நல்ல வேளையாய் பார்வதி ஏதோ வேலையாய் அகன்று விட பூஜாவை பார்த்து விழித்தாள் வர்ணி. அதே சமயம் அதே அதிர்ச்சி விழிகளோடு இவளையே பார்த்திருந்த பூஜாவும் இவளது பார்வையை கவனித்து விட்டு, "நாமிருக்க பயமேன்" என்று விழிகளை மூடி அபயமளித்தவள், "வர்ணி கொஞ்சம் கவுன்டரை பார்த்துக்கோ எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு..” என்று விட்டு “ஆன்ட்டி எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?" என்று கண்ணை சுருக்கி கேட்டாள்.
அதற்கு பதிலாய் பெரும் உற்சாகத்துடன் புன்னகைத்த லக்கி ஆன்ட்டியும், "நான் அதுக்குத்தானே இருக்கேன்.." என்று சிரித்துக்கொண்டே உள்ளே போக வர்ணிக்கு தலை சுற்றியது. அந்த நேரம் பெரிதாய் மாலில் கூட்டமும் இல்லை ஆக காதுகளை உள்ளே வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் வர்ணி.
உள்ளே எந்த சூழலையும் சமாளிப்பதில் வல்லவள் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்கொண்டிருந்தாள் பூஜா.
எல்லா காபி கடைகளை போலவும் டார்லிங் காபேயிலும் மூன்று அளவுகளில் காபி வழங்கும் கப்கள் இருக்கும். வேகமாய் எடுக்க வசதியாய் அன்றைய நாளுக்கு தேவைப்படும் கப்களை கம்பி போல தாங்கிகளை கொண்ட ஒரு தட்டில் இவர்கள் கவிழ்த்து வைப்பதுண்டு. உள்ளே சென்றவள் அதை அடுக்க ஆரம்பிக்க ஒரு குழந்தையின் உற்சாகத்துடன், "ஸ்மால், மீடியம், லார்ஜ்" என்று சொல்லிக்கொண்டே லக்கி ஆன்ட்டியும் கப்களை அடுக்குவது இவளின் காதில் விழுந்தது.
"வர்ணிக்கு இதையெல்லாம் அடுக்க வராது ஆன்ட்டி. தப்பான கப்பை எடுத்து கொடுத்துருவா. அதுக்காகவே நான் எல்லாத்தையும் அடுக்கி ரெடியா வச்சிருவேன்" என்று பூஜா சொல்ல
உன் போதைக்கு நான் ஊறுகாயா என்று நொந்த படி கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ணி.
"டார்லிங். தப்பா அடுக்குற. அந்த கப் இங்கே வரணும்"
"ஒ சாரி ஆன்ட்டி. இந்தாங்க..” என்றவள் சில கணங்களின் பின் “ஆனாலும் நீங்க செம்ம ஆளு. உங்க கூட இருந்தா சிரிச்சிட்டே இருக்கலாம்: என்று ஆரம்பித்து “அதுவும் நீங்க இங்கே வேலை பார்க்கறதா சொன்னதை பார்வதி ஆன்ட்டி நம்பிட்டாங்க..ஹா ஹா " என்று சிரித்தபடி மெதுவாய் பூஜா விஷயத்துக்கு வர அவ்வளவு நேரமும் கலகலவென்று பதில் சொல்லிக்கொண்டிருந்த ஆன்ட்டியின் பக்கம் நிசப்தமாய் போனது வர்ணிக்கு ஏனோ மனம் பிசைந்தது.
சில கணங்களின் பின் "நான் ...நான் இங்கே வொர்க்..வொர்க் பண்ணலையா?" என்று அவரது குரல் மெலிந்து வர அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அவளும் உள்ளே போய்விட்டவள் தவிப்பாய் விழிகளை பூஜாவில் பதிக்க அவளும் அதே முகபாவனையோடு தான் இருந்தாள்.
"இல்லை ஆன்ட்டி.. நாங்க உங்களை இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் பார்த்தோம்." என்று மென்மையாய் சொன்னாள் பூஜா.
அவரோ தொலைந்து விட்ட குழந்தையாய் விழிகளை மூடி மூடி திறக்க நிச்சயம் இவருக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி பிரச்சனையோ இல்லை அதோடு தொடர்பாய் ஏதோவோ இருக்கிறது இவர்களுக்கு புரிந்து போனது.
