Jagam Nee--EPI 24(EPILOGUE)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
938
-1,732
93
அத்தியாயம் 24(எபிலாக்)



சமைக்க வேணுமே பானை சட்டி

நமக்கே நமக்காய் ரெண்டு புள்ள குட்டி!!!




இரண்டு வருடங்களுக்குப் பிறகு..

“குட்டி மேடம் இன்னும் தூங்கலயா? அப்பாவுக்கு வேய்ட் பண்ணிட்டு இருந்தீங்களா?”

தந்தையின் குரல் கேட்டதும், கட்டிலில் படுத்திருந்த சின்னக்குட்டி கை கால்களை வேகமாய் அசைத்து ங்கா, ங்கா என எச்சில் வழிய சத்தமிட்டது. ஆறு மாதம் ஆகியிருந்தது அவர்களின் செல்ல மகள் யாமினிக்கு.

மகளைத் தூக்கப் போனவனை க்கூம் எனும் கணைப்புச் சத்தம் நகர விடாமல் நிறுத்தியது. பால்கனியில் இருந்து உள்ளே வந்த மனைவியைப் புன்னகையுடன் பார்த்தான் சரவணப்பாண்டியன்.

“என்னவாம் பெரிய மேடத்துக்கு?” என அவளைப் பார்த்து உல்லாசமாகக் கேட்டான் இவன்.

“வேலைக்குப் போய்ட்டு வந்து குளிக்காம கொள்ளாம புள்ளையை டச் பண்ண, சீனாகி போய்டுவ நீ” என மிரட்டியவளை மெல்ல நெருங்கினான் சரவணன்.

“எதுக்கு கிட்ட வர இப்போ!!” எனப் பின்னால் நகர்ந்தாள் இவள்.

“குளிக்காம புள்ளயத்தானே மேடம் தொட முடியாது! புள்ளயோட அம்மாவ தொடலாமா?” எனக் கேட்டவன், அவளை சுவரில் சாய்த்துச் சிறைப் பிடித்திருந்தான்.

“இப்போ என்னத்துக்கு என் கிட்ட வந்து பூனை மாதிரி உரசுற? ரெண்டு வாரமா என்னைத் தள்ளி வச்சவன்தானே நீ!! ஒன்னும் வேணா, தள்ளிப் போ” எனப் பிகு செய்து கொண்டவள்தான் இன்னும் நெருங்கி வந்திருந்தாள்.

வாய் பேசியபடி இருக்க வலது கை உயர்ந்து அவனது சட்டைக் காலரைப் பற்ற, இடது கை அவன் இடுப்பைப் பிடித்து தன் புறம் இழுத்தது.

முகத்தில் புன்னகை விரிய,

“நான் எது செஞ்சாலும், செய்யலைனாலும் அது எல்லாமே உங்கள முன்னிருத்திதான் இருக்கும்னு தெரியாதா மேடம்!” என்றவனின் குரல் குழைந்து தளைந்தது.

“தெரியும்! தெரியும்!” என்றவள் அவன் முகத்தைத் தன் முகத்தருகே இழுத்தாள்.

“இன்னும் குளிக்கல மேடம்!” என்றவனுக்கோ குரலே எழும்பவில்லை.

“இந்த சுத்தபத்தம், குளியல் எல்லாம் உன் பொண்ணுக்காக மட்டும்தான்! எனக்கு நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும்! நான் லவ் பண்ணது வேர்வைல குளிச்சு, ஆடி ஓடி நிக்காம வேலைப் பார்த்த அந்த பாண்டியாவத்தான். அப்பவே உன்னோட வேர்வை வாசம் என்னை போதர்(bother) பண்ணது இல்ல! இப்போ மட்டும் பண்ணிடுமா என்ன?” என்றவளின் குரலும் பட்டை விட மென்மையாய் இருந்தது.

