Day 12--(23/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,677
93
வணக்கம் டியர்ஸ்,

இன்னும் சில நாட்கள்தான் பாக்கி லீவ் முடிய! இன்னிக்கு டே 12.

ட்ரேன்ல ஏறிட்டோம்னு போன பதிவில சொன்னேன். அடுத்த நாள் விடிகாலை சுமார் 3க்கு திருநெல்வேலி ஸ்டேஷன் இறங்கனோம் நாங்க ரெண்டு பேரும். தங்கம் ஏற்கனவே சொல்லி இருந்தாங்க, ஸ்டேஷன் வெய்ட்டிங் ரூம்ல போய் முதல்ல பார்க்கலாம்! அங்க பிடிக்கலனா ஒரு ஹோட்டல்ல போய் ரிஃப்ரேஷ் ஆகிக்கலாம்னு! நான் பழைய வாழ்க்கைய நினைச்சுப் பார்த்தேன்! வளர்ந்து வரும் பருவத்துலலாம் எஸ்டேட்ல பொது டாய்லட் யூஸ் பண்ணி வந்தவங்க நாங்க! படிப்படியா முன்னேறி இப்போ அபார்ட்மெண்ட்ல இருக்கறதுனால பழச மறந்துடக் கூடாதுல்ல! மனசுல இதெல்லாம்தான் ஓடுது வேய்ட்டிங் ரூம் போகறப்போ. கட்டணம் எவ்ளோன்னு மறந்திடுச்சு. சுத்தமாத்தான் இருந்தது.

அந்த விடிகாலைல நிறைய பேர்தான் உக்காந்தபடியே தூங்கிட்டு இருந்தாங்க அங்க. முதல்ல நான் போய் சிலு சிலு தண்ணில குளிச்சு கிளம்பி வந்துட்டேன். ரமணிசந்திரனோட தேவி கதைல, கதாநாயகியும் அவ தங்கையும் இப்படித்தான் வெய்ட்டிங் ரூம்ல சேலை மாத்திப்பாங்க! அத இமேஜீன் பண்ணவே முடியல அப்போ! இப்போ, ஓ நம்மள மாதிரித்தான் மாத்திருப்பாங்கன்னு தோணுச்சு. பதிவர் தன்னை ரமணிசந்திரன் நாயகியாக உணர்ந்த தருணம் அது.

View attachment 272
இதான் அந்த வெய்ட்டிங் ரூம்!! தூக்கக் கலக்கம் இன்னும் கண்ணுல நிக்கிது!!

View attachment 273
ஸ்டேஷன் வெளிய இது!

ட்ரைவர் சுமார் நாலுக்கு வந்தாரு! காலைலயே அவர கஷ்டப்படுத்த வேணாம்னுதான் நாலு மணிக்கு சொன்னாங்க தங்கமலர். அவர் வந்ததும் ஸ்ட்ரேய்ட்டா நெல்லையப்பர் கோயில் தெருவுக்கு போயாச்சு. அஞ்சு மணிக்கு மேலத்தானே காலைல கோயில் திறப்பாங்க! சோ கார்லயே கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணோம்!

சரி வா கோயில் வாசல்ல வேய்ட் பண்ணலாம்னு கூப்டாங்க தங்கம். கண்ணு சொறுகுது! இப்படியே உக்காந்தா சரி வராதுன்னு போய்ட்டோம்! அங்க அஞ்சாறு பேரு எங்களுக்கு முன்னாடியே உக்காந்திருக்காங்க! எவ்ளோ பக்தி பாருங்களேன்! வேய்ட் பண்ணற நேரத்துக்கு வெளி வாசல் சுவரில இருந்த சிற்பங்கள பார்க்க ஆரம்பிச்சேன்! ஆத்தி!!! பாதிக்கும் மேல பலான போஸ்ல இருக்கு! அங்க ஆம்பளைங்கலாம் சுத்தி இருந்தாங்க! இல்லைன்னா நான் நல்லா உத்துப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிருப்பேன்!!!!!

