வணக்கம் டியர்ஸ்,
இந்தப் பயணக் கட்டுரை ஆரம்பிக்கறப்ப ஏனோதானோன்னுதான் ஆரம்பிச்சேன். படிப்பாங்களா? நாம சொல்றதெல்லாம் செல்ஃப் டப்பா மாதிரி தோணுமோ? ரம்பத்த போடறமோ? இப்படிலாம் பல கேள்விகள் எனக்குள்ள. அதனாலத்தான் நெறைய விஷயங்கள சொல்லாம, மேலோட்டமா சொன்னேன் முதல் பதிவுல. ஆனா நல்ல ரெஸ்பான்ஸ் குடுத்தீங்க எல்லோரும். நிறைய பேர், எல்லாம் சொல்லுங்க எங்களுக்கு கைடா இருக்கும்னு கேட்டீங்க! பிறகென்ன ஆரம்பிச்சிடலாம்...
ஏற்கனவே பல முறை போய்ட்டு வந்தவங்க, எப்படி காக்கட ஆரத்திக்கு ஆன்லைன்ல பதியலாம், , தேவஸ்தான இடத்துலயே எப்படி தங்கலாம் இப்படிலாம் ஷேர் பண்ணிக்கங்க! என்னைப் போல தவிச்சு நின்ன பலருக்கு இது மிகவுமே உதவியா இருக்கும்!
டே 2
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் ரெண்டரை மணி நேர வித்தியாசம் இருக்கு. உங்களுக்குக் காலை மணி 8னா எங்களுக்கு காலை மணி 10.30. அதனால இந்தியா டைம் காலை ஆறுக்கே(எங்களுக்கு 8.30) எழுந்துட்டோம்! இத்தனைக்கும் நல்லா தூங்கி எழுந்திரிங்கன்னு ட்ரைவர் சொன்னாரு! தூங்கவா இவ்ளோ தூரம் வந்தோம்னு எழுத்தாச்சு. இவருக்கு மட்டும்தான் இண்டெர்நெஷனல் ரோமிங் சர்விஸ் இருக்கு.
"பாப்பாவ எழுப்பி கிளப்பி விடு! நான் லாபி போய்ட்டு வைஃபை பாஸ்வெர்ட் வாங்கி அனுப்பறேன்"னு ஹவுஸ் ஓனர் கிளம்பிட்டாரு.
ஒரு வழியா இவள கொஞ்சி கெஞ்சி எழுப்பி நாங்களும் கிளம்பி கீழ பசியாற போய்ட்டோம்! அங்க பார்த்தா ரெண்டு வகைல தூக்க மாத்திரை வச்சிருக்கான்! அதாங்க நம்ம பொங்கல்!!!! அத சாப்டா நான் மறுபடி தூங்கிடுவேன். சோ நான் ஒரு இட்லி ஒரு வடை சாப்டேன்! என் வீட்டு மகராணி ரெண்டே வடையோட நிறுத்திட்டா! இட்லிலாம் தொண்டைலாம் குத்தும் அம்மணிக்கு!!! காபி குடிச்சிட்டு ட்ரைவர கூப்டாச்சு!
மலேசியாவில தெரிஞ்சவங்க ஒருத்தங்கத்தான் ட்ரைவர சஜஸ்ட் பண்ணாங்க! அவர காண்டேக்ட் பண்ணப்போ பண விவரம்லாம் சொல்லி, காக்கட ஆரத்தி பத்தியும் சொன்னாரு. விடிகாலைல பாபாவுக்கு அபிசேகம் பண்ணி ஆரத்தி காட்டறதுதான் இந்த நிகழ்வுன்னு சொன்னாரு! இதை பத்தி தெரிஞ்சவங்க கமேண்ட்ல ஷேர் செஞ்சிக்கலாம். வெளி நாட்டுக்காரங்க பாஸ்போர்ட் காட்டி டிக்கெட் எடுக்கனும்! ரூபாய் 600 வரும் ஒருத்தருக்குன்னு சொன்னாரு! நீங்க இங்க வந்தா எடுத்துக்கலாம்னும் சொன்னாரு! சரி அங்க போயே எடுத்துப்போம்னு விட்டாச்சு.
கார்ல ஏறி இன்னொரு ஹோட்டல்ல நிறுத்தி பார்க் பண்ணிட்டு, போன், காலணி எல்லாம் கார்ல வச்சிருங்கன்னு சொல்லவும், செஞ்சாச்சு. பிறகு வெறும் கால்லயே நடந்து பாபா கோயிலுக்குப் போனோம்! காலைல அவ்ளோ ஆள் இருந்தாங்க. ஆனா அதுவே கூட்டம் குறைவாம். பஜனை போய்ட்டு இருந்தது வெளி மண்டபத்துல.
