உலகமாந்தர் பெரும்பாலோருக்கு,
உலகியல் விடயங்களில்,
எள்முனை அளவேனும்
ஏற்படுவதில்லை, போதுமென்ற
உயர் உள நிலை!
உயிர் உள வரை!!
இரண்டாம் முறை போட்டனர்,
எனக்குக் கால்கட்டு!
இல்லை, இல்லை!
இணைவி +!!.., துணைவி +!!!...
சமாச்சாரமில்லை!!.
அரசியல் செயச் சொன்னால்
அரசி இயல் செய்யும்
அரசியல் வியாதி
அல்லவே யான்!
மன்னை மண்ணில்
முன்னர் பணியிலிருக்கையில்
நேர்ந்த சிறுவிபத்தால்!
எத்தனைக் காலத்துக்கு
ஒரே இடத்தில் இருக்கவென
சிறிதே நழுவிற்று, முட்டிச் சில்லு!
பிறரை சார்ந்திருக்க நேர்ந்தது!
அனைத்திற்கும்!
முதற்கால்கட்டால்
முன்பின் தெரியாதெனை
முழுதாய் நம்பி
என்னகம் வந்தவள்,
என்னுடற்கழிவுகள் நீக்கினள்!
அகற்றினள், அவ்வப்போது
என் மன மாசுக்களையும்!
தாய்க்குப் பின் தாரமென்று
தமிழ்க்கூறும் நல்லுலகம்
முன்னர் உரைத்தது
இது தானோ!
திருப்பிச் செலுத்துவதெப்படி?
என் நன்றியறிதலை!
எனைத் திருத்தியவளுக்கு!
தாய்மைப் போற்றுதும்!
தாய்மைப் போற்றுதும்!
தாரத்தையும்!
நல்மனைவி, நன்மக்கள்,
நற்குடும்பம், தெய்வீகம்!
தெய்வீகமே!
உலகியல் விடயங்களில்,
எள்முனை அளவேனும்
ஏற்படுவதில்லை, போதுமென்ற
உயர் உள நிலை!
உயிர் உள வரை!!
இரண்டாம் முறை போட்டனர்,
எனக்குக் கால்கட்டு!
இல்லை, இல்லை!
இணைவி +!!.., துணைவி +!!!...
சமாச்சாரமில்லை!!.
அரசியல் செயச் சொன்னால்
அரசி இயல் செய்யும்
அரசியல் வியாதி
அல்லவே யான்!
மன்னை மண்ணில்
முன்னர் பணியிலிருக்கையில்
நேர்ந்த சிறுவிபத்தால்!
எத்தனைக் காலத்துக்கு
ஒரே இடத்தில் இருக்கவென
சிறிதே நழுவிற்று, முட்டிச் சில்லு!
பிறரை சார்ந்திருக்க நேர்ந்தது!
அனைத்திற்கும்!
முதற்கால்கட்டால்
முன்பின் தெரியாதெனை
முழுதாய் நம்பி
என்னகம் வந்தவள்,
என்னுடற்கழிவுகள் நீக்கினள்!
அகற்றினள், அவ்வப்போது
என் மன மாசுக்களையும்!
தாய்க்குப் பின் தாரமென்று
தமிழ்க்கூறும் நல்லுலகம்
முன்னர் உரைத்தது
இது தானோ!
திருப்பிச் செலுத்துவதெப்படி?
என் நன்றியறிதலை!
எனைத் திருத்தியவளுக்கு!
தாய்மைப் போற்றுதும்!
தாய்மைப் போற்றுதும்!
தாரத்தையும்!
நல்மனைவி, நன்மக்கள்,
நற்குடும்பம், தெய்வீகம்!
தெய்வீகமே!
Author: lakkuCPT
Article Title: இரண்டாம் கால் கட்டு!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இரண்டாம் கால் கட்டு!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.