Day 14--(25/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
வணக்கம் டியர்ஸ்,

இதுதான் லாஸ்ட் பார்ட். இத எழுதி முடிக்கவே நான் ரொம்ப நாள் எடுத்துட்டேன்.

இந்த நாள் விடிகாலைல நாங்க சென்னைல வந்து இறங்கனோம். எங்களுக்காக ஏற்கனவே தெரிஞ்ச ஆட்டோ ஒன்னு சொல்லிருந்தோம்! அவரும் வந்து காத்திருந்தாரு. தங்கமலர் கிட்ட சொன்னேன், வீட்டுக்குப் போனதும் நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்னு! நெஜமா பத்து பேரு போட்டு அடிச்ச மாதிரி இருந்தது உடம்பு கண்டிஷன்!!! நான்லாம் பேஸ்மேண்ட் வீக் கேட்டகரி! இத்தனை நாள் ட்ராவல சமாளிச்சதே பெரிய விஷயம்.

வீட்டுக்குப் போனதும் கொஞ்ச நேரம் தூங்கிட்டேன். ஆனாலும் ஆழ்ந்து தூங்க முடியல. மறுநாள் ஃப்ளைட்! பேக்கிங் வேற இருக்கே! ஒரு ஓன் டூ ஹவர் தூங்கிருப்பேன் போல. பிறகு எழுந்து கொஞ்சம் பேக்கிங். அப்புறம் கிளம்பி தங்கம்ஸ் அம்மா வீட்டுக்குப் போக ப்ளான். அதுக்கு முன்னாடி தங்கம் வீட்டுக்கிட்டயே ஒரு கோயிலுக்குப் போனோம்! அந்த அம்மன் பேரு வடிவுடை அம்மன். அவங்க நெஜமாலுலே அவ்ளோ வடிவா இருந்தாங்க! முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தப்ப வாரா வாரம் அவங்கள தரிசிக்க வருவாங்கன்னு தங்கம் சொன்னாங்க! அம்மன கும்பிட்டுட்டு, பிறகு மார்க்கேட் போனோம். தங்கம் அம்மாவுக்காக கொஞ்சம் காய்கறிலாம் வாங்கனாங்க.

பிறகு வடசென்னைல பீச் பக்கம் ஆட்டோலயே ஒரு ரவுண்டு வந்தோம். தமிழ் படத்துலலாம் இந்த இடத்த ரொம்ப காட்டுவாங்க. கல்லு கல்லா அழகா இருக்கும். போட்டோ ரொம்ப எடுக்கல.

View attachment 345

அப்புறம் ஸ்ட்ரேய்ட்டா அம்மா வீட்டுக்குப் போய்ட்டோம். அவங்க வீடிருந்த பகுதி பேர நான் மறந்துட்டேன். மரங்கள், செடி கொடிகள்னு நடுவுல இவங்க வீடு. அவ்ளோ நாவல் பழம் கீழ விழுந்து கிடக்கு. அம்மா வேற பெரிய பெரிய பைல சேகரிச்சு வச்சிருந்தாங்க பழம்லாம். கொஞ்ச நேரம் அவங்க கூட உக்காந்து கதை. எனக்கு வயிறு ரொம்ப எரிச்சல்னு தங்கம் சொல்லிருப்பாங்க போல, பருப்புல முருங்கைக்கீரை போட்டு கஞ்சி வச்சிக் குடுத்தாங்க அம்மா! சோ ஸ்வீட் அவங்க!!!!!!

பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்திட்டோம்! தங்கம் அக்கடான்னு கொஞ்ச நேரம் படுக்க, நான் போய் மீண்டும் பேக்கிங். மேடம் சப்போஸ் பருப்புருண்டை குழம்பு வைக்க வேண்டியது லன்ச்சுக்கு. எனக்கு ரமணிம்மா கதை படிச்சு இந்தக் குழம்பு சாப்பிடனும்னு ஆசை. போன முறை வந்தப்ப, தஞ்சாவூர்ல ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம். இந்தத் தடவை தங்கமே செஞ்சு தரதா சொன்னாங்க. கடைசில லேட்டாகிப் போச்சு. கொஞ்சம் இம்ப்ரோவைஸ் பண்ணி, ரசம், பருப்புக் குழம்பு, பருப்பு வடைன்னு செஞ்சிட்டாங்க! நான் பருப்பு வடைய சாதத்துல சாப்பிட்டது இல்ல. அது டீ டைம் ஸ்நாக்தான் எங்களுக்கு. ஆனா இப்படி சாப்பிட்டப்ப, என்ன ஒரு ருசி!!!! டிஃப்ரண்ட் கைண்ட் ஆஃப் டேஸ்ட். ரொம்ப ரசிச்சு சாப்பிட்டேன். நைட்டுக்கும் இதுவே வச்சிக்கலாம்னு சொல்லிட்டேன்னா பார்த்துக்கோங்க!!!

