இல்லறம்

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
582
-2,703
93
'எத்தனையோ விதமா லட்டு லட்டா ஆம்பளைங்க இந்த பூமியில இருக்க, என்னை ஏன் கடவுளே இந்தக் கழிசடைக் கூட கோர்த்து விட்ட!!!' என மனதிலே ஆயிரத்து எட்டாவது முறையாக புலம்பினாள் வித்யா.

சோபாவில் அமர்ந்து கிரிக்கேட் மேட்ச் பார்த்தப்படியே குர்குரே சிப்ஸ் சாப்பிட்டக் கையை தனது காற்சட்டையில் துடைத்துக் கொண்ட கணவனைப் பார்த்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. திருமணமான இந்த ஆறு மாதத்திலேயே வாழ்க்கை கசந்துப் போயிருந்தது வித்யாவுக்கு.

எழில், அவளது கணவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவளுக்கு கடுப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தன. ஆரம்பத்து ஆறு மாதங்கள் எழில் மேல் ஏகமாய் முகிழ்த்தக் காதல், அதற்கு பிறகு கோபமாய் மாறிப் போனது. அவன் என்ன செய்தாலும் அதில் மனம் ஒரு குறையைக் கண்டுப்பிடித்தது. இப்பவா அப்பவா என வெடிக்க தயாராக இருந்த எரிமலை அன்று வெடித்தேப் போனது.

" வித்தும்மா! ஒரு காபி ப்ளிஸ்"

முனகிக் கொண்டே காபி போட்டு எடுத்து வந்தாள். அதை அவன் ரசித்து, ருசித்து கடக் கடக்கென சப்புக் கொட்டிக் குடிப்பதைப் பார்த்தவள்,

" கொஞ்சம் டீசண்டா குடிக்கக் கூடாதா?" என கேட்டாள்.

அவளை நிமிர்ந்துப் பார்த்தவன்,
" டீசண்டானா எப்படி?" என கேட்டான்.

" மாடு கழனி தண்ணிய குடிக்கற மாதிரி எதுக்கு கடக்கு முடக்குன்னு குடிக்கறீங்க?"

" என்னடி பொசுக்குன்னு கட்டன புருஷன மாடுன்னு சொல்லிட்ட!" என அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டாய் முடித்தான் இவன்.

"சோறு சாப்பிடறப்பவும் அப்படித்தான், சவுக்கு சவுக்குன்னு மெல்ல வேண்டியது! அதோட போச்சா, துவைச்சு மடிச்சு வச்சத் துணிய கலைச்சு வைக்கறது, வாசல்ல செருப்ப அங்கொன்னும் இங்கொன்னுமா கழட்டிப் போடறது, டீவி பார்க்கறப்போ சின்னக் குழந்தை மாதிரி வாய்க்குள்ள ஒரு விரல விட்டுக்கிட்டு சப்ப வேண்டியது, இப்படி நீங்க செய்யற பாதி காரியம் எனக்குப் புடிக்கல!! எரிச்சலா வருது" என மூச்சைப் பிடித்துக் கத்தினாள் வித்யா.

" ஏன்டிம்மா பி.எம்.எஸா உனக்கு? சரி விடு! ரிலேக்ஸாகு! கூல் கூல்" என்றவன் அவளுக்குப் பிடித்த மாதிரி சீனி அதிகமாய் போட்டு காபி கலந்து வந்துக் கொடுத்தான்.

அடுத்த ஒரு வாரம் அப்படியே போனது. அன்று வேலை முடிந்து வந்தவன், குளியலைறைக்குப் புகுந்தான். இரண்டே நிமிடங்களில்,

"வித்யா" என கத்தினான்.

"சொல்லுங்க" என ஓடி வந்தாள் அவள்.

" பாத்ரூம் முழுக்க உன் முடி! இப்படித்தான் குளிச்சிட்டுப் போவியா?" என கத்தினான் இத்தனை நாளும் சத்தமில்லாமல் முடியைக் கூட்டி எடுத்து குப்பையில் போடும் எழில்.

