அத்தியாயம் 2
மணக்குது மதுரை மல்லி வாசம்
என் மனசெல்லாம் உன் மேல நேசம்!!!
“தம்பே(மலாய்க்காரர்கள் தம்பி என அழைப்பது இப்படித்தான் கேட்கும்)! தே தாரேக் டூவா! மீ கோரேங் மாமாக் டூவா!! காசி பெடாஸ் சிக்கிட்!(இழுத்து ஆற்றிய தேநீர் இரண்டு! உறைப்பாகச் சமைக்கப்பட்ட நூடுல்ஸ் இரண்டு)
“ஓகே பாஸ்!” எனச் சொல்லிய சரவணப்பாண்டியன், இருபத்து நான்கு மணி நேரம் திறந்திருக்கும் இந்த மாமாக்(இந்து முஸ்லிம்) கடையில் வேலைக்கு வந்து இரண்டு வாரங்கள் ஓடி இருந்தன.
இவனோடு விமானத்தில் வந்தவர்கள் வெவ்வேறு இடத்துக்கு வேலைக்கு அனுப்பப்பட்டிருக்க, இவனுக்குச் சாப்பாட்டுக் கடையில் வேலைக் கிடைத்தது. மூன்று ஷிப்டுகளாக இங்கே வேலைப் பார்க்க வேண்டும். தங்கள் பசிக்குக் இந்தக் கடையிலேயே சாப்பிட்டுக் கொள்ளலாம்! மீன், இறால், மட்டன் போன்ற விலை உயர்ந்தவைகளைத் தவிர்த்து கோழி, முட்டை என அசைவம் எடுத்துப் போட்டு சாப்பிடலாம். இவர்களின் கடையின் மேல் தளத்தில் வேலை செய்பவர்கள் தங்கிக் கொள்ள இடமிருந்தது. மொத்தம் பதினைந்து பேர் இங்கே வேலைப் பார்க்கிறார்கள். கோலாலம்பூரில் அமைந்திருந்த இந்த உணவகத்தில் எப்பொழுதுமே சாப்பிட ஆள் வந்து கொண்டே இருப்பார்கள்.
பானங்கள் தயாரிக்கும் இடமருகே போய் நின்ற சரவணன்,
“மாஸ்டர் தே தாரேக் டூவா” எனச் சொல்ல, அவருக்கு அப்படி ஒரு புன்னகை.
புதிதாய் வேலைக்கு வந்தவன், மலாய் மொழி தெரியாமல் மிரண்டு விழிக்க, இவர்தான் கொஞ்சம் கொஞ்சமாய் தேவையானதைக் கற்பித்திருந்தார். அவரும் மதுரைக்காரர்தான். நம்மூர் பையன் எனும் கரிசனம் அவனிடம்! அங்கு வேலைப் பார்க்கும் மற்றவர்கள் அனைவரும் வயதில் மூத்தவர்களாய் இருக்க, இவன்தான் இளைஞன். அதோடு புதிதாய் வந்திருக்க, பல வேலைகளை இவன் தலையில்தான் சுமத்துவார்கள். இவரால் முடிந்த அளவுக்குத்தான் அவனுக்கு உதவி செய்ய முடியும். இவரே மிக பிசியான டீ மாஸ்டராக இருக்க, அவனையே பாதுகாத்துக் கொண்டு இருக்க முடியாது! முதல் வார வேலையில், அடிக்கடி சூப்பர்வைசரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வான் சரவணப்பாண்டியன்.
அவர்களின் சூப்பர்வைசரும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்தான்! இங்கே வந்து பல வருடங்களாய் வேலைப் பார்த்து, முதலாளிக்கு சற்றுப் பழக்கமானவராகி விட, கொஞ்சம் திமிர்த்தனம் காட்டுவார் மற்றவர்களிடம். அவர் வைத்ததுதான் சட்டம் அங்கே! சில பல சமயம் கையையும் ஓங்கி விடுவார். அப்படி இரண்டு முறை முதுகிலும், கன்னத்திலும் பளாரென வாங்கி இருக்கிறான் சரவணன். ஒரு முறை கஸ்டமரின் மேல் கைத்தவறி பானத்தை ஊற்றியதற்காக, ஒரு முறை கடைத் தொலைக்காட்சியில் கிரிக்கேட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது பராக்கு பார்த்ததற்காக!
