கரோணா தந்த பிரிவு!

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

lakkuCPT

New member
May 24, 2026
20
0
3
கொண்டவனிருக்குமிடம்
மறந்துப் போச்சே!
கொண்டவனிருக்குமிடம்
மறந்துப் போச்சே!
தொடர் வண்டி இல்லை!
தொடர்ந்துப் போகப்
பேருந்தும் இல்லை!
ஆரிடம் சொல்வேனடித் தோழீ!
ஆரூடமுந்தெரியலையேத் தோழீ!
எப்பச் சரியாகும் இந்நிலை . .
காதல்கோட்டை பார்த்திருக்கோம்!
கந்தர்வமணம் கேள்வியுற்றோம்!
கைவிடோமென்றேக் கைத்தலம் பற்றுகிறோம்,
இன்பத்தில், துன்பத்தில்!
எனினும் ஏனிந்தநிலை?
இன்றைய நாட்களில்
பெரும்பான்மையோருக்கு!
சுட்டுவிரல் மற்றோரை நீட்ட,
மடங்கிய விரல்கள் நம்மையேக் காட்ட,
எல்லாவற்றையும் எடைபோடுகிறோம் பணத்தால்,
மற்றவரும் நம்மை!
பெரும்பணம், பதவி, புகழ்ப்
பெரிதாகிப் போனதாலேயே
இந்நிலைமை!
இருக்குமிடம், போகும் பாதை
மறந்தும் போகலாம்!
காலங்கள் கரையலாம்,
கலையலாம்!
மனதில் உறைந்த நினைவுகள்
மாறுமோ?
மாறாது! மாறாது!
எல்லாமும் சீராகுமே
காலத்தின் ஓட்டத்தில்!
 

Author: lakkuCPT
Article Title: கரோணா தந்த பிரிவு!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: VanishaAdmin