21
“பசிக்குதா..கொஞ்ச நேரம் இருங்கம்மா வந்துர்றேன்”
சமையலறைக்குள்ளே எட்டிப்பார்த்தவர் தலையசைத்தபடியே மௌனமாய் போய் விட அவர் போன திசையிலேயே ஒரு கணம் அதிகமாய் பார்வையை பதித்திருந்தவன் பிறகு வாணலிக்கு கவனத்தை திருப்பினான். மனம் எங்கோ உழன்று கொண்டிருக்க எண்ணெய் சூடாகவும் கை அது போன போக்கில் வெட்டி வைத்திருந்த காய்கறிகளை உள்ளே போட்டுக்கொண்டிருந்தது. அதெல்லாம் வெந்ததும் சமைத்த சோற்றையும் அதில் இட்டுக்கலந்து சுவையூட்டுவதற்காய் ஒரு பொடியை எடுக்க போனவன் பட்டென்று நின்று விட்டான்.
அது வர்ணி தயாரித்து அவனுக்கு கொடுத்தது. அவளது பிரைட் ரைஸை சாப்பிட்டு பழகி விட்ட பிறகு அவனும் அதையே தான் உபயோகிப்பான்.
‘ப்ச் எல்லாம் அவளால தான் துரோகி’ என்று மனதுக்குள் குமைந்தவனுக்கு ஏனோ அந்த போத்தலை கீழே வைக்க மனதில்லாமல் வழக்கம் போல அதில் இரண்டு ஸ்பூனை வாணலியில் போட்டிருந்த பதார்த்தங்களோடு சேர்த்தவனுக்கு சுவை பார்க்கவோ சாப்பிடவோ மனம் வரவில்லை. அவளே இல்லையாம்….
அம்மாவுக்கு மட்டும் அவருக்கு பிடித்தது போல வெள்ளரி துண்டங்களோடு சேர்த்து சாப்பிட கொடுத்து விட்டு வந்தவன் இயந்திரமாய் தயாராக ஆரம்பித்தான்.
மனம் அவள் மேல் கோபம் வருத்தம், ஏமாற்றம் எல்லாவற்றையும் ஏற்றி வைத்து விட்டு அடிபட்ட நாய்க்குட்டியை ஒரு ஓரத்தில் இருந்து முனங்கிக்கொண்டிருந்தது. இரண்டு வாரமாக போகிறது. ஒரு பேச்சுக்காகவாவது என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையே அவள்?
தினமும் காலையில் அவள் ஸ்கூட்டியை பார்க் செய்வதை பார்க்காமல் அவன் ஜிம்முக்குள் போனதே இல்லையே. என் மனம் மட்டும் ஏன் அந்த துரோகியை மறக்க முடியாமல் அவளையே சுற்றி சுற்றி வருகிறது?
அவனுக்கு தன் மேலே கோபமாய் வந்தது.
நீ தான்டி. நான் பாட்டுக்கு வாழ்க்கையை என் கட்டுப்பாட்டில் வைத்து பிரச்சினையில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். என்றைக்கு நீ உள்ளே நுழைந்தாயோ அத்தனையும் கலைத்து போட்டுவிட்டாய். இப்போது தெருவில் விட்டு விட்ட சிறுவனை போல அவன் குழம்பி நின்று கொண்டிருக்கிறான்.
நர்ஸ் புன்னகையோடு உள்ளே வந்து அம்மாவோடு உற்சாகமாய் பேசுவதையும் அவர் இயந்திரமாய் புன்னகைப்பதையும் பார்த்தவனுக்கு தாங்கமுடியவில்லை.
வர்ணியை பிடித்து இழுத்து வந்து “பார்டி நீ செய்து வைத்த வேலை அவர்களை எந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பார்” என்று உலுப்ப வேண்டும் போலிருந்தது.
விடுவிடுவென நர்ஸிடம் தலையசைத்தபடி வீட்டை விட்டு வெளியேறினான் அவன்.
இப்படியே அவனது நாட்கள் நகர அன்று மாலையும் மூன்று மணிக்கே ஜிம்மில் இருக்க முடியாமல் வெளியே போய்விட்டவன் நேராக பக்கத்தில் இருந்த பீச்சுக்கு வந்து கற்களின் மறைவில் உட்கார்ந்து கடலை வெறிக்க ஆரம்பித்தவன் தான் ஒரு மணிநேரத்துக்கும் மேலாய் அப்படியே தான் அமர்ந்திருந்தான்.