"ஆன்ட்டி நீங்க யார் கூட வந்தீங்க? அவங்க இங்கே தான் இருக்காங்களா?" என்று வர்ணி மெல்ல தூண்டில் போட்டு பார்க்க
"ம்ம்.." என்று குழப்பமாய் தலையசைத்தவர் வேறொன்றும் சொல்லவில்லை.
அவரது முகத்தை பார்த்ததிலேயே எதையும் கேட்டு அவரை இன்னும் பதட்டப்படுத்த அவளுக்கு மனம் வரவில்லை.
"ஒகே லக்கி ஆன்ட்டி என்ன வேலை நேரத்தில் வெட்டிக்கதை பேசிட்டிருக்கீங்க? ஹ்ம்ம்" என்று லேசான சிரிப்போடு கேட்டாள் வர்ணி
அவ்வளவு தான் ஒரு இமை மூடித்திறப்போடு முகமும் மொத்தமாய் வெளிச்சம் போட்டுக்கொள்ள, "டார்லிங் நீ தான் என்னை டிஸ்டர்ப் பண்ண" என்று சிரித்துக்கொண்டே சொன்னவர், "வெளியே எவ்வளவு கஸ்டமர் வெயிட் பண்றாங்க? காக்க வைக்க கூடாது அது தப்பு" என்று கொண்டே உற்சாகமாய் சேலை தலைப்பை தூக்கி மேலே போட்டுக்கொண்டு வெளியே போக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் இருவரும்.
"என்னடி பண்றது?" என்று வர்ணி பூஜாவின் காதை கடிக்க
"எப்படியும் இவங்களை கூட்டிட்டு வந்தவங்க வரத்தானே செய்வாங்க." என்று யோசனையாய் சொன்னாள் பூஜா
"சரி அதுவரை வெளியே போய் தொலைஞ்சு போகாம நம்ம கூடவே பாதுகாப்பா இருக்கட்டும்.. ஒரு நாள் தானே" என்று வர்ணியும் சொல்ல லக்கி ஆன்ட்டியின் இருப்பு அங்கே உறுதி செய்யப்பட்டது. சில நிமிஷங்கள் கழிய கொஞ்ச நேரம் முன் குழம்பி நின்றவர் அவரா என்பதை போல காலம் காலமாய் பழகியவர் போல மால் வாசிகளுடன் கலகலக்க ஆரம்பித்து விட்டார்.
"என்னப்பா வேணும்?"
"க்ரோசான் ஒண்ணு."
"ஒண்ணு சாப்பிட்டா என்னத்துக்கு ஆகும் உடம்பு? இதுக்கு மேலேயும் ஒல்லிக்குச்சி பயில்வானா ஆகிடுவ ரெண்டு வாங்கிக்கோ." என்று ஆன்ட்டி உறுதியாய் சொன்னதில் ஏற்கனவே ஒல்லியாய் இருப்பதில் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி ஜிம்முக்கு வந்திருந்தவன் அவசரமாய் இரண்டை வாங்கிக்கொண்டே அகன்று விட வர்ணிக்கு சிரிப்பு தாளவில்லை. எதிர்க்கடையில் இருந்த குமார் கண்களால், 'யார் இது?' என்று விசாரிக்க, 'பிறகு சொல்கிறேன்' என்று அவளும் சைகையிலேயே பதில் சொல்லி ஆன்ட்டியின் முன்னிலையில் பேசுவதை தவிர்த்து விட்டாள்.
கலகலப்பாய் சுற்றிக்கொண்டிருப்பவர் அவ்வப்போது குழம்பி நிற்பதும் யாருடையதேனும் பேச்சுக்குரல், இல்லையேல் காபி ஆர்டர் செய்யும் சத்தம் கேட்கும் போது மீண்டும் வழமைக்கு திரும்பி விடுவதையும் வர்ணி கவனிக்கவே செய்தாள். அவரை தேடி யாரும் வரவில்லையே என்பது வேறு பதட்டமாய் இருந்தது.
பதினொன்று நாற்பது இருக்கும் காரம்போர்ட் விளையாடிக்கொண்டிருந்த சதாசிவம் அங்கிள் காபி வாங்க வந்தார். வழக்கமாய் கடைக்கு வரும் ஓய்வுபெற்ற அலுவலர் அவர்.
