உலகின் இனியோரே,
உலகின் இனியோரே,
ஒரேயொரு முறை
உலகு காண வந்த
உலகின் இனியோரே!
உரைப்பேன் இனிதே!
சுயநலமாயிருங்க!
ஆம்!
நலமாயிருக்க வேண்டின்
சுயநலமாயிருங்க!
உடலைப் போல
சுயநலமாயிருங்க!
உடலை கவனிங்க!
மூச்சுக்காற்று உள்ளிழுத்து,
பிராணவாயு உள்நிறைத்து,
கரியமிலம் வெளியேறலை!
பருகுநீர் பாருங்க,
பாங்காய் உணர்வீர்!
உள்ளிருத்தலை,
வெளியேற்றத்தை!
உட்புகுமுணவு
சத்துத் தேங்கிச்
சக்கை நீங்குவதை!
கடுங்குளிரோ, கொளுத்துங்கோடையோ,
வேறுபடினும் வெளிச்சூடு,
சீராயுளதே, உட்சூடு!
எப்போதும்!
விரும்பினாலும், விரும்பாவிடினும்,
முயன்றாலும், முயலாவிடினும்,
இயற்கையின் இயக்கமிஃதே,
அனைத்துயிருக்கும்!
அப்படியே வாங்க இப்ப,
அனைத்தும் வந்து வீழும்,
உள்ளத்துக்கு வாங்க!
ஏதேதோ நிகழ்ந்திருக்கும்,
எல்லோர் வாழ்விலும்!
இதுகாறும் நடந்தவற்றில்
நல்லன மட்டும் நிறைங்க!
அல்லாததை நீக்குங்க!
அழுத்தமாவது, கிழுத்தமாவது . . . .
கொண்டாடவே இவ்வரிய வாழ்வு,
அடுத்தவுயிரை பாதிக்காதவாறு!
கொடையளித்தயிறைக்கே நன்றி!
உடலுமுள்ளமுமென்றென்றும் உற்சாகமாய், உத்வேகமாய்
நலம் வாழ வாழ்த்துக்கள்!
உலகின் இனியோரே,
ஒரேயொரு முறை
உலகு காண வந்த
உலகின் இனியோரே!
உரைப்பேன் இனிதே!
சுயநலமாயிருங்க!
ஆம்!
நலமாயிருக்க வேண்டின்
சுயநலமாயிருங்க!
உடலைப் போல
சுயநலமாயிருங்க!
உடலை கவனிங்க!
மூச்சுக்காற்று உள்ளிழுத்து,
பிராணவாயு உள்நிறைத்து,
கரியமிலம் வெளியேறலை!
பருகுநீர் பாருங்க,
பாங்காய் உணர்வீர்!
உள்ளிருத்தலை,
வெளியேற்றத்தை!
உட்புகுமுணவு
சத்துத் தேங்கிச்
சக்கை நீங்குவதை!
கடுங்குளிரோ, கொளுத்துங்கோடையோ,
வேறுபடினும் வெளிச்சூடு,
சீராயுளதே, உட்சூடு!
எப்போதும்!
விரும்பினாலும், விரும்பாவிடினும்,
முயன்றாலும், முயலாவிடினும்,
இயற்கையின் இயக்கமிஃதே,
அனைத்துயிருக்கும்!
அப்படியே வாங்க இப்ப,
அனைத்தும் வந்து வீழும்,
உள்ளத்துக்கு வாங்க!
ஏதேதோ நிகழ்ந்திருக்கும்,
எல்லோர் வாழ்விலும்!
இதுகாறும் நடந்தவற்றில்
நல்லன மட்டும் நிறைங்க!
அல்லாததை நீக்குங்க!
அழுத்தமாவது, கிழுத்தமாவது . . . .
கொண்டாடவே இவ்வரிய வாழ்வு,
அடுத்தவுயிரை பாதிக்காதவாறு!
கொடையளித்தயிறைக்கே நன்றி!
உடலுமுள்ளமுமென்றென்றும் உற்சாகமாய், உத்வேகமாய்
நலம் வாழ வாழ்த்துக்கள்!
Author: lakkuCPT
Article Title: சுயநலமாயிருங்க!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சுயநலமாயிருங்க!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.