சென்றோம் சாத்தான் குளம்,
தொன்னூறுகளின் தொடக்கத்தில்!
நண்பரின் உறவினர் ஊர்.
நண்டும் சிண்டுமாயும்,
நாற்பதைக் கடந்த இளஞ்சோடிகளுமாய்!
இல்வாழ்வைச் சுவைக்க
ஆயத்தமானவர்களும் கூட,
இருபது, இருபத்தைந்து பேர்,
இரு சிற்றுந்து வாகனங்களில்!
மாலைப்பொழுது!
தொலைபேசியாவது,
அலைபேசியாவது,
கைபேசியாவது,
ஒன்றுமில்லை! அந்நாளில்,
முன்னரே தகவல் சொல்ல!
சூழ்ந்தனர், சுற்றத்தினர்!
சொல்லாமல் கொள்ளாமல்
சட்டென வந்தோரைச் சுற்றி!
நலம் விசாரித்தனர்!
நாங்கள் பசியாற,
சடுதியில் பரிமாறினர்!
சுவையான ஊற வைத்த
அவல், ஏலம், வெல்லம்,
வாழைப்பழம், தேங்காய்!
அத்துடன் அவர்களது
அன்பும், பாசமும்,
அனிச்சமும் குழையாவண்ணம்,
விருந்தோம்பலும்!
அனைத்தையும் போட்டுப் பிசைந்து,
அத்தனைப் பேரும் பசியாறினோம்!
அதன் சுவை நாவிலூறி,
இன்னமும் நெகிழ்கிறது நெஞ்சில்!
இதுக்கும் மேல என்ன வேண்ட,
இறையிடம்!
அவர்கள் நல்லாயிருக்க வேண்டும்,
என்பதைத் தவிர!
மாசுபடாச் சூழல்,
மனதையும் மென்மையாக்கும்,
வன்மம் காட்டாது,
மற்ற உயிரிடத்தில்!
உயிர் இருக்கு, ஈரமிருக்கு,
இன்னமும் கிராமங்களில்!
அதனை உயிர்ப்புடனேப்
பாதுகாத்தல் அனைவர் கடமை!
நம்மையும் பொருட்டாய்
நடத்தியவர்களிடம்,
நாளும் போற்றுவோம்,
நன்றியுணர்வை!
தொன்னூறுகளின் தொடக்கத்தில்!
நண்பரின் உறவினர் ஊர்.
நண்டும் சிண்டுமாயும்,
நாற்பதைக் கடந்த இளஞ்சோடிகளுமாய்!
இல்வாழ்வைச் சுவைக்க
ஆயத்தமானவர்களும் கூட,
இருபது, இருபத்தைந்து பேர்,
இரு சிற்றுந்து வாகனங்களில்!
மாலைப்பொழுது!
தொலைபேசியாவது,
அலைபேசியாவது,
கைபேசியாவது,
ஒன்றுமில்லை! அந்நாளில்,
முன்னரே தகவல் சொல்ல!
சூழ்ந்தனர், சுற்றத்தினர்!
சொல்லாமல் கொள்ளாமல்
சட்டென வந்தோரைச் சுற்றி!
நலம் விசாரித்தனர்!
நாங்கள் பசியாற,
சடுதியில் பரிமாறினர்!
சுவையான ஊற வைத்த
அவல், ஏலம், வெல்லம்,
வாழைப்பழம், தேங்காய்!
அத்துடன் அவர்களது
அன்பும், பாசமும்,
அனிச்சமும் குழையாவண்ணம்,
விருந்தோம்பலும்!
அனைத்தையும் போட்டுப் பிசைந்து,
அத்தனைப் பேரும் பசியாறினோம்!
அதன் சுவை நாவிலூறி,
இன்னமும் நெகிழ்கிறது நெஞ்சில்!
இதுக்கும் மேல என்ன வேண்ட,
இறையிடம்!
அவர்கள் நல்லாயிருக்க வேண்டும்,
என்பதைத் தவிர!
மாசுபடாச் சூழல்,
மனதையும் மென்மையாக்கும்,
வன்மம் காட்டாது,
மற்ற உயிரிடத்தில்!
உயிர் இருக்கு, ஈரமிருக்கு,
இன்னமும் கிராமங்களில்!
அதனை உயிர்ப்புடனேப்
பாதுகாத்தல் அனைவர் கடமை!
நம்மையும் பொருட்டாய்
நடத்தியவர்களிடம்,
நாளும் போற்றுவோம்,
நன்றியுணர்வை!
Author: lakkuCPT
Article Title: அனிச்சம்!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அனிச்சம்!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.