கை அதன் பாட்டிற்கு அவனது முகத்தைத் தொட்டு வருடியது!

“மேடம்” எனக் கிளர்ந்தான் இவன்.

“கிஸ் மீ பாண்டியா!”

“பாப்பா முழிச்சிட்டு இருக்காங்க மேடம்” எனத் தயங்கினான் இவன்.

சிரிப்பு வந்தது இவளுக்கு!

“ரொம்ப நல்லவன்டா நீ! இந்த குணம்தான் உன் கிட்ட மேலும் மேலும் என்னைப் பைத்தியமாக்குது! கிறுக்குப் பிடிக்க வைக்கறடா நீ!” என்றவள் அதிரடியாக அவனது உதடுகளை தன் உதடுகளுக்குள் இழுத்துக் கொண்டாள்.

குழந்தையை ஒரு பார்வையும் இவளை ஒரு பார்வையும் பார்த்துத் தவித்தவனை சட்டென விடுவித்தாள் மனைவி!

“ஓடிப்போ! போய் குளிச்சிட்டு வா! இன்னிக்கு சின்னவ தூங்கனதும் உன்னைச் சின்னாபின்னமாக்கறேன் நான்!” என்றவள், கண்கள் மலர புன்னகைத்தவனைப் பிடித்து குளியலறைக்குள் தள்ளினாள்.

ஷாமினி பார்ட் டைம் கோர்ஸாக ஹோட்டல் மேனேஜ்மேண்ட் எடுத்துப் படிக்கிறாள்! அந்த படிப்பு என்பது அவளது நிறைவேறாத ஆசையல்லவா! தனக்கு முப்பது வயதாகி விட்டது! படிப்புப் பக்கம் போய் விட்டால், காலம் ஓடி விடும்! இனியும் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட்டால் சரியாக இருக்காது என இவள் அபிப்ராயப்பட, இவனோ இரண்டையும் அவளால் சரியாக மேனேஜ் செய்ய முடியும் என வற்புறுத்திக் கெஞ்சி கொஞ்சி சேர்த்து விட்டிருந்தான். அவள் படிக்கப் போகும் போது குழந்தையை இவன் பார்த்துக் கொள்வான். தன்னுடனே வேலை இடத்துக்கு அழைத்துப் போய் வைத்துக் கொள்வான். அவள் பரீட்சை, அசைன்மேண்ட் என இருக்கும் வேளைகளில் கூட சின்னவள் இவன் பொறுப்பில்தான் இருப்பாள்.

இப்பொழுது கூட அவளுக்குப் பரீட்சை நடந்து முடிந்திருக்க, இரண்டு வாரங்கள் அவளை எதற்கும் தொந்தரவு செய்யாமல் படிக்க விட்டிருந்தான். அதற்குத்தான் முறுக்கிக் கொண்டிருந்தாள் அவனிடம்.

குழந்தை பிறப்பு, வளர்ப்பு எல்லாமே இவர்கள் இருவருமே சேர்ந்து கடந்தார்கள். பெரியவர்கள் என யாரும் இல்லாமல் போக, உனக்கு நான் எனக்கு நீ என இன்னும் இவர்கள் உறவு வலுப்பட்டிருந்தது.

கணவன் மனைவியாய் இணைந்திருந்த இருவரும், தட்டுத் தடுமாறி முட்டி மோதி தாய் தகப்பனாய் உருவெடுத்தார்கள். யாமினி இவர்களின் கண்ணின் மணியாகிப் போனாள். மனைவியையும் மகளையும் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் சரவணப்பாண்டியன்.

ஓன்சைட் வேலைத் தள்ளிப் போக, இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வெளிநாட்டுக்குக் கிளம்பிப் போயிருந்தாள் செம்பா. திருமணம் என அண்ணன்காரன் பேச்சை எடுக்க, அவள் போய் விட்டு வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என செம்பாவின் விருப்பம் அறிந்து கணவனை அடக்கி விட்டாள் ஷாமினி! நிதினும் அவன் குடும்பமும் பெரிய விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் இவர்களை வந்து பார்த்துப் போவார்கள்.

