வணக்கம் டியர்ஸ்,
இன்னும் ஒரே நாள்தான் இருக்கு ட்ரீப் முடிய. இன்னைக்கு குற்றாலம் பத்தி பார்க்கப் போறோம்! எந்த அருவிக்கு முதல்ல போனோம், அங்க என்ன பண்ணோம் எல்லாமே துண்டு துண்டாத்தான் ஞாபகம் இருக்கு! எனக்கு ஞாபகம் இருக்கறத மட்டும் இங்க ஷேர் செய்யறேன்.
Jiji's Castle--இதுதான் நாங்க தங்கி இருந்த ரிசார்ட் பேரு. காலை ட்ரேயின்ல சிவகாசில இருந்து தங்கத்தோட கசின் சிஸ் எங்க கூட டைம் ஸ்பேண்ட் பண்ண வந்திருந்தாங்க! அவங்க பேரு ஜெயந்தி. நல்ல கலகல டைப்! எனக்கு வடாம், கேக்னு அவங்க ஊரு ஸ்பெஷல் ஐட்டம்ஸ்லாம் எடுத்துட்டு வந்தாங்க!
View attachment 309
ரிசார்ட்ல இருந்து வியூ.
அவங்க வந்ததும், கிளம்பி முதல்ல ரிசார்ட்ட சுத்தி நடந்தோம். அங்கங்க நின்னு போட்டோலாம் எடுத்துக்கிட்டோம். வளைச்சு வளைச்சுப் போட்டோ எடுத்தோம். பிறகு கிளம்பிட்டோம் அருவிக்கு. முதல்ல பழைய குற்றாலம் போனோம். பார்க்கிங் போகிற முன்னாடியே பழங்கள்லாம் கார் கிட்டயே கொண்டு வந்து வித்தாங்க! பலாப்பழம் வாங்கனோம். அதுதான் காலை உணவு. பிறகு கார பார்க் செஞ்சிட்டு மேல ஆட்டோல போனோம்! செம்ம வெதர் அன்னைக்கி. அருவில குளிக்கப் போறோம்னு ஒரே எக்ஸைட்டெட். தங்கம் கிட்ட சொல்லிட்டே இருந்தேன், குற்றாலத்துல கண்டிப்பா குளிக்கனும்! ஏதும் தடை வந்துடக் கூடாதுன்னு. ஏன்னா நாங்க மும்பைல இருந்து சென்னைக்கு ரிச் பண்ணப்ப, நியூஸ் ஓடுது குற்றலாத்துல ஒருத்தங்க இறந்துட்டாங்கன்னு! குளிக்கத் தடைன்னு! பயம் ஒரு பக்கம். இருந்தாலும் குளிக்கனும்னு ஓர் ஆர்வம். நாங்க போனப்போ தடை நீக்கிட்டாங்க! போய்ட்டு வந்ததும் மறுபடி நீர் வரத்து அதிகமாயிடுச்சுன்னு தடைப் போட்டுட்டாங்க! நாங்க லக்கிதான்! நாங்க போனப்போ, நீர் வரத்து குறைவுன்னுதான் தங்கம் சொன்னாங்க! ஆனா அதுவே எனக்கு ரொம்ப மாதிரித்தான் தெரிஞ்சது.
View attachment 310
நாங்க மூனு பேரும். நடுவுல ஜெயந்தி.
View attachment 311
நெறைய போட்டோஸ் எடுத்தேன். ஆனா மக்கள்ஸ் ரொம்ப செக்சியா நிக்கறாங்க! அவ்வ்வ். அதனால இங்க ஷேர் செய்யல.
கூட்டம் கூடத்தான். மக்கள் முட்டி மோதறாங்க அருவில குளிக்க. நானும் நம்ம சிஸ்டர்ஸ் கூட சேர்ந்து மக்கள் வெள்ளத்துல முட்டி மோதி போய் நின்னுட்டேன். ரெண்டே நிமிஷம்தான் மேல தண்ணி ஊத்திருக்கும், பேனிக் அட்டேக் வந்திருச்சு! மூச்சு விட முடியல! படபடன்னு வருது! மயங்கிடுவேனோன்னு பயம் வந்திருச்சு. தள்ளுங்க, விடுங்கன்னு என்னை மறைச்சிட்டு நின்னவங்கள எல்லாம் தள்ளிட்டு வந்து வெளிய நின்னுட்டேன். நெஞ்சு படபடன்னு அடிக்கிது! வேக வேக மூச்சு எடுத்து விடறேன்! ரொம்ப கவலையாகிடுச்சு, ஆசையா இங்க வந்திட்டு அனுபவிக்க முடியலையேன்னு.
தங்கம் வந்து மோட்டிவேட் பண்ணாங்க! ஒன்னும் இல்ல, கொஞ்ச நேரம் அப்படி இருக்கும்! அப்புறம் சரியாகிடும்! வா, பக்கத்துலயே நான் இருக்கேன்னு! மறுபடியும் ஒரு முயற்சி செய்யலாம்னு தண்ணிக்குள்ள போனேன்! இந்த முறை கையைத் தூக்கி நெத்தில வச்சு, தண்ணி மூச்சு முட்ட வைக்காம வழிஞ்சி போகிற மாதிரி செஞ்சேன். படபடப்பு கொஞ்சமா அடங்கிட்டது! ஆனாலும் முழுக்கப் போகல! ஓரளவு மனசு திருப்தியாகற வரைக்கும் நின்னுட்டு வெளிய வந்துட்டேன்.
