அன்பே . .

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

lakkuCPT

New member
May 24, 2026
20
0
3
அன்பே சிவம்,
என்பதே சைவம்!

கூறினர் கூர்மையாய்,
பிறவுயிர், தம்முயிர்,
வெவ்வேறென நினைப்பின்,
வைணவமில்லையென!

தாம்வாழ பிறவுயிர் கொல்லாமை,
தன் நா சுவைக்காய்,
புலால் உண்ணாமைச் சிறப்பு,
சொல்லிற்று சமணம்!

தியானமும், மௌனமும்,
தன்னையுணரும் வழி,
புதைஆசை விடுத்து,
போதித்தது பௌத்தம்!

சாண் வயிற்றுக்காய்
சுய பிச்சை நீக்கி,
சம்பாதித்துண், நல்வழியில்,
சாதித்தது சீக்கியம்!

எண்ணம், சொல், செயல்
என யாவும் எப்போதும்
நல்வண்ணமேயிருக்க நவின்றது, பாரசீகத்து ஜொராஸ்ட்ரியம்!

முதல் கல்லெறியுரிமை
இதுகாறும் பாவமற்றவர்க்கே!
கோவம் மக்கள் ஒடுக்க,
கொட்டியது விவிலியம்!

அண்டாதே மது!
தீண்டாதே வட்டி!
ஏழைக்கிதயமிரங்கு!
வழிக்காட்டியது இஸ்லாம்!

தனித்தனிக் கூற்றெதற்கு,
தமிழ் முழங்கிற்று,
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்!
இதை உணர்ந்தால்,
இதன் வழி நடந்தால்,
இரார் மாக்கள்! இருப்பர் மக்கள்!
இனிய மனிதம் நிலைத்து!
வாழ்வும், வளமும் வளர,
சுழலட்டும் பூமி தொடர்ந்து,
நல்லவை யாவும் சுமந்து,
எல்லாவுயிர்கட்கும்!
 

Author: lakkuCPT
Article Title: அன்பே . .
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: VanishaAdmin