அத்தியாயம் 20
ரகுமான் நடிச்சது சங்கமம்
உனக்கு வைக்கவா குங்குமம்????
கையில் இருந்த ப்ளாஸ்டரை அகற்றி, மருந்து வைத்து மீண்டும் புதிதாய் வேறு ப்ளாஸ்டரை போட்டு விட்டாள் ஷாமினி. இரண்டு கைகளுக்கும் செய்து முடித்தவள், அவன் காலருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.
“மேடம்!”
“ஹ்ம்ம்”
“கால மேல தூக்கி கட்டில்ல வச்சிக்கறேன்! நின்னுட்டோ, இல்ல நாற்காலில உக்காந்தோ செய்ங்க! என் முன்னாடி மண்டிப் போட்டு உக்காராதீங்க ப்ளீஸ்!”
“ஏன்?”
“பாண்டியாதான் கிளியோட காலடியில உக்காரனும்! கிளி என்னைக்குமே பாண்டியனோட தலை மேலத்தான் உக்காந்திருக்கனும்”
முகத்தில் மென்னகைத் துலங்க,
“இவர் சிவ பெருமான்! நான் கங்கை! என்னைத் தூக்கி இவர் தலைல வச்சிக்கறாராம்!” எனக் கிண்டலடித்தாள் ஷாமினி.
“மேடம்! சிவன் ஏன் தெரியுமா கங்கையை தலைல தூக்கி வச்சிருக்காரு?”
“தெரியாதே”
“முன்னெல்லாம் கங்கை ஆகாயத்துலத்தான் ஓடுமாம்! அதுக்குத்தான் அதை ஆகாய கங்கைன்னு சொல்வாங்க! பகீரதன்னு ஓர் அரசன் இருந்தான் அப்போ! அவனோட முன்னோர்களின் அஸ்தியை கங்கைல கரைச்சாத்தான் அவங்க ஆத்மா சாந்தியடையும்னு சொல்லிட்டாங்களாம் முனிவர்கள். அதனால கங்கையை நோக்கித் தவம் பண்ணான் இவன். கங்கையும், சரி நான் பூமில ஓடுறேன்! ஆனா என்னோட ஓட்டத்த பூமி தாங்காது. அது வெடிச்சு சிதறிடும். அப்படி நடக்கக் கூடாதுன்னா, என் வலிமையைத் தாங்கக் கூடிய ஒருவர் என்னைத் தலையில வச்சித் தாங்கனும். அதுக்கு சரியானவர் சிவன்தான். ஆகவே அவர நோக்கி தவம் பண்ணி என்னைத் தலையில தூக்கி வச்சிக்கக் சொல்லுன்னு சொன்னாங்களாம். இவனும் சிவன நோக்கித் தவம் பண்ணானாம். அவரும் அவனுக்கு அருள் பாலித்து, கங்கையைத் தன் தலையில தாங்கி பூமிக்கு மெல்ல இறக்கி விட்டாராம்”
வேலையைப் பார்த்தபடியே கதை கேட்டவள்,
“ரொம்ப நல்லா இருந்தது கேட்க! இப்போ அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள்.
“சிவனால எப்படி கங்கையோட வலிமையைத் தாங்கிக்க முடியுதோ, அதே போல என்னால உங்களோட வலிமையையும், அதிரடியையும், ஆர்ப்பாட்டத்தையும் திவ்யமா தாங்கிக்க முடியும் மேடம்! அந்தச் சிவனுக்கு கங்கை மனைவி கிடையாது! ஆனா இந்தப் பாண்டியனுக்கு இந்தக் கிளிய மனைவியாக்கித் தலைல தூக்கி வச்சிக்கனும்னு ரொம்ப ஆசை! பேராசை!” எனச் சொல்லி முடிக்கும் போது அவனது குரல் தளுதளுத்தது.
கைகள் சட்டென வேலை நிறுத்தம் செய்தன ஷாமினிக்கு. ஆழ்ந்த மூச்செடுத்து விட்டவள் அவனை நன்றாகத் திரும்பிப் பார்த்து,
“ப்ரோபோஸ் பண்ணறியா நீ?” எனக் கேட்டாள்.
எப்பொழுதும் ஓங்கி ஒலிக்கும் அவள் குரல், மென்மையாய் மாறி இருந்தது.