எங்கள கடந்து போன ஓர் அம்மா, என்னைப் பார்த்து பின்னாடி வா, பின்னாடி வான்னு கூப்பிட்டாங்க! இவங்க எதுக்குடா நம்மள கூப்பிடறாங்கன்னு பயந்துட்டு போகல நானு!(ஆக்சுவலி பின்னாடித்தான் காந்திமதி அம்மனோட வாசல் இருக்கு! காலைல அங்கத்தான் பூஜை ஸ்டார்ட் ஆகுது). நானும் சுத்தி கவனிச்சிட்டே இருந்தேன். காய்கறிலாம்வந்து இறங்குச்சு! உள்ள சமைப்பாங்களோன்னு யோசனை ஓடுது எனக்கு. அதையெல்லாம் அப்பவே கொஞ்சம் பெருசா வெட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

பிறகு கோயில் வாசல் திறந்துட்டாங்க! எல்லாரும் குடுகுடுன்னு ஓடறாங்க! நாங்களும் பின்னாடி போறோம்! பாதி வழில கோசாலை இருக்கு கோயில் உள்ளயே! ஒருத்தர் எங்க ரெண்டு பேரையும் வாங்கம்மான்னு கூப்ட்டாரு! என்னென்னு போய் கேட்டோம்! கையில் காய்கறிகள குடுத்து மாடுகளுக்குப் போட சொன்னாரு! அட அப்படின்னு, போய் அதை செஞ்சோம்! செம்ம ஹேப்பி நாங்க!

View attachment 274
கோயில் உள்ள இந்த ஒரு படம் மட்டும்தான் எடுத்தோம்! ரூல்ஸ மதிக்கனும்ல!!!!

அதன் பிறகு எல்லோரும் வேகமா போன இடத்துக்கு நாங்களும் போனோம்! அது காந்திமதி அம்மன் சந்நிதி! கொஞ்ச நேரத்துல அவ்ளோ கூட்டம் சேர்ந்திடுச்சு! உங்காருங்க, உக்காருங்கன்னு சிலர் எங்க கிட்ட சொன்னாங்க! நாங்களும் என்ன ஏதுனே தெரியாம உக்காந்துட்டோம். இடம் விடுங்க, சில நிமிஷம்தான் காட்டுவாங்க! அப்படின்னு சவுண்டு வேற என் பின்னாடி இருந்து! என்னத்தடா எல்லாரும் இவ்ளோ ஆர்வமா பார்க்கப் போறாங்கன்னு நானும் எக்ஸைட்டட்! இடிக்கறாங்க வேற கீழ உக்காந்திருக்க என்னை! ஒருத்தர், ஏம்மா நீங்க தினமும் பார்க்கறதுதானே! வெளியூர்க்காரங்களுக்கு இடம் கொடுங்கம்மா! பார்க்கட்டும்னு எங்களுக்கு சப்போர்ட்! எப்படி நாங்க வெளியூர்னு தெரிஞ்சிருக்கும்???

அப்புறம் திரை திறந்தது! எல்லாரும் பாட்டுப் பாட ஆரம்பிச்சிட்டாங்க! உற்சவர் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டி திருப்பள்ளி எழுச்சி செய்யறாங்கன்னு அப்போத்தான் தெரியுது எனக்கு! இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை! அவ்ளோ லைவ்லியான மோமண்ட்! கண்ணு கலங்கிடுச்சு! பிறகு உற்சவர் அம்மன வெளிய வச்சாங்க! எல்லாரும் அவங்கள ஒரு சுத்து வந்தாங்க! நாங்களும் வந்தோம்! பிறகு அவங்கள தூக்கிக்கிட்டு பாட்டு பாடிட்டே நடக்க ஆரம்பிச்சாங்க! நாங்களும் பின்னாடியே போனோம்!