மனமோ ஒரு நிலையிலில்லை. அம்மாவை வீட்டில் விட்டு விட்டு வர ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டாவது வாரம் அதுவும் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவனால் வீட்டுக்கு போக முடியவில்லை. அம்மாவை பார்க்க முடியவில்லை.
ஆம். முன்னொரு காலத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு போய் வந்து கொண்டிருந்தவன், காமராக்கண் வழி தூங்கும் குழந்தையை கவனிக்கும் தாய் போல கவனித்துக்கொண்டே இருந்தவன் இப்போதெல்லாம் அம்மாவை பார்க்க முடியாமல் தடுமாறுகிறான்.
அவனோ அந்த நர்ஸோ ஞாபகப்படுத்தாமல் இருப்பதால் அவர் டார்லிங் காபேயையோ அந்த மனோகரின் வீட்டையோ மறந்து விட்டார். சமீப நாட்களாய் அவர் அதை பற்றி பேச்செடுப்பதும் இல்லை. அந்த நர்ஸை அவருக்கு பிடித்திருப்பதால் அதுவும் பிரச்சனை இல்லாமல் தான் இருக்கிறது.
ஆனால் அவரின் உயிர்ப்பை காணோமே?
கடந்த சில வருடங்களாக மட்டுமே அவன் பார்த்திருந்த அந்த உயிர்ப்பு இப்போ மீண்டும் தொலைந்து கொண்டே வருகிறது என்று அவனது கூர்பார்வையும் அறிவும் எச்சரித்துக்கொண்டே வருகிறதே.
இன்றைக்கு காலை அவன் கிச்சனுக்கு போன போது சமையலறைக்கு வெளியே கம்பி வழியே பார்த்துக்கொண்டு நின்றவரை பார்த்ததும் திகீலென்றது அவனுக்கு. எட்டு வருஷத்துக்கு முன்னே அவன் தினப்படி காணும் காட்சி இது. மீண்டும் அதை பார்ப்பது போலிருக்க குற்ற உணர்வு கழுத்தை நெரித்தது அவனுக்கு உண்மையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மனோகர் வீட்டில் பிரஸ் இருக்கிறது. அங்கே பத்துக்கு மேல் பெண்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள் என்று நவீன் சொல்லியிருந்தான். டார்லிங் காபேயை போல இளம் பெண்கள் சுறுசுறுப்பாய் வேலை செய்யும் அந்த சூழல் அவருக்கு பிடித்திருப்பதால் தான் அங்கே போக விரும்பியிருப்பார் என்று அவனுக்கும் ஊகிக்க முடிகிறது தான்.
ஆனால்….ஊருக்கே தெரிந்த அந்த பழைய கதை இருக்கும் போது எப்படி அதை அனுமதிக்க?
முதன் முதலில் இந்த விஷயத்தை கேட்டதும், அப்பாவின் நினைவுகளை மொத்தமாய் தொலைத்த அவர் மனதில், பழையதின் மிச்சங்கள் இருந்ததை அவனால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை தான். அவர் அடிமனதில் இன்னும் இது உயிரோடு இருக்கிறது என்றால் அவருக்குள் சாஹித்யனின் இடம் என்ன என்று அவனுக்குள் பெரிய கேள்வி முளைத்தது தான்.
ஆனால் இப்போதைய அம்மாவுக்கு உணர்வுகளாலும் அறிவாலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆகவே அவர் அந்த பதிப்பக வேலை மேல் உள்ள ஆர்வத்தால் தான் போயிருப்பார் என்றே எடுத்துக்கொண்டாலும் போய்விட்டு வாங்க என்று எப்படி அங்கே அனுப்பமுடியும்? இப்படி ஒரு முன்கதை இருக்கும் பொது.
அவனுடைய, அம்மாவுடைய உறவுகள் வல்லூறுகளை போல, அவர்களின் நாவுகள் எதை வேணுமென்றாலும் நாக்கூசாமல் பேசுமே ..அதை சாதாரணமாய் கடந்து செல்ல அவனால் எப்படி முடியும்?