அவன் தலை மேலும் கீழும் ஆமென ஆடியது. கண்களை மூடி சற்று நேரம் அப்படியே நின்றவள், அதன் பிறகு மடமடவென அவனது காலுக்கு மருந்திட்டுக் கட்டி முடித்தாள். அவனிடம் பதிலேதும் கூறாமல், மருந்து குப்பிகளை எடுத்து மேசையில் வைத்தவள், குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அரை மணி நேரமாகியது அவள் வெளி வர. அது வரை நெஞ்சில் திகிலுடன் அந்தக் கதவையை வெறிக்கப் பார்த்திருந்தான் சரவணப்பாண்டியன். வெளியே வந்தவள், விளக்கை அணைத்து விட்டு, அவன் பக்கத்தில் இடைவெளி விட்டுப் படுத்துக் கொண்டாள். அவளாக ஏதாவது பேசுவாள் என இவன் பார்த்திருக்க, சத்தமே இல்லை அவளிடம்.
“மேடம்”
பதிலில்லை.
“மேடம்!”
“ஹ்ம்ம்”
“கோபமா என் மேல?”
பதிலில்லை.
“மேடம்! ப்ளிஸ்! ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சிருங்க! பிச்சைக்காரன் உனக்கெதுக்குடா இந்த பொல்லாத ஆசைன்னு கன்னம் கன்னமா அறைஞ்சிடுங்க! ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க ப்ளீஸ்” என இவள் புறம் திரும்பி இறைஞ்சியவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் ஷாமினி.
அவனைப் பார்ப்பது போல திரும்பிப் படுத்தவள்,
“முதல்ல பார்த்தப்போ உன்னை அறவே பிடிக்கல எனக்கு!” என்றாள்.
“என்னை மாதிரி பசங்கள பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும் மேடம்”
“மூச்! நான் பேசி முடிக்கற வரைக்கும் வாயைத் திறக்கக் கூடாது நீ!” என மிரட்டினாள் ஷாமினி.
அவசரமாக சரியெனத் தலையாட்டினான் இவன்.
“என்னைப் பார்த்து கிளியோபாட்ரான்னு நக்கல் அடிக்கறான் பாரேன் இவன்னு செம்ம கடுப்பு! அதான் உன்னைப் படாதபாடு படுத்தினேன்.”
‘கை தட்டிக் கூப்பிட்டா கடுப்பாகாம கொஞ்சிட்டு நிப்பாங்களா?’ என மனதில்தான் நினைத்தான் இவன். அவள்தான் மூச் எனச் சொல்லி விட்டாளே!
“உன்னை என்ன பாடுபடுத்தினாலும் அமைதியா போன நீ! என்ன வேலை சொன்னாலும் கடைமைக்குன்னு செய்யாம கண்ணும் கருத்துமா இருந்த! கஸ்டமர்ட்ட பேசறப்போ அவ்ளோ ப்ரேன்ட்லியா மூவ் பண்ண! அட இவன் பரவாயில்லையேன்னு தோணுச்சு! ஆனாலும் உன்னை வச்சி செய்யறத நிறுத்தல நான்! அப்படித்தான் என் மாமனார் விக்ரம கொன்னுட்டீங்கல்லன்னு வம்பு வளர்த்தேன்! அப்போ உன் முகத்த நீ பார்த்துருக்கனும்! அப்படி ஓர் அப்பாவியா, ஐயோங்கற மாதிரி அவ்ளோ கியூட்டா இருந்தது! என்னால சிரிப்ப அடக்க முடியல! ரொம்ப காலமாகவே இந்த மாதிரிலாம் நான் சிரிச்சதே இல்ல! உன் முன்னுக்கு சிரிக்கவும் கெத்து விடல! வீட்டுக்குப் போய் நெனைச்சு நெனைச்சு எவ்ளோ சிரிச்சேன் தெரியுமா!!” என்றவளுக்குக் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது!
