Day 8--(19/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
வணக்கம் டியர்ஸ்,

வாங்க எட்டாம் நாளுக்குள்ள கால் எடுத்து வைப்போம்! ஹவுஸ் ஓனரும் பாப்பாவும் இருக்கறப்பலாம் கோயிலா கூட்டிப் போய் காட்டிட்டு, அவங்கள அனுப்பி வச்சிட்டு நாங்க ஊட்டி மலை பியூட்டி பார்க்கக் கிளம்பிட்டோம்!!!

காலையிலயே ட்ராவல்ல இருந்து கார் வந்திடுச்சு! ப்ளான் என்னன்னா, லக்கேஜ்லாம் கார்ல மேல வர, நாங்க ரெண்டு பேரும் மேட்டுப்பாளையத்துல இருந்து ட்ரேன்ல ஊட்டிக்கு போறதா! அதிசயத்தின் அதிசயமா இந்த ஸ்பெஷல் ட்ரேனுக்கு டிக்கேட் கிடைச்சிருச்சு! போகிற வழில டீக்கு நிறுத்தனோம்,

View attachment 169
இஞ்சி டீ வித் கேக்! இங்க எங்க ஊர்ல காலைல டீ வித் பிஸ்கட், டீ வித் ப்ரேட் இப்படித்தான் சாதாரணமா ப்ரேக்பஸ்ட் இருக்கு! மோஸ்ட்லி வீக்கேண்ட்லதான் தோசை, இட்லிலாம்! சோ கேக் பார்த்ததும் நான் குஷியா சாப்பிட உக்காந்துட்டேன். நம்ம தங்கம் மேடம், நான் ட்ரேன்ல நல்ல டிபனா சாப்டுப்பேன்னு சொல்லி இஞ்சி டீ மட்டும் குடிச்சாங்க!!!

View attachment 170

View attachment 171
இங்கதான் டீ சாப்ட்டோம்! கேக் செம்ம!!! பேரே டீ கேக்காம்!

ஒரு வழியா மேட்டுப்பாளையம் ரயில் ஸ்டேஷன புடிச்சாச்சு!!! அந்த ட்ரேன் என்ன ஒரு ப்யூட்டி தெரியுமா!!! அப்பப்பா!!!

View attachment 172
பியூட்டி பக்கம் ஒரு க்யூட்டி :) ஹஹஹ

View attachment 173
(இனிமே இந்த ஸ்பெஷல் ட்ரேன் ரைட் இல்லைன்னு நெனைக்கறேன்! ஸ்டாப் பண்ணிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்)

View attachment 174
சீக்கு வந்த சிறுத்தைக்குட்டி!!!!

View attachment 175
(பார்வை ஒன்றே போதுமே!!! பல்லாயிரம் சொல் வேண்டுமாஆஆஆஆ)

எங்க கோச்ல ஒரு ப்ரேண்ட்ஸ் க்ரூப் வந்தாங்க புள்ள குட்டியோட! ஒரே சிரிப்பும் பேச்சும்தான். ட்ரேன் கிளம்புனதும் பார்த்தா நாங்க உக்காந்த சீட்டுக்கு எதிர் சீட்டு காலி! ஓடு, ஒடு, அங்க உக்காருனு தங்கம் சொல்ல, அந்த இடத்தையும் டிக்கேட் இல்லாம புடிச்சிட்டோம்! சோ எதிர் எதிர் உக்காந்து ஒரு அழகான பயணம்!!!

முழுசா ட்ரேன் சத்தத்தோட, அன்கட் வியூ பார்க்கனும்னு நினைக்கறவங்க, இந்த வீடியோவ பார்க்கலாம்! நான் எடுத்ததுதான்.


சொன்ன மாதிரி நெறைய வியூ பாய்ண்ட் இருக்கற இடத்தில ட்ரேன் பத்து நிமிஷம் போல நின்னது! அந்தோ பரிதாபம்! அங்கலாம் சாப்பிட ஒன்னுமே விக்கல! சோ இது போல ட்ரேன் எடுக்கறவங்க, எதாச்சும் சாப்பிட்டுட்டு வாங்க! இல்லைனா சாப்பாடு எடுத்துட்டு வாங்க!

View attachment 176

View attachment 177

View attachment 178
உட்காருற இடம் இப்படித்தான் இருக்கும்! நடுவுல இந்தக் கதவு இருக்கும்! ஒவ்வொரு தடவை ஸ்டாப் பண்ணறப்பவும் வெளிய இருந்து ரயில் அட்டேண்டர்ஸ் திறந்து விடுவாங்க! நாமளே திறக்க முடியாது!