" சாரிங்க"

ஒன்றும் சொல்லாமல் படாரென கதவடைத்துக் கொண்டான் அவன்.

குளித்து வந்தவன் மீண்டும்,

"வித்யா" என கத்தினான்.

இந்த முறை என்னவோ என வந்தவளை முறைத்தவன்,

" பவுடர் அடிச்சா ட்ரெசிங் டேபிள துடைக்க மாட்டியா? எப்படி இருக்குப் பாத்தியா இந்த இடம்? சீப்புல முடி ஒட்டிக் கிடக்குது, கண்ணாடி முழுக்க மூஞ்சு கூடப் பார்க்க முடியாம பொட்டா ஒட்டிக் கிடக்குது!! எரிச்சலா இருக்கு வீட்டுக்கு வந்தாலே !" என கத்தினான்.

இவளுக்கு கண்கள் கலங்கிப் போனது. பாவமாய் அவனைப் பார்க்க,

" உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?? போன வாரம் எப்படி வச்சு செஞ்ச என்னை! அந்த டைம்ல நானும் பேசி சண்டைய வளக்க வேணாம்னு விட்டுட்டேன். உன் கிட்ட எத்தனையோ குறை இருக்கற மாதிரி தான் என் கிட்டயும் இருக்கு. இங்க யாருமே பெர்பேக்ட் இல்ல. ஒருத்தர ஒருத்தர் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போனாத்தான் வாழ்க்கை நிம்மதியா போகும். இல்லைபா இப்படி தினம் சண்டைப் போட வேண்டியதுதான். சில விஷயங்கள் பிறந்ததில இருந்து நம்ம கூட வரது. அதெல்லாம் பட்டுன்னு எப்படி மாத்திக்க முடியும்? விரல்ல சப்புறதுலாம் ஆட்டோமடிக்கா என்னை அறியாமலே நான் செய்யறது! அதுக்கு என்னை வெறுத்திடுவியா நீ??? அப்படிப் பார்த்தா நீ நகத்தைக் கடிச்சுத் துப்பறது கூடத்தான் எனக்குப் புடிக்கல. ராத்திரி விடிய விடிய பாட்டு ஓட விட்டுத் தூங்கறது கூடத்தான் எனக்குப் புடிக்கல! நான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகல! போக போக உனக்கு என்னைப் பழகிடும், எனக்கு உன்னைப் பழகிடும்டா!! கொஞ்சம் டைம் குடு ப்ளிஸ்"

கண்கள் கலங்கிப் போய் நின்றிருந்தவள்,

" நீங்க குறட்டை விடறீங்க!" என இன்னொரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தாள்.

" நீயும்தான்டி"

"அதெல்லாம் இல்ல!"

" ரொம்ப கீயூட்டா இருக்குன்னு நான் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்!"

"பொய் சொல்லாதீங்க! அது குறட்டையா இருக்காது. கொஞ்சம் வேகமா மூச்சு விடற சத்தமா இருக்கும்"

" ஆமாடி! நான் விட்டா குறட்டைக் கச்சேரி. நீ விட்டா இளையராஜா மியூசிக் கச்சேரி." என்றவனின் நெஞ்சில் குத்தினாள் வித்யா.

அந்த சண்டை அழகான சமாதானத்தில் முடிந்தது.
இனி வரும் காலங்களிலும் ஒருத்தொருக்கொருத்தர் குறை சொல்லி சண்டைப் போடுவார்கள் இருவரும். அதில் வெறுப்பு இருக்காது, இல்லறத்தை எப்படி சிறப்பாக்குவது எனும் பொறுப்பு இருக்கும்.
 
Author: VanishaAdmin
Article Title: இல்லறம்
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
Super 🥰
குறை இல்லாத மனுஷங்க கிடையாது... புரிதலோட ஒருத்தருக்கொருதர் விட்டுக் குடுத்து வாழ்ந்தா வாழ்க்கை அழகா இருக்கும் ❤️
 
  • Like
Reactions: VanishaAdmin

Nirmala senthilKumar

Active member
Aug 17, 2024
83
-155
43
'எத்தனையோ விதமா லட்டு லட்டா ஆம்பளைங்க இந்த பூமியில இருக்க, என்னை ஏன் கடவுளே இந்தக் கழிசடைக் கூட கோர்த்து விட்ட!!!' என மனதிலே ஆயிரத்து எட்டாவது முறையாக புலம்பினாள் வித்யா.