“நீ வெட்டி தண்டமா நிக்கறதுக்கா சம்பளம் குடுக்கறோம்! சாவடிச்சுடுவேன்! போய் வேலையைப் பாரு” எனக் கத்தி அவமானப்படுத்தி இருந்தார்.
இள ரத்தம் கொதிக்கத்தான் செய்தது!
“அடேய் பாண்டி! நாமளே ஊர விட்டு ஊரு வந்து இங்க வேலைப் பார்க்கறோம்! கோபம், துக்கம், கடுப்பு, மானம் மரியாதை இதையெல்லாம் நம்ம நாட்டுலயே விட்டுட்டு வந்துடனும்டா! பாஸ்போர்ட் வேற அவனுங்க கிட்ட இருக்கு! வாலாட்டுனா, ஒட்ட நறுக்கிடுவானுங்க! இந்தக் கடை முதலாளி ஒரு கேங் லீடர்டா! அதோட கந்து வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கறவன். அதுல வர காச வெள்ளையா மாத்தத்தான் இது போல பல சாப்பாட்டுக் கடை வச்சி நடத்தறான்! நம்ம ஊருல மட்டும் இல்ல, இந்த நாட்டுலயும் அதுலாம் இருக்கு! போலிஸ் கூட அந்தாள பார்த்த பயப்படும்டா! அதனால எதுனாலும் நீ பொத்திட்டு இரு! ஊருல தங்கச்சி இருக்கு உன்னை நம்பி! இவனுங்க கையால செத்து கித்து போய்டாதடா தம்பி! அவ்ளோதான் சொல்லுவேன்” என எடுத்து சொல்லி இருந்தார் மாஸ்டர்.
தங்கை எனும் சொல் இவனை அடக்கி வைத்தது! நாடு விட்டு நாடு வந்தது சம்பாதிக்கத்தானே! அதை மட்டும் பார்ப்பது என முடிவெடுத்தவன், ஓரளவுக்கு மலாய் கற்றுத் தேர்ந்திருந்தான். மெனுவை மலாயில் மனனம் செய்ய வேண்டும், ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும், கோழிக்கு மலாயில் என்ன, முட்டைக்கு மலாயில் என்ன எனத் தெரிந்து கொள்ள வேண்டும், பானாஸ்(சூடாக), செஜோக்(குளிர்ச்சியாக) இப்படி சில பல வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் தமிழில் பல டையலேக் இருப்பது போல, மலாயிலும் சேர்த்து சொல்வது, பிரித்து சொல்வது, வேறு மாநிலங்களின் மக்கள் கொஞ்சம் இழுத்து பேசுவது என பல கஷ்டங்கள் இருந்தன. எப்படியோ ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டுதான் இருந்தான் சரவணப்பாண்டியன்.
இரவு ஷிப்ட் வேலைதான் இவனுக்கு மிக கஷ்டமாக இருந்தது. தூக்கம் கண்களைச் சுழட்டும் போது, அடிக்கடி முகத்தைக் கழுவி சமாளிப்பான். அங்கிங்கே நடந்து கொண்டே இருப்பான். பேய் தூங்கும் அந்த நேரத்தில் கூட ஆட்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள் சாப்பிட. முக்கியமாக கல்லூரி பிள்ளைகள் ஆண்களும் பெண்களுமாய் சிரித்துப் பேசி கொட்டமடிப்பார்கள். அடிக்கடி பானங்கள் மற்றும் ரொட்டி சானாய்(பரோட்டா) ஆர்டர் செய்வார்கள்.