“அப்புறம்தான் மேத்ஸ் கேள்விக்கு நீ செஞ்சு வச்ச சொலுஷன பார்த்தேன்! பார்டா, எவ்ளோ பெரிய மூளைக்காரன் இவன்னு தோணுச்சு எனக்கு! உன் கூட இன்னும் கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ண மேத்ஸ் டியூசன ஒரு சாக்கா வச்சிக்கிட்டேன்! என்னை என்ன அவ்ளோ பெரிய முட்டா பீஸ்னா நெனைச்ச? உனக்கு ஒரே தடவை படிச்சதும் கணக்க செய்ய முடிஞ்சா எனக்கு மூனு தடவைப் படிச்சா செய்ய வந்துடும்! அப்படி இருந்தும் எதுக்காக உன்னை மிரட்டி டீயுசன் எடுக்க வச்சேன் தெரியுமா?? உன்னோட இன்னும் கொஞ்ச நேரம் டைம் ஸ்பேண்ட் பண்ணத்தான்! உன்னோட இன்னெசன்ஸ், பொறுமை, நான் எது சொன்னாலும் முகம் சுணங்காம நீ செய்யறது, என் மேல நீ காட்டன அக்கறை, அதான்டா தலைவலிக்கு மாத்திரை வாங்கிட்டு வர சொன்னதுக்கு, தைலமும் சேர்த்து வாங்கிட்டு வந்தது, ஃரைட் ரைஸ் செஞ்சுக் குடுத்ததுன்னு எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது பாண்டியா! உன் அருகாமை எனக்கு என்னமோ ஓர் இதத்த குடுத்தது!”
அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி, அவனது கையைப் பற்றி வருடியவள்,
“நானே உன் கூட இருக்கறப்பத்தான் ஸ்ட்ரேஸ் இல்லாம இருக்கேன்! அப்போ வந்து டியூசனுக்கு லீவ் விட்டுக்கலாமான்னு கேக்கவும்தான் உன் மேல எரிஞ்சு விழுந்தேன்! ஆனா நீ சோகமா திரும்பிப் போனதும், கால சுத்துன நாய் குட்டிய எத்தி உதைச்சிட்டது போல ரொம்ப பாவமா போய்ருச்சு! அன்னைக்கு நைட்ல கொஞ்சம் நேரம் உன் கூட இருந்துட்டு கிளம்பிடலாம்னு நெனைச்சேன்! ஆனா உன் கை காயத்த பார்த்ததும் துடிச்சுப் போச்சு எனக்கு! இதை சொல்லவே இல்லையேன்னு அப்படி ஒரு கோபம்! கிளினிக் கூட்டிப் போய் எல்லாம் செஞ்சு ரூம் எடுத்துக் குடுத்துட்டு கிளம்பறப்பத்தான், உன்னை அப்படியே விட்டுட்டுப் போக முடியலடா பாண்டியா! லிப்ட் நோக்கி நீ போகவும் உன் கூடவே ரூமுக்கு வந்து குணமாகற வரைக்கும் உன்னை நல்லா பார்த்துக்கனும்னு எனக்குத் துடிக்கவும், பயந்து போய்ட்டேன்! என்னடா இது! ஏன் இப்படிலாம் தோணுதுன்னு குழப்பமா போச்சு! ஆனா இது சரியில்லையேன்னு மூளை அடிச்சிக்கிது! அதான் அதன் பிறகு உனக்கு எப்படி இருக்குன்னு போன் பண்ணவே இல்ல நான்! என்னை அனாலிசிஸ் பண்ணவே எனக்கு நேரம் சரியா இருந்தது. ஆனாலும் மறுநாள் எப்படி கடைக்குப் போவன்னு கவலையா இருந்தது. இது ஜஸ்ட் நட்புத்தான்னு என்னை ஏமாத்திக்கிட்டு உனக்கு மேசேஜ் போட்டேன்”
இன்னும் நகர்ந்து வாகாய் அவன் கை வளைவில் படுத்துக் கொண்டவள்,
“நான் உன் மேல வச்சிருந்த ஃபீலிங்கை லவ்தான்னு எப்போ கன்பர்ம் பண்ணேன் தெரியுமா?” எனக் கேட்டாள்.