View attachment 346

பிறகு கிளம்பி பெசண்ட் நகர் பீச் போனோம் அதே ஆட்டோலயே! அங்கத்தான் ஃபேன்ஸ் மீட் அரேஞ் பண்ணேன். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!!!! சென்னைல மரினா பார்த்துட்டேன், மஹாபலிபுரம் பீச் பார்த்துட்டேன், கோவளம் பீச் பார்த்துட்டேன்! பெசண்ட் நகர் மட்டும் எப்படி விட்டு வைக்கறது! நான் ஒரு பீச் பைத்தியம்!!!! அதான் ரீடர்ஸயும் பார்த்த மாதிரி ஆச்சு, கடல்லயும் கால் நனைச்ச மாதிரி ஆச்சுன்னு அந்த இடத்த செலெக்ட் பண்ணேன்.

View attachment 347
இதுதான் மீட்டிங் ஸ்பாட்.

எனக்கு இந்த கடற்கரை ரொம்பப் பிடிச்சது! அடிக்கடி ஜோசியம் பார்க்கறவங்க வந்து டிஸ்டர்ப் பண்ணாங்க! மத்தபடி ஆவ்சம் ப்ளேஸ் இது! எனக்கு முன்னாடியே நம்ம கோதை சிஸ், வெற்றிசெல்வி, காமாக்‌ஷி மூனு பேரும் வந்துட்டாங்க. கோதை சிஸ்ஸ நான் அவங்க முகப்புத்தகத்துல பார்த்திருக்கேன்! சோ இவங்க மூனு பேரும் நம்ம கேங்தான்னு கண்டுப் புடிச்சிட்டேன்.

என்ன பேச, ஏது பேசன்னு தெரில. என்னென்னமோ பேசனேன் போல :) அவ்வ்வ்!!!

View attachment 348

View attachment 349

நாங்க முதல்ல உக்காந்திட்டோம் மணல்ல. திடுதிப்னு மழை வேற! வந்த மாதிரியே நின்னும் போய்டுச்சு! பிறகு அருண்மொழி, ஊர்மிளா, மேரி, ஜீனத் சிஸ்னு வரிசையா வந்தாங்க! எல்லோரும் கரைல உக்காந்து ஒரே அரட்டை. இப்போ என்ன பேசனேன்னு கேட்டா, எனக்கே ஞாபகம் இல்ல. ஸ்வீட் நத்திங்ஸ்!!!

View attachment 352
இத நான் சொல்லியே ஆகனும்! எங்க முன்னாடி படுத்திருக்காரு பாருங்க மிஸ்டர் டாக், அவரும் என்னோட ஃபேன்தான். நாங்க பேச ஆரம்பிச்சதுல இருந்து, கிளம்பற வரைக்கும் எங்கள விட்டு நகரவேயில்லை! பக்கத்துலயே எந்த டிஸ்டர்பும் பண்ணாம படுத்திருந்தாரு.

கொஞ்ச நேரம் கடல்ல கால் நனைப்போம்னு போனோம்! அங்க வச்சி ஒரு செல்ஃபி எடுக்க ட்ரை பண்ணோம். எல்லோரும் போன பார்த்தமே தவிர, கடல் அலைய பார்க்கல! பிறகென்ன, தொப்பைக்கட்டைத்தான்!!! ஹஹஹ. அப்புறமா சூடா காபி, டீன்னு குடிச்சிட்டு கிளம்பிட்டோம்! நெறைய பரிசுகள், ஸ்வீட், மல்லிப்பூன்னு கை நிறைய அன்ப குடுத்துட்டாங்க!!! மிக்க நன்றி மை டியர்ஸ்.

