மறுநாள் காலையில் நர்ஸ் பிரேமா வந்ததுமே சாஹித்யன் சொல்லிவிட்டான்.
“அம்மா எங்கே போணும்னு சொல்றாங்களோ கூட்டிட்டு போங்க. வீட்டுக்குள்ளேயே இருக்கணும்னு அவசியம் இல்லை. அவங்க போகணும்னு சொன்னாங்கன்னா என்கிட்டே சொல்லுங்க. காரை அனுப்பி விடுறேன்” என்றவன் கொஞ்சம் தாமதித்து “யாருக்கும் தொந்தரவு இல்லாம மட்டும் பார்த்துக்கோங்க. அவ்ளோ தான்” என்று சொல்ல
ஆச்சர்யமாய் அவனை பார்த்தாலும் “அதெல்லாம் பயப்படாதீங்க தம்பி. நான் பார்த்துக்கறேன்” என்று விட்டார் பிரேமா.
“காலைல வழக்கமா டார்லிங் காபேக்கு போனா மதியம் வரை அங்கே தான் இருப்பாங்க . டார்லிங் காபே..வர்ணியை தெரியும்ல” என்று அவன் அழுத்தமான பார்வையுடன் அவரை கேட்க
“தெரியும் தம்பி” என்றபடி அவர் சர்வ சாதாரணமாய் தன் பையை எடுத்து வைக்க இவன் தான் குழம்பி விட்டான்.
வர்ணி தினமும் அம்மாவோடு போன் பேசுவதை அவனுக்கு தெரிவிக்க வில்லை என்ற கடுப்பு அவனுக்கு பிரேமா மேல் இருந்தது. அது தான் இப்போதாவது சொல்வாரா என்று பார்த்தான். அவருக்கு அது ஒரு விஷயமாகவே தெரியவில்லை போலும்..அவர் கண்டுகொள்ளவே இல்லையே..
தலையை கோதிக்கொண்டவன் யாரோ துரத்துவதை போல அவ்விடம் விட்டகன்றான்.
சின்ன குழந்தையோட கேர் டேக்கர் என்றால் கண்டிப்பாய் பெற்றவரிடம் சொல்லியிருப்பார்கள், சொல்லவே வேண்டும். ஆனால் அறுபது வயது நபரிடம் சாதாரணமாய் ஒருத்தி பேசுவதை அவர் ஏன் சொல்லவேண்டும், அம்மாவுக்கு உடம்பு தானே சரியில்லை, அவருக்கு பிடித்தவர்களோடு பேச அதற்கான உரிமை இருக்கிறது தானே.. அந்த நர்ஸ் சரியாய் தான் இருக்காங்களோ..நம்ம தான் அதிகப்படியாய் எதிர்பார்த்து விட்டோமோ?
தலையை பிய்த்துக்கொண்டு மாலுக்கு வந்தவன் நீண்ட நெடிய நாட்களின் பின்னர் மாலின் முன் புற வாசலை நோக்கி நடந்தான். மனதில் ஒரே படபடப்பு. ஒரே ஒரு தடவை வர்ணி நம்மை பார்த்து விட்டாள் என்றால் போதும். சுற்றி நிற்கும் போர்ப்படையை விரட்டி விட்டு அவளை தனியே கொண்டு போய்விடலாம் என்று அவனுக்குள் ஒரு நப்பாசை.
நேற்று இரவு முழுக்க சிந்தித்து அவன் எடுத்த முடிவும் அதுதான். அவளை காயப்படுத்தியது நான், ஆக அதை சமாதானம் செய்ய வேண்டிய கடமை அவனுக்கு தான் இருக்கிறது. இவ்வளவு நாளும் சொல்லிக்கொண்டிருந்தது போல நமக்கு காதலெல்லாம் ஒத்துவராது, அவளை நாம் காயப்படுத்தி விடுகிறோம் நான் ஒரு ஆகாதவன் என்று விலக்கி எல்லாம் வைக்க முடியாது. நேற்று அந்த சுவாதி மேடமின் வரவு அவனை மொத்தமாய் கலைத்துப்போட்டு விட்டிருந்தது.
கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல் அவரது குடும்பமே தலைமறைவு வாழ்க்கை வாழ தெரிந்தோ தெரியாமலோ காரணமான ஒரு மனுஷியின் மேல் வெறுப்பையையோ விலகலையோ அவர் காண்பிக்கவில்லை. இப்போதைய லக்கியை எதற்கும் பொறுப்பாக்க முடியாது. நினைவுகள் இருக்கும் வரை அவளை சந்தோஷமாய் வைத்திருப்போம் என்றாரே..
நினைவுகள் இருக்கும் வரை.. ஆயுள் இருக்கும் வரை.. அந்த வார்த்தைகள் தான் அவனுக்குள் இரவு முழுதும் ஒலித்துக்கொண்டே இருந்தன.
எதுவுமே சாசுவதம் கிடையாதில்லையா?.. காரணமே இல்லாமல் சோகத்தையும் தவிப்பையும் சுமந்து கையில் கிடைத்த அந்த அழகிய வாழ்க்கையை தூக்கிப்போட இருந்தோமே.. முடியாது. முடியவே முடியாது.
இருக்கும் கொஞ்ச நாளில் அவள் ஒருபக்கம் நான் ஒருபக்கம் என்று விடவும் முடியாமல் சேரவும் முடியாமல் தவிக்க முடியாது.
என்ன செய்தாவது தூக்கிப்போட்ட வைரத்தை மீண்டும் தனக்கென எடுத்துக்கொள்ளவே வேண்டும் என்று அவன் முடிவு செய்து விட்டான். அவள் எல்லாவற்றையும் தன்னுடைய குடும்பமாய் நினைத்து தானே செய்தாள். நான் கூட அவள் சிந்தித்த கோணத்தில் சிந்திக்கவில்லையே. கோபப்பட்டு, அவள் மனதில் ஆறாக்காயமாய் இருக்கும் அவளது பின்னணியையே நானும் கோபத்தில் தொட்டு மொத்தமாய் அவளை உடைத்து போட்டுவிட்டேன்.
சொல்ல அத்தனை வார்த்தைகள் இருந்தும் அதை சொல்லியிருக்க கூடாது. அந்த அடிபட்ட விழிகள் இத்தனை நாளும் அவனை தூங்கவிட்டதே இல்லையே...அதை எப்படி சரி செய்யவென்று தெரியாமல் தானே எனக்கு அவள் வேண்டாம் என்று குற்ற உணர்வில் சுற்றிக்கொண்டிருந்தான்!
ஆனால் இப்படியே நாட்களை நகர்த்த முடியாது. சரி செய்தே தான் ஆகவேண்டும்.
ஆனால் நமக்குத்தான் இந்த சமாதானப்படலம் எல்லாம் செய்யத்தெரியாதே.. அவள் வேறு, ஒன்று வா, இல்லை போ..இரண்டுக்கும் நடுவில் நிற்கும் நிலை வேண்டாம் என்று தத்துவம் பேசுவாளே..சரி விடு. எதுவாய் இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்
மனதுக்குள் திட்டம் போட்டபடி வழக்கம் போல உர் முகம் வைத்துக்கொண்டு அவன் மாலுக்குள் நுழைய கண்களோ இடப்பக்கம் டார்லிங் காபேயையே ரகசியமாய் பார்வையிட அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வர்ணி முன்னாலேயே தான் நின்று கொண்டிருந்தாள்.
பச்சை வர்ண ஸ்லீவ்லெஸ் சுடியில் முன்வாசலையே பசுமையாக்கிக்கொண்டிருந்தவளை இவனது கண்கள் ஏக்கமாய் தழுவ அவள் இன்னும் இவனை பார்க்கவில்லை.