இவன் தெரியாது எனத் தலையாட்ட,
“செம்பா வயசுக்கு வந்துட்டான்னு தெரிஞ்சதும் நீ கண்ணீர் விட்ட தெரியுமா, அப்போத்தான்! உன் கண்ணீர பார்த்ததும், என் இதயம் படபடன்னு துடிச்சது பாண்டியா!! அதை துடைச்சி விடனும், உன்னை காலத்துக்கும் கண் கலங்காம பார்த்துக்கனும்னு தவிப்பா இருந்தது! அப்படியே தலையோட உன்னை அணைச்சு என் நெஞ்சுல சாய்ச்சுக்கனும்னு வெறியே வந்தது! உன் துன்பத்த குறைக்கனும்னுதான் உன் தங்கச்சி கூட பேசனேன்! பேச பேச அவளையும் எனக்கு ரொம்பப் பிடிச்சது! ஆனா பேசனும்னு நெனைச்சது உனக்காக மட்டும்தான் பாண்டியா!!” என்றவள் அவனது நெஞ்சில் முகத்தைப் புரட்டினாள்.
மென்மையாய் அவள் தலையை வருடிக் கொடுத்தான் சரவணப்பாண்டியன்.
“யார் கிட்டயும் சட்டுன்னு ஷேர் பண்ணிக்காத என் குடும்பத்த பத்தி உன் கிட்ட தயக்கம் இல்லாம ஷேர் பண்ணிக்கிட்டேன்! தம்பிய பத்தி, என் எதிர்கால திட்டத்தைப் பத்திலாம் உன் கிட்ட மட்டும் விரிவா பகிர்ந்துகிட்டேன்! தம்பிக்காக நீ அட்வைஸ் குடுத்தப்ப கோபம் வந்தாலும், கடைசில அதை ஏத்துக்கிட்டேன்! மத்தவங்க உன் இடத்துல இருந்திருந்தா தண்ணிய ஊத்துனது மட்டுமில்லாம மூக்குலயும் ஓங்கிக் குத்திருப்பேன்” என்றவள், அவனது கூர் மூக்கை மெல்ல வருடினாள்.
“இந்த காதல் எப்படி வருது பாண்டியா?” எனக் கேட்க இவன் நான் பேசவா என்பது போல சைகை காட்டினான்.
கிளிக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
“ஒரு படத்துல இப்படித்தான் விஜய்காந்த அவங்க ஆள் ரேவதி கிட்ட நான் சண்டை முடிச்சி வர வரைக்கும் மூச்சு விடாதேன்னு சொல்வாரு! அவர் மீனிங் பேசாதேன்னு வரும் நெனைக்கறேன்! ஆனா இவங்க அவர் சொன்னதே அப்படியே ஃபோலோ பண்ணி மூச்சு விடாம இருந்து செத்துடுவாங்க! நீயும் அது போல நான் சொன்னத எல்லாம் வேத வாக்கா எடுத்துக்காத சாமி!!!” என்றவள் அவன் கன்னம் கிள்ளி தன் விரலை முத்தமிட்டாள்.
அவளைப் பார்த்து முறுவலித்தவன்,
“காதல் எப்படி, எதனால வருதுன்னு அந்தக் கடவுளுக்கே தெரியாது மேடம். சிலருக்கு அழக பார்த்து வரும், சிலருக்கு குணத்த, சிலருக்கு பணத்த, ஏன் மச்சத்தப் பார்த்துக் கூட காதல் வருமாம்!” என்றான்.
“எனக்கும் உன் மேல ஏன் காதல் வந்துச்சுன்னு எக்ஸாக்டா சொல்ல தெரியல பாண்டியா! நீ என் கடைல வேலைப் பார்க்கற சாதாரணமான ஒருத்தன். பணத்துலயோ, படிப்புலயோ, அந்தஸ்த்துலயோ ஏன் சிட்டிசன்ஷிப்ல கூட நமக்கு எந்த பொருத்தமும் இல்ல! ஆனா உன்னைப் பிடிச்சது! ரொம்ப ரொம்ப பிடிச்சது! காதல் வந்ததும் நான் சொன்ன எந்த பேதமும் என் கண்ணுக்குத் தெரியல! ஆனா காதலோட சேர்ந்து பயமும் கூடவே வந்தது பாண்டியா! எங்கப்பா நம்மள கண்டிப்பா சேர விட மாட்டாருன்னு தெரிஞ்சுத்தான் உள்ளுக்குள்ள பொங்கி பிரவகிச்ச என் காதல உன் கிட்ட சொல்லாமலே அடக்கி வச்சிக்கிட்டேன்!”
அவளது அப்பாவைப் பற்றிப் பேசும் போது இவன் முகம் இறுகிப் போனது.