View attachment 18
மின்னல் வேகம்னு சொல்வாங்களே, அப்படி ஒரு மின்னல் வேகத்துலத்தான் இந்த ட்ரைவர் பாபா கோயில சுத்தி உள்ள இடங்கள காட்டுனாரு!
View attachment 20
View attachment 21
View attachment 22
சாவடி, துவாரகமை, பாபா பாதம் இருந்த இடம், லக்ஸ்மி பாய் 9 காசுகள் வச்சிருந்த இடம் இப்படின்னு சட்டு சட்டுன்னு போகவும் சத்தியமா இப்ப எதையும் என்னால ரீகால் பண்ண முடியல!!! பாபா பாதம் செஞ்சி வச்சிருந்த இடத்துல, நாங்க நுழையறப்பத்தான் பாதத்துக்கு கீழ இருந்த துணிய மாத்தி புதுசு வச்சாங்க! அங்க நானும் பாப்பாவும் மட்டும்தான் நின்னுட்டு இருந்தோம்! அவர் இந்தில என்னமோ அந்த துணிய காட்டிச் சொன்னாரு! எனக்குப் புரியல! ஆனா எனக்குப் பின்னாடி வந்தவங்க அந்தத் துணிய சட்டுன்னு எடுத்துக்கிட்டாங்க! அப்போத்தான் தெரியுது, பாபா பாதம் வச்சிருந்த துணிய என்னை எடுத்துக்க சொன்னாருன்னு! மனசே உடஞ்சி போச்சி! ஜஸ்ட்டு மிஸ்!!! அதுக்குப் பிறகு எங்க தலைல மயிலிறகால தட்டி ஆசீர்வாதம் பண்ணாரு அவரு. அப்புறம் இன்னொரு இடத்துல தூரத்துல இருந்து பாபாவ தரிசிக்கலாம்னு கூப்டு போனாரு! அந்த வளாகத்திலேயேத்தான்! அங்க போய் தூரமா அவர பார்க்கறப்பவே கண்ணு கலங்குது! அது முடிச்சிட்டு ட்ரைவர் கேட்டாரு 12 மணி ஆரத்தி பார்க்கறீங்களான்னு!
நான் சரின்னு சொன்னேன். டிக்கேட் வாங்கற இடத்துக்குப் போயாச்சு! பாஸ்போர்ட் கேட்டாங்க! ஒரு ஆளுக்கு 400 ரூபாய்! ட்ரைவருக்கும் வாங்கறதுக்கு கேட்டோம்! பாஸ்போர்ட் உள்ளவங்களுக்கு மட்டும்தான்னு சொல்லிட்டாங்க! அவரும் இப்படி இப்படி போங்கன்னு சொல்லிட்டு 10.30 மணிக்கே கியூ ஸ்டார்ட் ஆகும் இடத்துல விட்டுட்டாரு. நாங்கத்தான் முதல்ல நிக்கறோம்! ட்ரைவர் நார்மல் கியூல வந்து உள்ள சந்திக்கறேன்னு சொன்னாரு! அப்புறம் உள்ள விட்டாங்க! அங்க உக்காருற இடத்துல எங்களுக்கு முன்னாடி மூனு பேர் இருந்தாங்க! எப்போ தரிசனத்துக்கு விடுவாங்கன்னு காத்திட்டு உக்காந்திருந்தோம்.
11.30 போல கேட் திறந்து விட்டாங்க! மேல, கீழ, படின்னு கியூ ரொம்ப டிசிப்பிளினா நகர்ந்தது! செக்கியூரிட்டி கூடவே வந்தாரு! யாரும் கியூ கட் பண்ண முடியாதபடி அவ்ளோ ஸ்ட்ரிக்ட்! ரொம்ப பிடிச்சது எனக்கு. ஒரு வழியா பாபா முகம் தெரியற அளவுக்கு நெருங்கிட்டோம். உள்ள போனதும் உட்கார சொல்லிட்டாங்க! லெப்ட்ல ஆண்கள் வரிசை ரைட்ல பெண்கள் வரிசை! பாபாவ கிட்டப் பார்த்துட்டே உட்கார இடம்! ஹப்பா! பட்டப்பாடெல்லாம் மறந்தே போச்சு! பாப்பா மூனாவதாகவும், நான் நாலாவது ஆளாகவும் உக்காந்தேன். பாட்டு பாடி, ஆரத்தி காட்டி ஒரு முக்கால் மணி நேர பூஜை! அங்க இங்க அசையாம பாபாவ பார்த்தேன். எத்தனை வருஷத்து வேண்டுதல். கொண்டு வந்து பக்கத்துல உட்கார வச்சிட்டாரே!!! பூஜை நடுவுல ஒரு வெள்ளை நிற நாய்! அது பாட்டுக்கு உள்ள வந்திடுச்சு! பாப்பா முன்னாடி புகுந்து கடந்து போய்டுச்சு! என்ன நினைக்கன்னே தெரியல எனக்கு!
