வணக்கம் டியர்ஸ்,
இன்றைக்கு ஆறாவது நாள்! ஹவுஸ் ஓனர் வைஃபுக்கு(அதாங்க நானு) இருமல், சளி, தொண்டையில் கீச் கீச்னு ஆரம்பிச்சிடுச்சு! அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அன்னிக்கும் காலைல எழுந்து கிளம்பியாச்சு. இன்னிக்கு எங்க பிளான்ல வடபழநி முருகன் வரார். தங்கமலருக்கு காலையில ஒரு அப்பாயிண்ட்மேன்ட்! முடிஞ்சதும் ஃபோரம் மால்ல சந்திக்கறதா ப்ளான். எங்களுக்கு ரைட் புக் பண்ணி குடுத்துட்டாங்க. அதோட காலையிலே நல்ல சட்னியோட செம்ம ப்ரேக்பஸ்ட்!!!
View attachment 131
இது அவங்க வீட்டு மொட்டைமாடி!!! என் ஹவுஸ் ஓனர் எவ்ளோ கலைத்துவமா போட்டோ எடுத்திருக்காரு பாருங்க!இன்றைக்கு ஆறாவது நாள்! ஹவுஸ் ஓனர் வைஃபுக்கு(அதாங்க நானு) இருமல், சளி, தொண்டையில் கீச் கீச்னு ஆரம்பிச்சிடுச்சு! அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அன்னிக்கும் காலைல எழுந்து கிளம்பியாச்சு. இன்னிக்கு எங்க பிளான்ல வடபழநி முருகன் வரார். தங்கமலருக்கு காலையில ஒரு அப்பாயிண்ட்மேன்ட்! முடிஞ்சதும் ஃபோரம் மால்ல சந்திக்கறதா ப்ளான். எங்களுக்கு ரைட் புக் பண்ணி குடுத்துட்டாங்க. அதோட காலையிலே நல்ல சட்னியோட செம்ம ப்ரேக்பஸ்ட்!!!
View attachment 131
முதல் நாள் ராத்திரி அம்மா போன் போட்டு, எனக்கு வேல் மாறல் புக்கும் ஒரு வேலும் வாங்கிட்டு வான்னு சொல்லி விட்டாங்க! அதெல்லாம் கோயில் முன்னாடியே கிடைக்கும்னு தங்கமும் சொன்னாங்க! தங்கமலருக்கு நாங்க மூனு பேரும் எப்படி அங்க போய் கைட் பண்ண ஆள் இல்லாம சமாளிக்கப் போறோம்னு ஒரே கவலை. Ticket எடுத்து போங்க, அப்போத்தான் முருகன கிட்டக்க பார்க்க முடியும்னு சொல்லித்தான் அனுப்பனாங்க.
கார்ல இருந்து இறங்கி கோயிலுக்குள்ள போனோம். நாங்க நுழைஞ்ச டைம்ல கூட்டம் இல்ல.
View attachment 132
View attachment 133
View attachment 134
View attachment 135
டிக்கேட் எடுத்துட்டு, விநாயகர கும்பிட்டுட்டு முருகன பார்க்கப் போனோம். கியூவே இல்ல. நிறுத்தி நிதானமா அழகன் முருகன கண் குளிர பார்த்தோம்! இந்தக் கோயிலுக்கு போயே ஆகனும்னு அடம் பிடிச்சேன் நானு! என்ன காரணம்னா ரமணிமா கதைல இந்தக் கோயில அடிக்கடி மென்ஷன் பண்ணிருப்பாங்க! அதோட நெறய கதைகள்ல கூட வரும், திருமணம் இங்க நடந்ததுன்னு. ஏன் நானே கூட இந்தக் கோயில பத்தி எழுதிருக்கேன்! ஆனா கோயில பார்த்தது இல்ல! சோ நேரா எப்படி இருக்கும்னு போய் பார்த்தாச்சு.