“தாயறியாத சூல் இல்லைன்னு சொல்வாங்க! அது எங்கப்பாவுக்கும் பொருந்தும்! என்னோட காதல கண்டுக்கிட்டத மாதிரி அவர் பேச்சுலாம் ஒரு மார்க்கமா இருந்தது! அவர் கிட்ட போய் இது காதலெல்லாம் இல்லைப்பான்னு சொன்னா நான் அதை பத்தி கேக்கவே இல்லையேன்னு சொல்லி, இன்னும் கன்பர்ம் பண்ணிடுவாரு இது காதல்தான்னு! ரொம்ப பயந்து போனேன் நான்! உனக்கே சொல்லாம மறைச்சி வச்சிருந்த காதல், உனக்கு எமனா வந்துடுமோன்னு பதறனேன்! அவர் எதாச்சும் செய்யறதுக்குள்ள உன்னை நாட்டை விட்டு வெளியேத்தனும்னு நெனைச்சேன்! உன்னைப் பிரியறப்போ கூட அப்படியே விட முடியலடா! நான் சொன்ன ஐ வில் மிஸ் யூல ஐ லவ் யூ ஒழிஞ்சிருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும் பாண்டியா! நான் சொன்னா நீ கேப்பேன்னு ஒரு தைரியம்! அதான் உனக்கு பத்து வருஷம் டைம் குடுத்தேன்! என்னைத் தேடி போலந்துக்கு வான்னு சொன்னேன்! அந்த டைம் கேப்குள்ள எங்கப்பாவொட பிடியில இருந்து விலகி நான் ஒரு சுதந்திர மனுஷியாகிடுவேன்னு ஓர் எண்ணம். நீ நெனைக்கலாம், அதான் நானே உன்னை வெளியேத்த நினைச்சேனே, அப்புறம் ஏன் உன்னைக் கொல்லற அளவுக்கு அப்பா போனாருன்னு! நீ உன் நாட்டுக்குப் போய்ட்டாலும், காதல்னு பிணாத்திட்டு என்னைக்காச்சும் உன்னைத் தேடி நான் போய்டுவேன்னு அவருக்கு பயம்! அதே உன்னைக் கொன்னுட்டா அந்த பயம் அனாவசியம்ல!” என்றவளுக்கு உடல் தடதடவென நடுங்கியது.
அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் சரவணன்.
“காபிதியாம்ல ரத்தத்தையும் உன்னோட ஒரு பக்க ஷூவையும் பார்த்து நான் அப்படி கத்தித் துடிச்சேன் தெரியுமா!!! தங்கச்சிய விட்டுட்டு, சம்பாதிக்கனும்னு ஒரே லட்சியத்துக்காக நாடு விட்டு நாடு வந்து ஏச்சுப் பேச்சு வாங்கி, கிட்டத்தட்ட ஓர் அடிமை மாதிரி வேலைப் பார்த்தவன என் காதல் கொன்னுடுச்சோன்னு எப்படி பயந்தேன் தெரியுமா? மயக்கம் தெளிஞ்சு பாண்டியா, பாண்டியான்னு நான் கதறிட்டே இருந்தேன். பிறகுதான் நான் அழற ஒவ்வொரு செகண்டும் நீ என்ன பாடு படறியோ, உயிரு இருக்கோ இல்லையோன்னு பயமா போச்சு! அதுக்குள்ள அப்பாவோட ஆளு கடைக்கு வந்திட்டாங்க! அவங்க கார வேகமா ஓட்டச் சொல்லி அப்பாவைப் போய் பார்த்தேன்! அழுது சிவந்து, அலங்கோலமா இருந்த என்னைப் பார்த்து அமைதியாவே நின்னாரு! தடார்னு அவர் காலுல விழுந்துட்டேன் பாண்டியா! ‘அப்பா! அப்பா! அவன விட்டுடுங்கப்பா! அவன் ரொம்ப நல்லவன்பா! அவனுக்கும் என் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல! விட்டிருங்கப்பா! அவன் நாட்டுல போய் அவன் பொழச்சிப்பான்! இருக்கற பாவத்துல ஓர் அப்பாவிய கொன்ன பாவத்தையும் சேர்த்துக்காதீங்க! நான் சத்தியமா சொல்றேன், நானாக தேடிப் போய் அவனப் பார்க்க மாட்டேன்! என்னை நம்புங்க’ன்னு கதறனேன் பாண்டியா”
அன்றைய நாள் நினைவில் கண்ணீர் உகுத்தவளைப் பார்த்து இவனுக்கு நெஞ்சில் பாரம் ஏறியது.
