அடிக்கடி ட்ரிப் அரேஞ் பண்ண மாட்டேன் நான். பட்ஜெட் ஒரு பிரச்சனைன்னா, உள்ளூர்ல எங்க போனாலும் ஜனங்க குமிஞ்சு போய்டறாங்க! ரோடு ட்ராபிக், எல்லாத்துக்கும் கியூன்னு கடுப்பாகும். ஹவுஸ் ஓனர் வேற ட்ராபிக்ல கார் ஓட்டறதுல டென்ஷனாகி எங்களையும் டென்ஷன் பண்ணி விட்டிருவாரு! இதுக்கு அந்தப் பருத்தி மூட்டை கொடவுன்லயே இருந்திடலாம்னு, வீட்டுலயே ரிலேக்ஸ் பண்ணிக்கறது!
பாப்பாக்கு ஹோலிடேன்னா, நல்ல ஹோட்டல் ரூம், ஸ்வீம்மிங் ஃபூல், காலைல ஹோட்டல் பஃபே! அவ ஹேப்பியாகிடுவா! சோ எப்பவும் ஸ்கூல் லீவ் விட்டா, இப்படி ஒரு ஹோட்டல் கோலாலம்பூர்லயே அரேஞ் பண்ணிக்குவேன். வீடு பக்கம்ங்கறதுனால ஹவுஸ் ஓனர் எங்கள கொண்டு போய் விட்டுட்டு அவர் கிளம்பிடுவாரு! கிட்டவே எதாச்சும் மாலுக்கு போய்ட்டு, சாப்பிட்டுட்டு, ரூம்ல உக்காந்து படம் பார்த்துட்டு, ஸ்வீமிங் போய்ட்டு(அதாவது பாப்பா ஸ்வீம் பண்ணுவா! நான் உக்காந்து காவல் காப்பேன்! உள்ள இறங்கினாத்தான் கண்ணாடி தண்ணில நனைஞ்சு கண்ணு தெரிய மாட்டுதே!), காலைல எழுந்து நல்லா ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டுட்டு, மதியம் வீட்டுக்குக் கிளம்பிடுவோம்! இவ்ளோதான் ஹோலிடே!
இந்த முறை நெகிரி செம்பிலான் மாநிலத்துல இருக்கற என்னோட கிறிஸ்டியன் ப்ரேண்ட் வீட்டுக்கு லஞ்சுக்கு வான்னு கூப்பிட்டுட்டே இருந்தாங்க! புது வீட்டுக்குப் போனதுல இருந்து, கூப்பிட்டுட்டே இருக்காங்க! இப்ப வரேன், அப்ப வரேன்னு நானும் காலம் கடத்திட்டே இருந்தேன். இந்த தடவ அவங்க வீட்டுக்குப் போய்ட்டு அப்படியே அதுக்கு பக்கத்து மாநிலமான மலாக்காவுக்கு போலாம்னு ப்ளான் பண்ணிட்டேன். செக் இன் கிறிஸ்மஸ் டேன்னாலே, ஹவுஸ் ஓனர்ட்ட கேட்டேன்! ‘ட்ராபிக்கா இருக்குமே! ஓகேவா உங்களுக்குன்னு!’. என்னமோ இந்த தடவை சரின்னு தலைய ஆட்டிட்டாரு!
25/12/2025 காலைல எழுந்து குளிச்சு பசியாறிட்டு கிளம்பியாச்சு! ஆப் ட்ராபிக்ன்ய் காட்டி, குறுக்குப் பாதை காட்டுச்சு! அந்தப் பாதைல பயணிச்சோம்! ரொம்ப வருஷம் கழிச்சு அந்த உள் பாதை எடுத்தோம்! முன்னல்லாம் சித்தப்பா வீட்டுக்குப் போக பஸ் ஏறினா, அந்தப் பாதைலத்தான் போகும்! ஒரே மலரும் நினைவுகள்! பாப்பாட்ட சொல்லிட்டே வரேன்!
ஒரு வழியா அவங்க வீட்ட அடைஞ்சப்ப மணி ஒன்னு கிட்ட ஆகிடுச்சு! வெறும் கையா போகக் கூடாதுன்னு கேக் வாங்கிட்டு போனேன்! அவங்க கூட பேசி, சிரிச்சு அப்படியே சாப்பிட்டோம். சிக்கன், மட்டன்னு செம்ம சாப்பாடு! அவங்க வீட்ட சுத்தி பார்த்துட்டு மொய் குடுத்துட்டு கிளம்பியாச்சு.
ஆப் மறுபடி ட்ராபிக்னு சொல்லி, பழைய உள் பாதைய எடுக்க சொல்லிருச்சு! ஹைவே பக்கம் போகல! இந்த முறையும் மலரும் நினைவுகள்தான். சித்தப்பாவோட மாமனார்(எனக்கு தாத்தா), அவரோட வீடு இருந்த பக்கமாத்தான் பாதை போகுது! ப்ளாண்டேஷன், எஸ்டேட்னு பச்சைப் பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியான பயணம். வழியெல்லாம் நிறைய கோயில்கள் வேற!