View attachment 353

வந்த ஆட்டோலயே வீட்டுக்குக் கிளம்பிட்டோம்! நம்ம கூட காமாக்‌ஷியும் வந்தாங்க! மூனு பேர் ஒரு ஆட்டோல. போற வழில தங்கமலர் பிரதர் கடை இருந்தது! அது ஆண்களுக்கான துணிமணி விக்கற கடை. ஜீன்ஸ், ஷேர்ட்ஸ், டீ ஷர்ட்னு. ஹவுஸ் ஓனருக்கு ஒன்னுமே வாங்கலியேன்னு மனசு பிராண்டிருச்சுன்னு வைங்களேன்! அந்தக் கடைல எல்லா சைஸ்சும் கிடைக்கும்னு சொல்லவும், கொஞ்ச நேரம் அங்க ஷாப்பிங்! கடை பேரு லைட் ஹவுஸ் என்னமோ வரும்!! பேர் மறந்துட்டேன். மரினா பீச் கிட்ட இருக்கு.

View attachment 354
அக்கா, கைல என்னமோ வச்சிட்டு சுத்தறீங்களே அது என்னன்னு கடைப் பையன் கேக்க, சேல்பி ஸ்டிக் தம்பின்னு சொல்லி அவர் கூடவே ஒரு போட்டோ!!!!

பிறகு தங்கமலர தொல்லைப் பண்ணி ஐபேக்கோ போய்ட்டேன். காய்ச்சல், சளி, இருமல்னு ஐஸ் தண்ணியவே கண்ணுல காட்டல. நாளைக்குத்தான் கிளம்பறேனேன்னு சொல்லி, போய் உக்காந்து திருப்தியா சாப்பிட்டுட்டேன்.

View attachment 355
செம்ம ருசி!! கலர் ஒரே மாதிரி இருந்தாலும், வேற ப்ளேவர்.

வீட்டுக்கு வந்து பகல்ல சாப்பிட மாதிரியே டின்னர் சாப்பிட்டுட்டு, பேக்கிங் ஆரம்பிச்சேன்.








 

Author: VanishaAdmin
Article Title: Day 14--(25/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
View attachment 358

View attachment 359
எனக்கு கிடைச்ச அன்புப் பரிசுகள்.

பேக்கிங்ல செம்ம டென்ஸ்ட் ஆச்சு! நான் எடுத்த 25 கிலோக்கு மேல வந்திருச்சு வேய்ட். கொஞ்சம் சாமான்கள பார்சல்ல போட சொல்லி அங்கயே விட்டுட்டு வந்திட்டேன். ரொம்ப லேட்டாத்தான் தூங்கனேன்.

காலை 8.30 க்கு ப்ளைட். முதல் மெட்ரோவ புடிச்சு, போய் சேர்ந்துட்டோம் ஏர்போர்ட்டுக்கு. தங்கம்ஸ் சுக்கு காபி கலந்து ப்ளாஸ்க்ல எடுத்து வந்தாங்க! அங்க வெளியவே நின்னு குடிச்சிட்டு, கட்டிப் புடிச்சு பாய் சொல்லி உள்ள போய்ட்டேன். லக்கேஜ் ட்ராப், இமிகிரேஷன் எல்லாம் முடிச்சு அக்கடான்னு ப்ளேன்ல உக்காந்தாச்சு! ப்ளேன் மேல ஏற, ஏற மனசுலயே பாய் சொன்னேன் உங்க எல்லாருக்கும் :)

ரொம்ப அழகானதொரு பயணம். கோயில்கள் மட்டும் இல்லாம அழகான மலைப் பிரதேசமும், குளுகுளு குற்றாலமும் இந்த முறை என் பயணத்த அற்புதமாக்கிடுச்சு! இனி கதை எழுதறப்போ, என்னால இடங்களையும், மனிதர்களையும் உணர்ந்து உள்வாங்கி எழுத முடியும்னு நினைக்கறேன்.

என்னைச் சந்திக்க வந்த தோழிகளுக்கும், சந்திக்க முடியாம மிஸ் ஆகிட்ட தோழிகளுக்கும் எனது இனிய நன்றி.