சோபாவில் அமர்ந்து கிரிக்கேட் மேட்ச் பார்த்தப்படியே குர்குரே சிப்ஸ் சாப்பிட்டக் கையை தனது காற்சட்டையில் துடைத்துக் கொண்ட கணவனைப் பார்த்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. திருமணமான இந்த ஆறு மாதத்திலேயே வாழ்க்கை கசந்துப் போயிருந்தது வித்யாவுக்கு.

எழில், அவளது கணவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவளுக்கு கடுப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தன. ஆரம்பத்து ஆறு மாதங்கள் எழில் மேல் ஏகமாய் முகிழ்த்தக் காதல், அதற்கு பிறகு கோபமாய் மாறிப் போனது. அவன் என்ன செய்தாலும் அதில் மனம் ஒரு குறையைக் கண்டுப்பிடித்தது. இப்பவா அப்பவா என வெடிக்க தயாராக இருந்த எரிமலை அன்று வெடித்தேப் போனது.

" வித்தும்மா! ஒரு காபி ப்ளிஸ்"

முனகிக் கொண்டே காபி போட்டு எடுத்து வந்தாள். அதை அவன் ரசித்து, ருசித்து கடக் கடக்கென சப்புக் கொட்டிக் குடிப்பதைப் பார்த்தவள்,

" கொஞ்சம் டீசண்டா குடிக்கக் கூடாதா?" என கேட்டாள்.

அவளை நிமிர்ந்துப் பார்த்தவன்,
" டீசண்டானா எப்படி?" என கேட்டான்.

" மாடு கழனி தண்ணிய குடிக்கற மாதிரி எதுக்கு கடக்கு முடக்குன்னு குடிக்கறீங்க?"

" என்னடி பொசுக்குன்னு கட்டன புருஷன மாடுன்னு சொல்லிட்ட!" என அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டாய் முடித்தான் இவன்.

"சோறு சாப்பிடறப்பவும் அப்படித்தான், சவுக்கு சவுக்குன்னு மெல்ல வேண்டியது! அதோட போச்சா, துவைச்சு மடிச்சு வச்சத் துணிய கலைச்சு வைக்கறது, வாசல்ல செருப்ப அங்கொன்னும் இங்கொன்னுமா கழட்டிப் போடறது, டீவி பார்க்கறப்போ சின்னக் குழந்தை மாதிரி வாய்க்குள்ள ஒரு விரல விட்டுக்கிட்டு சப்ப வேண்டியது, இப்படி நீங்க செய்யற பாதி காரியம் எனக்குப் புடிக்கல!! எரிச்சலா வருது" என மூச்சைப் பிடித்துக் கத்தினாள் வித்யா.

" ஏன்டிம்மா பி.எம்.எஸா உனக்கு? சரி விடு! ரிலேக்ஸாகு! கூல் கூல்" என்றவன் அவளுக்குப் பிடித்த மாதிரி சீனி அதிகமாய் போட்டு காபி கலந்து வந்துக் கொடுத்தான்.

அடுத்த ஒரு வாரம் அப்படியே போனது. அன்று வேலை முடிந்து வந்தவன், குளியலைறைக்குப் புகுந்தான். இரண்டே நிமிடங்களில்,

"வித்யா" என கத்தினான்.

"சொல்லுங்க" என ஓடி வந்தாள் அவள்.

" பாத்ரூம் முழுக்க உன் முடி! இப்படித்தான் குளிச்சிட்டுப் போவியா?" என கத்தினான் இத்தனை நாளும் சத்தமில்லாமல் முடியைக் கூட்டி எடுத்து குப்பையில் போடும் எழில்.

