வணக்கம் டியர்ஸ்,
இன்னைக்கு டே 9. சீக்கிரம் இந்த சீரிஸ முடிக்கனும்! என்ன நடந்தது, என்ன சாப்டோம்னு எல்லாம் கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டே போகுது
நைட் மறுபடி கரேண்ட் போச்சு ஹோட்டல்ல! மழை அடிக்கடி வரதால நெறைய இடத்துல பவர் கட்னு பேசிக்கிட்டாங்க! எழுந்து கிளம்பியாச்சு! குளிச்சியான்னுலாம் கேக்க கூடாது! அந்தக் குளிருக்கு குளிக்கறவன்லாம் கண்டிப்பா தெய்வ கடாட்சம் கொண்டவனாத்தான் இருப்பான், நம் தங்கம் மாதிரி
செக் அவுட் பண்ணி கிளம்பியாச்சு! போகிற வழில பசியாற பார்த்துக்கலாம்னு பைகாரா அருவிக்கு ஒரு பயணம்.
டீயாச்சும் குடிப்போம்னு ரோட் சைட் கடை ஒன்னுல நிறுத்தனோம். டீ குடிச்சா, பிஸ்கட் இல்லாமலா?
View attachment 204
அந்த இடத்துல உக்காந்து டீ குடிக்கறதே பெரிய டாஸ்க்தான். அடிக்கற காத்துக்கு டீ டம்ளரோட, நாமும் பறந்திடுவோம் போலிருக்கு! லேசான மழை தூறல் வேற! கேரட், சோளம்லாம் விக்கற கடைகள் பலது திறக்கல! பைகாரா உள்ளுக்கு வாகனம் போகாது! பேட்டரி கார் இருக்கும் பயணிகளுக்குன்னு போட்டிருந்தது! கண்ணுக்குத் தெரிஞ்ச வரை ஒன்னையும் காணோம்! சோ நடராஜா சர்விஸ்தான்.
சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும்! கவனம் தேவைன்னு போட்டிருந்தது போர்ட்ல! தங்கத்துக்கு ஒரே பயம்! காட்டு சிறுத்தை இந்த சிறுத்தைக் குட்டிய(என்னைத்தான்) புடிச்சிக்கிட்டா, பாப்பாக்கு என்ன பதில் சொல்றதுன்னு. வேலைக்குப் போய்ட்டு இருந்த சிலர நிறுத்தி விசாரிச்சாங்க! அதெல்லாம் நாங்க பார்த்தது இல்லைன்னு சிலரும், பல காலத்துக்கு முன்ன நான் பார்த்திருக்கேன்னு சிலரும் பீதிய கிளப்பிட்டாங்க!
சில் கிளைமேட்! கண்ணே தெரியாத அளவுக்கு பனி! மழை தூறல்! எப்படி இருந்திருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க அந்த நடைப்பாதை! சிறுத்தையாவது சிங்கமாவதுன்னு நடந்தாச்சு!
View attachment 205
Gold மேடம் ஸ்டைல் போஸ்!!!!
View attachment 207
நாங்க போன டைம்ல நீர் வரத்து குறைவுதான். ரொம்பக் காலைல போகவும் அவ்ளோ ஆளும் இல்ல! டிக்கேட் எடுக்கனும் உள்ள போக! ஆபிஸர் கிட்ட கொஞ்ச நேரம் கடலைப் போட்டேன் வேற, இந்தக் குளிர்ல எப்படி வேலைப் பார்க்கறீங்கன்னு! பழகிடுச்சும்மான்னு சிரிச்சாரு!
View attachment 208இப்படித்தான் பனி மூட்டமாவே இருந்தது. வீடியோல அன்கட் வெர்ஸன் பார்க்கனும்னு நெனைக்கறவங்க, கீழ உள்ள லிங்க்ல பார்க்கலாம்.
நாங்க போன கொஞ்ச நேரத்துல வேற சிலரும் வந்தாங்க! பிறகு அந்த இடம் களைக்கட்டிருச்சு பேச்சு சத்தத்துல! நாங்களும் நின்னு நல்லா ரசிச்சுப் பார்த்துட்டு வெளிய வந்துட்டோம்!
View attachment 209
View attachment 210
அந்தப் பக்கமே இருந்த ஒரு கடைல தோசை, இட்லின்னு காலை உணவும் முடிச்சுக்கிட்டோம்! கரேண்ட் இல்லாததனால சட்னி அரைக்கலன்னு சாம்பார் மட்டும் குடுத்தாங்க!
அடுத்த ஸ்டாப்பிங் ஷூட்டிங் ஸ்பாட்னு ஒரு இடம்! இங்கத்தான் நிறைய படம் ஷீட்டிங் எடுத்திருக்காங்கலாம்! அன்பே வா படத்துல தலைப்புப் பாடல்ல சரோஜா தேவி ஓடுவாங்களே, அது இந்த இடம்தானாம். சரோஜா தேவிய பார்த்தா எப்படிங்க ஓடுனீங்கன்னு கையைப் புடிச்சு கேக்கனும்! நம்மளால நடந்தே அந்த இடத்துக்கு ஏற முடியல! காத்து அடிச்சுச் தள்ளுது போடா வீட்டுக்குன்னு!!! முடிலாம் பறந்து, கண்ணை மறைக்குது வேற!! அங்கங்க கம்பு நட்டு வச்சிருக்காங்க, பிடிச்சுட்டு நடக்க!
View attachment 211
அங்கருந்து வியூ. வீடியோஸ்லாம் கடகடன்னு ஆடுது! அதனால இணைக்கல!
View attachment 212
View attachment 213
View attachment 214
அந்த கிளைமெட்லயும், நாங்க போஸ் குடுப்போம்!!!!!

Author: VanishaAdmin
Article Title: Day 9--(20/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.