காந்திமதி அம்மன கொண்டு வந்துதான் நெல்லையப்பர எழுப்பறாங்க! அது ஒரு சடங்கா நடக்குது! அவ்ளோ ஆனந்தம் எனக்கு! நெல்லையப்பரையும் அழகா தரிசிச்சாச்சு! சந்நிதானத்த விட்டு வெளிய வந்து தூண்ல தட்டுனா மியூசிக் வருமே, அது எங்கன்னு தேடனோம்! திருநெல்வேலி மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க! வெளி ஆளுங்கன்னு அவ்ளோ விட்டுக் குடுத்தாங்க! அவ்ளோ விளக்கம் சொன்னாங்க! நல்லா கைட் பண்ணாங்க! ஒருத்தர் அந்த தூண காட்டிக் குடுத்தாரு. சில்லறை காசு வச்சுத் தட்டிக் காட்டனாரு!

இன்னொருத்தர் வந்து கஜபூஜைக்குப் போங்க, போங்கன்னு சொல்லவும், அது என்ன பூஜைன்னு தெரியலையேன்னு மறுபடி கூட்டம் பின்னாடி போ! அங்க நம்ம கோயில் யானை கம்பீரமா நிக்கறாரு! அவருக்கு செய்யற பூஜைதான் கஜபூஜையாம்! அதையும் கண் குளிர பார்த்தோம்! கடைசியா கோமாதா பூஜை நடந்தது. அது முடிஞ்சதும் சூடா பால் மற்றும் புளி சாதமும் குடுத்தாங்க! செம்ம டேஸ்ட்டி! நின்னபடியே சாப்பிட்டுட்டு, மறுபடி மியூசிக் தூண் கிட்ட வந்தோம். நாங்க சில்லறைல தட்டறத பார்த்துட்டு பூசாரி ஒருத்தர் அப்படி செய்யாதீங்க, காயம் படும்னு சொல்லி அவரே தட்டிக் காட்டுனாரு! பியானோவும், ஓர்கனும் சேர்ந்து வாசிச்ச மாதிரி ஒரு சவுண்டு!!வாரே வா!!!!!

அத முடிச்சுட்டு கோயில சும்மா சுத்தி வந்தோம்! அப்போத்தான் தாமிர சபை பத்தி ஒருத்தர் சொன்னாரு! அதையும் போய் பார்த்துட்டு வந்தோம். ஒரு ஏழு, ஏழரை மணி போல கோயில விட்டு திருப்தியா வெளிய வந்தோம்!

View attachment 275

View attachment 276

View attachment 277
கோயில் இருக்கற தெருவுல இந்தப் பெரிய தேர் இருக்கு! அவ்ளோ அழகு தெரியுமா!!!

View attachment 278

View attachment 279
காலை நேரத்து திருநெல்வேலி.

View attachment 280

சரி, கடைகள்லாம் இன்னும் திறக்கலியேன்னு குறுக்குத்துறை முருகன் கோயிலுக்குப் போயாச்சு! அந்தக் கோயில் வெள்ளம் வந்தப்போ ரொம்ப பாதிச்சிருச்சாம். இப்போ திருப்பணிகள் போய்கிட்டு இருக்கு.

View attachment 281
கோயில சுத்தி இருக்கற இந்த ஆற்றங்கரைய மக்கள் குளிக்க துவைக்கன்னு உபயோகிக்கறாங்க! நாங்க முருகன கும்பிட்டுட்டு, தண்ணில கால நனைச்சிட்டு, கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துட்டு கிளம்பிட்டோம்!
 

Author: VanishaAdmin
Article Title: Day 12--(23/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,677
93
காலை உணவு லோக்கல் சரவணபவன்ல.

View attachment 282
பதிவர் பக்திமயமா இட்லி சாப்பிட்டத் தருணம்..அப்படியே ஒரு டீ!!!!