ரண்ணிமேடுன்னு ஓரிடத்துல, பாட்டி ஒருத்தங்க மிளகா போட்ட மாங்கா வித்திட்டு இருந்தாங்க! கடைசில அதான் பலருக்கு ப்ரேக்ஸ்பஸ்டா இருந்தது. ஒரு நாலு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு குன்னூர் ரீச் பண்ணோம்! அங்க ட்ரேன் ஒரு 45 நிமிஷம் நின்னது! நெறைய பேர் அங்கயே இறங்கிட்டாங்க! குன்னூர் வரைக்கும் இயற்கை அழகு சொக்க வச்சதுன்னா, அதுக்கு மேல பயணம் கிளைமெட் நம்மள திக்க வச்சது!! ஐ மீன் குளிருங்க!!!!!











 

Author: VanishaAdmin
Article Title: Day 8--(19/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
குன்னூர் ஸ்டேஷன்லயே சாப்பாடு விக்கறாங்க. கலந்த சாதம், டீ, பிஸ்கட், சமோசான்னு! எனக்கு சாதம் பார்க்கறப்பவே காரம்னு தெரிஞ்சிருச்சு! எதுக்கு ரிஸ்க்குன்னு மறுபடி டீ பிஸ்கட்!!!!View attachment 179

View attachment 180

உதகமண்டத்துல போய் நல்லா சாப்பிட்டுக்கலாம்னு மறுபடி ட்ரேன்ல உக்காந்தாச்சு! சுமார் இரண்டு மணிக்கு மேலத்தான் ஊட்டி ரீச் ஆனோம்! ட்ரைவர் வந்து காத்திருந்தாரு. கார்ல ஏறி முதல்ல செக் இன் பண்ணலாம்னு கிளம்பியாச்சு!

லேக் வியூ ஹோட்டல்லதான் ஸ்டே! அங்க போய் செக் இன் பண்ணிட்டு முதல்ல அங்க இருந்த ரெஸ்டாரண்ட்லயே சாப்பிட உக்காந்தாச்சு. நாங்க அத்தனை நாள் சாப்பிட்ட சாப்பாட்டுலயே இதுதான் எக்ஸ்பென்சிவ் மீல்! நல்லா ருசியாவும் இருந்தது! என்ன, பசில ஆர்டர் பண்ணிட்டு சாப்பிட்டு முடிக்க முடியல!

View attachment 183
டெம்பூரா(tempura), ப்ரைட் ரைஸ், ஜீரா ரைஸ், நயன்தாரான்னு என்னமோ வெண்டைக்காய் டிஷ்!

View attachment 182
எங்களோட காட்டேஜ்! நாங்க போயிருந்த நேரம் மழை சீசன் போல! அடிக்கடி ரூம்ல கரேண்ட் இல்ல! ரூம் செட்டிங்லாம் அந்தக் காலத்து செட்டிங்! குளிர் பிரதேசத்துக்கு இப்படித்தான் ஃபர்னிச்சர் வைக்கனுமோ என்னமோ!

கொஞ்ச நேரம் ரேஸ்ட் எடுத்துட்டு கிளம்பிட்டோம்! நாலு மணிக்கு மேலாச்சு! மழை தூத்தல்! வேற எங்க போக!!! லேக்குக்கே போயாச்சு! அங்க ஸ்டீல் ஓப்பன் பண்ணிருந்தாங்க! டிக்கேட் எடுத்துட்டு உள்ள போய் போட்டிங் விசாரிச்சோம்! ஆள் நெறையா இல்லாததனால ரேட் கூட வந்தது! சரி நாளைக்குப் போய்க்கலாம்னு டிசைட் பண்ணியாச்சு. பிறகு அந்த பட்டர்பிளை, சிறகுலாம் இருந்த இடத்துக்குப் போய் போட்டோ புடிச்சோம்.

View attachment 184

View attachment 185
எனக்கு நானே ஒரு கவிதை சொல்லிக்கறேன்! பயண கட்டுரைல இதெல்லாம் என்ன நான்சென்ஸ்னு நெனைக்காம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!!

"அடிப்பெண்ணே
என் கண்ணே
கட்டி வைத்த சிறகை
விரித்து விட்டாயோ!!!!
பறந்து விடாதே
ஹவுஸ் ஓனரை மறந்து விடாதே!!!!"

என்ன ஒரு கவிதைடா சாமி!!!!

View attachment 186
போஸ் குடுக்கறாங்களாமாம்!!!

நாங்க ட்ரை பண்ண சில போஸ்! வேற வழி இல்ல, நீங்களாம் பார்த்துத்தான் ஆகோனும்!!!

