Day 9--(20/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
வணக்கம் டியர்ஸ்,

இன்னைக்கு டே 9. சீக்கிரம் இந்த சீரிஸ முடிக்கனும்! என்ன நடந்தது, என்ன சாப்டோம்னு எல்லாம் கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டே போகுது :)

நைட் மறுபடி கரேண்ட் போச்சு ஹோட்டல்ல! மழை அடிக்கடி வரதால நெறைய இடத்துல பவர் கட்னு பேசிக்கிட்டாங்க! எழுந்து கிளம்பியாச்சு! குளிச்சியான்னுலாம் கேக்க கூடாது! அந்தக் குளிருக்கு குளிக்கறவன்லாம் கண்டிப்பா தெய்வ கடாட்சம் கொண்டவனாத்தான் இருப்பான், நம் தங்கம் மாதிரி :) செக் அவுட் பண்ணி கிளம்பியாச்சு! போகிற வழில பசியாற பார்த்துக்கலாம்னு பைகாரா அருவிக்கு ஒரு பயணம்.

டீயாச்சும் குடிப்போம்னு ரோட் சைட் கடை ஒன்னுல நிறுத்தனோம். டீ குடிச்சா, பிஸ்கட் இல்லாமலா?

View attachment 204

அந்த இடத்துல உக்காந்து டீ குடிக்கறதே பெரிய டாஸ்க்தான். அடிக்கற காத்துக்கு டீ டம்ளரோட, நாமும் பறந்திடுவோம் போலிருக்கு! லேசான மழை தூறல் வேற! கேரட், சோளம்லாம் விக்கற கடைகள் பலது திறக்கல! பைகாரா உள்ளுக்கு வாகனம் போகாது! பேட்டரி கார் இருக்கும் பயணிகளுக்குன்னு போட்டிருந்தது! கண்ணுக்குத் தெரிஞ்ச வரை ஒன்னையும் காணோம்! சோ நடராஜா சர்விஸ்தான்.

சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும்! கவனம் தேவைன்னு போட்டிருந்தது போர்ட்ல! தங்கத்துக்கு ஒரே பயம்! காட்டு சிறுத்தை இந்த சிறுத்தைக் குட்டிய(என்னைத்தான்) புடிச்சிக்கிட்டா, பாப்பாக்கு என்ன பதில் சொல்றதுன்னு. வேலைக்குப் போய்ட்டு இருந்த சிலர நிறுத்தி விசாரிச்சாங்க! அதெல்லாம் நாங்க பார்த்தது இல்லைன்னு சிலரும், பல காலத்துக்கு முன்ன நான் பார்த்திருக்கேன்னு சிலரும் பீதிய கிளப்பிட்டாங்க!

சில் கிளைமேட்! கண்ணே தெரியாத அளவுக்கு பனி! மழை தூறல்! எப்படி இருந்திருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க அந்த நடைப்பாதை! சிறுத்தையாவது சிங்கமாவதுன்னு நடந்தாச்சு!

View attachment 205
Gold மேடம் ஸ்டைல் போஸ்!!!!

View attachment 207
நாங்க போன டைம்ல நீர் வரத்து குறைவுதான். ரொம்பக் காலைல போகவும் அவ்ளோ ஆளும் இல்ல! டிக்கேட் எடுக்கனும் உள்ள போக! ஆபிஸர் கிட்ட கொஞ்ச நேரம் கடலைப் போட்டேன் வேற, இந்தக் குளிர்ல எப்படி வேலைப் பார்க்கறீங்கன்னு! பழகிடுச்சும்மான்னு சிரிச்சாரு!

View attachment 208இப்படித்தான் பனி மூட்டமாவே இருந்தது. வீடியோல அன்கட் வெர்ஸன் பார்க்கனும்னு நெனைக்கறவங்க, கீழ உள்ள லிங்க்ல பார்க்கலாம்.


நாங்க போன கொஞ்ச நேரத்துல வேற சிலரும் வந்தாங்க! பிறகு அந்த இடம் களைக்கட்டிருச்சு பேச்சு சத்தத்துல! நாங்களும் நின்னு நல்லா ரசிச்சுப் பார்த்துட்டு வெளிய வந்துட்டோம்!

View attachment 209

View attachment 210

அந்தப் பக்கமே இருந்த ஒரு கடைல தோசை, இட்லின்னு காலை உணவும் முடிச்சுக்கிட்டோம்! கரேண்ட் இல்லாததனால சட்னி அரைக்கலன்னு சாம்பார் மட்டும் குடுத்தாங்க!