வெளிய வந்ததும்தான் ஞாபகம் வருது அம்மா சொன்னத வாங்கலன்னு! முருகன் பாதத்துல வேற வச்சி எடுத்துட்டு வான்னு ஆர்டர். வரிசையா இருந்த கடைகள்ல ஒரு சின்னப் பையன் கடைல போய் வேல் வாங்கனேன். அதுக்குப் பக்கத்துல புக் கடையும் இருந்தது. அப்பாவும் மகளும் அங்கயே நிக்க, நான் மறுபடி உள்ள ஓடினேன்! இப்போ பெரிய கியூ ஆகிடுச்சு! ஐயர் ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன், முருகன் பாதத்துல வைக்க முடியுமான்னு! அப்படி எதையுமே அவர் கிட்ட வைக்க முடியாதாம், உற்சவர் கிட்ட போங்கன்னு சொல்லிட்டாரு! அவர தேடி அலைஞ்சா, அன்னிக்கு விசேஷம் போல! அவ்ளோ கூட்டம் முண்டி அடிச்சிட்டு பூஜைல இருக்கு! எப்படியோ அடிச்சுப் புடிச்சு உற்சவர் பாதத்துல வேல வச்சி வாங்கிட்டு வந்தேன். வெளிய வந்தா, எப்பப்பா என்ன ஒரு கூட்டம். நல்ல வேளை நாங்க சீக்கிரமே வந்தோம்.
அப்புறம் வழி கேட்டுட்டே ஃபோரம் மால் தேடுனோம். போன்லயும் மேப் பார்த்துட்டே போனோம். அங்க பார்த்தா நெக்சஸ் மால்னு இருக்கு! உள்ள போய் விசாரிச்சா, ஃபோரமத்தான் இப்போ நெக்சஸ்னு மாத்திட்டாங்களாம். நல்லா பெருசா அழகா இருந்தது. நுழைஞ்சதும் மெக்டோனல்ட்! அப்புறம் என்ன!!!!! மேடத்தோட சேர்ந்து எங்களுக்கும் அங்கத்தான் லன்ச்.
View attachment 136
View attachment 137
View attachment 138
இவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள நான் எழுந்து மால்ல ஒரு ரவுண்ட் வந்தேன். ட்ரேண்ட்ஸ்லாம் போய் பார்த்தேன்! ரொம்ப எக்ஸ்குளுசிவ்வா இருக்கற மாதிரி இருந்தது. ஒன்னும் வாங்கல. மேல மாடில ரொம்ப அழகான cinema இருக்கு போல! டிக்கேட் இருந்தாத்தான் விடுவேன் சொல்லிட்டாங்க! சோ போக முடியல.
அப்புறம் தங்கம் வந்ததும் வடபழநி மெட்ரோக்கு நடந்து போனோம். அங்கிருந்து வண்ணாரப்பேட்டை மெட்ரோல இறங்கி ரெண்டு ஆட்டோ எடுத்து சௌகார்பேட் வந்தோம்.
View attachment 139
பாப்பாவுக்கு கொஞ்சம் டாப்ஸ், accessories, பொட்டு, வளையல், ஜிமிக்கிலாம் வாங்கனும்னு லிஸ்ட் எடுத்துட்டு வந்திருந்தேன். மொட்டை வெயிலு
View attachment 140
வாங்கி குடிக்கல! ஆனா போட்டோ எடுத்தேன்! தங்கம்ஸ் நாவல் பழம் வாங்கினாங்க. எனக்கு சளின்னு குடுக்காம மூனு பேரும் என் முன்னுக்கே சாப்பிட்டாங்க!!!!
பானி பூரி இடத்துக்குப் போனோம்! ஆனா சாப்பிடல! பாப்பா வேணாம்னுட்டா, இவரும் வேணாம்னுட்டாரு! எனக்கும் மூட் இல்ல! சோ சாப்பிடல. போன தடவை வந்தப்ப சாப்பிட்டேன்! ரொம்ப நல்லா இருந்தது.
Author: VanishaAdmin
Article Title: Day 6--(17/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Day 6--(17/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.