அவன் மொத்தமாய் குழம்பிப்போயிருந்தான். உண்மையில் டீனேஜ் பெண்குழந்தையை கையாளத்தெரியாமல் தவிக்கும் தந்தை போலத்தான் அவனும் இருந்தான்.
மனது ஆபத்பாந்தவியாய் அவளை தேடியது. தேடியதற்கும் சேர்த்து தன் மேலேயே அவனுக்கு கோபமும் வந்தது.
‘அவ தான் என்னை வேணாம்னு சொல்லிட்டு நாலடுக்கு பாதுகாப்புக்குள்ள போய் சந்தோஷமா இருக்காளே’
என்று கோபம் கொண்டாலும் அவனது ஆழ்மனதுக்கு நன்றாகவே தெரியும். அன்றைக்கு அவன் விட்ட வார்த்தை கொடியது. அவள் எதன் அடிப்படையில் தன்னுடைய வாழ்க்கையை கட்டியிருந்தாளோ அதையே அவன் காயப்படுத்தி விட்டான். ப்ச் ரொம்ப பேசி விட்டோமோ? கோபம் என்ற பெயரில் குற்ற உணர்வு தான் அவனை இப்போதெல்லாம் குடைந்து கொண்டிருந்தது.
நமக்கெல்லாம் எதுவுமே செட்டாகாது. வேணாம் விட்டிடுவோம். அவளுடைய குணத்துக்கு நமக்காய் போராடவே செய்யாமல் விலகிப்போய்விட்டாள் என்றால் அவளும் அப்படியே தான் நினைத்திருக்க வேண்டும்.
வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தான் சாஹித்யன். வானில் மேகக்கூட்டமொன்று ஒன்று சேர்ந்து மயிலின் உருவகமொன்றை செய்து விட்டு அடையாளமே இல்லாமல் கலைந்து போய்க்கொண்டிருந்தன, அவனது வாழ்க்கையும் அப்படித்தானே கடந்து போன அழகியநாட்கள் தடயமே இல்லாமல் மறைந்து போயினவே.
போன் மணி அடிக்க எடுத்து காதுக்கு கொடுத்தவன்
“இதோ வந்துர்றேன் மேடம். பத்தே நிமிஷம்” என்றபடியே எழுந்து விட்டான்.
அச்சோ போன் பண்ற அளவுக்கு வச்சுட்டோமே குற்றவுணர்வு கொத்த அவசர அவசரமாய் அவன் வீட்டுக்கு போக
கடைசி பஸ் போய்விடும் என்று கூட பாராமல் தயங்கி நின்ற அந்த பெண் “ தம்பி நான் சொல்றேன்னு கோச்சுக்காதீங்க” என்று ஆரம்பித்தார்
“சொல்லுங்க”
“நீங்க ரெண்டு நாளா மதியம் கூட வீட்டுக்கு வரலை. லக்கிம்மா உங்களை ரொம்ப தேடுறாங்க”
அவன் உதட்டை கடித்துக்கொண்டான்.
“அவங்களுக்கு ஆதாரம் நீங்க தான். உங்களை பார்க்கறது, உங்க பக்கத்துல இருக்கறது புரியவே இல்லைன்னாலும் கூட அவங்களை அமைதிப்படுத்தும். இல்லைன்னா அவங்களோட சமநிலை பாதிக்கப்படும். எனக்கு புரியுது நீங்க ஏதோ பிரச்சனைல இருக்கீங்க. ஆனா அவங்களுக்கு அது புரியாது தம்பி. கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றார் அமைதியாய்.
“சாரி. இனிமே இப்படி நடக்காது” என்று இவன் தலைகுனிந்து சொன்னதற்கு தலையசைத்தபடியே அவர் புறப்பட ஆரம்பிக்க
“இருங்க, பஸ் போனாலும் போயிருக்கும். நாங்களும் வந்து உங்களை விட்டுட்டு வர்றோம்” என்று அவரை காரில் அழைத்துப்போய் விட்டவனுக்கு தன்னைக்குறித்தே கோபம் கோபமாய் வந்தது. ச்சே இன்னொருத்தர் சொல்ற அளவுக்கு வச்சுக்கிட்டோமே…
எதுவும் அறியாமல் உற்சாகமாய் காரின் முன்னிருந்து வந்த அம்மாவை பார்க்க இன்னும் மனதில் பாரம் ஏறிக்கொண்டது அவனுக்கு.
