லக்கி வீடு - 2

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
37
6
93
நல்ல வேளையாய் பார்வதி ஏதோ வேலையாய் அகன்று விட பூஜாவை பார்த்து விழித்தாள் வர்ணி. அதே சமயம் அதே அதிர்ச்சி விழிகளோடு இவளையே பார்த்திருந்த பூஜாவும் இவளது பார்வையை கவனித்து விட்டு, "நாமிருக்க பயமேன்" என்று விழிகளை மூடி அபயமளித்தவள், "வர்ணி கொஞ்சம் கவுன்டரை பார்த்துக்கோ எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு..” என்று விட்டு “ஆன்ட்டி எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?" என்று கண்ணை சுருக்கி கேட்டாள்.

அதற்கு பதிலாய் பெரும் உற்சாகத்துடன் புன்னகைத்த லக்கி ஆன்ட்டியும், "நான் அதுக்குத்தானே இருக்கேன்.." என்று சிரித்துக்கொண்டே உள்ளே போக வர்ணிக்கு தலை சுற்றியது. அந்த நேரம் பெரிதாய் மாலில் கூட்டமும் இல்லை ஆக காதுகளை உள்ளே வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் வர்ணி.

உள்ளே எந்த சூழலையும் சமாளிப்பதில் வல்லவள் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்கொண்டிருந்தாள் பூஜா.

எல்லா காபி கடைகளை போலவும் டார்லிங் காபேயிலும் மூன்று அளவுகளில் காபி வழங்கும் கப்கள் இருக்கும். வேகமாய் எடுக்க வசதியாய் அன்றைய நாளுக்கு தேவைப்படும் கப்களை கம்பி போல தாங்கிகளை கொண்ட ஒரு தட்டில் இவர்கள் கவிழ்த்து வைப்பதுண்டு. உள்ளே சென்றவள் அதை அடுக்க ஆரம்பிக்க ஒரு குழந்தையின் உற்சாகத்துடன், "ஸ்மால், மீடியம், லார்ஜ்" என்று சொல்லிக்கொண்டே லக்கி ஆன்ட்டியும் கப்களை அடுக்குவது இவளின் காதில் விழுந்தது.

"வர்ணிக்கு இதையெல்லாம் அடுக்க வராது ஆன்ட்டி. தப்பான கப்பை எடுத்து கொடுத்துருவா. அதுக்காகவே நான் எல்லாத்தையும் அடுக்கி ரெடியா வச்சிருவேன்" என்று பூஜா சொல்ல

உன் போதைக்கு நான் ஊறுகாயா என்று நொந்த படி கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ணி.

"டார்லிங். தப்பா அடுக்குற. அந்த கப் இங்கே வரணும்"

"ஒ சாரி ஆன்ட்டி. இந்தாங்க..” என்றவள் சில கணங்களின் பின் “ஆனாலும் நீங்க செம்ம ஆளு. உங்க கூட இருந்தா சிரிச்சிட்டே இருக்கலாம்: என்று ஆரம்பித்து “அதுவும் நீங்க இங்கே வேலை பார்க்கறதா சொன்னதை பார்வதி ஆன்ட்டி நம்பிட்டாங்க..ஹா ஹா " என்று சிரித்தபடி மெதுவாய் பூஜா விஷயத்துக்கு வர அவ்வளவு நேரமும் கலகலவென்று பதில் சொல்லிக்கொண்டிருந்த ஆன்ட்டியின் பக்கம் நிசப்தமாய் போனது வர்ணிக்கு ஏனோ மனம் பிசைந்தது.

சில கணங்களின் பின் "நான் ...நான் இங்கே வொர்க்..வொர்க் பண்ணலையா?" என்று அவரது குரல் மெலிந்து வர அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அவளும் உள்ளே போய்விட்டவள் தவிப்பாய் விழிகளை பூஜாவில் பதிக்க அவளும் அதே முகபாவனையோடு தான் இருந்தாள்.

"இல்லை ஆன்ட்டி.. நாங்க உங்களை இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் பார்த்தோம்." என்று மென்மையாய் சொன்னாள் பூஜா.