பூஜை முடிஞ்சு வெளிய வந்து,
"ப்ராசாதம் வாங்கனும்! நம்மூருல எல்லோருக்கும் குடுக்கனும்"னு நான் சொல்ல,
"இரு ட்ரைவர் வரட்டும்"னு இவர் சொன்னாரு.
"அது வரைக்கும் ஏன் டைம் வேஸ்ட் செய்யனும்?" அப்படின்னு நான் ஆங்கிலத்துலேயே கேட்டு கேட்டு லட்டு விக்கற இடத்துக்கு வந்துட்டேன்.
தங்கமலர்(இவங்கதான் நம்ம சேனலுக்கு குரல் குடுக்கறவங்க) சொன்னாங்க பாபாவோட பிரசாதம்னா அது பேடான்னு! அங்க போனா லட்டு கவுண்டர்தான் இருந்தது! அதையும் வாங்கிட்டு, பேடா கவுண்டரையும் விசாரிச்சிக்கிட்டோம்! ஒன்னு சொல்லவா? மும்பைல இது போல கவுண்ட்டர்ல வேலைப் பார்க்கறவங்க மோஸ்ட்லி கடுகடுன்னுதான் இருக்காங்க! நாம ஆங்கிலத்துல பேசனாலும் இந்தியிலத்தான் பேசறாங்க! டேய் என்னங்கடா இப்படி பண்ணுறீங்க மோமண்ட்தான்.
அந்த கோயில் உள்ளயே வேற பல சமாதிகள் இருந்தன. அதையும் போய் பார்த்தோம், கிணறு இருந்தது! பிறகு பாபா மியூசியம் இருந்தது. செம்ம கூட்டம் அண்ட் கியூ! அதெல்லாம் காசு குடுக்க வேணா! நான் வரலன்னு அப்பாவும் மகளும் நிக்கிதுங்க! நான் போறேன்னு போகவும் இவளும் வந்தா! முனகிட்டே வந்தா!
அங்க பாபா போட்டிருந்த சட்டையைக் காட்சிக்கு வச்சிருந்தாங்க! இவ சொல்றா,
"அம்மா! போட்டோல பாபா தாத்தா சின்னதா தெரியறாரு! ஆனா சட்டையைப் பார்த்தா பெரிய சைஸ்லதான் இருந்திருப்பாரு போல"ன்னு.
அதெல்லாம் ஏன் எனக்குத் தோணல!!! அவர் யூஸ் பண்ண அடுப்பு பார்த்தோம்! அது மியூசியல்ம்லயா இல்ல வேற இடத்துலயான்னு தெரியல! பழைய காலத்து பாட்டு கேக்கற மிசின் இருந்தது! இசைத்தட்டுப் போடுவோமே அது! இதெல்லாம் அப்பவே வந்திடுச்சாம்மான்னு கேட்டுட்டே வந்தா. அதை பார்த்துட்டு பேடா கவுண்டர தேடறதுக்குள்ள வந்திட்டாரு ட்ரைவரு! வாங்க வெளியாகிடலாம். சாப்பிட்டு ஷானி சிங்நாப்பூர் போலாம்னு சொல்ல, வெளிய வந்திட்டோம்.
"இங்க கவுண்ட்டர்ல டீ விப்பாங்களாம்! 2 ரூபாய்தானாம். ஷீரடி வந்தா கண்டிப்பா அதை குடிக்கனும்னு யூடியூப்ல சொன்னாங்க"னு நான் கேக்க,
"அப்புறம் வந்து குடிக்கலாம்ங்க"னு சொல்லிட்டாரு ட்ரைவரு.
நான் உணர்ந்து தெளிந்த விஷயம் என்னன்னா, எப்பவுமே அப்புறம்னு சொன்னா நீங்க இப்பவேன்னு சொல்லிப் பழகுங்க! அப்புறம்ங்கறது எப்புறமும் இல்லைங்கற அர்த்தம்! கடைசியா நாங்க டீ தேடி வந்தப்பா, பால் முடிஞ்சதுன்னு கடை அடைச்சிட்டாங்க!! சோகத்த!!!!!
லஞ்ச் அட் சரவணபவன். ரொம்ப நல்லா இருந்தது. முடிச்சதும் ட்ரை்வ் டூ ஷானி சிங்நாப்பூர்.
View attachment 23

Author: VanishaAdmin
Article Title: Day 2--(13/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.