வணக்கம் டியர்ஸ்,
எப்பொழுதுமே ஒரு பயணம் போனா, சில மாசத்துலயோ வருஷத்துலயோ நடந்த நிகழ்வுகள மறந்து போய்டுவோம். சிலது மட்டும்தான் மனசுல நெறஞ்சி நிக்கும். அப்படி மறந்திடக் கூடாதுன்னுதான் இந்த கட்டுரை..இல்ல கதை..இல்ல கட்டுரையான கதை அப்படின்னு வச்சிக்கலாமா??? அபிராமி.... அபிராமி!!!!!
சீரடி சாய்பாபா!!! அவரைப் பார்க்கத்தான் இந்த ட்ரிப்பே! என் கூடவே ஆரம்பத்துல இருந்து பயணிச்சவங்களுத் தெரிஞ்சிருக்கும், எங்க பாப்பா வந்து பொறக்க பத்து வருஷம் ஆனதுன்னு. நான் வேலை செஞ்ச பேங்க் பக்கத்துலத்தான் அவரோட செண்டர் இருந்தது. அடிக்கடி போய் வேண்டிப்பேன். அப்படி பிறந்தவத்தான் பாப்பா! அவளைக் கூட்டிட்டு சீரடி போகனும்னு வேண்டிருந்தேன். எந்தக் கடவுளயோ, குருவையோ நாம பார்க்கப் போகனும்னு நெனைச்சா அதுக்கு அவங்க மனசு வைக்கனும்னு சொல்வாங்க! எங்க விஷயத்துல பன்னிரெண்டு வருசம் எடுத்திருச்சு அவர் மனசு வைக்க.
ஹவுஸ் ஓனர சம்மதிக்க வைக்கறதே பெரிய டாஸ்க்கா இருந்துச்சு! அதுல இவளோட ஸ்கூல் லீவ் வேற பார்க்கனும். வேற கோயிலுக்கு எல்லாம் போகல்லாம்னு ப்ளான் போட்டா, என்ன இது டெம்பிள் ரன்னா? அப்படி இப்படின்னு ஆரம்பிக்கறப்போவே பல ஆர்கியூமேண்ட்ஸ். இந்த லட்சணத்துல நான் இக்ஸ்ட்ரா ஓன் வீக் லீவ் வேற கேட்டேன்! அவ்வ்வ்வ்வ்! அப்படி இப்படின்னு ஒரு வழியா சரியாகி டிக்கேட் போட்டாச்சு! அதுக்குப் பிறகு விசா ப்ராசஸ், கொண்டு போக லக்கேஜ், மருந்து மாத்திரை, இன்ஸ்டண்ட் உணவு வகைகள், துணிமணின்னு மூனு பேருக்கும் பார்த்து பார்த்து அலைஞ்சு திரிஞ்சு எடுத்து வச்சதுல பெண்டு நிமிர்ந்திருச்சு.
"நீங்களும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்"
"நாள் இருக்கு! ஏன் ஸ்ட்ரேஸாகி என்னையும் ஸ்ட்ரேஸ் பண்ணுற"ன்னு ஜண்டை வேற!!!!!
View attachment 9
எடை போடுற டிவைஸ்
View attachment 10
எங்க ரூமோட நிலமை
View attachment 12
பொட்டிய கட்டியாச்சு..
வெள்ளிகிழமை காலைல 8.45க்கு MAS ஃளைட் டூ மும்பை. ஏர் ஆசியால நேரடி விமானம் இல்ல! சோ இதையே எடுத்தாச்சு. 5 ஹவர் பயணம். காலைல நாலுக்கு எழுந்து கிளம்பி, ட்ராவல்ல சொன்ன கார்ல ஏறியாச்சி. கே.எல்.ஏ விமான நிலையத்துல அன்னிக்குன்னு பார்த்து ஓவர் கியூ!! அடிச்சுப் புடிச்சு லக்கேஜ் ட்ரோப் போட்டோம்! பிறகு ஏரோப்ளேன் ஏறியாச்சி! மனுஷனுக்கு செம்ம பசி! டிக்கேட் புக் பண்றப்பவே சாப்பாடு இருக்குன்னு போட்ருந்தாங்க! இப்போ குடுப்பான், தோ குடுப்பான்னு மணி 11.30 ஆச்சி! பசி மயக்கம் வேற, BP மருந்து வேற போடல! ஆடி அசைஞ்சு சாப்பாடு வந்திச்சு! பசில சாப்பாடு செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு. எங்கயோ ஒரு ஆர்டிக்கல்ல படிச்சிருக்கேன், ஆகாயத்துல எது சாப்பிட்டாலும் ருசியா இருக்கும்னு! நெஜம்தான் போல. பை தி வே, கோழி வச்சு நாசி லெமக்தான் குடுத்தான். சாப்பிட்டு தண்ணி கிடைக்காம ஜீஸ்ல மருந்து போட்டாச்சு! பிறகு என்ன, தூங்குடா கைப்புள்ளத்தான்.