அவரோ தொலைந்து விட்ட குழந்தையாய் விழிகளை மூடி மூடி திறக்க நிச்சயம் இவருக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி பிரச்சனையோ இல்லை அதோடு தொடர்பாய் ஏதோவோ இருக்கிறது இவர்களுக்கு புரிந்து போனது.

"ஆன்ட்டி நீங்க யார் கூட வந்தீங்க? அவங்க இங்கே தான் இருக்காங்களா?" என்று வர்ணி மெல்ல தூண்டில் போட்டு பார்க்க

"ம்ம்.." என்று குழப்பமாய் தலையசைத்தவர் வேறொன்றும் சொல்லவில்லை.

அவரது முகத்தை பார்த்ததிலேயே எதையும் கேட்டு அவரை இன்னும் பதட்டப்படுத்த அவளுக்கு மனம் வரவில்லை.

"ஒகே லக்கி ஆன்ட்டி என்ன வேலை நேரத்தில் வெட்டிக்கதை பேசிட்டிருக்கீங்க? ஹ்ம்ம்" என்று லேசான சிரிப்போடு கேட்டாள் வர்ணி

அவ்வளவு தான் ஒரு இமை மூடித்திறப்போடு முகமும் மொத்தமாய் வெளிச்சம் போட்டுக்கொள்ள, "டார்லிங் நீ தான் என்னை டிஸ்டர்ப் பண்ண" என்று சிரித்துக்கொண்டே சொன்னவர், "வெளியே எவ்வளவு கஸ்டமர் வெயிட் பண்றாங்க? காக்க வைக்க கூடாது அது தப்பு" என்று கொண்டே உற்சாகமாய் சேலை தலைப்பை தூக்கி மேலே போட்டுக்கொண்டு வெளியே போக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் இருவரும்.

"என்னடி பண்றது?" என்று வர்ணி பூஜாவின் காதை கடிக்க

"எப்படியும் இவங்களை கூட்டிட்டு வந்தவங்க வரத்தானே செய்வாங்க." என்று யோசனையாய் சொன்னாள் பூஜா

"சரி அதுவரை வெளியே போய் தொலைஞ்சு போகாம நம்ம கூடவே பாதுகாப்பா இருக்கட்டும்.. ஒரு நாள் தானே" என்று வர்ணியும் சொல்ல லக்கி ஆன்ட்டியின் இருப்பு அங்கே உறுதி செய்யப்பட்டது. சில நிமிஷங்கள் கழிய கொஞ்ச நேரம் முன் குழம்பி நின்றவர் அவரா என்பதை போல காலம் காலமாய் பழகியவர் போல மால் வாசிகளுடன் கலகலக்க ஆரம்பித்து விட்டார்.

"என்னப்பா வேணும்?"

"க்ரோசான் ஒண்ணு."

"ஒண்ணு சாப்பிட்டா என்னத்துக்கு ஆகும் உடம்பு? இதுக்கு மேலேயும் ஒல்லிக்குச்சி பயில்வானா ஆகிடுவ ரெண்டு வாங்கிக்கோ." என்று ஆன்ட்டி உறுதியாய் சொன்னதில் ஏற்கனவே ஒல்லியாய் இருப்பதில் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி ஜிம்முக்கு வந்திருந்தவன் அவசரமாய் இரண்டை வாங்கிக்கொண்டே அகன்று விட வர்ணிக்கு சிரிப்பு தாளவில்லை. எதிர்க்கடையில் இருந்த குமார் கண்களால், 'யார் இது?' என்று விசாரிக்க, 'பிறகு சொல்கிறேன்' என்று அவளும் சைகையிலேயே பதில் சொல்லி ஆன்ட்டியின் முன்னிலையில் பேசுவதை தவிர்த்து விட்டாள்.

கலகலப்பாய் சுற்றிக்கொண்டிருப்பவர் அவ்வப்போது குழம்பி நிற்பதும் யாருடையதேனும் பேச்சுக்குரல், இல்லையேல் காபி ஆர்டர் செய்யும் சத்தம் கேட்கும் போது மீண்டும் வழமைக்கு திரும்பி விடுவதையும் வர்ணி கவனிக்கவே செய்தாள். அவரை தேடி யாரும் வரவில்லையே என்பது வேறு பதட்டமாய் இருந்தது.