“ஓவரா போறீங்கடா. வந்தேன்னா அந்த போர்டை அடிச்சு உடைச்சிருவேன். எங்க கடை காபியையே ப்ரீஸ் பண்ணி ஸ்லரீஸ்னு விக்குற? எங்கடி சிட்டு? அவ தான் இவனுங்களுக்கு பல்க் ஆர்டர் காபியை டெலிவரி பண்ணினா. ஏய் சிட்டு, நம்ம கடையில இருந்துட்டு உங்க நொண்ணனுக்கு வேலை பார்க்கிறியா?” என்று அவள் ஆக்ரோஷமாய் சண்டையில் இருக்க
“யக்கா.. சாத்தியமா எனக்கு தெரியாதுக்கா.. இவன் நிஜமா ஒரு பார்ட்டி என்று சொல்லித்தான் வந்து கேட்டான்” என்று ஆஜரான அந்த சின்னப்பெண் இவனை கண்டு விழிகளை விரித்து பூஜாவை முழங்கையால் இடிப்பதை பார்க்காததை போலவே வர்ணியில் விழிகளை பதித்தான் சாஹித்யன்.
“இங்க பாரு ஒரு பொருளை வாங்கிட்டாலே அது எங்களோடது. அதுக்கு மேல உனக்கு உரிமை கிடையாது” என்று இப்போது குமாரும் வந்து விட இரண்டு பக்கமும் காபிக்கு காபிரைட்ஸ் சண்டை அனல் பறக்க அதை சிரிப்போடு பார்த்திருந்த மால் வாசிகள் சாஹித்யனை கண்டு அவசரமாய் பார்வைகளை பரிமாறிக்கொள்ள இலக்கே குறியாய் வர்ணியை மட்டுமே பார்க்க ஆரம்பித்தான் இவன்.
பல நாட்களுக்கு பிறகு சண்டைக்கோழியாய் முடி சிலுப்பி நின்றவளை அவசரமாய் விழிகளுக்குள் நிறைத்துக்கொண்டவன் ஒருவழியாய் அவளது விழிகள் அவன் மேல் பட்டும் ஒரு செக்கன்ட் கூட தாமதிக்காமல் போட்டுக்கொண்டிருந்த சண்டைக்கே மீண்டும் திரும்ப சாஹிக்கு உள்ளே பலூன் ஒன்று உடைந்து போனது.
கோபம், வருத்தம், அதிர்ஷ்டம் இருந்தால் கொஞ்சம் சீண்டல் பேச்சு என்று எத்தனையையோ அவளிடம் இருந்து எதிர்பார்த்திருந்தவன் இப்படி அவள் அவனை யார் என்றே அறியாதவன் போல நடத்தியதில் மனம் அடிவாங்க விழிகளை சுழற்றினான்.
அந்த சிட்டு இப்போது அவனையும் அவளையும் மாறி மாறி விரிந்த விழிகளும் உற்சாகமுமாய் பார்க்க பூஜாவோ இப்போது மெலிதாய் தெரிய ஆரம்பித்திருந்த வயிற்றோடு இவனையே கொலை வெறியாய் முறைத்துக்கொண்டிருந்தாள்.
இந்தப்பக்கம் பொய்க்கோபமாய் சண்டை போட்டுக்கொண்டிருந்த குமாரும் சாஹியை கண்டதும் பொதுப்படையான ஒரு நாடகப்புன்னகையை அவனுக்கு கொடுத்துவிட்டு விடு விடுவவென உள்ளே போய்விட வழக்கமாய் வரவேற்கும் யாருமே அவனை அந்தப்பக்கம் வரவேற்கவில்லை.