"யார் இவங்க? பார்த்ததே இல்லை" என்று அவர் லக்கி ஆன்ட்டியை பார்த்து சிநேகமாய் புன்னகைக்க "வாங்க சார்.. நான் தான் மானேஜர், என் கிட்ட தங்கமான ரெண்டு பொண்ணுங்க வொர்க் பண்றாங்க. இது டார்லிங்" என்று வர்ணியை காண்பித்து விட்டு பூஜா பக்கம் திரும்பி குழம்பி விட்டு பிறகு, "என்ன வேணும் உங்களுக்கு எதுன்னாலும் கேளுங்க பசியோட இருக்க கூடாது" எனவும் பாவம் சதாசிவம் அங்கிள் அதிர்ந்து வர்ணியை பார்க்க இந்தப்பக்கம் அப்போது தான் தண்ணீர் குடிக்க வாய் திறந்த பூஜாவுக்கு புரையேறி போயிருந்தது, இரும ஆரம்பித்திருந்தாள்
ஐஸ்க்ரீம் கடை பாய்ஸ் வேறு இங்கேயே காதை தீட்டிக்கொண்டிருந்து விட்டு குபீரென்று சிரிக்க ஆரம்பிக்க முதலில் அவர்களை கண்ணால் அடக்கியவள் அங்கிளிடமும் எதுவும் பேசவேண்டாம் அந்த ப்ளோவிலேயே போய்விடும்படி கையை காண்பித்தாள். அவரும் புரிந்து கொண்டு அன்றைக்கு தான் வர்ணி வைத்திருந்த பூச்செடிகளை பாராட்ட ஆரம்பிக்க, செடிகள் உடல்நிலைக்கு எவ்வளவு நல்லது என்று புன்னகையோடு சொல்லிக்கொண்டிருந்தார் லக்கி ஆன்ட்டி.
அதன் பிறகு பதினொன்று நாற்பத்தைந்துக்கு எப்போதும் போல அந்த மாலில் இருக்கும் கடிகாரம் டிங் என இரண்டு முறை அடித்து ஓய லக்கி ஆன்ட்டியும் பேச்சை நிறுத்தி திரும்பியவர், "டார்லிங்.. என்னோட ஷிப்ட் முடிஞ்சது வர்றேன்" என்று வர்ணிக்கும் பூஜாவுக்கும் விட்டு சந்தோஷமாய் மாலுக்கு உட்புறம் போக இப்போது திகைத்து நிற்பது இவர்களின் முறையானது.
"வர்ணி.. நாளைக்கு உங்க மானேஜரை இந்த பக்கம் அனுப்பி விடுங்க.. செமையா பிசினஸ் பண்றாங்க.." என்று ஐஸ்க்ரீம் பாய்ஸ் குரல் கொடுக்க
"கிண்டல் பண்ணாதிங்க.. அவங்களுக்கு உடம்பு சரியில்லை. யாரோ தெரியல." என்று அவர்களை அடக்கியவள் சதாசிவம் அங்கிளுக்கு நடந்ததை சொல்ல அவரும் அனுதாபமாய் தலையசைத்தார்.
"அவங்க பேச பேச எனக்கே புரிஞ்சதும்மா.. இப்போ வயசாயிட்டாலே கை கால் முடியாம போயிடக்கூடாதுன்னு வேண்டிக்கிறதை விட இப்படி நான் யார்னே மறந்து போயிடுற நிலைமை வரக்கூடாதுன்னு தான் வேண்டிக்க வேண்டியிருக்கு." என்று அவர் வருத்தமாய் சொல்ல
"அவங்களுக்கு சின்ன வயசுல வேலை செய்யணும்னு ஆசை இருந்திருக்கும் போல. திரும்ப திரும்ப பொண்ணுங்க சம்பாதிக்கணும் சொந்தக்கால்ல நிக்கணும் என்று சொல்லிட்டே இருந்தாங்க" என்று வந்து சேர்ந்து கொண்டாள் பூஜா.
"சிலருக்கு நினைவுகள் மறந்து போய் சந்தோஷமா இருந்த இளமைக்காலம் மட்டும் துண்டு துண்டா ஞாபகம் இருக்கும். இவங்களும் அப்படியோ தெரியலை" என்றவர், "இருங்க அவங்க பத்திரமா போயிட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன்.. இந்தப்பக்கம் வந்தா மாலுக்கு வெளியே போக விடாதிங்க.. கடைலையே உக்கார வச்சுக்கொங்க" என்று விட்டு சென்று மறைய இவர்கள் வேலையை தொடர்ந்தனர்.

Author: Ush
Article Title: லக்கி வீடு - 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.