வேணாம்!!!! விட்ரு!!!!

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
582
-2,708
93
"ப்பா கதை சொன்னாத்தான் பாப்பா ஸ்லீப் பண்ணுவேன்!!" என பகல் தூங்கத்துக்கு டிமிக்கி கொடுக்க முயன்ற ஐந்து வயது மகளை மடியில் இழுத்துப் போட்டுத் தட்டிக் கொடுத்தவாறே ஓரக் கண்ணால் மனைவியை நோட்டமிட்டான் கண்ணன்.

அலமாரியில் துணியை மடித்து வைத்துக் கொண்டிருந்த கவிதா அப்பா மகள் இருவரையும் கண்டுக் கொள்ளவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையால் மௌன விரதமிருக்கிறாள் இவள்.

" ஒரு ஊருல ஒரு ராஜகுமாரன் இருந்தானாம்"

" அப்டினா ப்ரின்ஸ்தானேப்பா?"

"ஆமாம்மா! அந்த ராஜகுமாரனுக்கு கல்யாண வயசு வந்ததும், அவனுக்கேத்த மாதிரி அழகான, அறிவான, அருமையான, அன்பான பொண்ணு வேணும்னு வலைப் போட்டுத் தேடனாங்களாம்"

" வலைப் போட்டுத் தேடனா அது பொண்ணு இல்ல மீனு" என மௌனத்தையுடைத்து குரல் கொடுத்தாள் கவிதா.

'அப்பாடா இப்பவாச்சும் வாயைத் திறந்து பேசறாளே!! இப்படியே சமாதானம் பண்ணிடுவோம்! கோபத்துல தினம் சாம்பார வச்சிக் கொல்லறா!' என எண்ணிக் கொண்டான் கண்ணன்.

" சரி வலைப் போடல! சல்லடைப் போட்டு சலிச்சாங்கன்னு வச்சிக்கலாமா?"

" முடியாது! அரிசி மாவைத்தான் சல்லடைல சலிப்பாங்க. அரசியாக போறவங்கள இல்ல"

"ஹ்ம்ம் சரி! கஸ்டப்பட்டுத் தேடனாங்களாம்!"

" கஸ்டப்பட்டு ஏன் தேடனும்? பொண்ணு வேணும்னா இஸ்டப்பட்டுத்தானே தேடனும்?'

"இது என்னோட கதைடி!! நான் எப்படி வேணும்னாலும் சொல்லுவேன்" என கடுப்பில் வார்த்தையை விட்டான் கண்ணன்.

" ஓஹோ!! உங்க கதைன்னா, அந்த ராஜகுமாரன் நீங்களா? அப்போ அழகான, அறிவான, அன்பான, அருமையான பொண்ணு வேணும்னு தேடி, கிடைக்காம என்னைக் கட்டிக்கிட்டேன்னு சொல்ல வரீங்களா?"

" நான் எங்கடி அப்படி சொன்னேன்?"

" இந்தக் கதைக்கு அப்படித்தான் அர்த்தம் வருது. என்னை மும்பையில இருந்து முனிஸ்கான் பொண்ணு கேட்டாரு, ஆந்திரால இருந்து அர்ஜுன் ரெட்டி பொண்ணு கேட்டாரு, பாலக்காட்டுல இருந்து பாஹாட் பசில் பொண்ணு கேட்டாரு. என் கிரகம், இதையெல்லாம் வேணாம்னுட்டு எங்கப்பன் உங்கள கட்டி வச்சதுக்கு எவ்ளோ பேச முடியுமோ அவ்ளோ பேசிட்டீங்க" என அடுத்தக் கட்ட சண்டையை ஆரம்பித்திருந்தாள் கவிதா.

கவிதா கைவிட்ட மௌன விரதத்தை இனி கண்ணன் தொடர்வான்.

(முற்றும்)
 

Author: VanishaAdmin
Article Title: வேணாம்!!!! விட்ரு!!!!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Well-known member
May 15, 2025
138
-192
63
ஏம்மா, ஏன்??🤔 ஒரு சண்டையை சமாளிக்க கதை சொல்ல வச்சு அடுத்த சண்டையை ஆரம்பிச்சு வச்சுட்டீங்க??🤣🤣🤣 சண்டையை போக்க ஏதோ டிப்ஸ் தருவீங்கன்னு ஏமாந்து போயிட்டேன் 😂. Very Short and Sweet (Story????)😂
 
  • Haha
Reactions: VanishaAdmin