பதினொன்று நாற்பது இருக்கும் காரம்போர்ட் விளையாடிக்கொண்டிருந்த சதாசிவம் அங்கிள் காபி வாங்க வந்தார். வழக்கமாய் கடைக்கு வரும் ஓய்வுபெற்ற அலுவலர் அவர்.

"யார் இவங்க? பார்த்ததே இல்லை" என்று அவர் லக்கி ஆன்ட்டியை பார்த்து சிநேகமாய் புன்னகைக்க "வாங்க சார்.. நான் தான் மானேஜர், என் கிட்ட தங்கமான ரெண்டு பொண்ணுங்க வொர்க் பண்றாங்க. இது டார்லிங்" என்று வர்ணியை காண்பித்து விட்டு பூஜா பக்கம் திரும்பி குழம்பி விட்டு பிறகு, "என்ன வேணும் உங்களுக்கு எதுன்னாலும் கேளுங்க பசியோட இருக்க கூடாது" எனவும் பாவம் சதாசிவம் அங்கிள் அதிர்ந்து வர்ணியை பார்க்க இந்தப்பக்கம் அப்போது தான் தண்ணீர் குடிக்க வாய் திறந்த பூஜாவுக்கு புரையேறி போயிருந்தது, இரும ஆரம்பித்திருந்தாள்

ஐஸ்க்ரீம் கடை பாய்ஸ் வேறு இங்கேயே காதை தீட்டிக்கொண்டிருந்து விட்டு குபீரென்று சிரிக்க ஆரம்பிக்க முதலில் அவர்களை கண்ணால் அடக்கியவள் அங்கிளிடமும் எதுவும் பேசவேண்டாம் அந்த ப்ளோவிலேயே போய்விடும்படி கையை காண்பித்தாள். அவரும் புரிந்து கொண்டு அன்றைக்கு தான் வர்ணி வைத்திருந்த பூச்செடிகளை பாராட்ட ஆரம்பிக்க, செடிகள் உடல்நிலைக்கு எவ்வளவு நல்லது என்று புன்னகையோடு சொல்லிக்கொண்டிருந்தார் லக்கி ஆன்ட்டி.

அதன் பிறகு பதினொன்று நாற்பத்தைந்துக்கு எப்போதும் போல அந்த மாலில் இருக்கும் கடிகாரம் டிங் என இரண்டு முறை அடித்து ஓய லக்கி ஆன்ட்டியும் பேச்சை நிறுத்தி திரும்பியவர், "டார்லிங்.. என்னோட ஷிப்ட் முடிஞ்சது வர்றேன்" என்று வர்ணிக்கும் பூஜாவுக்கும் விட்டு சந்தோஷமாய் மாலுக்கு உட்புறம் போக இப்போது திகைத்து நிற்பது இவர்களின் முறையானது.

"வர்ணி.. நாளைக்கு உங்க மானேஜரை இந்த பக்கம் அனுப்பி விடுங்க.. செமையா பிசினஸ் பண்றாங்க.." என்று ஐஸ்க்ரீம் பாய்ஸ் குரல் கொடுக்க

"கிண்டல் பண்ணாதிங்க.. அவங்களுக்கு உடம்பு சரியில்லை. யாரோ தெரியல." என்று அவர்களை அடக்கியவள் சதாசிவம் அங்கிளுக்கு நடந்ததை சொல்ல அவரும் அனுதாபமாய் தலையசைத்தார்.

"அவங்க பேச பேச எனக்கே புரிஞ்சதும்மா.. இப்போ வயசாயிட்டாலே கை கால் முடியாம போயிடக்கூடாதுன்னு வேண்டிக்கிறதை விட இப்படி நான் யார்னே மறந்து போயிடுற நிலைமை வரக்கூடாதுன்னு தான் வேண்டிக்க வேண்டியிருக்கு." என்று அவர் வருத்தமாய் சொல்ல

"அவங்களுக்கு சின்ன வயசுல வேலை செய்யணும்னு ஆசை இருந்திருக்கும் போல. திரும்ப திரும்ப பொண்ணுங்க சம்பாதிக்கணும் சொந்தக்கால்ல நிக்கணும் என்று சொல்லிட்டே இருந்தாங்க" என்று வந்து சேர்ந்து கொண்டாள் பூஜா.

