Day 3--(14/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
வணக்கம் டியர்ஸ்,

மூனாவது நாளுக்குள்ள நுழைஞ்சாச்சு! இந்த நாளுல ஒரு விசேஷம் இருக்கு! அது என்னன்னா ஹவுஸ் ஓனருக்கு பிறந்த நாளு! எப்பவுமே பிறந்த நாள்னா போனும் கையுமாத்தான் சுத்திட்டு இருப்பாரு! வாழ்த்து மழையில் நனைய நான் தயார்ங்கறது போல இருக்கும் முகம்!!! அதான் இந்த முறை வெளி நாட்டுக்குக் கடத்திட்டு வந்தாச்சு!!!

காலைல அஞ்சுக்கே எழுந்து கிளம்பியாச்சு! இங்க ஒரு விஷயத்த பதிவு பண்ண விரும்பறேன்! ஷிர்டியிலேயே விமான நிலையம் இருக்கு. சென்னைக்கு ஃப்ளைட்டும் இருக்கும்! ஆனா ட்ரைவர் சொன்னது என்னன்னா அங்க ஃப்ளைட் அடிக்கடி டிலேயாகும்னு! இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்குத் தெரியல! நீங்க நல்ல விசாரிச்சிக்கோங்க! ஏன்னா மறுபடி மும்பை வந்து ஃப்ளைட் எடுக்க அஞ்சு மணி நேரத்துக்கும் மேல பயண நேரம் ஆகும்!

"ப்ரேக்பஸ்ட் எப்படி?"னு இவரு கேக்க,

"போற வழில பார்த்துக்கலாம்"னு சொல்லி முதல் ஆப்பை எனக்கு நானே சொறுகிக்கிட்டேன் :)

ஆரம்பத்துல ஸ்மூத்தா மூவாச்சு! ட்ராபிக் எதுவும் இல்லாத அமைதியான குளுகுளு பயணம். அப்புறம் ஆரம்பிச்சது விதியின் சதி!!! மழை தூற ஆரம்பிச்சிட்டது! உங்க வீட்டு ட்ராபிக் எங்க வீட்டு ட்ராபிக் இல்ல! யம்மா சாமி! இப்படி ஒரு ட்ராபிக்ல என் வாழ்நாள்லயே நான் மாட்டனது இல்ல! கார் நகரவே இல்ல. பசி, குளிரு, பாத்ரூம் வேற போகனும் இப்படி பல இன்னல்கள்! மலேசியால இருந்து வாங்கிட்டு வந்த ப்ரேட் இருந்தது! கடைசில அத பிச்சிப் பிச்சி சாப்டு தண்ணியக் குடிச்சோம். அவ்வ்வ். ஹவுஸ் ஓனர் வேற முறைச்சிங்! என் பெத்தடேக்கு ப்ரேட்டே பிச்சிக் குடுக்கறியேன்னு!!!



View attachment 41

ட்ராபிக் ஆரம்பிக்கற முன்ன எடுத்த போட்டோ.



நடுவுல ஒரு பெட்ரோல் பங்க்ல நிறுத்து நேச்சர் கால்கு போனோம்! அந்த வட்டாரமே கணுக்கால் அளவு தண்ணி நிக்கிது! எப்படியே சேறும் சகதியிலும் நனைஞ்சு போய்ட்டு வந்துட்டோம்! எனக்குள்ள ஒரே பயம்! 4 மணிக்கு ஃளைட்ட பிடிச்சிடுவோமானு! கேப்ல கிடைச்ச இடத்துலலாம் ட்ரைவர் காரை கொண்டு போய் நுழைக்கறாரு. அது ஆடன ஆட்டத்துக்கு என் ரெண்டு கிட்னியும் இடம் மாறி போய்ருக்குமோன்னு ஒரே டவுட்டு வேற!!!!!!



ஒரு வழியா அஞ்சு மணிக்கு ஆரம்பிச்ச பயணம் தானே(Thane) வந்து சேர்ந்தப்ப மணி ஒன்னு! மராத்தி ரெஸ்டாரண்ட் ஒன்னுல பகல் உணவு.



View attachment 42



மும்பைக்கு வந்துட்டு வடா பாவ் சாப்பிடலனா எப்படி!!!! அதையும் டேஸ்ட் பண்ணியாச்சு!!

ட்ரைவர்,



"மணி இப்போத்தானே ஒன்னு! வாங்க கார்லயே மும்பைய சுத்திக் காட்டுறேன்" னு சொல்ல,

"இல்ல இல்ல ஏர்போர்ட் போய்டலாம்"னு நான் மறுக்க,



"சரி ஒரு ரைட் போலாம்"னு முடிச்சு வச்சிட்டாரு ஹவுஸ் ஓனர்.