ஃளைட் டிலேயாகி மும்பை சேர்ந்தப்போ லோக்கல் டைம் கிட்டத்தட்ட மூனாகிடுச்சு. சாப்பிட்ட காலை உணவு கரைஞ்சும் போச்சு! View attachment 13
நாங்க நல்லவங்க வந்திருக்கோம்னு, வானம் பொத்துக்கிட்டு வரவேற்குது! ஆமா!! மும்பைல செம்ம மழை!!!! இமிகிரேஷன் ப்ராசஸ்லாம் முடிச்சிட்டு வெளிய வரவும் லேட்டாகிடுச்சு! நல்ல வேள அங்க ஆங்கிலத்துல பேசனாங்க! இல்லைன்னா ஏக் மார் தோ துக்கடாவ வச்சிட்டு நான் என்ன பண்ண!!!!
ஏற்கனவே தமிழ் தெரிஞ்ச ட்ரைவர அரேஞ் பண்ணிருந்தோம்! ஆரம்பிச்சது எங்க பயணம். முதல்ல லஞ்ச்! மும்பை வந்துட்டு பாவ் பஜ்ஜி சாப்பிடலனா எப்படி???
View attachment 16
அன்னைக்கான ப்ளான் ஓன் ஆஃப் த ஜோதிர்லிங்கமான திரியம்பகேஸ்வரர் கோயில பார்த்துட்டு, கோதாவரி ஆறு, சீதா குகை பார்க்கறதுன்னு நெறைய இருந்தது. ஆனா மழையார் வச்சி செஞ்சிட்டாரு! போற வழி எல்லாம் ட்ராபிக் ஜேம்! காரே நகரல! பல மணி நேரம் கார்லயே இருந்தோம்! பாப்பா என் மடில தூங்கிட்டா! இல்லைனா சமாளிச்சிருக்கவே முடியாது! ஆனா அந்த டெம்பிள்கு போகிற நாசீக் வழி, அப்பப்பா என்ன ஓர் அழகு!!!!
View attachment 14
View attachment 15
நாங்க திரியம்பகேஸ்வரர் கோயில அடைஞ்சப்ப இரவு மணி எட்டு முப்பது! தரிசனம் கிடைக்காதுன்னு நெனைச்சப்போ. கியூல ஆளுங்க நின்னுட்டு இருந்தாங்க! நாங்களும் போய் நின்னுட்டோம்! கியூ நகரவே இல்லை! பாப்பா ஒரே அழுகை! இப்படிலாம் நின்னு பழக்கம் இல்லை அவளுக்கு! நடு நடுவுல ஒரு கூட்டம் குழந்தைங்கள முன்ன போக விட்டுட்டு, அவங்க ஓடிடாங்கன்னு சொல்லி கியூவ கட் பண்ணிட்டே இருந்தாங்க! சத்தியமா முடில அவங்க இம்சை!
வீடியோல பூஜையைக் காட்டிட்டே இருந்தாங்க! என் மனசுல, வீடியோ தரிசனம்தான் போல உனக்குன்னு தோணிடுச்சு. மணி பதினொன்னு! கியூ மெல்ல நகருது! வீடியோ தரிசனத்தையும் அடைச்சிட்டாங்க! முடிஞ்ச் சோலின்னு நெனைச்சேன்.
View attachment 17
கடவுள் கை விடல. இரவு மணி பதினொன்னு முப்பதுக்கு தரிசனம் கிடைச்சது! கண்ணே கலங்கிடுச்சு எனக்கு! கிடைக்கவே கிடைக்காதுன்னு நெனைச்ச ஒன்னு நடந்ததுல அவ்ளோ ஆனந்தம். அன்றைய தினம் அது மட்டும்தான் பார்க்க முடிஞ்சது!
மீண்டும் ஒரு நெடுந்தூரப் பயணம் சீரடிக்கு! ஹவுஸ் ஓனரும் பாப்பாவும் தூங்கிட்டாங்க! நான் முழிச்சிட்டே வந்தேன். புது ஊர்! பழக்கம் இல்லாத ட்ரைவர்! எப்படி தூங்க? கண்ணு சொறுகுது! ஆனாலும் முழிச்சிட்டே வந்தேன். நான் முழிச்சுட்டு வந்தா, ட்ரைவர் அசந்துட்டாரு ஒரு இடத்துல! நான் சட்டுன்னு ஹவுஸ் ஓனர எழுப்பற மாதிரி குரல் குடுக்க, ட்ரைவர் அலர்ட்டுக்கு வந்திட்டாரு! புரிஞ்சுடுச்சு ஹவுஸ் ஓனருக்கு! அவர் முழிச்சிட்டே பேச்சுக் குடுத்துட்டு வந்தாரு! இந்த ட்ரைவர் எந்த பாதை எடுத்தாருன்னு தெரில! வண்டியே இல்ல! எனக்கு உள்ளுக்குள்ள பக்கு பக்கு! ஒரு வழியா விடிகாலை மூனு மணிக்கு சீரடில ஒரு ஹோட்டலை அடைஞ்சோம்!
ட்ரைவர் பார்த்துக் குடுத்த ஹோட்டல் ரூம்தான். பாத்ரூம்ல கரப்பான் செத்துக் கிடந்தது! அடப்போடா! நமக்குத் தூங்குனா போதும்னு டொய்ங்க்குன்னு படுத்தாச்சு!!!
முதல் நாள் இப்படியாக முடிந்தது!!!!!!!!
தொடரும்....

Author: VanishaAdmin
Article Title: Day 1--(12/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.