" சாரிங்க"

ஒன்றும் சொல்லாமல் படாரென கதவடைத்துக் கொண்டான் அவன்.

குளித்து வந்தவன் மீண்டும்,

"வித்யா" என கத்தினான்.

இந்த முறை என்னவோ என வந்தவளை முறைத்தவன்,

" பவுடர் அடிச்சா ட்ரெசிங் டேபிள துடைக்க மாட்டியா? எப்படி இருக்குப் பாத்தியா இந்த இடம்? சீப்புல முடி ஒட்டிக் கிடக்குது, கண்ணாடி முழுக்க மூஞ்சு கூடப் பார்க்க முடியாம பொட்டா ஒட்டிக் கிடக்குது!! எரிச்சலா இருக்கு வீட்டுக்கு வந்தாலே !" என கத்தினான்.

இவளுக்கு கண்கள் கலங்கிப் போனது. பாவமாய் அவனைப் பார்க்க,

" உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?? போன வாரம் எப்படி வச்சு செஞ்ச என்னை! அந்த டைம்ல நானும் பேசி சண்டைய வளக்க வேணாம்னு விட்டுட்டேன். உன் கிட்ட எத்தனையோ குறை இருக்கற மாதிரி தான் என் கிட்டயும் இருக்கு. இங்க யாருமே பெர்பேக்ட் இல்ல. ஒருத்தர ஒருத்தர் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போனாத்தான் வாழ்க்கை நிம்மதியா போகும். இல்லைபா இப்படி தினம் சண்டைப் போட வேண்டியதுதான். சில விஷயங்கள் பிறந்ததில இருந்து நம்ம கூட வரது. அதெல்லாம் பட்டுன்னு எப்படி மாத்திக்க முடியும்? விரல்ல சப்புறதுலாம் ஆட்டோமடிக்கா என்னை அறியாமலே நான் செய்யறது! அதுக்கு என்னை வெறுத்திடுவியா நீ??? அப்படிப் பார்த்தா நீ நகத்தைக் கடிச்சுத் துப்பறது கூடத்தான் எனக்குப் புடிக்கல. ராத்திரி விடிய விடிய பாட்டு ஓட விட்டுத் தூங்கறது கூடத்தான் எனக்குப் புடிக்கல! நான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகல! போக போக உனக்கு என்னைப் பழகிடும், எனக்கு உன்னைப் பழகிடும்டா!! கொஞ்சம் டைம் குடு ப்ளிஸ்"

கண்கள் கலங்கிப் போய் நின்றிருந்தவள்,

" நீங்க குறட்டை விடறீங்க!" என இன்னொரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தாள்.

" நீயும்தான்டி"

"அதெல்லாம் இல்ல!"

" ரொம்ப கீயூட்டா இருக்குன்னு நான் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்!"

"பொய் சொல்லாதீங்க! அது குறட்டையா இருக்காது. கொஞ்சம் வேகமா மூச்சு விடற சத்தமா இருக்கும்"

" ஆமாடி! நான் விட்டா குறட்டைக் கச்சேரி. நீ விட்டா இளையராஜா மியூசிக் கச்சேரி." என்றவனின் நெஞ்சில் குத்தினாள் வித்யா.

அந்த சண்டை அழகான சமாதானத்தில் முடிந்தது.
இனி வரும் காலங்களிலும் ஒருத்தொருக்கொருத்தர் குறை சொல்லி சண்டைப் போடுவார்கள் இருவரும். அதில் வெறுப்பு இருக்காது, இல்லறத்தை எப்படி சிறப்பாக்குவது எனும் பொறுப்பு இருக்கும்.
Nirmala vandhachu 😍 😍 😍
💐💐💐
 
Goms

Well-known member
May 15, 2025
138
-192
63
ஹா...ஹா... இந்த மாதிரி மாறி மாறி குறை கூறியும் குறையை திருத்தி, புரிந்துணர்வோடு நிறைவாய் வாழலாம்னு காட்டியிருக்கீங்க. 🥰🥰🥰
 
  • Love
Reactions: VanishaAdmin