மனைவியின் இன்னொரு ஆசையான பெட் அண்ட் ப்ரேக்பஸ்ட் ஆரம்பிப்பதற்கான வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன். சென்னையை ஒட்டி பழைய கட்டிடம் ஒன்றை வாங்கிப் புணரமைத்துக் கொண்டிருந்தான். அவள் படித்து முடிக்கும் போது, இந்த பெட் அண்ட் ப்ரேக்பஸ்ட் பணிகள் முழுமை அடைந்திருக்கும்.

“நீ செய்யற செலவையெல்லாம் நான் கடனாத்தான் வாங்கிப்பேன்! லாபம் வந்ததும் திருப்பிக் குடுத்துடுவேன் பாண்டியா!” என அவள் சொல்லி இருக்க,

“சரி மேடம்! குடுக்கறதுனா குடுத்துடுங்க! உங்க மக இருக்காங்களே, அவங்க பேருல பேங்குல போட்டுடுங்க!” என முடித்துக் கொண்டான் இவன்.

“என்னைத்தான் வாங்க, போங்க மேடங்கற! அவ நீ பெத்த பொண்ணுத்தானே! அவளுக்கும் ஏன் இந்த மரியாதை?” எனக் கடுப்பாவாள் இவள்.

“அவங்க என் மேடம் எனக்குக் குடுத்த பொக்கிஷம்! என்னோட குட்டி மேடம்! உங்களுக்கு அப்புறம் அவங்களுக்குத்தான் என் மேல எல்லா உரிமையும்! என் பொண்ணுக்கு நான் மரியாதை குடுத்தாத்தானே நாளைக்கு மத்தவங்களும் அவங்கள மரியாதையா நடத்துவாங்க! இந்த பாண்டியனோட ராஜ்ஜியத்தின் இளவரசிங்க அவங்க!” எனச் சொல்லி முறுவலிப்பான்!

இந்த மரியாதை, மேடம், வாங்க, போங்க எல்லாம் கட்டிலுக்கு வெளியே மட்டும்தான்! மஞ்சத்தில் இவள் அவன் கிளி மட்டுமே! கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி எனக் கிளியைப் பாடாய் படுத்தி விடுவான் அவள் பாண்டியன்.

“கட்டில்லுக்கு உள்ளே, கட்டிலுக்கு வெளியேன்னு ஏன்டா அந்நியன் கணக்கா வேற வேற மாதிரி நடந்துக்கற” எனச் சுகமாய் சலித்துக் கொள்வாள் இவள்.

“கட்டிலுக்கு வெளியே பாண்டியர்!! அவர் ரொம்ப மரியாதையான மனுஷர்! கட்டிலுக்கு உள்ளே பாண்டியன்! அவன் கேடு கெட்டவன்” எனச் சொல்லி அணைத்துக் கொள்வான் இவளை!

புகைப்பதை அறவே விட்டொழித்திருந்தாள் ஷாமினி! அதிலிருந்து அவள் வெளி வர உதவி இருந்தான் சரவணன். புகைக்கத் தோன்றும் போது இவள் அடக்க முடியாமல் கஷ்டப்பட, அதற்கான டாக்டரைப் பார்க்க அழைத்துப் போய் சிகரெட்டுக்கு பதில் அதைக் கட்டுப்படுத்த சாப்பிடும் மிட்டாய், மனதை திசைத் திருப்ப வேறு வேலைகளில் ஈடுபடுத்துவது எனத் தன்னால் ஆனதை எல்லாம் செய்தான்! அவன் அருகில் இருக்கும் போது மன உளைச்சல் என்பது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துப் போக, முழுமையாய் அதிலிருந்து விடுபட்டாள் ஷாமினி.

