஸ் ஓனர் உடனே,

"பாப்பா! உங்கம்மாவ வந்து பாருன்னு" சவுண்டு.

அவ பாட்டுக்கு ரூம்ல உக்காந்து பாட்டுக் கேட்டுட்டு இருந்தா! எனக்கு ஆறுதல் சொல்றேன்னு வந்து உக்காந்து, அவளும் சேர்ந்து அழுகை!! அம்மா, அம்மான்னு அவ! பாப்பா, பாப்பான்னு நானு! ஒரே கூத்து!!!

போலிஸ் பண்ண அராஜகத்துல இவளுக்கு செம்ம கோபம்.

"வயிறுதான் பிக்கா இருக்கு! மூளை சின்னதா இருக்குன்னு" திட்டறா! எனக்குச் சிரிப்பு வேற இவளோட.

அவன காப்பாத்த எல்லாரும் போரடற சீன்லாம் மாஸ். அதுவும் அவன் ப்ரேண்ட் உள்ள இறங்கறது செம்மையா இருந்தது. அந்தக் காட்சிலாம் பேய் படம் பார்க்கற மாதிரி பதட்டத்துலயே இருந்தோம் நானும் பாப்பாவும்.

"உண்டான காயம் இங்கு" வரி பாட்டோட ரெண்டு பேரும் மேல இழுக்கப்படற சீன்லாம் கூஸ் பம்ப்! சிலிர்த்திடுச்சு! கை தட்டி, சிரிச்சு, ஒரே ஆர்ப்பாட்டம் நானும் இவளும். ஹவுஸ் ஓனர் எங்க கூட படம் பார்த்து நொந்து போய்ட்டாரு!

ரொம்ப நாளுக்குப் பிறகு படத்துல நாமே இருக்கற மாதிரி ஃபீல் பண்ணி பார்த்த படம் இது!!

என்னைக்குமே ராஜா ராஜாத்தான்!!!!!!!!!!!!!

இது ஒரு நிஜ சம்பவமாம். நினைக்கவே குலை நடுங்குது!

சேட்டன்ஸ் செம்மையா நடிச்சுருக்காங்க! நம்ம ஊரு மக்களும் ஈடு குடுத்து நடிச்சிருக்காங்க! செம்ம படம்.!!
 
Author: VanishaAdmin
Article Title: Manjummel Boys--Malayalam
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kamakshi hariharan

New member
Dec 5, 2024
3
0
3
😍😍🙌🙌 ஆரம்பம் ஒரு மாதிரி ஒட்டலை.
அந்த கடைசி சீன் தியேட்டர்ல எல்லாரும் சேர்ந்து கூட பாடின மாதிரி செம ஃபீல், really goosec pump moment தான்.
குணா படத்த விட இதுல அந்த பாட்டு வேற லெவல் போயிடுச்சு
அவனுங்களோட சின்ன வயசு அந்த விளையாட்டெல்லாம் காட்டுவது கூட ரொம்ப சூப்பரா இருந்தது.
 
  • Like
Reactions: VanishaAdmin

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
585
-2,661
93
😍😍🙌🙌 ஆரம்பம் ஒரு மாதிரி ஒட்டலை.
அந்த கடைசி சீன் தியேட்டர்ல எல்லாரும் சேர்ந்து கூட பாடின மாதிரி செம ஃபீல், really goosec pump moment தான்.
குணா படத்த விட இதுல அந்த பாட்டு வேற லெவல் போயிடுச்சு
அவனுங்களோட சின்ன வயசு அந்த விளையாட்டெல்லாம் காட்டுவது கூட ரொம்ப சூப்பரா இருந்தது.
Yes, yes. Chinna vayasu alaga synch achi.
 
Ananthi Jai

Active member
Dec 28, 2024
69
-58
43
:)Super sis.. nanum ipdi than.. pada padanu heart adichutey irundhuchu.. nan, hubby lam romba padam pakkuradhu ila.. selective ah than papoam.. ithu nalla irukunu ellarum sonnathala pathoam.. romba pidichudhu.. adhum antha last song scene sema than.. original vida intha idadhula semaya manasula ottikichu...😍

Amaran flim review podunga sis.. unga style la review padikka aasai.. vera onnum illa😁:love: last ah intha flim paathuttu manasa romba disturb pannitey irundhuchu.. ithum real story nu sonnathala kuda irukalam.. paathutta review podunga sis🙂
 
  • Like
Reactions: VanishaAdmin

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
585
-2,661
93
:)Super sis.. nanum ipdi than.. pada padanu heart adichutey irundhuchu.. nan, hubby lam romba padam pakkuradhu ila.. selective ah than papoam.. ithu nalla irukunu ellarum sonnathala pathoam.. romba pidichudhu.. adhum antha last song scene sema than.. original vida intha idadhula semaya manasula ottikichu...😍

Amaran flim review podunga sis.. unga style la review padikka aasai.. vera onnum illa😁:love: last ah intha flim paathuttu manasa romba disturb pannitey irundhuchu.. ithum real story nu sonnathala kuda irukalam.. paathutta review podunga sis🙂
Amaran padam pakave bayama irukupa!! Nenju thangumanu terile. Apdi tairiyam vanthu partha, kandipa podaren dear :)
 
  • Love
Reactions: Ananthi Jai

Ananthi Jai

Active member
Dec 28, 2024
69
-58
43
Amaran padam pakave bayama irukupa!! Nenju thangumanu terile. Apdi tairiyam vanthu partha, kandipa podaren dear :)
Nijam sis.. enaku thangavey ila.. நினைப்பு வரும் போது கண்ணுல தண்ணியும் வந்துடும்.. ஒரே மண்டை கொடச்சலா இருக்கும்... தைரியம் வரும் போதே பாருங்க😊