அடுத்த ஸ்டாப்பிங் ஷூட்டிங் ஸ்பாட்னு ஒரு இடம்! இங்கத்தான் நிறைய படம் ஷீட்டிங் எடுத்திருக்காங்கலாம்! அன்பே வா படத்துல தலைப்புப் பாடல்ல சரோஜா தேவி ஓடுவாங்களே, அது இந்த இடம்தானாம். சரோஜா தேவிய பார்த்தா எப்படிங்க ஓடுனீங்கன்னு கையைப் புடிச்சு கேக்கனும்! நம்மளால நடந்தே அந்த இடத்துக்கு ஏற முடியல! காத்து அடிச்சுச் தள்ளுது போடா வீட்டுக்குன்னு!!! முடிலாம் பறந்து, கண்ணை மறைக்குது வேற!! அங்கங்க கம்பு நட்டு வச்சிருக்காங்க, பிடிச்சுட்டு நடக்க!

View attachment 211
அங்கருந்து வியூ. வீடியோஸ்லாம் கடகடன்னு ஆடுது! அதனால இணைக்கல!

View attachment 212
View attachment 213

View attachment 214
அந்த கிளைமெட்லயும், நாங்க போஸ் குடுப்போம்!!!!!

















 

Author: VanishaAdmin
Article Title: Day 9--(20/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
அடுத்த ஸ்பாட் காமராஜர் அணை. மூடி இருந்தது! வெளில இருந்தே ஒரு போட்டோ.

View attachment 215

ஊட்டிக்குப் போறோம்னு தெரிஞ்சதுல இருந்தே, படங்கள்ல ரேப் சீன் எடுக்கற பைன் ஃபோரெஸ்ட் பார்த்தே ஆகனும்னு ஓர் அல்ப ஆசை! தங்கமலர் கிட்ட சொல்லிட்டே இருந்தேன்! நெக்ஸ்ட் நாங்க போனது அங்கத்தான்!

View attachment 216

View attachment 217



நெஜமா ஒரு நல்ல ஃபீல் இங்க! இந்த இடத்த விட்டே வர முடியல! தங்கம் ஒரு இடத்துல உக்காந்துட்டாங்க! நான் ஓடி ஓடி போட்டோஸ் அண்ட் வீடியோ எடுத்தேன். செம்ம வைப்!!!!

View attachment 218

இத பார்த்து முடிச்சிட்டு தொட்டபெட்டா கிளம்பனோம்! உள்ள விடுவாங்களா, ரோட் கிளியர் ஆகிருக்குமான்னு யோசிச்சிட்டே போனோம்! ஒரு வாரமா மூடி வச்சிருந்த இடத்த, நாங்க போற அன்னைக்குத்தான் திறந்து விட்டுருக்காங்க! செம்ம லக் எங்களுக்கு! கொஞ்சம் மலைப்பாங்கான இடத்துல படில நடக்கனும்! ஆனா போற வழிலாம் அவ்ளோ குட்டிக் கடைங்கள் போட்டிருக்காங்க! விளையாட்டு சாமான், சுவேனியர், குல்லா(பை தி வே, பார்க்கிங் விட்டு வரப்பவே தங்கம்ஸ் ஒரு அழகான குல்லா வாங்கிட்டாங்க! கார் கிட்டவே வந்து விக்கறாங்க நெறைய பேர்), ஷால், சாப்பாட்டு ஐட்டம்ஸ்னு செம்ம வால்க் அது! நான் திரும்பி வரப்போ ப்ரீட்ஜ் மேக்னேட் நிறைய வாங்கனேன்! ஞாபகார்த்தமா ஒரு ஷால் வாங்கனேன்.

தொட்டபெட்டா நீல்கிரி மாவட்டத்துல உள்ள சிகரங்களிலேயே மிக உயரமானதாம். இங்க என்ன ஒரு ஸ்பெஷல்னா, இந்த மலை மேல நின்னு பல இடங்களோட வியூ பாய்ண்ட்ட பார்க்கலாம்! வாட்ச் டவர் ஒன்னு கட்டிருக்காங்க இங்க.