"சிலருக்கு நினைவுகள் மறந்து போய் சந்தோஷமா இருந்த இளமைக்காலம் மட்டும் துண்டு துண்டா ஞாபகம் இருக்கும். இவங்களும் அப்படியோ தெரியலை" என்றவர், "இருங்க அவங்க பத்திரமா போயிட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன்.. இந்தப்பக்கம் வந்தா மாலுக்கு வெளியே போக விடாதிங்க.. கடைலையே உக்கார வச்சுக்கொங்க" என்று விட்டு சென்று மறைய இவர்கள் வேலையை தொடர்ந்தனர்.
 

Author: Ush
Article Title: லக்கி வீடு - 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
37
6
93
அன்றைக்கு அந்த லக்கி ஆன்ட்டியோ சதாசிவம் அங்கிளோ திரும்ப வரவில்லை. அங்கிள் கார் வைத்திருப்பதால் மறு வாசல் வழியே போயிருப்பார்.. அந்த ஆன்ட்டியும் போயிருப்பாங்க என்று எண்ணிக்கொண்டவர்களின் நாள் மீண்டும் வழமைக்கு திரும்பியது.

மூன்று மணி இருக்கும் ஐஸ்க்ரீம் கடையின் புதிய மெனுவை காபியாக பூஜா மாற்றியதில் சண்டை வலுக்க வர்ணி சண்டைக்கு மதியஸ்தராய் கடமை ஆற்றிக்கொண்டிருந்த தருணம் வெளியே இருந்து அமெரிக்கானோ காபி பார்சல் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான் சாஹி.

இந்த ப்ளாக் காபிக்காக அவன் வெளியே போய்விட்டு வருவதை பார்க்க பாவமாய் தான் இருந்தது. ஆனால் அவளை அவமானப்படுத்தியவனை மன்னித்து காபி கொடுக்க அவள் புத்த பெருமாட்டியும் இல்லையே..

அவள் அவனையும் காபியையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்க

"அண்ணா. பரமேஸ்வரி மாலுக்குள்ளே டார்லிங் காபியை தவிர வேறேதும் நுழையக்கூடாதாம்,, அந்த காபியை வெளியே வச்சிட்டு வான்னு வர்ணி சொல்லுது." என்று குரல் கொடுத்தான் குமார்

அதிர்ந்து போய் "எலேய் என்ன வேலைடா பார்க்குற" என்று வர்ணி ஐஸ்க்ரீம் கடைக்குள் பதுங்கி கொள்ள திரும்பி பார்த்த சாஹித்தியன், "கேட்கலை" என்று இமைகளை நெரித்தான்.

அந்த பாவனை ஒன்று போதுமே..

"ஒண்ணுமில்லண்ணா நீங்க போங்க" என்று அசட்டு சிரிப்போடு சொல்லி தப்பித்தவனை அது என்பது போல முறைத்தவன் விடுவிடுவென உள்ளே போய் விட்டான்.

திட்ட வார்த்தை கூட வராமல் குமாரின் மேல் கையில் அகப்பட்ட மாகசின் ஒன்றை தூக்கி வீசியவள் டார்லிங் கபேக்குள் ஓடிப்போய் விட்டாள் .
படபடப்பாய் வந்தது.

'நான் சும்மா இருந்தாலும் வம்புகள் நம்மை விடுவேனான்னே நிக்குதே.'

இப்படியே அன்றைய மாலை நேரமும் வழக்கமாய் கழிய இருவருக்குமே கடை வெறுமையான உணர்வு.

"அந்த ஆன்ட்டி நிஜமாவே நம்ம கூட இருந்தா ஜாலியா இருக்கும்ல.." என்று சிரித்தாள் வர்ணி

"ஆமா ஒரே மாசத்துல நம்ம பணக்காரங்க ஆயிடுவோம்." என்று புன்னகைத்த பூஜாவும் "நாளைக்கு வருவாங்களா?" என்று கேட்க

"ச்சே மறந்துருவாங்க.. அவங்களுக்கு ஞாபகம் இருந்தாலும் வீட்டு ஆட்கள் அனுப்ப மாட்டாங்க." என்றாள் வர்ணி.