இருவருக்கும் சண்டை சச்சரவுகள் என்பது இல்லாமல் இல்லை! அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரும்! அவள் தையத்தக்காவெனக் கோபத்தில் குதிக்கும் போது இவன் அமைதியாகவே இருப்பான்! கொஞ்சம் அவள் அடங்கியதும், மெல்லியக் குரலில் அழகாய் எடுத்துச் சொல்வான்! அவளுக்கு சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்வாள்! இல்லையென்றால் இவன் எப்படி பல்டி அடித்தாலும் வேலைக்காகாது! இவன்தான் இறங்கி வருவான்! அவளது ஆளுமையையும், வலிமையையும் தாங்கிக் கொள்வேன் என்றிருந்தவன் அதை அப்படியே செயல்படுத்தினான். அதனாலேயே அவனை இன்னும் இன்னும் காதலித்தாள் அவனது மனைவி.

கணவன் குளித்து விட்டு வருவதற்குள், மகளைத் தூக்கிக் கொண்டு கீழே போய் ஃப்ளாஸ்கில் இருந்த பாலை எடுத்து வந்தாள் ஷாமினி. வேலை செய்யும் பெண்மணி இரவுக்கு வீட்டுக்குக் கிளம்பி விடுவார். அதனால் இரவில் எது வேண்டுமென்றாலும் இவர்கள் இருவருமே பார்த்துக் கொள்வார்கள்.

குளித்து விட்டு வந்தவன் கண்டது, மகளுக்கு அமுது கொடுத்துக் கொண்டிருந்த மனைவியைத்தான். கிளாசில் ஊற்றி வைத்திருந்த பாலை இவள் கண் ஜாடையால் காட்ட, எடுத்துப் பருகினான் சரவணப்பாண்டியன். அதே கிளாசில் மனைவிக்கும் பால் ஊற்றி வைத்தான். மகள் பசியாறி முடித்திருக்க, அவளை வாங்கித் தோளில் போட்டுத் தட்டினான் சரவணன்.

அதன் பிறகு அவளோடு போனது அவன் பொழுது! கொஞ்சி கொஞ்சி மகளுடன் பேசி விளையாடும் இவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் ஷாமினி!

“பால் குடிங்க மேடம்! எங்கள அப்புறம் பார்க்கலாம்” என அவன் குரல் கொடுக்க மென்னகையுடன் எடுத்து அருந்தினாள்.

மகள் செப்பு வாயைத் திறந்து கொட்டாவி விட, கைகளில் அள்ளித் தோளில் போட்டுக் கொண்டான் இவன்.

தினமும் செய்வது போல,

“யாமினி யாமினி

ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ

பரிபூரணி நீ” எனப் பாடிக் கொண்டே அவள் முதுகை மெல்லத் தட்டிக் கொடுக்க, சுகமாய் ஓசை எழுப்பினாள் பெண்ணரசி!

மூன்று முறை குறுக்கும் நெடுக்கும் பாடியபடி இவன் நடக்க, தூங்கிப் போனாள் மகள்! கட்டில் பக்கத்திலேயே வைத்திருக்கும் க்ரிபில் அவளை ஆடாமல் அசையாமல் படுக்க வைத்தான் சரவணன். அவளுக்கு போர்த்தி விட்டுத் திரும்புவதற்குள் பின்னிருந்து அணைத்திருந்தாள் ஷாமினி.

“இப்போ மேடத்தோட டர்ன்” என்றவன், அவளைக் கட்டிக் கொண்டு மெல்லியக் குரலில் பாடினான்.

“ஷாமினி ஷாமினி

ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ

பரிபூரணி நீ”

கலங்கியக் கண்களுடன் அவள் நிமிர்ந்துப் பார்க்க, கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டான் இவன்.

