OTT--Netflix
இதை பத்தி ஃபேஸ்புக்ல எங்கயோ படிச்சிட்டு போய், டாக்குமெண்டரிய பார்த்தேன். பிஞ்சு நெஞ்சுக்கு இதெல்லாம் தேவையா கோபால்னு ஆகிடுச்சு! இதுல தனியா எதுவும் ரெக்கார்ட் பண்ணி போடல! போலிசோட காணொளியும், அந்தப் பொண்ணு ஃபேஸ்புக்ல இருந்த வீடியோவையும் வச்சித்தான் செஞ்சிருக்காங்க. சோ அதுல இருக்கறவங்க கூட நம்மாள இமோஷனலி கனேக்ட் ஆக முடியுது.
அமெரிக்கால வசிக்கற ஓர் அழகான குடும்பம். புருஷன், பொண்டாட்டி, ரெண்டு பெண் குழந்தைகள், வயித்துல ஒன்னுன்னு ஆரம்பிக்குது. புருஷ் செம்ம ஹெண்ட்சமா, செக்சியா இருக்கான். இவளும் அழகுதான். குழந்தைங்க ரெண்டு அவ்ளோ கியூட். அப்படியே இன்னும் என் மனசுல நிக்கிதுங்க ரெண்டும். மறக்கவே முடியலை.
என்னாகுதுனா, அந்தப் பொண்ணும் அவளோட ரெண்டு குழந்தைகளும் காணாம போயிடறாங்க! அந்தப் பொண்ணோட ப்ரேண்ட்தான் அவள காண்டேக்ட் பண்ண முடியலைன்னு போலிசுக்கு கால் போட, புருஷன்காரன் வேலையிடத்துல இருந்து ஓடி வரான். எங்க தேடியும் கண்டுப்புடிக்க முடியல. அவங்கள காணோம்னு ஊரெல்லாம் நோட்டிஸ் குடுக்கறாங்க! ஓடிப் போய்ட்டாளா, இல்ல யாராச்சும் கடத்திட்டாங்களான்னு நெறய யூகம்.
புருஷன விசாரிக்கறாங்க! அவனுக்கும் ஒன்னுமே தெரியல! நாங்க பிரியறதுக்கு இருந்தோம்! அதுல கொஞ்சம் அவ அப்செட். ஆனா விட்டுட்டுப் போகற அளவுக்குலாம் இல்லன்னு இவன் சொல்ல. பொய் டிடெக்டர் இருக்குல்ல, அதை வச்சி அவன டெஸ்ட் பண்ணா, பரதேசி பொய் சொல்லறான்னு அதுல காட்டுது! அவன உக்கார வச்சி, விசாரிச்சாத்தான் தெரியுது என்ன நெஜமா நடந்ததுன்னு.
அவன் சொல்றான் கோபத்துல என் பொண்டாட்டி புள்ளைங்கள தலைகாணி வச்சு அமுக்கிக் கொன்னுட்டா! அந்த வெறில நானும் அவள அமுக்கிக் கொன்னுட்டேன்னு! அங்க நெறய லாஜிக் இடிக்கிது! கடைசி கடைசியா உண்மையா ஒத்துக்கறான். அவனுக்கு ஒரு தொடுப்பு இருக்கு! சின்ன வயசுக்காரி! அவ கூட சேர, பொண்டாட்டிய நான் கொன்னுட்டேன்! அவ உடம்ப கார்ல எடுத்துகிட்டு, புள்ளைங்களயும் கார்ல ஏத்திட்டுப் போனேன்! அவன் வேலை செய்யற ஆய்ல் அண்ட் கேஸ் இடத்துல நிறுத்தி, புள்ளைங்களயும் ஒவ்வொருத்தர ப்ளேன்கேட் போட்டு அமுக்கிக் கொன்னுருக்கான். பொண்டாட்டிய புதைச்சிட்டு, புள்ளைங்கள் அந்த ஆய்ல் டேங்க்ல அமுக்கி விட்டுட்டு நல்லவன் மாதிரி நடிச்சிருக்கான்.
அந்தக் குழந்தைங்க அவன அப்பா, அப்பான்னு அப்படி கொஞ்சுதுங்க! எப்படி அவனுக்கு மனசு வந்துச்சு! அப்பாத்தான் ஹீரோ அப்படிலாம் சொல்லுதுங்க! பொண்டாட்டி வயித்துல புள்ள வேற! விட்டுட்டுப் போயிருக்கலாம், டிவோர்ஸ் பண்ணிருக்கலாம்! இப்படிலாம் இல்லாம எப்படி குடும்பத்தையே அழிச்சிட்டு இன்னொரு குடும்பம் உருவாக்கலாம்னு நினைக்க முடிஞ்சது! நமக்கே அந்தப் பிஞ்சுகள பார்க்கப் பதறுது! அப்பன் உனக்கு அப்படி ஏன் தோணல! படுத்து எழுந்து சுகம் மட்டும் அனுபவிச்சதனால அந்தத் தந்தைமை உணர்வு இல்லையோ!!!! அவ என்ன டார்ச்சர் பண்ணாளோ, அதான் இப்படி பண்ணிட்டான்னு அவ்ளோ சப்போர்ட் வேற அந்த நாய்க்கு! ஆயுள் தண்டனைல உள்ள இருக்கான் பரதேசி! மனசே ஆறல எனக்கு!!
என்னை மாதிரி பொலம்பனும்னு நெனைக்கறவங்க கண்டிப்பா இதைப் பாருங்க! மனிதன் எப்படி மிருகமா மாறிடறான்னு இதுல காட்டிருக்காங்க!!!!!

Author: VanishaAdmin
Article Title: American Murder -- The Family Next Door(with spoilers)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.