View attachment 219

வெல்லிங்டன், குன்னூர், மேட்டுப்பாளையம், கேத்தின்னு இங்க இருந்து அந்தந்த வியூபாய்ண்ட்ட பார்க்கலாம்! நாங்க போன சமயம், சரியான பனி, அண்ட் மழை தூறல்! அதனால வியூலாம் ஓரளவுக்குத்தான் தெரிஞ்சது. ஆனாலும் ஹேப்பித்தான். கதைகள்ல வர தொட்டபெட்டாவ நேர்ல பார்த்துட்டேனே!!!!

View attachment 220

View attachment 221
தங்கத்தோட குல்லாவ பார்த்துக்கோங்கப்பா!!!!!

திரும்பி வர வழில சூடா கடலை வாங்கி சாப்பிட்டுட்டே வந்தோம்.

அதோட ஊட்டி மலைய விட்டு இறங்கிட்டோம்! அடுத்த இடம் கோயம்புத்தூர்ல ஈஷாதான்! ஆதி சிவன பார்க்கக் கிளம்பிட்டோம்.

சிவராத்திரி டைம்ல மத்த நிகழ்ச்சிகளோட ஆதி சிவனயும் பார்ப்பேன்! இந்த இடத்துக்கு போய் ஆதி சிவன பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை! 7 மணிக்குள்ள போனா, லைட் ஷோ பார்க்கலாம்னு சொன்னாங்க! கரேக்டா போய்ட்டோம்! தியான மண்டபம், மத்த இடம்லாம் பார்க்க முடியல! திரும்பவும் வரலாம்னு லைட் ஷோ மட்டும் பார்த்தோம் அன்னைக்கு.

View attachment 222

View attachment 223

View attachment 224

லேசா மழை தூறி, சட்டுன்னு நின்னுடுச்சு! லைட் ஷோ பார்க்க போறவங்க, முன்னாடி கயிறு ஒன்னு கட்டிருப்பாங்க! அதுக்குப் பின்னாடி உக்காருங்க! கயித்துக்கு முன்னாடி உக்காந்தா, எழுந்துக்க சொல்லிடுவாங்க! முடிஞ்சா ஆறு மணிக்கெல்லாம் போய்டுங்க! அப்போத்தான் ரிலேக்‌ஷா அந்த வைப அனுபவிச்சுக்கிட்டே, இடம் பிடிச்சு உக்கார சரியா இருக்கும்!

இங்க கிட்டத்தட்ட எட்டு மணிக்கு முடிஞ்சது! ஆர்த்தி காட்டியதும், சுத்தி போய் கும்பிட்டுட்டு ப்ராசாதம் வாங்கிட்டு வந்தோம்! பிறகு பொள்ளாச்சிக்கு கிளம்பியாச்சு! நாங்க தங்கப் போற டாக்டர்(தங்கத்தோட ப்ரேண்ட்--நம்ம சேனலுக்கு பாட்டுப் பாடுவாங்க) வீடு பொள்ளாச்சிலதான் இருக்கு!

போகிற வழில ஒரு ஹோட்டல்ல டின்னருக்கு நின்னோம்! அது பக்கத்துலயே டாக்டர் மகளுக்கு பொம்மை வாங்கலாம்னு ஒரு கடைக்குப் போனோம்! அந்தக் கடைல இல்லாத சாமான் இல்ல போல! ஒட்டுப் பொட்டு, கிளிப்ஸ், அது இதுன்னு அங்க ஒரு ராத்திரி நேர ஷாப்பிங்!!!

டாக்டர் வீடு போய் சேர, கிட்டத்தட்ட மணி பத்து இருக்கும். அவங்களுக்கு ஒரு குட்டிப் பாப்பா! பாப்பா கூட செம்மையா டைம் போச்சு! அவங்க பேசிக்கற கோயம்புத்தூர் ஸ்லேங்!!! இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேத்தான்! ரொம்பப் பிடிச்சது! பேசிட்டே இருக்கறப்போ, திடீர்னு நெஞ்சுல ஸ்டேதஸ்கோப் வந்து நிக்கிது! யாருன்னு பார்த்தா, நம்ம டாக்டர்! என் குரல கேட்டுட்டு, செக் பண்ணி பார்த்தாங்க! பிறகு சில மருந்து மாத்திக் குடுத்தாங்க! குடிச்சுட்டு, குளிச்சுட்டு படுத்தா, டோட்டல் ப்ளேக் அவுட்! அப்படி ஒரு தூக்கம்!

மீதிய நெக்ஸ்ட் போஸ்ட்ல பார்ப்போம் டியர்ஸ் :)

தொடரும்...