நாலரை மணி போலத்தான் மலாக்கால இருக்கற ஹோட்டல வந்தடைஞ்சோம். அம்மாவும் எங்க கூட வந்திருந்தாங்க! அதனால கண்ணேக்டிங் ரூம் எடுத்திருந்தேன்! நைட்ல, நடுவுல இருக்கற கதவ திறந்து போய் அம்மாவும் பாப்பாவும் ஓகேவான்னு செக் பண்ணிக்கத்தான் இந்த மாதிரி ரூம்! கண்ணேக்டிங் ரூம் பத்தி எட்டி நில்லு கதைல எழுதிருப்பேன்.
கொஞ்சம் ரிப்ரேஷ் ஆகிட்டு, வெளிய கிளம்பிட்டோம்! ஒரு மாமாக் கடைல டீ குடிச்சிட்டு மேய்ட் டவுனுக்கு எப்படி போகுறதுன்னு கூகுள் பண்ணோம்! கடைக்காரு சொன்னாரு, நடந்தே கூட போகலாம்னு! சரின்னு நடக்க ஆரம்பிச்சோம் நாலு பேரும்! அஞ்சு நிமிஷ நடைல மழை சோன்னு வச்சி அடிக்கிது! நல்ல வேள, மக்கோத்தா மால்(Mahkota Mall) கிட்ட வந்துட்டோம்! சோ அங்க உள்ள நுழைஞ்சிட்டோம்! மழை கொஞ்சம் நிக்கற வரைக்கும் அங்க நடந்தோம்!
பிறகு வெளியாகி மறுபடி நடக்க ஆரம்பிச்சோம்! நாம ஒரு ப்ளான் பண்ணா, ஹவுஸ் ஓனர் ஒரு ப்ளான் பண்ணி வச்சிருக்காரு! மெதுவா வேடிக்கைப் பார்த்துட்டே நடக்கலாம்னா, ‘என் ப்ரேண்ட் பேமிலி கூட வந்திருக்காங்க! அவங்க கூட டின்னர் போலாம்’னு அப்ப சொல்றாரு! சீக்கிரம் நடங்க, சீக்கிரம்னு சவுண்டு வேற!
மறுபடி மழை தூற ஆரம்பிச்சிருச்சு! ஒரு கடை ஓரமா ஒதுங்கனோம்! நம்ம பாப்பா இருக்காலே, உள்ள போலாம்மான்னு கடைச்சல். சரின்னு உள்ள கூப்டு போனேன். அதுல நான் சின்ன வயசுல சாப்பிட்ட ஸ்நாக்ஸ்லாம் இருக்கவும், அவள விட நான் எக்ஸைட்டேட் ஆகிட்டேன்! கேண்டிஸ், கடலை மிட்டாய்(அம்மாவுக்கு), ரேபிட் மிட்டாய்னு(பாப்பாவுக்கு) வாங்கனோம்! அதுக்குள்ள ஆத்துக்காரு போனு! சீக்கிரம்னு! யப்பா சாமி யேய்! மிடியலையான்னு வெளிய வந்தேன்.
மழைல நனைஞ்சிட்டே நடந்தோம்! போற வழில ஒரு கடைல குடை ஒன்னு வாங்கிக்கிட்டோம்! மெக்சிக்கன் ரெஸ்டாரன்ட்லதான் டின்னர். மழைல நனைஞ்சது, அவ்ளோ நடந்ததுக்கு எல்லாம் வொர்த்து அந்தச் சாப்பாடு! அப்புறம் என்ன!!!! ஒரு புடி!!!
அன்னைக்கு கிறிஸ்துமஸ்னால எல்லா இடமும் ட்ராபிக்தான்! ஜோன்க்கர் ஸ்ட்ரீட் வேற திறக்கல.(சிக்கி சிக்கில இதை பத்தி எழுதிருப்பேன்). திறந்திருந்த சில கடைகள்லயும் செம்ம கூட்டம். பாப்பா ஸ்கூல் பிரண்ட்ஸ்கு சுவேனியர் வாங்கனும்னு ஒரு கடைல நுழைஞ்சோம்! அங்க என் கிரகம், நெட் கிடைக்கல! ங்கொய்யால! கேஷ் பாதி, கார்ட் பாதின்னு கடைக்காரன கடுப்பேத்தி, கியூவ ஃபோர்ம் பண்ணி விட்டுட்டு, சாரி சாரின்னு எல்லார் கிட்டயும் தலைய தலைய ஆட்டிச் சொல்லிட்டு வெளிய வந்தோம்! களைச்சே போச்சு! ஹவுஸ் ஓனர ஒரு இடத்துல உக்காத்தி வச்சிட்டு நாங்க மூனு பேர் மட்டும் வந்தோம்! மறுபடி போன்! எங்க இன்னும் ஆள காணோம்னு!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Author: VanishaAdmin
Article Title: 2 Days 1 Night Malacca Trip
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.