28/3/2026—Day 11

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
இன்றைய தினம் காலைலயே எழுந்துட்டோம். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் எங்களுக்கு காம்ப்ளிமெண்டரி ஒட்டக சவாரி குடுக்கறதா சொல்லிருந்தாங்க! கண்ணாடி வச்ச லாங் டாப் ஒன்னு ஜெய்ப்பூர்ல வாங்கிருந்தேன். அதைத்தான் போட்டுக்கிட்டேன் நான். அந்த பாலைவனத்துல காலை நேரம் சிலுசிலுன்னுதான் இருந்தது.

எனக்கு உள்ளுக்குள்ள ரொம்பவே பயமா இருந்தது ஒட்டகம் மேல ஏற. வண்டில உக்காந்து வர ரைட் கூட இருக்குத்தான். ஆனாலும் ராஜாஸ்த்தான் வந்துட்டு ஒட்டக சவாரி செய்யலனா அது அந்த ஒட்டகத்துக்கே இழுக்குன்னு மனச தேத்திட்டு, பயத்தைக் காட்டாம கெத்தா நின்னாச்சு. முதல்ல ஒட்டகத்த கீழ உக்கார வைச்சாங்க. என் முன்னாடி பாப்பா உக்காந்தா. அவ பின்னாடி நானு. ரெண்டு பேரு ஓர் ஒட்டகத்துல! உக்கார்றப்ப உக்காந்தாச்சு. அப்புறம் அது ஆடி அசைஞ்சு மேல எழுந்தது பாருங்க, நெஞ்சே குலுங்கிப் போச்சு! இன்னொரு ஒட்டகத்துல ஜெ.எஸ் அப்புறம் இன்னொருத்தங்களும் வந்தாங்க.

ஒட்டகம் சம தரைல நடக்கறப்ப ஒன்னும் தெரில. ஆனா மேடு ஏறுச்சு பாருங்க! எங்க தலைக் குப்புற விழுந்துடுவேனோன்னு ஆடிப் போய்ட்டேன். மிஸ்டர் ஒட்டகம் வாயை அசைப் போட்டபடியே மெதுவாத்தான் நடக்கறாரு! ஒரு வழியா மேட்டுக்கு ஏறி அழகான சன்ரைஸ் பார்த்தோம்! நெஜமா மயங்கித்தான் போய்ட்டேன் நான். வார்த்தைகள்ல வர்ணிக்க முடியாத அழகு அது! கொஞ்ச நேரம் அதன் அழக ரசிச்சிட்டு, திரும்பிட்டோம். ஒட்டகத்துல இருந்து கீழ விழாம இறங்கனுமேன்னு ஒரே யோசனை என் மைண்ட்ஃபுல்லா! ரெண்டு ஒட்டகமும் பின்னாடி ரெண்டு கால முதல்ல மடக்கி. அப்புறம் முன்னாடி ரெண்டு கால மடக்கித்தான் உக்காந்தது. நான் இறங்க முயற்சி செய்யறதுக்குள்ள, பக்கத்து ஒட்டகத்துல இருந்து ரெண்டுப் பேருமே கீழ விழுந்துட்டாங்க! நான் பதறியடிச்சு எப்படி எறங்கனேன்னு எனக்கே தெரியாமலே கீழ இறங்கிட்டேன். நல்ல வேளை அவங்களுக்கு அடி ஒன்னும் இல்ல.