View attachment 283

பிறகு அல்வா வேட்டைத் தொடங்கிடுச்சு! திருநெல்வேலிலயும் சில ரீடர்ஸ பார்க்கறதா இருந்தது! எதிர்பாராத விஷயங்களினால கேன்சல் ஆகிடுச்சு! கௌரி மட்டும் அக்கா நான் பார்க்கனும்கான்னு மேசேஜ் போட்டுட்டே இருந்தாங்க! இங்க சீக்கிரம் முடிஞ்சதுனால, அவங்க வீட்டுக்கே போயிடலாம்னு ப்ளான் பண்ணியாச்சு. அல்வா வாங்கறப்போ, நான் தங்கமலர் கிட்ட கௌரிக்கு அல்வா வாங்கிக்கலாம்னு சொன்னேன்! நீ திருநெல்வேலிக்கே அல்வா குடுப்பியான்னு கேட்டுட்டாங்க! அதுவும் நியாயம்தானே! அதான் ஆப்பிள் வாங்கியாச்சு! அந்தக் கடைல போய், ஆப்பிள் வாங்கனத்துக்கு எனக்கு மாதுளம் பழம் ஒன்னு கிப்ட்டா குடுங்கன்னு கேட்டு காலைலே ஒரே காமெடி நானு!

View attachment 284

அல்வா வாங்கிட்டு கிளம்பியாச்சு கௌரி வீட்டுக்கு! செம்ம வரவேற்பு அங்க! செம்மையான ஒரு டீ கலக்கிக் குடுத்தாங்க! கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு, அவங்க வாங்கி வச்சிருந்த புக்குக்கு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்துட்டு அவங்களோட அன்பளிப்புலயும். அன்பெனும் மழையிலும் சுகமா நனைஞ்சி கிளம்பியாச்சு.

அடுத்த ஸ்டாப் முக்கூடல்!!! தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு, கடநா நதிகள் இங்க கலக்கறதுனால இந்த இடத்துக்குப் பேரு முக்கூடல். இங்கயும் துவைத்தல் குளித்தல்னு நடக்குது! நம்மாளு தண்ணிய கண்டதும் இறங்கிட்டாங்க!

View attachment 285
மொட்டை வெயில்! நான் கால மட்டும் நனைச்சிக்கிட்டேன்!

இங்க முடிச்சிட்டு போகிற வழில ஒரு கடைல நிறுத்தி செருப்பு வாங்கனோம்! இவ்ளோ நடந்தா என்னத்துக்கு ஆகிறது!!! ரெண்டு பேரோட செருப்பும் புட்டுக்கிச்சி! ட்ரைவர் கூடவே வந்து விலைப் பார்த்துப் பேசி வாங்கித் தந்தாரு.

தங்கமலருக்கு திருநெல்வேலித்தான் பூர்வீகம்! அவங்க சொந்தம்லாம் இங்கத்தான் இருக்காங்க! அப்படி ஒருத்தவங்களோட தோட்டத்துக்குப் போனோம் பம்புசெட்ல குளிக்க! நம்ம கதைகள்ல அடிக்கடி இந்தக் குளியல் வருமே! சோ அத நேர்ல பார்க்கனும்னு எனக்கு ஆசை!!!

View attachment 286
தென்னை, பலா, மாங்கான்னு பயிர் வச்சிருக்காங்க.

View attachment 287
நடுவுல ஒரு கிணறு.


View attachment 289

தோட்டத்தைப் பார்த்துக்கிறவரு இளநிலாம் வெட்டிக் குடுத்தாரு! அந்த கிளைமெட்கு செம்மையா இருந்தது.

View attachment 291
இதுவும் ஒரு வகை சோளமாம்! அங்க தோட்டத்துல இருந்தது! அதை தேய்ச்சு உமி நீக்கிக் குடுத்தாங்க தங்கம். பால் மாதிரி இருந்தது. இங்க நல்லா இளைப்பாறிட்டு தங்கத்தோட மாமாஸ் மற்றும் சித்தி இருக்கற ஊருக்குப் போனோம்! ஊர் பேர் நல்லூர்!