சரி வந்ததே வந்தாச்சு, மும்பை எப்படி இருக்கும்னு பார்த்தாச்சும் வைப்போம்னு நான் கம்னு இருந்துட்டேன். எங்க வீட்டு வாண்டு மடியில படுத்துக்கிட்டு கண்ணையே திறக்கல! அவ்ளோ டயர்ட்!!!



View attachment 43



View attachment 44



View attachment 45





View attachment 46



View attachment 47



View attachment 48



View attachment 49

கடல்குள்ள ஒரு பள்ளிவாசலாம்!! அவ்ளோ அழகு!! எங்களால அந்த அழக கேப்ச்சர் பண்ண முடியல.



மெரின் ட்ரைவ், இன்னும் சில இடங்கள்லாம் கார்ல உக்காந்துட்டே ஒரு ரவுண்ட். கடல் பக்கம் இவர் மட்டும் இறங்கி போய் பார்த்தாரு! பாப்பா தூங்கறதுனால நான் கார்லயே உக்காந்து தூரமாத்தான் பார்த்தேன்.



View attachment 50



ஒரு வழியா மூனு மணிக்கு மும்பை ஏர்போர்ட் வந்தாச்சு! கரேக்டா கொண்டு வந்து சேர்த்ததுக்கு எல்லா சாமிக்கும் ஒரு நன்றிய சொல்லிட்டு உள்ள நுழைஞ்சாச்சு! நான் பார்த்த எல்லா ஏர்போர்ட்லயும் எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த மும்பை ஏர்ப்போர்ட். என்ன ஓர் அழகு. பளபளன்னு கண்ணைப் பறிக்குது! கீழ கடைங்களும் அவ்ளோ நல்லா இருந்தது!






அப்பாடான்னு ஒரு காபிய குடிச்சிட்டு உக்காந்தா, ஃப்ளைட் டிலேயாம்! கேட் நம்பரையும் வேற மாத்திட்டாங்க! அங்கயும் இங்கயும் அலைஞ்சு ஒரு வழியா ஃப்ளைட் ஏறினா.....














 

Author: VanishaAdmin
Article Title: Day 3--(14/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
முதல் வரிசை பிஸ்னஸ் கிளாஸ்ல நமக்கெல்லாம் தெரிஞ்ச முகம். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒரு சிந்தனை! அவ்ளோ ஸ்ட்ரேஸ்லயும் ஹலோன்னு சிரிச்ச முகமா கடந்து போய்ட்டேன். அவங்களும் தலையாட்டினாங்க! சீட்ல உக்காந்ததும்,

"ரஜினிய பார்த்தியா?" னு ஹவுஸ் ஓனர் கேட்டாரு,

"எதே ரஜினியா?" எனக்கு ஷாக்!

அவங்க மனைவிய பார்த்துத்தான் ஹலோ சொன்னேன்! ஆனா அவங்க பக்கத்துல அவரும் உக்காந்திருப்பாருன்னு தோணல பாருங்க! ஜஸ்ட்டு மிஸ்!!!!

உடனே இவர் போன வாங்கி தங்கமலருக்கு ஒரு மேசேஜ் போட்டேன்! இப்படி இப்படின்னு. மேடம் நம்பவே இல்ல! நெஜமா அவரு வராருன்னு சொல்லவும், அங்க எங்களுக்காக காத்திருந்த அவங்களும் அலர்ட் ஆகிட்டாங்க! ட்ரைவர் எடுத்த போட்டோத்தான் இது.

View attachment 51

தலைவராலத்தான் ஃப்ளைட் டிலே போல! ஒரு வழியா சென்னை வந்து இறங்கியாச்சு! அப்பாடா நம்ம மொழி தெரிஞ்ச இடம்டா சாமின்னு ஒரு குதூகலம்! எங்களுக்காக தங்கமலர் வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க! ஏற்கனவே என்ன ஏற்பாடுன்னா, மெட்ரோ எடுத்து அவங்க வீட்டுக்குப் போறதுன்னு. லாஸ்ட் மினிட்ல ட்ரைவர் அரேஞ் பண்ணி கூட்டிட்டு வந்துட்டாங்க! என் மனசுக்குள்ள 'தெய்வமே! தெய்வமே! நன்றி சொன்னேன் தெய்வமே'ன்னு பாட்டு!