ஆறு மணிக்கு கடையை பூட்டி எல்லாவற்றையும் எடுத்து வைத்து மீந்த உணவுகளை வழக்கமாக கொடுக்கும் ஆட்களிடம் தந்து விட்டவர்கள் வீட்டுக்கு வர ஆறே முக்கால் ஆயிருந்தது. இருவருக்கும் செம்ம பசி. வீட்டில் உணவு இருக்காது நன்றாகவே தெரியும். சமைக்க உடலில் தெம்பே இல்லை. ஆக வரும் வழியில் மூன்று பராட்டா பார்சல் வாங்கிக்கொண்டு வந்தவர்கள் ராக்கியை பூட்டி பத்திரமாய் வைத்து விட்டு படியேறி வர வெளியே பார்த்துக்கொண்டு அறைச்சுவரில் நின்று கொண்டிருந்தார் நித்தியா.

அதுவும் அவர்களுடைய தினப்படி காட்சிதான். பத்து வருடங்களுக்கு மேலாய் குழந்தைகள் இல்லாத தம்பதியினர் அவர்கள். அவரது பொழுதுபோக்கே மேலிருந்து கீழே விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது தான்.

"அக்கா..." என்று அருகில் போய் பயமுறுத்த சிரித்துக்கொண்டே திரும்பியவர், "இப்போ தான் நினைச்சேன் வரலையேன்னு வந்துட்டீங்க" என்று மலர்ந்து சிரித்தார்.
வாங்கி வந்த பராட்டா பார்சல்களில் ஒன்றை அவரிடம் நீட்ட, "நான் தான் சமைச்சு வச்சிட்டேனே, எதுக்கு தேவையில்லாம செலவு பண்றீங்க?" என்றவரின் குரலில் கோபமில்லை.

"உங்களுக்கு பராட்டா பிடிக்குமில்லை பிறகென்ன வெட்டி சீன்?" என்று அவரை நக்கல் செய்து விட்டு உள்ளே வந்து குளித்து உடை மாற்றி வழக்கம் போல தூங்குவதற்காய் ஏதோ ஒரு சீரீஸை ஓட விட்டுக்கொண்டிருந்தவளின் மனதில் மீண்டும் லக்கி ஆன்ட்டி வந்து நின்றார். கூடவே சதாசிவம் அங்கிள் சொன்னதும்.. 'பாவம்! எங்களை நினைவு வைத்திருக்கிறாரோ என்னமோ?'

மறுநாள் இந்த சம்பவத்தை கிட்டத்தட்ட மறந்தே போய் அவள் கடையை திறக்க யாரோ, "என்ன வர்ணி உங்க மானேஜரை காணோம்" என்று கிண்டல் செய்து விட்டு போக "மேடம் இன்னிக்கு வொர்கிங் ஃபிரம் ஹோம்" என்று சிரித்தவளின் சிரிப்பு பாதியில் நின்றது.

எதிரே அன்று பூத்த மலர் போல சிவப்பில் வெள்ளை பூக்கள் தெறித்த சேலையில் குழம்பிய விழிகளும் தெளிவில்லாத பார்வையுமாய் அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தார் லக்கி ஆன்ட்டி.

முதல் பார்வையிலேயே அவருக்கு எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை என்று புரிய ஏதோ உள்ளுணர்வில், "குட் மார்னிங் மானேஜர்" என்று சிரிப்போடு குரல் கொடுத்தாள் வர்ணி.

அடுத்த கணம் முகம் எங்கும் வெளிச்சம் போட்டுக்கொள்ள, "அடடா நேரத்துக்கு வந்துட்டீங்க.. குட் கேர்ள்ஸ் அப்படித்தான் பொண்ணுங்க சுறுசுறுப்பா இருக்கணும்" என்று பாராட்டிக்கொண்டே உள்ளே வர இவளின் சிரிப்பு இன்னும் பெரிதானது.

சுற்றிலும் ஆங்காங்கே நின்றவர்களும் சிரிப்போடு, "குட் மார்னிங் ஆன்ட்டி" என்று சொல்ல சந்தோஷமாய் தலையசைத்துக்கொண்டு இயல்பாய் டார்லிங் காபியின் ஊழியர் தடுப்பை திறந்து கொண்டு உள்ளே வந்தார் லக்கி ஆன்ட்டி.