இவனது வயதுதான் இருக்கும் அவர்களுக்கு. பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் அவர்களை ஏக்கமாய் பார்ப்பான் இவன். அழுக்கு சட்டையுடன், வேர்வை வாடையோடு நிற்பவனை அந்தப் பெண்கள் கேவலமாகப் பார்ப்பார்கள். இள நெஞ்சம் துடியாய் துடிக்கும் இவனுக்கு. இதுவும் கடந்து போகும் என மனதைத் தேற்றிக் கொள்வான். இவனது மனத் துயரங்களை அறிந்து கொண்ட ஒற்றை ஆள் இவனது தலையணை மட்டுமே! படுக்கும் போது அதை கண்ணீரில் நனைத்து விட்டே தூங்கிப் போவான் சரவணப்பாண்டியன்.
அன்றைய மாலை தினம், கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.
“மாஸ்டர்! சூப்பூ(சூப்பர்வைசர்) ஏன் காலுல சுடுதண்ணீ ஊத்துனது போல துடிச்சிக்கிட்டு இருக்கு?” எனக் கேட்டான் சரவணன்.
“இன்னிக்கு மொதலாளி வராராம்! அதான் சூப்பூ இந்த பம்மு பம்முது! காலைல இருந்து அத தொடை, இதை கழுவுன்னு ஒரே ஆர்ப்பாட்டமா இருக்கு! சாப்பாடு சமைக்கற இடத்துல கரப்பான் பூச்சி போனா கூட, அது ஒரு ஓரமாத்தானே போகுது! நீங்க உங்க வேலையப் பாருங்கன்னு சொல்லும்! இன்னிக்கு சுத்தம், சுகாதாரம்னு பாடம் எடுத்துட்டு இருக்கு! ப்ராடு பைய!” என மதிய ஷிப்டுக்கு வந்தவனிடம் புலம்பினார் மாஸ்டர்.
“ஓஹோ! ரௌடி ரங்கன் விசிட்டிங்கா?”
“அடேய்! பகலுல பக்கம் பார்த்து பேசுடா என் வெண்ணே! யாரு காதுலாச்சும் விழுந்தா உனக்குத்தான் ஆப்பு! போ போய் வேலையைப் பாரு” என விரட்டி விட்டார் இவனை.
அன்று பார்த்து ஒரு கூட்டமாய் வெள்ளைக்காரர்கள் அந்தக் கடைக்கு வந்திருந்தார்கள். அவர்கள் பேசும் ஹை கிளாஸ் ஆங்கிலம் புரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தார் இன்னொரு வெய்ட்டர். இவனைப் பார்த்ததும்,
“அடேய் பாண்டி! என்னை வந்து காப்பாத்துடா!” எனக் கெஞ்ச, புன்னகை முகமாக அவர்களிடம் ஆர்டர் எடுக்கப் போனான் இவன்.
மலாய்தான் படுத்தும் இவனை! ஆங்கிலம் மிக நன்றாகவே வரும் சரவணப்பாண்டியனுக்கு.
“குட் ஈவ்னிங் சார், மேடம்” என இவன் ஆரம்பிக்க, அவர்களுக்கும் ஆசுவாசமாய் போனது.
இவ்வளவு நேரம் என்ன வேண்டும் என விளக்கி சொல்ல போராடியவர்களுக்கு இவனது ஆங்கிலம் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. இவர்களின் கடையில் என்ன ஐட்டம் ஸ்பெஷல் எனக் கேட்டு, இவன் சொன்னதை தங்களுக்குள் அலசி, உப்பு எப்படி உறைப்பு எப்படி எனக் கேட்டு, இவன் பொறுமையாய் சொன்ன பதில்களை செவிமடுத்து, பெரிய ஆர்டர் கொடுத்தார்கள் அவர்கள். அன்றைய தினம் இறால் மசாலா, நண்டு வறுவல், பெரிய மீன் தலை கறி, தந்தூரி சிக்கன், நான், சப்பாத்தி, ரோமாலி ரொட்டி என கல்லா கட்டியது அந்தக் கடை! நடு நடுவே இவனை அழைத்து, பானங்களும் ஆர்டர் செய்து, அவன் சொல்லிய உணவு ருசியாய் இருப்பதாய் பாராட்டி, அவர்களில் ஒருவனாய் இவனை உணர வைத்தார்கள் அந்த வெள்ளைக்காரக் குடும்பத்தினர்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.