பிறகு ஹோட்டல்லுக்குப் போய் பேக்காப் பண்ணிட்டோம். அடுத்த இடம் ஒரு ஜெய்ன் டெம்பிள். அது உள்ள காசு கட்டித்தான் போன் கொண்டுப் போக முடியும். சோ ஒருத்தர் மட்டும் போன் எடுத்துப் போனோம். கைட் ஒருத்தர் எங்களுக்காக வந்தாரு. கிடைச்ச கைட்ல இந்தாளுதான் வொர்ஸ்ட். அந்த கோயில்குள்ள சிற்பங்கள் எல்லாம் அவ்ளோ அழகா செதுக்கிருக்காங்க! மெஸ்மரைசிங்! அங்க கொஞ்ச நேரம் சுத்திட்டு, ஹவேலின்னு ஒரு இடத்துக்கு ஆட்டோல போனோம். ஹவேலினா மேன்ஷன், அல்லது டவுன்ஹவுஸ் போலன்னு கூகுள் சொல்லுது! நடுவுல குட்டிப் பாதை போக வழி நெடுக வீடுகள். கோட்டைல ரூம் குடுத்த மாதிரின்னு வைங்களேன். அங்க வாசல்ல கடைகள் போட்டிருக்காங்க! துணிமணி, பரிசுப் பொருட்கள்னு நெறய விக்கறாங்க!

ஜெய்சல்மீர் கோட்டை, ஹவேலி மியூசியம்னு பார்த்தோம் அங்க. போட்டோ போடறேன், அதுல பார்த்துக்கோங்க! அதுக்குப் பிறகுதான் சாப்பிடப் போனோம்! இந்த கைட் சீக்கிரம் சீக்கிரம்னு எங்கள சரியாப் பார்க்க விடாம விரட்டிட்டு, சாப்பிடக் கூப்பிட்டுப் போன இடத்துல கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேய்ட் பண்ணோம்! சாப்டுட்டு, அந்த கைட் ஷாப்பிங் கூப்பிட்டத மறுத்துட்டு கடிசார் லேக் பார்க்கக் கிளம்பிட்டோம். மொட்டை வெயிலு! போட்டிங்லாம் போகல. அங்க இருந்த ஒரு குட்டி போட்டோகிராபர்ட்ட அங்கங்க நின்னு போட்டோ எடுக்கச் சொல்லி காசு குடுத்துட்டு, கடைப் பரப்பி இருந்த பொருட்கள்ல கொஞ்சம் வாங்கிட்டு டெம்போ போய்ட்டோம். கரும்பு ஜீஸ் வித்தாங்க! அது செம்மையா இருந்தது.

அதன் பிறகு ட்ராவல்தான். நெக்ஸ்ட் ஸ்டாப் ஜோத்பூர். இது ப்ளூ சிட்டி. ஜெல்சல்மீர் யெல்லோ சிட்டி.

அவ்ளோ நேரம் ட்ராவல் செஞ்சு நேரா ஜோத்பூர் கோட்டைக்குப் போயாச்சு. இங்க ஒரு சிறப்பு இருக்கு! அதாவது காசு குடுத்தா லிப்ட்ல ஏறி கோட்டை மேல போகலாம். கோட்டைல நுழைய அது தனிக்காசு. இந்த இடத்துக்குள்ளயும் மியூசியம் இருந்தது. ராஜாக்கள் யூஸ் செய்த பொருட்கள் எல்லாம் வச்சிருந்தாங்க! இங்கயும் கைட் ஏற்பாடு பண்ணிக்கிட்டோம். ரொம்ப நல்லா எக்ஸ்ப்ளேன் செஞ்சாரு இவரு. கட்டிட நிர்மாணிப்புலாம் ஆவ்சமா இருந்தது. கோட்டை மேல இருந்து பார்த்தா ப்ளூ சிட்டி தெரியுது! இங்க இருக்கற வீடுகள், கட்டிடங்கள் எல்லாம் நீல சாயத்துல ஜொலிக்குது!

கோட்டை தாண்டி மக்கள் வசிக்கற இடங்கள் இருக்காம். அது நடுவுல நடந்து போகிறதே அவ்ளோ நல்லா இருக்குமாம்! எங்களுக்கு அதுக்கெல்லாம் நேரமே கிடைக்கல. கோட்டை மூடப் போற டைம்லதான் பார்த்தே முடிச்சோம். அதுக்குப் பிறகு ஹோட்டலுக்குப் போகலாம்னு சொன்னாரு ட்ரைவர். நான்தான் இன்னும் ஒரு இடம் போட்டிருக்கே ஸ்கேடியூல்ல, அங்க கூட்டிட்டுப் போங்கன்னு கேட்டேன். நெஜமா செம்ம டயர்ட்! ஆனாலும் கொழுப்பு! வந்துட்டமே அதை மட்டும் ஏன் விட்டு வைக்கனும்னு.

