வணக்கம் டியர்ஸ்,
லீவுக்கு வந்து பதினொரு நாள் ஆகிடுச்சு! எவ்ளோ வேகமா காலம் ஓடுது!!!
பொள்ளாச்சிக்கு பாய் சொல்லிட்டு கிளம்பியாச்சு!
View attachment 250
இந்த இடம் பாத்தீங்கல்ல, இது கோயம்புத்தூர்ல இருக்கு! ஒரு தடவை பேஸ்புக் ஸ்க்ரோல் பண்ணறப்போ கண்ணுல பட்டிச்சு! அப்போ தங்கமலர் கிட்ட சொன்னேன்! இங்க ஒரு போட்டோ புடிக்கனும்னு! ஆனா அதை மறந்துட்டோம்! பொள்ளாச்சில இருந்து கிளம்பி கோயம்புத்தூர் ரீச் பண்றப்போ ஏதேச்சையா நான் இத பார்த்துட்டேன். நிறுத்துங்க!!!!! அப்படின்னு சொல்லி, இறங்கி போட்டோ புடிச்சிட்டோம்!..
View attachment 251
பிறகு ஸ்ட்ரேய்ட்டா ஈஷாக்கு வண்டிய விட்டாச்சு! அதான் ஏற்கனவே போயாச்சே. மறுபடி ஏன்னு கேக்கறீங்களா? அண்ணிக்கு ஆதி சிவனோட குட்டி சிலை, அதுவும் அங்க வாங்கனதுதான் வேணும்னு சொல்லி விட்டிருந்தாங்க! அதுக்காகவும் தியான லிங்கம்லாம் பார்க்கலியே அதுக்காகவும் போயிருந்தோம்!
பெரிய பேக், போன்லாம் உள்ள எடுத்துப் போக முடியாது! லாக்கர் குடுக்கறாங்க, அங்க வச்சிட்டுப் போகலாம்! நிறைப வோலண்டியர் அங்க வேலைப் பார்க்கறதனால சீக்கிரமா வச்சிட்டும் போய்டலாம். நாங்க போனப்போ, நெறைய நார்த் இந்திய மக்கள், கூட்டம் கூட்டமா வந்திருந்தாங்க!
View attachment 252
உள்ள போகிற முன்னாடி எடுத்த போட்டோ!
ரொம்பப் பெரிய இடம்! நடக்கலாம் நடக்கலாம் நடந்துட்டே இருக்கலாம். கலவையான மக்கள்! கலவையான மொழிகள்! லிங்க பைரவி பார்த்துட்டு, கொஞ்ச நேரம் அங்கயே கண் மூடி உக்காந்தோம்! குங்குமம் வச்சிக்கிட்டு, அடுத்து தீர்த்தகுண்ட் போனோம். ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும் இருக்கு இந்த இடம். உள்ள போகனும்னா டிக்கட் எடுக்கனும். முழுசா முழுகி எழனும்னு நெனைக்கறவங்களுக்கு மொத்தமா நைட்டி மாதிரி ஒரு துணி குடுக்கறாங்க! நாங்க முழுதா முழுகல! சோ கை கால மட்டும் கழுவிட்டு உள்ள போனோம். பல படி இறங்கி கீழ போகனும்! அங்கத்தான் லிங்கம் நடுவுல இருக்க, சுத்தி தண்ணி இருக்கு! அதுல இறங்கி பலர் நீராடி, லிங்கத்த சுத்திட்டு மேல ஏறி வராங்க! நான் படில இறங்கறப்ப, ஒரு லேடி மேல ஏறினாங்க. என்னைப் பார்த்துட்டு, சும்மா அப்படியே பார்த்துட்டு போகாம காலயும் கையையுமாச்சும் நனைச்சிட்டு போங்க! அப்படின்னு சொல்லிட்டுப் போனாங்க! அவங்க யார் எவருன்னே எனக்குத் தெரியாது! சரி சொல்லிட்டாங்களேன்னு, கால நனைச்சி, துணி மறைக்காத பாகமெல்லாம் தண்ணி எடுத்து பூசிட்டு, முகத்த கழுவிக்கிட்டேன்! எப்படி சொல்லன்னு தெரில! அந்தத் தண்ணில ஒரு வைப்ரேஷன் இருக்கு.
அதன் பிறகு தியான லிங்கத்துக்குப் போனோம்! செட் பை செட்டாத்தான் விடறாங்க! வாட்டர் பாட்டில்லாம் உள்ள அலவுட் இல்ல! ஒரு செட் மக்கள் வந்ததும் அடுத்த செட் நாங்க போனோம்! பெரிய லிங்கம் நடுவுல! அதை சுத்தி உக்காந்தோம் எல்லோரும்! பத்து நிமிஷம் கண்ண மூடி தியானம்! என்னால பத்து நிமிஷம்லாம் முடியல! நாலு நிமிஷத்துலயே கண்ண திறந்துட்டேன். அதன் பிறகு லிங்கத்தையும் சுத்தி தியானம் செஞ்ச மக்களயும் பார்த்துட்டு உக்காந்திருந்தேன். அந்த பத்து நிமிஷமும் உள்ளத்தான் இருக்கனும்! எழுந்து போகக் கூடாது! மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்ல! சோ விட மாட்டறாங்க!
அங்க முடிச்சுட்டு அவங்களோட காண்டின்ல உக்காந்து ஒரு கருப்பட்டி காபி அண்ட் பணியாரம் சாப்பிட்டோம்! அண்ணி கேட்டத வாங்கிட்டு அங்கிருந்து கிளம்பியாச்சு!

Author: VanishaAdmin
Article Title: Day 11--(22/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.