"யாரும் என்னை தேடி வந்தா லக்கி இன்னிக்கு லீவ்னு சொல்லிடுங்க.." ரகசிய குரலில் அவர் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தலையசைத்துக்கொண்டவர்கள், 'யார் கிட்டயோ செமத்தியா வாங்கப்போறோம் அது மட்டும் நிச்சயம்' என்று எண்ணிக்கொள்ள ஆன்ட்டி பரபரப்பாய் சுழல ஆரம்பித்திருந்தார். அவருக்கு எந்த வேலையும் தராமல் ஆனால் அவர் அங்கே வேலை செய்வது போல அவரை உணர வைப்பது தான் கடினமான டாஸ்க்காய் இருந்தது.

தொண்ணூற்றொன்பது வீதம் அவரது வேலை கஸ்டமர்களோடு பேசுவதும் தட்டை கை மாற்றுவதும் தான்.
அன்றைக்கும் அதே பதினொன்று நாற்பத்தைந்து, கடிகார சத்தத்தோடு ஆன்ட்டியின் ஷிப்ட் முடிந்து போனது. 'யாரிந்த மர்ம ஆன்ட்டி? உள்ளிருந்து வர்றாங்க. மணி அடிச்சதும் போய்டுறாங்க..' இவர்களுக்கு புரியவே இல்லை.

“உள்ளே இருக்கற டெயிலர் ஷாப் அக்காவோட அம்மா போல..” என்று அதற்கிடையில் ஊகமாய் இன்டல் வந்து சேர்ந்திருந்தது.

அதற்கு அடுத்த நாள் காலையும் குழம்பிய முகத்தோடு எப்படியோ டார்லிங் கபேக்கு வந்து விட்டவர் பிறகு அங்கு கேட்கும் வழக்கமான சத்தத்தில் மானேஜராக மாறிக்கொண்டு விட்டார்.

வரும் போதே “அந்த நீள மூக்கு காரன் நான் இங்கே வொர்க் பண்ணலைன்னு சொல்லுறான்.. பொய்.. ஆம்பளை தானே அவனுக்கு பொண்ணுங்க சுதந்திரமாயிட்டா பிடிக்காதே.. ஆனாலும் நான் கண்டுபிடிச்சு வந்துட்டேன்." என்று குற்றம் சாட்டிக்கொண்டே மூக்கு சிவக்க ஆன்ட்டி உள்ளே வர

பூக்கடை சிவாவுக்கு தான் மூக்கு நீளமாய் இருக்கும் என்று வர்ணி கண்டுபிடித்து சிரித்தாள்

. "ஆன்ட்டி அந்த அங்கிள் ஒரு ஹிட்லர் அவர்கிட்ட பேச்சு வார்த்தை வைக்காதிங்க." என்று ரகசியமாய் பூஜா ஆன்ட்டியிடம் சொல்ல

"யார்?" என்று குழப்பமாய் கேட்டார் அவர்.

"சிவா அங்கிள்.. நீள மூக்குகாரர்." என்று பூஜா மேலும் விளக்கம் கொடுக்க

"பாடி ஷேமிங் பண்ணாத டார்லிங் அது தப்பு.."என்று அவளின் கையில் ஒரு அடியை போட்டு விட்டு ஆன்ட்டி உள்ளே போய் விட பூஜாவின் முகம் போன போக்கை பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் வர்ணி.

இப்படியாக லக்கி ஆன்ட்டியும் அவரது இரண்டு அசிஸ்டன்ட்களும் ஜெகஜோதியாய் காபி விற்பனையில் ஹிட்டடித்துக்கொண்டிருக்க மூன்றாம் நாள் காலையிலே உள்ளே வரும் போதே பார்வதிக்கும் சிவாவுக்கும் வழக்கம் போல முட்டிக்கொண்டு விட இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

"ஹேய் என்ன பழக்கம் இது பொண்ணு மேல கை ஓங்குறது" என்று முறைப்பாய் கேட்ட குரல் சாட்சாத் லக்கி ஆன்ட்டி உடையதே தான்.