View attachment 52

நாங்க மூனு நல்லவங்க சென்னைக்கு வரவும், சென்னையிலும் மழை!!! அந்த நாளுலத்தான் எங்கத் தலை இளையராஜாவோட கான்சேர்ட் நடந்திட்டு இருக்கு! என்னால சரியா ப்ளான் போட முடியல! சில சொந்தக்காரங்க கல்யாணம்லாம் நடுவுல வந்திருச்சு! இல்லைனா ராஜா நிகழ்ச்சிக்கு போயிருக்கலாம்! இதுவும் ஜஸ்ட்டு மிஸ்! ஆனா அந்த ரோட் வழியா போனோம். பாட்டு சத்தம் கேட்டுச்சு என் காதுக்கு! இது போதும் எனக்குன்னு மனசுல பாடிக்கிட்டே வீட்டுக்குப் போய் சேர்ந்தாச்சு!

அதுக்கு மேல நாங்க தங்கமலர் வீட்டுலத்தான் லிவிங்ஸ்ட்டன்! அவங்கத்தான் எங்களுக்கு கைடு! ஏற்கனவே நான் சொல்லி வச்சிருந்தேன். அவங்களும் கேக் வாங்கி வச்சிருந்தாங்க! பாவம் ஹவுஸ் ஓனர்! பொறந்த டேயும் அதுவுமா நல்ல சாப்பாடு கிடைக்காம, அலைச்சல் வேற, டிலேல ஸ்ட்ரேஸ் வேற! கேக்க பார்த்ததும் அதிர்ச்சி மனுஷனுக்கு!

View attachment 53
கேக் செம்ம ருசி!

பிறகென்ன தங்கமலர் கையால ஒரு டீ வாங்கி குடிச்சிட்டு, மூனு பேரும் டொய்ன்க்குத்தான்!!!!!!!

இப்படியாக முடிந்தது மூன்றாம் நாள்.

தொடரும்.....
 
Aug 4, 2024
13
0
18
நாங்கள் முதல் முறை பூனா வழியாகவும் இரண்டாம் முறை மும்பை வழியாகவும் சென்றோம். மும்பை வழியாக செல்லும் பொழுது போகும் பொழுது மற்றும் திரும்பும் பொழுதும் வேன் பஞ்சராகி சிரமப்பட்டோம். மூன்றாவது முறை சென்னை வழியாக ஷீரடி விமானத்தில் சென்றோம். எந்த பிரச்சனையும் இல்லை. அரை மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு சென்றுவிடலாம். அரை மணி நேரத்திற்கு முன் செக்கின் ஆகலாம். சிறிய விமான நிலையம். உணவுப் பொருட்கள் விலை மற்றவையைவிட குறைவு. பிரச்சினை ஏதும் இல்லை. சென்னையில் இருந்து வரும் பொழுது முதலமைச்சர் வந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பயணிகளை விமானத்திற்கு அனுப்பிவிட்டார்கள்.
 
  • Like
Reactions: VanishaAdmin

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
நாங்கள் முதல் முறை பூனா வழியாகவும் இரண்டாம் முறை மும்பை வழியாகவும் சென்றோம். மும்பை வழியாக செல்லும் பொழுது போகும் பொழுது மற்றும் திரும்பும் பொழுதும் வேன் பஞ்சராகி சிரமப்பட்டோம். மூன்றாவது முறை சென்னை வழியாக ஷீரடி விமானத்தில் சென்றோம். எந்த பிரச்சனையும் இல்லை. அரை மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு சென்றுவிடலாம். அரை மணி நேரத்திற்கு முன் செக்கின் ஆகலாம். சிறிய விமான நிலையம். உணவுப் பொருட்கள் விலை மற்றவையைவிட குறைவு. பிரச்சினை ஏதும் இல்லை. சென்னையில் இருந்து வரும் பொழுது முதலமைச்சர் வந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பயணிகளை போர்டிங் செய்தார்கள்.
Thanksma..intha info neraya perku useful ah irukum :)
 
  • Like
Reactions: saroja

kumarsaranya

Active member
Aug 4, 2024
52
-40
28
பிறந்த நாள் அதுவுமா உங்க ஹவுஸ்ஒனரை சுத்தவுட்ருக்கிங்க
 
  • Haha
Reactions: VanishaAdmin

Aparna

New member
Aug 4, 2024
4
0
3
Super ji.. Belated Birthday wishes house onwnerkku.. 🎂 Always travel konjam appadi ippadi thaan pogum.. yeppavume kaiyula konja snacks vachukunum paa..
 
  • Like
Reactions: VanishaAdmin

saroja

Active member
Aug 5, 2024
77
-49
43
நல்ல அனுபவம்

💐 பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் எங்க தம்பிக்கு
சொல்லிறுங்க😀
 
  • Like
Reactions: VanishaAdmin

kothai suresh

Active member
Aug 3, 2024
79
-50
43
பாவம் பிறந்த நளும் அஅதுவும் நல்லா அலைய விட்ட இருக்கீங்க. லேட்டானும் எங்களோட விஷ்ஷை சொல்லிடுங்க
 
  • Like
Reactions: VanishaAdmin