Day 10--(21/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
வணக்கம் டியர்ஸ்,

பத்தாம் நாளுக்குள்ள போகலாம் வாங்க!

அன்றைக்கு காலைல ரொம்ப மெதுவாத்தான் எழுந்தேன் நான். குளிச்சிட்டு வந்ததும் பார்த்தா செம்மையான ப்ரேக்பஸ்ட்.

View attachment 229சப்பாத்தி, பாலப்பம். ரெண்டுலயும் ஒன்னு ஒன்னு சாப்பிட்டேன். தங்கத்துக்கு என் மேல கொஞ்சம் கடுப்பு! சரியா சாப்பிட மாட்டறேன்னு! ஃபூடீன்னு நீ ஊர ஏமாத்திட்டு இருக்கன்னு. நான் சொல்வேன் ஃபூடினா நெறைய சாப்பிடறவங்க இல்ல! கொஞ்சமா சாப்பிட்டாலும் எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணி பார்க்கறவங்கன்னு.

சாப்பிட்டதும் மூணு பேரும் கிளம்பிட்டோம்! யாரு அந்த மூணாவது ஆள்னு கேக்கறீங்களா! நம்ம டாக்டர்தான் அது. அன்றைக்கு பிளான் ஆளியார் டேம், அப்புறம் வால்பாறை. நான் தமிழ் படங்கள்ல அருவி மாதிரி ஓடை இருக்கும், அது மேல நடந்துட்டே டூயட் பாடுவாங்களே, அங்க போகனும்னு கேட்டிருந்தேன். சரியான மழை அந்தப் பக்கம்லாம்னு சொல்லிட்டாங்க.

View attachment 230

View attachment 231

இந்த ஆளியார் டேமுக்கு உள்ள போகனும்னா டிக்கட் எடுத்துட்டுத்தான் போகனும். அன்னைக்குன்னு சரியான கூட்டம். பஸ் பஸா ஆள் வந்திருந்தாங்க. வெளிய மீன் சாப்பாடுலாம் விக்கறாங்க! நாங்க ட்ரை பண்ணல. ரொம்ப அழகா கீழ பார்க் மேய்ண்டேய்ன் பண்ணிருக்காங்க! அது நடுவுல தண்ணி ஓடற சின்ன கால்வாய். உள்ள நடந்து கொஞ்ச தூரம் போனதும், படிக்கட்டு!

நான் தங்கமலர பார்க்கறேன்! என்னதிது படி ஏறனும்னு சொல்லவே இல்லைன்னு நான் மலைக்க, சொன்னா வந்திருப்பியான்னு கேட்டு சிரிக்கறாங்க! கால் வலியோட ஏறு!!!!!!

View attachment 235

View attachment 233

View attachment 236
ஏறுனது வொர்த்துதான்!! என்ன ஓர் அழகான வியூ!!!! தண்ணீரும் அது பின்னாடி மலையும், வானத்து மேகமும் கண்ணைக் கட்டிப் போட்டிருச்சு.

இன்னும் கொஞ்சம் உள்ள நடந்தா ஆளியார் இல்லம் வருது. அங்கத்தான் காதலிக்க நேரமில்லை பட ஷீட்டிங் நடந்தது.

View attachment 234

View attachment 237
இத பார்த்தா விஷ்வநாதன் வேலை வேணும் பாட்டு ஞாபகம் வருதா?

View attachment 238
இங்க உள்ள விடமாட்றாங்க யாரையும்! வெளிய இருந்துதான் பார்க்க முடியும்!

கொஞ்ச நேரம் அங்க உட்கார்ந்து இயற்கைய ரசிச்சுட்டு கிளம்பிட்டோம்! பார்க் விட்டு வெளியாகி இளநீர் குடிக்கப் போனோம்! செவ்விளநீர்.

View attachment 239
 

Author: VanishaAdmin
Article Title: Day 10--(21/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
அடுத்து ஸ்ட்ரேய்ட்டா வால்பாறை!! அதான் ஏற்கனவே ஊட்டி போய்ட்டீங்களே, பிறகு ஏன் வால்பாறைன்னு கேக்கறீங்களா? எனக்கு வால்பாறை வட்டப்பாறை(சுபா பாடினது) பாட்டு ரொம்ப இஷ்டம். அதுக்காகவே போனேன்னு வேணும்னா சொல்லலாம்.


டீ லவரான எனக்குத் தேயிலைத் தோட்டத்த பார்த்தா எப்படி இருக்கும்னு உங்களால புரிஞ்சுக்க முடியுதா?

View attachment 240

அடிக்கற காத்துக்கு அம்மியே பறந்துடும் அங்க! என் முடி என்ன பாடு பட்டிருக்கும்னு சொல்லவும் வேணுமா?

எப்பவும் நம்ம டாக்டர் ஓர் இடத்துல நிறுத்தி டீ குடிச்சிட்டு பஜ்ஜி சாப்பிடுவாங்களாம்! அங்க கார் நின்னது!

View attachment 241

View attachment 242
அங்க வாங்கிக் குடிச்ச டீ!! செம்ம டேஸ்ட்டி!!!! பஜ்ஜி நான் கொஞ்சமா சாப்பிட்டுப் பார்த்தேன்! எண்ணெய் ஐட்டம்னா கொஞ்சம் பயம்தான்! அதுவும் நல்லா இருந்தது.

View attachment 243
அடுப்ப பார்த்தீங்கல்ல!!!

View attachment 244
கூழாங்கல் தெரியுமாம் இங்க! நாங்க போனப்போ தண்ணி நெறைஞ்சிருந்தது. சோ ஒன்னும் கண்ணுக்குத் தெரியல. இந்த இடத்து கிட்ட சில கடைகள் இருக்கு! அங்க கொஞ்ச நேரம் உக்காந்து இன்னொரு டீ! கூடவே மேகி!!!

View attachment 245
செம்ம வியூல்ல!!

View attachment 246
அங்கயும் ஒரு டேம் இருந்தது. கீழ பார்க்கும் இருந்தது.

பிறகுதான் லஞ்ச் சாப்பிட ஹோட்டல் தேடனோம்! அப்பவே மணி கிட்டத்தட்ட நாலாகிடுச்சு! இவங்க ரெகுலரா சாப்பிடற கடை சாப்பாடு முடிஞ்சு மூட ஆரம்பிச்சிட்டாங்க! அவங்கட்ட கெஞ்சிக் கேட்டு, டாய்லெட் யூஸ் பண்ணிட்டு வந்தோம்.

அந்த நாள் நொறுக்குத் தீனிலயும் டீயுலயுமே போய்டுச்சு! பிறகு மெல்ல மலை இறங்கினோம்!!! கடைல எங்கயும் சாப்பிட நிறுத்தல! டாக்டர் வீட்டுக்கே போயாச்சு! நாங்க குளிச்சிட்டு வந்ததும், டாக்டர் அம்மா செஞ்சிக் குடுத்த அரிசிம்பருப்பு சாதத்த ஒரு கை பார்த்தாச்சு! நெஜமா சொல்றேன், அவ்ளோ நல்லா இருந்தது. இதுதான் நான் முதன் முதலா சாப்பிடற அரிசிம்பருப்பு சாதம்!!!!!

View attachment 247

வயிறு நிறைய சாப்பிட்டுட்டு, கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு, பாப்பா கூட விளையாடிட்டு படுத்தாச்சு!!

மறுநாள் பெரிய லிஸ்ட்டே இருக்கு!!!

தொடரும்...