ஐயையோ இந்த சண்டையில் யாருமே உள்ளே போக மாட்டாங்களே என்று பதறி வர்ணி ஓட

"லூசு.. ஏன்மா உன்னை யாராவது கூப்பிட்டாங்களா? என்று ஆன்ட்டியை திட்டி விட்டு “கடைசில பைத்தியத்துகிட்ட பேச்சு வாங்க வச்சிட்டல்ல" என்று தன் மனைவியையும் திட்டலானார் அம்மனிதர்

சுள்ளென்று ஏறிவிட்டது அவளுக்கு "அங்கிள் நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மறந்து போய்டறது மனநோயா? கொஞ்சமாச்சும் பெரிய மனுஷன் மாதிரி பேசுங்க." என்று கோபமாய் அவரை முறைத்து விட்டு, "நீங்க வாங்க மானேஜர்" என்று லக்கி ஆன்ட்டியை கைப்பிடித்து அழைத்து வர ஆட்டுக்குட்டியாய் அவளோடு கூட வந்தார் அவர். "உன்னால தாண்டி எல்லாம்" என்று அந்த சிவா பின்னால் இருந்து மனைவியிடம் கத்துவது கேட்டது. ஆனாலும் இவள் காதில் வாங்கவில்லை.

பூஜா உடனேயே அவரை உள்ளே கூட்டிப்போய் அவருக்கு பிடித்த கப்களை அடுக்கும் வேலையை கொடுத்து விட அவர் சகலதையும் மறந்து குழந்தையின் உற்சாகத்துடன் கப்களை அடுக்க ஆரம்பித்து விட்டார்.. வர்ணிக்கு தான் மனசே ஆறவில்லை.

இது போதாது..உனக்கு இன்னும் தரமான சம்பவம் இருக்கு என்று சனிபகவான் எண்ணியிருக்க வேண்டும். பூஜாவை அவளின் காதலன் பிரதீப் எங்கோ அழைத்து போயிருக்க, கடையில் வரணி மட்டும் தான் இருந்தாள். சரியாக காலை பதினொன்று நாற்பதுக்கு அவளுக்கு முன்னே பிரசன்னமானான் சாஹித்யன்.

கண்கள் அவளை எரித்து விடுவது போல அவ்வளவு கோபமாய் இருந்தன.
'காபி குடிக்கலைன்னா நரம்பு தளர்ச்சி வந்து கண்ணெல்லாம் சிவந்துடும் போல பாவம்' என்று எண்ணிக்கொண்டவள் வேண்டுமென்றே, "கோ டயபெட்டிக் காபி காம்போ ஆபர்ல போயிட்டிருக்கு. வேணுமா?" என்று கேட்க "மிசஸ் லக்கி" என்று பல்லை கடித்தான் அவன்.

அதிர்ந்து "அ.. அது" அவள் விழிக்க ஒரே ஜம்பில் உற்சாகமாய் அவள் அருகில் ஆஜரான லக்கி , "சாஹி!" என்று குதூகலித்து, "இது டார்லிங் என் அசிஸ்டன்ட்" என்று சொல்ல வர்ணி மானசீகமாய் தலையில் கை வைத்துக்கொண்டாள்.
அவனோ அதையெல்லாம் கேட்டதாய் காண்பிக்கவே இல்லை.. ஒரு குழந்தைக்கு சொல்வது போல, "வெளியே வாங்க.. சாப்பிடலாம்." என்று மென்மையாய் சொல்ல, 'நீயா பேசியது?' என்று விழிகளை பந்தாய் விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள் வர்ணி.

'இந்த அழகு தெய்வத்தின் மகனாயா நீ.. இப்பிடி மாட்டிக்கொண்டேனே..

அந்த மாலில் பழைய கார் என்றாலும் கார் வைத்திருக்கும் இருவரில் அவனும் ஒருவன் ஆக வரும் போது மறு வாசலை தான் உபயோகிப்பான்.. இப்போது புரிகிறது லக்கி ஆன்ட்டி ஏன் உள்ளிருந்து வந்து கொண்டிருந்தாரென்று.. கொஞ்சம் யோசித்திருந்தால் கண்டு பிடித்திருக்கலாம்.. ப்ச் வசமாய் மாட்டிக்கொண்டு விட்டோம்' என்று அவள் நிற்க

அம்மாவை ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர வைத்து விட்டு இவளிடம் திரும்பி வந்தவன், "உடம்பு சரியில்லாதவங்களை வேலை வாங்குறியே அறிவிருக்கா?" என்று பல்லைக்கடித்தான்.