அப்புறம் ஐந்தருவி போனோம். அங்க அதுக்கும் மேல கூட்டம்!!! யப்பா டேய்!!! என் கிட்ட சரசம் பண்ணவே ஆத்தா அப்பன் உங்கள பெத்து விட்டுருக்காங்களான்னு நெனைக்கற மோமெண்ட்!!! உள்ள விடவே மாட்டறாங்க! இத்தனைக்கும் ஒரு போலிஸ்காரம்மா சீக்கிரம் வெளியாகுங்கன்னு லத்திய கைல வச்சிக்கிட்டு கத்திட்டே இருக்காங்க! அப்படியே இடத்த பட்டா போட்டுக்கிட்ட மாதிரி, அசையலயே யாரும்! எனக்கு இடமே கிடைக்காம, அப்படிக்கா ஒரு மூலைல நின்னு லேசா தண்ணிய தலைக்கு விட்டுக்கிட்டு வந்துட்டேன்!!!
மேல வந்து கொஞ்ச நேரம் போலிஸ் அக்கா கிட்ட ரெண்டு வார்த்தைப் பேசனேன்!! தென் பேரருவிக்கு(மேய்ன் ஃபால்ஸ்) கிளம்பிட்டோம்! அங்கயும் ஜெய்ஜெய்னு கூட்டம். முதல்ல திருக்குற்றாலநாதர் கோயிலுக்குப் போனோம்! அங்க நல்லா தரிசனம் பண்ணிட்டு வெளிய வந்தோம்! கோயிலுக்குப் போய்ட்டு வந்த கையோட குளிக்கக் கூடாதுன்னு, சாப்பிடலாம்னு சுத்தி நடந்தோம். நிறைய பழக்கடைகள், டீ ஸ்டால், பஜ்ஜீ கடைன்னு அவ்ளோ கடைகள் இருக்கு அங்க. நாங்க டீ குடிச்சிட்டு பஜ்ஜீ சாப்பிட்டோம்.
View attachment 313
சுத்திலும் அவ்ளோ குரங்குகள். கைல ஒருத்தங்க ரம்புட்டான் பழப் பை வச்சிருந்தாங்க. பாஞ்சி தூக்கிருச்சு!!!
பழக்கடைகள்ல மலேசியால இருக்கற பல பழங்கள் இருக்கு. டுரியான், ரம்புட்டான், மங்கீஸ்..இதெல்லாம் நாங்க சொல்ற பேருங்க! அங்க வேற பேர்ல இருக்கு!
View attachment 314
டுரியான். இந்தப் பழம் உடம்புக்கு சூடுன்னு சொல்வாங்க! சாப்பிடதும் அதோட ஓட்டுலயே தண்ணி ஊத்திக் குடிக்கனும் சூட்டைத் தணிக்கன்னு சொல்வாங்க! ஆனா இங்கப் பார்த்த கடைல, இந்தப் பழம் சாப்பிட்டா கர்ப்பம் தரிக்க நல்லதுன்னு போட்டிருக்கு! என்னங்கடா இதுன்னு யோசனையா போச்சு!!!
View attachment 315
இந்தக் கிழங்கு உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க! அது பேரு மறந்திடுச்சு டியர்ஸ்.
View attachment 316
இந்தப் பழம் பேரு எங்கூர்ல pomeloனு சொல்வாங்க! சைனிஸ் சாமி கும்பிட இந்தப் பழம் வைப்பாங்க! எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
View attachment 317
இலை அல்வா ட்ரை பண்ணோம்! சூடா செம்மையா இருந்தது.
View attachment 318
இவர் கடைலதான் வாங்கனோம்!
View attachment 319
பிறகு ஜெயந்தி போய் குளிச்சிட்டு வந்தாங்க! தங்கம் போய்ட்டு கூட்டத்துல இடிப்பட்டு வேணாம்டா சாமின்னு வந்துட்டாங்க! நான் சும்மா வேடிக்கைத்தான். இந்த அருவிலாம் என்ன ஒரு அழகு தெரியுமா!!! டிவைன் ஃபீல்! மேய்ன் அருவி விழற பாறைல சிவலிங்கங்கள் வரைஞ்சிருக்குமாம்! தண்ணி குறைவா இருக்கறப்பா அத பார்க்கலாமாம்! நான் அடிக்கடி நினைப்பேன், இந்திய இஸ் அ டிவைன் கண்ட்ரி! அங்க இல்லாத அதிசயங்கள் இல்லைன்னு! கோயில் சிற்பங்கள், மலைகள், அருவிகள், கடற்கரைகள், ஆறுகள்னு எல்லாமே இருக்கு இங்க! ஒரு அதிசய கிடங்கு இந்த இந்தியா!!!
கொஞ்சம் முன்னாடியே இருந்த ஒரு கடைல பாப்பாக்கு கழுத்துக்குப் போட மணிகள், மாலைகள், தோடுகள்னு ஒரு அள்ளு அள்ளினேன்!!! எவ்ளோ அழகா, யூனிக்கா செஞ்சிருக்காங்க!!!

Author: VanishaAdmin
Article Title: Day 13--(24/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.