இத்தனை வருடங்கள் இங்கே ஜிம் நடாத்துகிறான், இவர்கள் யாருடனும் அவன் பேசுவதும் கிடையாது. மௌனமாய் தான் கடப்பான் ஆனாலும் இப்படி நீ ஏன் இந்தப்பக்கம் வருகிறாய் என்று கேள்வி கேட்கும் பார்வைகளை அவன் சந்தித்தது இல்லை. அந்த இடத்துக்கு பொருந்தாத மனிதனை போல உணர்ந்தான். எல்லாவற்றுக்கும் மேலாய் வர்ணியிடம் இந்த ஒதுக்கத்தை அவனால் சுத்தமாய் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
நீயாய் தான் வரவில்லை. நானாய் வரும் போது கூட என்னை கடைக்கண்ணால் கூட பார்க்க உனக்கு மனதின்றி போய்விட்டதா என்று அவளை பிடித்து உலுப்பி வேண்டும் போலிருந்தது. ஆனால் நெருங்கிப்பாரேன் என்று அவளை சுற்றியிருந்த போர்வீரர்களின் கோபப்பார்வைகள் சொல்லிவிட தொய்ந்து போன தோளோடு அவன் நடக்கலானான்,
இப்போது வெளியே இருந்த மரங்களுக்கு தண்ணீர் ஸ்ப்ரே செய்துகொண்டிருந்தவளை கடைக்கண்ணால் பார்த்தபடி சாஹி கடக்க பார்வதி ஆன்ட்டி அவனை கண்டதும் குமாரை போலவே நாடக புன்னகையோடு உள்ளே போய்விட சிவா சார் தான் அவனை பார்த்ததும் எழுந்து வந்தார்.
“அம்மா நல்லாருக்காங்களா?”
“இருக்காங்க சார். இப்போ கொஞ்சம் பரவால்ல. இன்னிக்கு இந்த பக்கம் வந்தாலும் வருவாங்க”
சரி சரி என்று சொல்லிவிட்டு அவர் கடக்க இறுகிய முகத்தோடு ஜிம்மை நோக்கி நடை போடலானான் அவன்.
பத்து மணி இருக்கும். “அம்மா கிட்ட டார்லிங் காபே போகலாமான்னு கேட்டேன். ரொம்ப உற்சாகமா இருக்காங்க. கூட்டிட்டு வரவா?” என்று பிரேமா கேட்கவும் காரை அனுப்பி விட்டவன் அடுத்த ஒரு மணி நேரம் முன்புறம் இருந்து கேட்ட குதூகல சத்தங்களுக்கு காது கொடுத்தபடியே வேலையை பார்த்துக்கொண்டிருந்தான். வெளியே போய் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு பொறுமை காத்தவன் மூன்று மணிக்கு மறுபடி கிளம்பி விட்டான்.
என்ன தான் அவள் அடம்பிடித்தாலும் கோபம் காட்டினாலும் நான் பின்வாங்கப்போவதில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாலும் மனதில் சின்னதாய் வலி. அவளுக்கு அன்பை தருவதில் அளவீடே கிடையாது. அதுவும் அவனுக்கு மேல் அவளுக்கிருந்த நேசத்தின் அளவை தெரிந்திருந்தும் அவளை வலிக்க வைத்து விட்டோம் தன் மேலேயே தான் அவனுக்கு சுய பச்சாத்தாபம் கிளந்தது.
அவன் எண்ணியது போல வர்ணி தான் கவுண்டரில் நின்று கொண்டிருந்தாள். வரிசையில் மூன்றாவதாய் நின்று கொண்டிருந்தவனின் கண்கள் அவளைத்தான் ஸ்கான் செய்து கொண்டிருந்தது. வழக்கமாய் ஆர்டர் எடுக்கும் போது வருபவர்களிடம் சிரித்துக்கொண்டே ஏதாவது கேட்பாள், பேசுவாள். இன்றைக்கு இயந்திரம் போல அவளது கைகள் பில் போட்டுக்கொண்டிருந்தன. இன்னும் அவனது வரவையும் கண்டுகொண்டதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை.
அருகில் உட்கார்ந்து ஏதோ ஒரு ஜூசை குடித்துக்கொண்டிருந்த பூஜாவின் விழிகள் தான் இவனை எச்சரிக்கையுடன் பார்த்துப்போயின.