"அடப்பாவி.. சார் அளந்து பேசுங்க.. அவங்களா வந்தாங்க. அவங்க கண்டிஷன் தெரிஞ்சதும் வெளியே போனா தொலைஞ்சு போயிருவாங்கன்னு கூப்பிட்டு வச்சிக்கிட்டோம். அதுக்கு என்ன பேச்சு பேசுறீங்க? எங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்." என்று அவள் கோபமாய் சத்தம் போட

அதை கொஞ்சமும் கணக்கெடுக்காமல் "எனக்கு அந்த இந்த கதையெல்லாம் வேணாம். இனிமே அம்மாவை வச்சு வேலை வாங்கறதை பார்த்தேன்.. நீயும் உன் கடையும் இங்கே இருக்க மாட்டீங்க." என்று மிரட்டலாய் அவன் சொல்ல

"ஓவரா பேசாதிங்க சார்.. வேணும்னா உங்கம்மாவை நீங்க ஒழுங்கா பார்த்துக்கோங்க. இங்கே அனுப்பாதிங்க.. வர்றவங்களை கோபமா திட்டி விரட்ட என்னால முடியாது." அவளும் விடவில்லை

"ஏய்.." என்று பல்லைக்கடித்தவன், "இன்னொரு தடவை இது நடந்துச்சு!" என்று நிறுத்தி விரலாலும் எச்சரிக்கை செய்து விட்டு போக தலையை பிடித்துக்கொண்டாள் வர்ணி.

திங்கள் வர்றோம் மீண்டும்
 

Chitra ganesan

Active member
Aug 3, 2024
70
-42
43
ஹீரோவோட அம்மாவா🙄
நல்லது தானே பண்ணா..அதுக்கு திட்டுறானே 🤨
நாளைக்கும் லக்கி ஆண்ட்டி வருவாங்களே..என்ன பண்ணுவானாம்😉
 
Aug 3, 2024
53
-3
43
ஓ... இவனோட அம்மா தானா.. 😁
மூணு நாளா தேடாம எங்க போனானாம்🙄
வர்ணி பத்திரமா தானே பார்த்துக்கறா
இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம்,.. காபி தரலன்னா? 🤭

சண்டை வலுக்குதா இல்ல உறவு நெருங்குதா 😍
 

Ush

Well-known member
Feb 8, 2026
37
6
93
True crime ellam parkuriye varni. Thriller lam pakkalam illa. Ivanoda Amma va இருப்பாங்கன்னு ninachen. Btw the ratio and range of female characters in the story very much soul filling.
la? :love: purposeful aa seiyalai but it happened

அம்மா பையனா
yesss
Hey..................
Varni mother in law thaana adhu
En guess correct dhaana
illa vera twist irukkuma
yesss correctuu
haha indha story la twists e irukaathu
ஹீரோவோட அம்மாவா🙄
நல்லது தானே பண்ணா..அதுக்கு திட்டுறானே 🤨
நாளைக்கும் லக்கி ஆண்ட்டி வருவாங்களே..என்ன பண்ணுவானாம்😉
athaane..
avan POV varum next episode ..kettu solren
ஓ... இவனோட அம்மா தானா.. 😁
மூணு நாளா தேடாம எங்க போனானாம்🙄
வர்ணி பத்திரமா தானே பார்த்துக்கறா
இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம்,.. காபி தரலன்னா? 🤭

சண்டை வலுக்குதா இல்ல உறவு நெருங்குதா 😍
varni pathrama parthuppannu avanuku theriyadhe..
haha coffee than reason 😍
Nerungattum lol
Sahiyoda mummy ah than irupangannu ninachen... Ennavam avanuku? Ipdi Urrnu irukan..
paavam thangappillaiya thittadhinga..appuram varuthappaduveenga:ROFLMAO:
 

Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
சாஹி அம்மாவா லக்கி ஆண்ட்டி...
லக்கி நிலை வருத்தமா இருக்கு... 🙁 ஆனா எனர்ஜியா ஹாப்பியா இருக்காங்க எல்லாம் மறந்த நிலையில..🙂

சாஹி அவங்க எங்க வேலை பார்க்குறாங்க மேனேஜரே அவங்க தான்...😂
அவங்க இல்லனா டார்லிங் என்னாகும்.. 🤭
 
  • Love
Reactions: Ush