அவங்க மாமா வீட்டுலத்தான் எங்களுக்கு லன்ச்! சாம்பார், கோஸ் பொரியல், இன்னும் என்னென்னவோ இருந்தது! சாப்பிடற முன்ன அவங்க அத்தை பதனீர் கொண்டு வந்து தந்தாங்க! ஜில்லுன்னு செம்மயாஇருந்தது! இதுதான் நான் முதல் தடவை பதனீர் குடிக்கறேன்! வாவ் ஃபீல்தான். இந்த மாமா ஆலடிப்பட்டில ஜவுளி கடை ஐ மீன் கடல் வச்சிருக்காரு! மாமா அத்தை அவங்க வீட்டுக் குட்டிப் பேத்தி கூட பேசிருந்துட்டு, இன்னொரு மாமா வீட்டுக்குப் போனோம்! அவங்களோடயும் கொஞ்ச நேரம் அளவளாவல்! இவங்க ஊர் ஸ்லாங்கும் எனக்கு ரொம்பப் புடிச்சது! கொஞ்சம் இழுத்தாப்பல அழகா பேசறாங்க! வாரியல், கிழக்கோடி கோயில் இருக்கும், தெற்கோடி ஆறு ஓடும்னு கேக்கவே இனிமை!! ரொம்ப வெள்ளந்தியான மக்கள். நான் மலேசியால இருந்து வந்திருக்கேன்னதும், தமிழ் பேசறீங்களேன்னு ஆச்சரியப்படறாங்க!

View attachment 292
ஊருக்கு நடுவுல ஒரு சர்ச் இருக்கு! நான் சர்ச் போய் பார்க்கனும்னு சொல்லி இருந்தேன்! சோ உள்ள கூப்டு போனாங்க தங்கம். சர்ச் பக்கத்துலயே அவங்களோட சித்தி வீடும் இருக்கு.

View attachment 293
இப்படி உக்காந்து பார்க்கனும்னு எனக்கு ஆசை! அதும் நிறைவேறிடுச்சு.
 

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,677
93
அடுத்து எங்க??? ஷாப்பிங்தான்! தங்கமலரோட மாமா கடைலயே ஷாப்பிங் பண்ணிடலாம்னுதான் சென்னைல நான் அவ்ளவா ஒன்னும் வாங்கல! கடை நார்மலா இருக்கும்னு போன எனக்கு பேரதிர்ச்சி! நாலு மாடி பெரிய கட்டடம் அது! அவ்ளோ ஆள் ஜேஜேன்னு! கடை பேரு NT Theysingh Rajan Textiles and Readymades. சேலை, குழந்தைகளுக்கான உடைகள், ஆண்களுக்குன்னு தனித்தனி மாடி! ஒரு ரெண்டு ஹவர்ல மொத்தம் 10 பேருக்கு ஷாப்பிங் பண்ணேன்னா பாருங்க! சேலையும் சேர்த்து!!!!!

View attachment 294
சேலை நடுவே ஒரு சோலை(நாந்தான்)!!!!

மாமாவே வந்து எனக்குச் சேலை எடுத்துப் போட்டு காட்டனாரு! பிறகென்ன செம்ம கவனிப்பு அக்கா, அக்கான்னு :) இருட்டிருச்சு அங்கயே! முடிச்சதும் காசியாபுரம்ல தங்கத்தோட தாத்தா வீட்டுக்குப் போனோம்! பழைய காலத்து கட்டிடம், கொஞ்சம் மாற்றத்தோட அழகா இருந்தது. உட்கார நாற்காலி இருந்தாலும் இன்னும் குறுங்கட்டில்லாம் அங்க வச்சிருக்காங்க.

தென், கிளம்பிட்டோம் தென்காசிக்கு. ஆன் தி வேல மலரோட சித்தி வீட்டுக்குப் போனோம்! அங்க சிகப்பு கொய்யா கிடைச்சது! கொஞ்ச நேரம் அவங்க கூடவும் டைம் ஸ்பேண்ட் பண்ணிட்டு, ஹோட்டல் நோக்கி பயணம்.