“நாம ரெண்டு பேரும் அழுததெல்லாம் போதும் மேடம்! ரெண்டு பேரும் இப்போ ஒன்னா இருக்கோம்! நமக்கு ஒரு பொண்ணு இருக்காங்க! அதை மட்டும் நினைங்க மேடம்! பழசெல்லாம் விட்டுருங்களேன்!” என்றவன் அவளிரு கன்னங்களிலும் குட்டி குட்டி முத்தமிட்டான்.

“பாண்டியா!”

“ஹ்ம்ம் மேடம்”

“ஐ லவ் யூ சோ சோ சோ மச்”

“நானும்தான் மேடம்! லவ் யூ சோ சோ சோ மச்” எனச் சொல்லி அழகாய் முறுவலித்தான்.

அவள் உதட்டை மெல்லத் தடவியவன்,

“போட்டுக்கோங்க மேடம்” என இறைஞ்சினான்.

“முடியாது போ”

“ப்ளிஸ் மேடம்”

“உனக்கும் உன் மகளுக்கும் வேற வேலை இல்லைடா! அந்த பியர்சிங்க உதட்டுல போட்டா அவ கையை வச்சிப் புடிச்சு இழுக்கறா! நீ வாயை வச்சிப் புடிச்சு இழுக்கற! கடைசில வலிக்கறது என் வாய்தான்! போட மாட்டேன் பாண்டியா” என இவள் முறுக்கிக் கொள்ள, கட்டிலில் அவளை மெல்லத் தள்ளியவன்,

“போட்டுக்கோ கிளி! செல்லம்ல! என் கண்ணுல்ல! என் பொண்ணுல்ல!” எனக் கொஞ்சியே அவளை அணிய வைத்தான்.

அதன் பின்னான நேரம் இவர்களின் இன்ப நேரமாய் மாறிப் போனது! நிலவு மகள் உறங்கப் போகும் வரை இவர்களும் விழித்திருந்து அவளுக்குத் துணையாய் நின்றார்கள். நடுநடுவே சிணுங்கிய மகளையும் கவனித்துக் கொண்டார்கள். பாண்டியன் கிளியை கிறங்க வைக்க, கிளி பாண்டியனைப் பந்தாடியது! இந்தப் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் என்றுமே உய்யலாலாத்தான்! உல்லாசம்தான்!

பல இன்னல்களைக் கடந்து, துன்பங்களைத் தாங்கி, நாடு விட்டு நாடு ஓடி நம்பிக்கையாய் காத்திருந்த இவளும், அவள் அப்பா கிழிந்த நாராக்கி வைத்திருந்த தன்னுடலைத் தேற்றி, தொழிலை மேலேற்றி, கொடுத்த கெடு வரை காத்திருந்து தேடி ஓடி வந்த இவனும் இனி என்றென்றும் இணை பிரியாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்!

பாண்டியனின் ராஜ்ஜியம் பல்லாண்டு வாழும்!!!



முற்றும்!!!




(இந்த கதை, குடும்பத்தையும் சொந்த பந்தத்தையும் விட்டு விட்டு பிழைப்புக்காக வெளிநாடு போய் ஒரு நல்ல நாள் திருநாளுக்குக் கூட வீடியோ காலின் வழி மட்டும் உயிருக்கு உயிரானவர்களிடம் உறவாடி நிற்கும் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பணம்!)

நான் விளம்பரத்துக்கு அப்ளை செய்ய ட்ரை செஞ்சிட்டு இருக்கேன்! படிக்கறவங்க, லைக் அண்ட் கமேண்ட் போட்டுட்டு போனீங்கன்னா, சைட்ல கொஞ்சம் ட்ராபிக் இருக்கும்! தேங்க்ஸ் டியர்ஸ் :)
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 24(EPILOGUE)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
138
-24
43
இன்னைக்கு மாதிரி இனி எப்பவுமே பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலாவா இருந்துட்டே இருக்கணும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797.
 
  • Love
Reactions: VanishaAdmin