“மேடம். நாளைக்கு லீவ் போட்டுக்கோங்க. நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன் அவங்க கூட தான் இருப்பேன்” என்று அவன் சொல்ல
அவர் சந்தோஷமாய் சிரித்தபடி “நாளைக்கு உங்க பையன் இருப்பாராம் நான் அடுத்த நாள் வர்றேன் என்ன?” என்று அம்மாவிடம் விடைபெற்றுப்போவதை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தவன் அம்மாவின் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தை பார்த்தவனுக்கு இன்னும் மனதில் பாரமேறிப்போயிற்று.
எதிரே ப்ரோசன் யோகர்ட் கடை ஒன்று கண்ணில் பட குமாரும் வர்ணியும் அம்மாவுக்கு ஐஸ்க்ரீம் என்ற போர்வையில் இதை கொடுத்து ஏமாற்றுவார்களே என்ற எண்ணத்தில் அம்மாவை அழைத்துப்போனவன் கொஞ்சமாய் சீனி சேர்க்காததாய் பார்த்து வாங்கி கொடுத்தான்.
உற்சாகமாய் சுவைத்தபடி “பப்லு கிட்ட கேட்டேன் ஏமாத்திட்டான்” என்று லக்கி தன் போக்கில் சொல்லவும் சாஹித்யனின் உதட்டில் லேசான புன்னகை.
குமார்! அவன் தான் இப்போது எதிர்க்கட்சி ஆகிவிட்டானே .. லக்கி வாயை திறந்து கேட்காது விட்டதில் அந்த பெயர்களை மறந்து விட்டார் என்று நினைத்தோமே.. இவருக்கு இன்னும் அந்த பெயர்களெல்லாம் மனதில் இருக்கின்றனவா என்ன?
அவங்க எல்லாம் இப்போ நமக்கு எதிர்க்கட்சிம்மா நமக்கு ஒரு ஐஸ் கட்டி கூட கிடைக்காது என்று சாஹி கிண்டலாய் சொல்ல
அவன் யார் தர மாட்டேன் சொல்றதுக்கு? என்னை கூட்டிட்டு போ நான் கேட்கிறேன். என்று பட்டென்று சொன்னார் லக்கி.
அப்படியேஅந்த எதிர்க்கடைக்காரியையும் என்னன்னு கேட்டீங்கன்னா? என்று தானாய் எண்ணிக்கொண்டு மனதை மண்டையிலேயே கொட்டி அடக்கினான் அவ வேண்டாம்னா வேண்டாம்னு இருக்கணும்.. ப்ச்.
சாப்பிட்டு முடித்ததும் பீச்சுக்கு போலாமா என்று கேட்டு அழைத்து போனவன் வெகு நேரம் சந்தோஷமாய் அவரை பீச்சில் கால்நனைக்க விட்டு வீட்டுக்கு அழைத்து வர அன்றிரவு வெகு நேரம் ஆகி விட்டிருந்தது.
மறுநாள் காலை வெகு தாமதமாகவே எழுந்து சாப்பிட்டு பலநாட்களுக்கு பிறகு அம்மாவை கோவிலுக்கு அழைத்துப்போனவனுக்கு அங்கேயும் ஒரு உறவுக்காரர் எதிர்ப்பட்டு திருமணம் பேச என் போனோம் என்று ஆகிவிட்டது.
கைப்பழக்கத்தில் அம்மா சந்தனம் குங்குமம் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே லக்கி இந்த இடம் நல்ல குளுமையா இருக்குல்ல என்று கேட்டுக்கொண்டே வர இந்த ஒன்றுக்காயே அவர்களை மன்னித்து விட்டு விட்டான்.
பிறகு வீட்டுக்கு வந்து, நடுவில் வர்ணி வந்ததன் பின்னர் மறந்தே போயிருந்த பழைய நாட்களை போல சமைத்து அவரோடே கூட சாப்பிட்டு அவர் டீவியில் பாடல்களை பார்த்துக்கொண்டிருக்க அமைதியாய் சோபாவில் படுத்துக்கொண்டிருந்தவனுக்கு மனது இன்னும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

Author: Ush
Article Title: லக்கி வீடு - 21
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.