தங்கம்ஸ் -- என்னோட பயணத்த வெறும் பயணமா இல்லாம, இனிய அனுபவமா மாற்றிக் கொடுத்ததுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!!! மறுபடியும் வருவேன். இன்னும் தொல்லை பண்ணுவேன்!!! வேய்ட் ஃபோர் மீ :)

முற்றும்.

(பி.கு--- இத்தனை நாளு என்னைப் பார்க்காததனால ஹவுஸ் ஓனர் ஏர்போர்ட் உள்ள வந்து பொக்கேயோட காத்திருந்திருப்பாருன்னுலாம் தப்புக் கணக்குப் போடக் கூடாது!!! பார்க்கிங் கிடைக்கலன்னு அப்பாவும் மகளும் காருக்குள்ளயே இருக்க, நான்தான் எல்லா லக்கேஜையும் தள்ளிக்கிட்டு வெளிய வந்தேன்!!! கடைசில எனக்குத்தான் பிம்ப்பிளிக்கா பில்லாப்பி!!!!!!! :) )
 

kothai suresh

Active member
Aug 3, 2024
79
-50
43
உங்களை மீட் பண்ணது ரொம்ப சந்தோஷம், நீங்க சொன்னா போல என்ன பேசினோம் எதுவும் நியாபகம் இல்லை, ஆனால் இனிய நினைவுகள். டைம் போனதே தெரியல. ஒரு லேடி தானே வந்து உங்களை எல்லாம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்லிட்டு போனாங்க
 

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
உங்களை மீட் பண்ணது ரொம்ப சந்தோஷம், நீங்க சொன்னா போல என்ன பேசினோம் எதுவும் நியாபகம் இல்லை, ஆனால் இனிய நினைவுகள். டைம் போனதே தெரியல. ஒரு லேடி தானே வந்து உங்களை எல்லாம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்லிட்டு போனாங்க
Yes yes!! Vanthu sollitu ponanga. Athe nan marantuten ')
 

sugi

New member
Aug 10, 2024
1
0
3
அழகான பயணம் வநிஷா... நான் try பண்ணினேன் உங்களைப் பார்க்க... பசங்க exam time னால முடியலை... superb trip.....
 
  • Like
Reactions: VanishaAdmin

vetrij

New member
Aug 4, 2024
1
0
3
மறக்க முடியாத மாலை நாவலாசிரியர் வநிஷாவுடன் நாங்கள் கழித்த அந்த மாலை. வநிஷா அவர்களின் நாவல் கதாபாத்திரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். முக்கியமாக மேரி ஜான் ஞாபகப்படுத்திய சூரியகாந்தி பூ பற்றி பேசினோம். என்னோட ஃபேவரிட் ஆத்தர் வநிஷா கூட நேரம் செலவழித்தது என்றும் மறக்க முடியாது. அத்துடன் புதிய தோழிகள் எனக்கு கிடைத்தார்கள். வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் தங்கமலர் என்னுடைய ஃபேவரிட். அவங்களையும் சந்தித்தேன். ரொம்ப மகிழ்ச்சி.
 

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
அழகான பயணம் வநிஷா... நான் try பண்ணினேன் உங்களைப் பார்க்க... பசங்க exam time னால முடியலை... superb trip.....
Thanks dear :)
 

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
மறக்க முடியாத மாலை நாவலாசிரியர் வநிஷாவுடன் நாங்கள் கழித்த அந்த மாலை. வநிஷா அவர்களின் நாவல் கதாபாத்திரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். முக்கியமாக மேரி ஜான் ஞாபகப்படுத்திய சூரியகாந்தி பூ பற்றி பேசினோம். என்னோட ஃபேவரிட் ஆத்தர் வநிஷா கூட நேரம் செலவழித்தது என்றும் மறக்க முடியாது. அத்துடன் புதிய தோழிகள் எனக்கு கிடைத்தார்கள். வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் தங்கமலர் என்னுடைய ஃபேவரிட். அவங்களையும் சந்தித்தேன். ரொம்ப மகிழ்ச்சி.
Ungala meet pannathule enakum romba santosham dear :) such a sweet person you are :)