View attachment 187

View attachment 188

View attachment 189
 

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
அங்க ஒரு தெலுங்கு பேமிலி! போட்டோ புடிக்க ஹெல்ப் கேட்டாங்க! தங்கம் ஹெல்ப் பண்ணாங்க! பட்டர்பிளை இருக்கு, அங்க போய் போட்டோலாம் புடிக்கலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க! அவங்க ரோங் ரூட்ல போகவும், இவங்க போய் பாதைலாம் காட்டிட்டு இருந்தாங்க! யம்மா சமூக சேவகின்னு நான் கூட கிண்டல் பண்ணேன்! நான் இந்தப் பக்கம் போட்டோ எடுத்துட்டு இருக்க, தங்கம் கையாட்டி கூப்டாங்க! நானும் கிட்ட போனா, வா போட்டிங் போலாம்னு!

என்னடா சடன் பிளான் சேஞ்னு நானும் கூடவே போய்ட்டேன்! அந்த தெலுங்கு பேமிலி கூடவே போகவும் தங்கத்துக்கு 100 ரூபாய்க்கு போட்டிங் போக டீல் கிடைச்சிருக்கு போட்மேன்கிட்ட! ஒரு ஆளுக்கு 100 ரூபாய்! கவுண்ட்டர்ல எடுக்கப் போனப்போ 400 கேட்டாங்க நினைக்கறேன்! உடனே ஏறியாச்சு போட்ல! சமூக சேவைன்னு கிண்டல் பண்ண, இப்ப பார்த்தல்ல பிரபஞ்சம் டீல் குடுத்திருக்குன்னு இவங்க சொல்ல, அட ஆமாம்ல! இப்போலாம் இன்ஸ்ட்டண்டா டீல் கிடைக்குதேன்னு வியப்பு எனக்கு!!!! மழை தூறல், குளிர், தண்ணியோட சலசலப்பு, இதமான காத்துன்னு அது ஒரு ஜாலி ரைட்.

View attachment 190

View attachment 191

அதெல்லாம் முடிச்சிட்டு வெளிய வந்து சூடா ஒரு டீ! அங்கங்க பார்த்தவங்க கிட்டலாம் தொட்டபெட்டா போகலாமான்னு விசாரிச்சோம் வேற! மழை, மரம் விழுந்துடுச்சு, வியூ தெரில அப்படி இப்படின்னு பலர் சொன்னாங்க! மறுநாள் அங்க போகத்தான் ப்ளான்! ஒரே கன்பியூஸ்ல இருந்தோம்! நாங்க வந்ததுக்கு முதல் நாள்லாம் செம்ம மழையாம்! எந்தக் கடையும் திறக்கலயாம்! இன்னிக்குத்தான் கொஞ்சம் திறந்து வச்சிருக்கோம்னு சோளம் விக்கறவரு சொன்னாரு!

டீ குடிச்சிட்டு, பாப்பா கேட்ட ஹோம்மேட் சாக்லேட் வாங்க போனோம்! அப்படியே சிம் கார்ட் வாங்கனோம் எனக்கு! அந்தக் கடை பொண்ணுகிட்டயும் விசாரிச்சோம்! போய் பாருங்க சிஸ்டர்! ஆளுங்க சொன்னாங்கன்னு கேக்காதீங்கன்னு இவளும் சொன்னா! அந்தப் பொண்ணுக்கிட்ட செம்ம கதை நானு!

சாக்லேட் வாங்க போன இடத்துல வர்க்கி ஒன்னு கேட்டு ட்ரை பண்ணேன்!! ஹ்ம்ம். எனக்கு என்னமோ டேஸ்ட் பிடிக்கல!!!கோயம்புத்தூர்காரங்க சண்டைக்கு வராதீங்கப்பா!!!

View attachment 192
டேஸ்ட்டிங் தி வர்க்கி

பிறகு நைட் டின்னருக்கு கப் நூடுல்ஸ்(இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்) வாங்கிக்கிட்டோம்! மலை பிரதேசத்துல, நடுங்கற குளிர்ல, அர்த்த ராத்திரில.... தப்பா போகுது பாரு உங்க எண்ணெமெல்லாம்!!!! அந்த டைம்ல சுடச் சுட கப் நூடுல்ஸ் சாப்பிடற சுகம் வேற எதுலயும் இல்லை!!!!! சொர்க்கம் அது!!!

View attachment 193

செம்ம குளிரு!!! அப்படியே போத்திட்டுப் படுத்தாச்சு!!

அடுத்த போஸ்ட்ல சந்திக்கும் வரை, பாய்!!!!

தொடரும்....