காலைல 8 மணிக்கு சோழன்ல பயணம். ஆனா ட்ரெயின் டிலேன்னு நைட்டே மேசேஜ் வரவும், மெல்லத்தான் கிளம்பனோம். காலை உணவு வீட்டிலயே இட்லி! லன்ச்சுக்கு தயிர் சாதம் பேக் பண்ணிட்டாங்க மலர். தொட்டுக்க மசால் வடை.(இது போல காம்போ நான் சாப்பிட்டது இல்ல! தயிர் சாதத்துக்கு வடையா? ரியலி? அப்படின்னு மனசுல ஒரே கேள்வி! ஆனா செம்மையா இருந்தது காம்போ! அதும் ட்ரைன் ஓட்டத்துல வெளியே பார்த்துட்டே ரசிச்சு சாப்பிடறதுலாம் செம்ம ஃபீல்!)
ஆட்டோல எக்மோர் வந்து இறங்கிட்டோம்! ட்ரேன் தேடிப் புடிச்சு, முன்ன நின்னு போட்ட எடுத்து அலப்பறை பண்ணி உக்காந்தாச்சு! தங்கமலர் கீழ் பெர்த் எடுத்திருந்தாங்க ரெண்டு! கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு! இதுதான் என்னோட முதல் பகல் ரயில் பயணம். எப்பவும் நைட் ஏறி சாப்பிட்டுட்டுத் தூங்கிடுவோம்! இந்த முறை நெறய எக்ஸ்பீரியன்ஸ். ரயில்ல கைல வச்சிக்கிட்ட மருதாணி, பிள்ளைங்க சத்தம், ரயில்ல காபி டீ, பழங்கள் விக்கறவங்க குரல்னு சத்தம் கேட்டுட்டே இருந்தது, பண்ருண்டி வந்தப்ப பலா சுளை, பலா சுளைன்னு ராகமா கேட்டக் குரல், கடல, கடல, கடலே அப்படின்னு கேட்டக் குரல், கொய்யா, அம்மா கொய்யான்னு கேட்டதுன்னு எல்லாமே எனக்குப் புது அனுபவம்தான். பண்ருட்டி பலாப் பழத்துக்கு ஃபேமஸ்னு மலர் சொன்னதும், அதை வாங்கி ட்ரை பண்ணியாச்சு! நெஜமா தேன் மாதிரிதான் இனிக்கிது!
எங்கடா பயணம்னு நீங்க கேக்கறது தெரியுது! சிலர் கண்டுப்புடிச்சிட்டீங்க! யெஸ்! தடுக்கி விழுந்தா ஒரு கோயில் இருக்கும்னு சொல்லப்படற கோயில்களின் நகரம் கும்பகோணம்தான் நம்ம டெஸ்டினேஷன். நான் அறுபடை வீடுல ரெண்டு மிஸ் பண்ணிட்டேன்! சுவாமிமலை அங்க பக்கம்தான்னு தெரியவும், அதோட நிறைய பழமையானக் கோயில்கள் அங்கத்தான் இருக்குன்னு கேள்விப்படவும் கும்பகோணத்த சூஸ் பண்ணீயாச்சு! முதல்ல தங்கற இடத்துக்குப் போய் லக்கேஜ்லாம் போட்டுட்டு, கொஞ்சம் ரிப்ரெஸ் ஆகி கிளம்பிட்டோம்.
மூனு நாளுக்கு கார் புக் பண்ணிருந்தாங்க மலர். முதல் கோயில் அழகன் முருகன பார்க்க சுவாமிமலை. அதுக்கு முன்ன பஸ் ஸ்டேஷன் பின்னாடி இருக்கற கடை வரிசைல சூப்பரா ஒரு டீ குடிச்சோம்! நெஜமா சொல்றேன், நம்ம தமிழ்நாட்டு டீக்கு நான் அடிமை.
சுவாமிமலைக்கு வந்ததும் ட்ரைவர் சொன்னாரு இப்போ மேல போக லிப்ஃட் இருக்குன்னு! வயதானவங்க, மாற்றுத் திறனாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். முருகன் ரொம்பலான் எங்கள சிரமப்படுத்தல! ரொம்ப நல்ல தரிசனம்! தரிசனம் முடிச்ச கையோட மழை ஆரம்பிச்சிருச்சு! ரொம்ப இருட்டிருச்சு வேற! நாங்க இந்திந்த கோயிலுக்குலாம் போகனும்னு பெருசா ப்ளான்லாம் போடல! எங்க அமையுதோ அங்க போலாம்னு ப்ளான்.
ட்ரைவர் மழைக்குக் கொஞ்சம் ஒதுங்கி வேய்ட் பண்ணலாம்னு சொல்லவும், கார்லயே இருந்தோம். அரை மணி நேரத்தில லேசா தூறலா நிக்கவும், மறுபடியும் கிளம்பிட்டோம். கட்டிப்புடி கோயிலுக்கு போகலாமான்னு ட்ரைவர் கேட்க, அது என்ன இப்படி ஒரு கோயில்னு ஓகே சொல்லிட்டோம். மழைல தரைலாம் ஈரம். மெதுவா நடந்து கோயில் உள்ள போனோம். கூட்டமே இல்ல. அந்த ஐயர் ரொம்ப நல்லா பேசி தள வரலாறுலாம் சொன்னாரு! சிவன் கோவமா இருந்தப்ப, சக்தி அவரைக் கட்டிப் புடிச்சு அவரோட கோபத்தத் தணிச்சாங்களாம். கல்யாணம் நடக்க, கணவன் மனைவிக்குள்ள நடக்கற பிரச்சனைகள் தீரன்னு இந்தக் கோயில்ல வந்து கும்பிடலாமாம். அந்தக் கோயிலோட பேர்ய் நான் கூகுள் பண்ணித்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சக்திவனேஷ்வரர் கோயில். பட்டீஸ்வரம் பக்கம் இருக்கு.
அடுத்து தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குப் போனோம்! அங்கயும் கூட்டம் இல்ல. நல்லா ரிலேக்ஷா தரிசனம் பண்ணி கோயில சுத்திப் பார்த்தோம். இங்க நந்தி சிலை வேறப் பக்கம் பார்க்கற மாதிரி விலகி இருக்கு!
அதுக்குப் பிறகு ஆதிகும்பேஸ்வரர பார்க்கப் போனோம்! இங்க எல்லா கோயிலுமே அவ்ளோ பெருசு! நிறைய கோபுரங்கள தாண்டி ரொம்ப தூரம் நடக்கனும்! ஆனா எங்க லக் என்னனா, கூட்டமே இல்ல! நல்லா தரிசனம் கிடைச்சது.
பிறகு டின்னர் சாப்பிட வந்துட்டோம்! பகல்ல டீ குடிச்சமே, அவங்க டிபன் கடையும் பக்கத்துலயே வச்சிருக்காங்க! பேர்லாம் போட்டோ புடிச்சு வைக்கல டியர்ஸ். அங்க பரோட்டா சாப்பிட்டேன்! ரொம்ப நல்லா இருந்தது! டின்னர் முடிச்சு, ரூமுக்குப் போய்ட்டோம்! மறுநாள் இன்னும் நிறைய இடம் பார்க்கனும்னு சீக்கிரம் தூங்கியாச்சு!
அடுத்தப் பதிவும் கும்பகோணம்தான்! சீ யூ ஆல்!

Author: VanishaAdmin
Article Title: 19/3/2026--Day 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.