About Me

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Jul 31, 2024
554
-2,745
93
வணக்கம் டியர்ஸ்,

ஏற்கனவே vanishanovels.com வழியா நாம சேர்ந்து பயணிச்சோம். இப்போ சில பிரச்சனைகளால அந்தத் தளம் செயல்படாம போய்ட்டதால இந்த vanishanovel.com வழியா மறுபடி சேர்ந்து பயணிப்போம் வாங்க!

புதுசா இணையறவங்களுக்காக மீண்டும் ஒரு முறை என்னோட அறிமுகம். என்னோட நிஜ பெயர் அற்புதா. சொந்தக்காரங்களுக்குத் தெரியாம கதை எழுதலாம்னு வநிஷான்னு பேர வச்சிக்கிட்டேன். இந்த வநிஷா யாரு உங்க மகளோட பெயரான்னு பலர் கேட்டிருக்கீங்க! வநிஷா நான் காலேஜ் படிக்கறப்ப என் கூட படிச்ச ஒரு பஞ்சாபி பொண்ணு பேரு. இதென்ன இந்தப் பேரு இவ்ளோ மாடர்ன்னா இருக்குன்னு, ஒரு க்ரேஸ் ஆகிப் போச்சு! அது இமேயில், பென் நேம்னு அப்படியே தொடர்ந்து வந்திடுச்சு! அந்தப் பொண்ணு, ஐ மீன் ஆண்ட்டி இப்ப எங்கன்னு கேக்கக் கூடாது!! ஏன்னா எனக்குமே தெரியாது

நான் கதை எழுத வந்து எத்தனை வருசமாச்சுன்னு கூட சரியா தெரியல! அவ்ளோ ஞாபகசக்தி! ஒரு ஆறு ஏழு வருசம் ஓடிருக்கலாம். ஆனா இன்னும் ஐம்பத கூட தொடல நான் எழுதன கதைகள்! அவ்ளோ சூப்பரு நானு!!! அவ்வ்வ்! ஒரு விஷயத்தத் தொடர்ந்து செய்யறது எனக்கு ரொம்பவே கஷ்டம். என்னமோ இது மட்டும் விடாம தொடருது! இப்போலாம் வாசகர் கமேன்ட், லைக்ஸ், ரிவ்யூலாம் கொறஞ்சிட்டே வருது! அந்த பூஸ்ட்ல ஓடுன வண்டி சீக்கிரமா நின்னாலும் நின்னிடும்!! ஹஹஹ!

கிட்டத்தட்ட 40 கதைகள் எழுதிருக்கேன். சொந்தமா Vanisha Publication நேம்ல பதிப்பகம் போய்ட்டு இருக்கு. யூடியூப் சேனல்ல ஆடியோ கதைகளும் இருக்கு.

audio https://www.youtube.com/@vanisha79

FB https://www.facebook.com/vanisha.writes.5/

FB page https://www.facebook.com/vanishawriter/

whatsapp channel https://whatsapp.com/channel/0029VaHzVjA7DAWvphBrTP2T

இதுல என்னை ஃபோலோ பண்ணிக்கோங்க டியர்ஸ்!


எப்பொழுதும் போல உங்க ஆதரவு எனக்கு எப்பவும் தேவை!!!!

லவ் யூ ஆல்!!!!

அன்புடன்,

வநிஷா
 
  • Love
Reactions: Akila