Day 3--12/12/2024

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
582
-2,701
93
எப்பவுமே ட்ரிப் ஆரம்பிக்கறப்ப இருக்கற உற்சாகம், வேகம்லாம் அதை முடிக்கறப்ப அப்படியே குறைஞ்சிப் போய்டறது வழக்கம். இங்கயும் அப்படித்தான். மூனாவது நாள் நிறைய போட்டோலாம் எடுக்கல! அதனால கலந்து போடற போட்டோவ அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!


அன்னைக்கும் காலைலயே எழுந்துட்டோம்! கூப்புடு தூரத்துல இருக்கற வீரமாகாளியம்மன் கோயிலுக்குப் போகறதுனு ப்ளான். குளிச்சிட்டு, ஓரளவுக்கு லக்கேஜ் அடுக்கிட்டு, கோயிலுக்கு போனோம். காலைல நல்ல கூட்டம்தான்.

View attachment 509

துர்க்கை அம்மன் அவ்ளோ அழகா இருப்பாங்க இங்க! பல வருடங்களுக்கு முன்ன, செவ்வாய் கிழமைகள்ல இந்தக் கோயிலுக்கு வந்து இவங்கள வேண்டிக்கிட்டு எலுமிச்சை விளக்குப் போடுவேன்! பாப்பாவ அவங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தற சந்தர்ப்பம் இப்போத்தான் அமைஞ்சது! இவள எனக்கு கொடுத்ததுக்கு நன்றிமான்னு சொல்லிட்டு வந்தேன். என்னை அறியாமலேயே கண்ணீர் கரகரன்னு வழிஞ்சிடுச்சு!

கடைசி கரண்டி புளியோதரை(ப்ராசாதம்) எனக்குத்தான் கிடைச்சது! சந்தோஷம்டா சாமின்னு, வாங்கி பேக்ல வச்சிக்கிட்டேன். கோயில் ப்ரசாதம் கிடைக்கறதுலாம் எவ்ளோ அதிர்ஷ்டம்!!! பொறுமையா எல்லா சாமியையும் கும்பிட்டுட்டு வெளியாகிட்டோம்!

அம்மாவுக்கு கொத்தவரங்காய் வேணுமாம்! மலேசியாவுல கிடைக்காததனால, லிட்டில் இந்தியா ஜோதி ஸ்டோர்ல போய் வாங்கனோம்! அப்படியே பாப்பாவுக்கு ஒரு ப்ரூட்டீ, எனக்கு மாம்பழம் இப்படின்னு கொஞ்சம் வாங்கிக்கிட்டோம்! நெறயா வாங்குனா பஸ்ல தூக்கிட்டுப் போக கஷ்டமா இருக்குமே!

எனக்கு இட்லி வேணாம்னுட்டா பாப்பா! சோ டீ கடைல நின்னு டீ குடிச்சிட்டு ப்ரசாதத்த கொஞ்சம் சாப்டுக்கிடோம்! Boon Lay போய்ட்டு அங்க லன்ச் சாப்டுக்கலாம்னு ப்ளான்.

View attachment 510

View attachment 511
டீக்கடை பேரு Gokul Cafe..செம்மையா இருக்கு இவங்களோட இஞ்சி டீ!!!
டீ குடிச்சிட்டு ரூம்ல வந்து மறுபடி எல்லாம் எடுத்து வச்சிட்டு செக் அவுட் பண்ணிட்டோம். லக்கேஜ தள்ளிட்டே லிட்டில் இந்தியா ட்ரேன் ஸ்டேஷன் போனோம். உள்ள நுழைஞ்சதும், எங்கள செக்குரிட்டி நிறுத்திட்டாரு. பேக்க திறங்க செக் பண்ணனும்னு! என்னங்கடா டேய்! என்ன பார்த்தா டெரர் பீஸ் மாதிரியா தெரியுது??? அவருக்கு ஓப்பேன் பண்ணி காட்டிட்டு, பிறகு ரயில புடிச்சோம்.

நாங்க Boon Lay வந்து இறங்கறப்ப மதிய சாப்பாடு நேரமே ஆகிடுச்சு. Jurong Point மால்ல இருக்கற ஃபுட் கோர்ட்ல லஞ்ச் சாப்பிட உக்காந்தோம். போட்டோலாம் ஒன்னும் எடுக்கல நான். சீக்கிரம் கிளம்பிடனும்னுதான் உள்ளுக்குள்ள ஓடுது! மதியம்லாம் பஸ்ல கூட்டம் இருக்காது. அதோட ரெண்டு பக்க இமிகிரேஷன்லயும் ஆள் குறைவா இருப்பாங்க! ஈவ்னிங் ஆகிட்டா, அடிச்சு புடிச்சு ஓடனும்! அதுவும் அம்மாவையும் பாப்பாவையும் வச்சிக்கிட்டு கஷ்டம்.

சாப்பிட்டு முடிச்சதும் மலேசியா போகிற பஸ் நிக்கற ஸ்டாப் தேடி கிளம்பிட்டோம்! வந்து இறங்கனப்போ எங்க இறங்கனோம்னு சரியா கவனிச்சு வைக்கல. பாப்பா அந்தப் பக்கம்ங்கற! அம்மா இந்தப் பக்கம்ங்கறாங்க! நான் ஒரு பக்கம் போறேன்! சுத்தி சுத்தி காலே வலி எடுத்திருச்சு! பாப்பா களைச்சிட்டா! கேக்கறவங்களாம் இங்கிட்டு போ அங்கிட்டு போன்னு சுத்தல்ல விட்டுட்டாங்க! கடைசியா ட்ரேன் ஸ்டேஷன்ல போய் கேட்டேன். அவங்க வழி காட்டுனாங்க! வேகமா போனா, அங்க பஸ் கிளம்பறதுக்கு நிக்கிது! அடிச்சுப் பிடிச்சு ஏறினோம்.

சிங்கப்பூர் இமிகிரேஷன் நல்லபடி கடந்துட்டோம்! மலேசியால அம்மா மாட்டிக்கிட்டாங்க! அவங்களோட பெரு விரல் ஸ்கேனர்ல கேப்ச்சர் ஆகல! அந்த நேரம் அவ்ளோ வெளிநாட்டு டூரிஸ்ட் வேற! முகம் வச்சு ஸ்கேன் பண்ணற கியூல அவங்கள நிக்க வச்சி, ஒரு வழியா கடந்து வந்து வீடு சேர்ந்தோம்!!!!

இந்த ட்ரீப்ல நாங்க டிக்கேட் வாங்கிட்டு போகற எந்த இடத்துக்கும் போகல! சும்மா ஒரு ரிலேக்ஸ் பண்ணிக்கற பட்ஜேட் ட்ரீப் மட்டும்தான்! எங்க மூனு பேருக்குமான அஸ்(us) டைம்! அதுல நீங்களும் கலந்துக்கிட்டதுல எனக்கு சந்தோஷம். இதோட அடுத்த ட்ரீப்ல சந்திக்கலாம்! பாய்!!!!!
 

Author: VanishaAdmin
Article Title: Day 3--12/12/2024
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.