அந்த இடத்துப் பேரு மண்டோர் கார்டன். உள்ள ரொம்ப நடக்கனும். அழகான கார்டன்தான். இருட்டற டைம்ல, கலர் கலரா லைட் போட்டிருந்தாங்க. மியூசிக் ஷோ இருக்குன்னு சொல்லவும், அந்த டைம் வரதுக்கு முன்ன டீ குடிக்கப் போனோம். நல்லா பெருசா உள்ளயே சாப்பிட இடம் கட்டிருக்காங்க. டீ குடிச்சதும்தான் கொஞ்சம் தெம்பே வந்தது. பிறகு மியூசிக்கல் ஷோ நடக்கற இடத்துக்குப் போனோம். ஆங்கில வெர்ஷன் வரதுக்கு காத்திருந்து, பிறகு உக்காந்து பார்த்தோம். மன்வார்ங்கற பரம்பரைய பத்தி அந்த ஷோ! பின்னாடி இருக்கற பழங்கால பில்டிங் மேல லேசர் லைட் பாய்ச்சி, அந்தக் கதைய சொல்றாங்க! ரொம்பவே யூனிக்கா இருந்தது. அது முடிஞ்சதும் மேங்கோ ஜூஸ் ஒன்னு வாங்கிக் குடிச்சிட்டு, இனிமே நடக்க முடியாது சாமின்னு, ட்ரேன் மாதிரி போகுமே அதுக்குக் காசு கட்டி கூட்டத்துல அடிச்சுப் புடிச்சு ஏறி எண்ட்ரென்ஸ் போய் சேர்ந்தோம். ஹோட்டல் போய் சேர்ந்தப்ப, எட்டு மணிக்கும் மேலாகிருச்சு. அங்க லிஃப்ட் பழுதா போய், படி ஏற விட்டுட்டாங்க! கால் வலியோட ஏறிப் போனோம். ரூம் ரொம்ப நல்லா இருந்து. ஹோட்டல் பேரு kissan legacy. நாங்க தங்கன ஹோட்டல்லயே இவங்கதான் சர்வீஸ்ல தி பெஸ்ட். நானும் தங்கமலரும் டின்னருக்கு இறங்கல! பசியும் இல்ல, டயர்ட் வேற. போன் போட்டு சாப்பிட வரலியா மேடம்னு கேட்டாங்க! நான் வேணாம்னு சொல்லி, சூப் இருந்தா அது மட்டும் அனுப்ப முடியுமான்னு கேக்க, அழகா மூடி, சூப் கொண்டு வந்து குடுத்தாங்க! ரூம்லயே டீ, பிஸ்கட்னு இருந்தது. மறுநாள் நாங்க விடிகாலைலேயே கிளம்பறோம்னு சொன்னதும், ப்ரேக்பஸ்ட் பேக் பண்ணி தரோம். போற வழில சாப்பிடுங்கன்னு சொன்னாங்க! செம்மல்ல! நெஜமா ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

அதோட குளிச்சிட்டு படுத்தாச்சு! மறுநாள் பேக் டூ ஜெய்ப்பூர் ஏர்போர்ட். ஜோத்பூர்லயே ஏர்போர்ட் இருக்கு! நாங்க போயிருந்த டைம்ல என்னமோ மெய்ன்ட்டேனன்ஸ் வேலைனால மூடிட்டாங்க.

இன்னும் மூனு அப்டேட்தான் இருக்குன்னு நெனைக்கறேன்! சீக்கிரம் வரேன்.
 

Author: VanishaAdmin
Article Title: 28/3/2026—Day 11
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

bharathiruja

Member
Apr 5, 2025
21
-3
18
Enakkum Camel ride local zoola திகில் experience kedachudhu
Graph maadhiri up down pogum
Happy you managed well
Interesting to hear your travel experience
 
  • Love
Reactions: VanishaAdmin