டின்னர் தென்காசி மதுரம்ல மினி இட்லி பேக் பண்ணிக்கிட்டோம். நாங்க ஸ்டே பண்ணது JiJis Castle னு ஒரு ரிசார்ட்! எண்ட்ரன்ஸ்ல முயல் குட்டிலாம் வளர்க்கறாங்க! ரொம்ப பீஸ்ஃபுலா இருந்தது அந்த இடம். மேல ரூமுக்குப் போய் வாங்கிட்டு வந்த டின்னர சாப்பிட்டுட்டு தூங்க போகல நாங்க! ஏற்கனவே லேட் நைட்தான் செக் இன் செஞ்சோம்! ஆனாலும் அந்த அழகு எங்கள இழுக்குது! கீழ இறங்கி ஒரு வால்க் போனோம்! பக்கத்துல எங்கயோ லைட் மியூசிக் கான்சேர்ட் போல! நான் இப்படி எதாச்சும் லைட் மியூசிக்குக்கு கூட்டிப் போக சொல்லிக் கேட்டேன்! இல்லைனா படம் பார்க்க போகலாம்னு! அந்த சூழ்நிலை எப்படி இருக்கும்னு அப்செர்வ் பண்ண ஆசை! ஆடி மாசமா ஆகிட்டதனால கல்யாண லைட் மியூசிக் கூட வழியில்லை! படம்னா இந்தியன் தாத்தாத்தான் ரிலிஸ் ஆகிருக்காரு! அந்தக் கொடுமைய யார் போய் பார்க்க! கடவுள் கிருபைல தூரத்துல இருந்து கேட்ட மியூசிக்க ரசிச்சிக்கிட்டே கொஞ்ச நேரம் உக்காந்திருந்தோம்.

View attachment 296


View attachment 295
View attachment 297
முகத்த பாருங்க எவ்ளோ டயர்ட்னு!

பிறகு ரூமுக்குப் போயாச்சு! கவுந்தடிச்சு படுக்காம, வாங்கிட்டு வந்த துணிமணில இருந்த ப்ரைஸ் டேக்லாம் கழட்டி வேற மாதிரி மடிச்சு வைக்க ஆரம்பிச்சோம்! இப்படி புதுசா கொண்டு போனா செக்கிங்ல பிரச்சனை வர கூடும்! அதான் இந்த வேலை. ,மை மண்ட் வாய்ஸ்...ஒரு ஆளுக்கு ஷாப்பிங் பண்ணாலே கண்ண கட்டும்! என்னை இப்படி ஒரு ஊருக்கே பண்ண வச்சிட்டீங்களே ஹவுஸ் ஓனர்!!!!!! இங்க ஒன்னு சொல்லப் பிரியப்படறேன்!!!ஹவுஸ் ஓனர் காசுல அவருக்கு ஒன்னுமே வாங்கல! பிம்பிலிக்கா பிலாப்பி!!!!!

இதெல்லாம் முடிச்சிட்டு நாங்க தூங்கவே கிட்டத்தட்ட மணி 1 ஆகிடுச்சு!!!

அடுத்த பதிவில சந்திக்கலாம்!!!

தொடரும்....
 

kothai suresh

Active member
Aug 3, 2024
79
-50
43
அருமையான ஊர் திருநெல்வேலி, என் மருமக ஊர் அதான், ஒருமுறையாவது ஆற அமர இருந்து ரசிச்சிட்டு வரணும்னு நினைப்பேன், எப்போதும் அவசரம் தான். 5 வகை நிலமும் அங்கேதான் இருக்கு, ஒருமுறையாவது பார்க்கணும், பார்ப்போம் நடக்குதான்னு 🙏🙏🙏
 

saroja

Active member
Aug 5, 2024
77
-49
43
அருமை
திருநெல்வேலி நெல்லையப்பர் இங்க போகும் போது
ரமணிசந்திரன் அம்மா ஞாபகம் தான் எனக்கும்
தங்கம் ரொம்ப அழகா
எல்லா இடமும் காமிச்சதுக்கு
மிகப்பெரும் 🙏
♥️🌹🌹🌹♥️