ப்ச். நண்பர்கள் என்றால் காதலை சேர்த்து வைக்க வேண்டும். இங்கே அவளை எப்படி அவனிடம் இருந்து பிரிக்கலாம் என்று தான் சிலர் அலைகிறார்கள், உன்னையும் அன்றைக்கே பிரித்து வைத்திருக்க வேண்டும்! பாவம் பார்த்து சேர்த்து வைத்ததற்கு என்னையே முறைக்கிறாயா? என்று பூஜாவுக்கு ஒரு முறைப்பை கொடுத்தவன் தன்னுடைய முறை வந்து விட “வழக்கமான காபி” என்றான் தன்னை ஒரே கணம் பார்த்து விட்டு பில்லிங் மெஷினில் பார்வையை பதித்துக்கொண்டிருந்த வர்ணியை பார்த்தபடி.
“எவ்ளோ சுகர், மில்க்ன்னு சொல்லுங்க” என்று கேட்ட வர்ணியின் விரல்கள் இலக்கங்களில் உறைந்து அவனது பதிலுக்காக காத்திருந்தன.
அவ்வளவு தான் சாஹித்யனின் கண்கள் சிவந்தே போயின. தினமும் ஒரு காபியோடு அவனை தேடி வருபவளுக்கு இது தெரியாதாமா? பொறுமையாய் போனால் பல்லை பிடித்து பார்ப்பாளா?
“உங்களுக்கு தெரியாதா?” என்றான் பல்லை கடித்தபடி
“இல்லை சார்”
“வர்ணிக்கா..சாருக்கு 2 பாக்கட் சர்க்கரை போட்டாலும் தாங்கும்” என்று குசும்பாய் சொல்லி விட்டு போன சின்னவளை கொலைவெறியாய் முறைத்தவனுக்கு வர்ணி இன்னும் உன்னுடைய காபிக்கான அளவை சொல் என்பது போல வெற்றுப்பார்வை பார்க்க வெறியாகிப்போனது.
“இரண்டு மாசமா ஒரே ஒரு காபி டோர் டெலிவரிக்கு பணம் கட்டி வச்சிருக்கேன். அது கூட தெரியாம என்ன கடை நடத்துற?” என்று அவன் பல்லை கடிக்க
“எனக்கு தெரியலை சார். மன்னிச்சுக்கோங்க. பூஜா இந்த ஆர்டரை எடுத்துக்குறியா?” என்று பவயமாய் சொல்லிவிட்டு அவள் உள்ளே போய்விட அவசரமாய் கவன்டருக்கு மாறிய பூஜாவை முறைத்து விட்டு விடு விடுவென அங்கிருந்து வெளியேறினான் சாஹித்யன்.
“சார். நா வேணும்னா டோர் டெலிவரி பண்ணவா?” அந்த சின்னவளின் குரல் பின்னேயே வம்பிழுக்க
“சிட்டு!!” என்ற பூஜாவின் அதட்டல் குரலும்
“போய்ட்டேன் போட்டேன்” என்ற சிட்டுவின் பம்மல் குரலும் அவனுக்கு பின்னாலேயே ஒலித்து தேய்ந்தன.
அவனுக்கு மனம் உலைக்களமாய் கொதித்து கொண்டிருந்தது. அவனை கண்டதுமே வெளிச்சம் போட்டுக்கொள்ளும் கண்களுக்கு எப்படி இப்படி அடையாளமே தெரியாதவள் போல இருக்க முடிந்தது? புரியவே இல்லை.
ஒட்டவே முடியாமல் உடைந்து போனதா அவன் காதல்?
அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு செல்லும் அவள் வேண்டும் வேண்டும் என்று இன்னும் மோசமாய் அடம்பிடிக்க தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டான் அவன். என்ன ஆனாலும் இதை விடுவதாக இல்லை. அது மட்டும் நிச்சயம்.

Author: Ush
Article Title: லக்கி வீடு - 22
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.