“அழாதீங்க மேடம்”
“அழுவேன்! இந்த நெஞ்சுல சாஞ்சு அழனும்னுதான் இத்தனை நாளா எல்லாத்தையும் உள்ளுக்குள்ளயே வச்சிட்டு இருந்தேன்! நான் அழுவேன் பாண்டியா” என்றவளின் உச்சியில் இதழ் பதித்தான் மன்னவன்.
“இந்த அளவுக்கு எனக்கு மரண பீதிய காட்டனது போதும்னு நெனைச்சாரோ என்னவோ, உன்னைக் கொல்லாம விட்டுட்டாரு! நானே உன்னைத் தேடி வர மாட்டேன்னு சத்தியம் பண்ணிருந்தேன் அவருக்கு! அவர் செத்துட்டாலும் நான் பண்ண சத்தியத்துக்கு உயிர் இருக்குல்ல! அதான் உன்னைத் தேடி நான் இந்தியாவுக்கு வரலடா! ஆனா ரொம்ப பயமா இருக்கும்டா பாண்டியா! உன்னை எவ்ளோ அதிகாரம் பண்ணிருக்கேன், டார்ச்சர் பண்ணிருக்கேன், கொடுமை பண்ணிருக்கேன்! விட்டது சனின்னு இருப்பியா, இல்லை என்னைத் தேடி வருவியான்னு தவிச்சிட்டே இருப்பேன்! பத்து வருஷமா தினம் இந்த நினைப்புத்தான். வருவான், வர மாட்டான், வருவான், வர மாட்டான்னு எனக்குள்ளயே பட்டிமன்றம் நடக்கும்! எதுக்காகவும் நாட்ட விட்டு நான் எங்கயும் போனது இல்ல! நீ வரப்போ நான் இல்லாம போய்ட்டா, காணோம்னு திரும்பி போய்டுவல்ல! அதான் எங்கயும் போனது இல்ல! பத்தாவது வருஷம் நெருங்க நெருங்க என்னாலத் தாங்கவே முடியல பாண்டியா! எனக்குத்தானே உன் மேல காதல்! உனக்கு இல்லையே! இந்த பத்து வருஷத்துல என்ன வேணா நடந்திருக்கலாம் உன் வாழ்க்கைல! கல்யாணமாகி குழந்தை குட்டிக் கூட இருக்கலாம்! என் நிலமை இலவு காத்த கிளியாகிப் போய்டுமோன்னு பீதியா இருக்கும்! என்னை வேற நீ கிளின்னு தானே கூப்பிடுவ! சோசியல் மீடியால உன்னைத் தேடிப் பார்த்தேன்! எதுலயும் நீ இல்ல! டிடேக்டிவ்லாம் வச்சி தேடற அளவுக்கு பண வசதியும் இல்ல! கடவுள் மேல பாரத்த போட்டுட்டு வேய்ட் பண்ணிட்டே இருந்தேன்டா பாண்டியா!” என்றவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து,
“ஐ லவ் யூ பாண்டியா! அப்பவும், இப்பவும், எப்பவும்!” எனச் சொல்லி அவனது உதட்டைக் கௌவிக் கொண்டாள்.
உதட்டில் இவள் போட்டிருந்த பியர்சிங் அவன் நாக்கோடு மோத, சுக இம்சையில் தவித்துப் போனான் சரவணப்பாண்டியன்.
அவனுக்கு கால் கொஞ்சம் சரியாகும் வரை ப்ராக்கில் தங்கி இருந்த காதல் கிளிகள், மகிழ்ச்சியாக போலந்து நாட்டுக்குப் பயணப்பட்டன.
கீழ் தளத்தில் இவள் வேலைப் பார்க்க, மேல் தளத்தில் வேலையில் இருந்தான் சரவணன். அவனிடம் ஏதோ சொல்வதற்காக தேடி வந்தவளின் காதில் மிக மெல்லிய சத்தமாய் அவன் பேசுவது கேட்டது!
‘இவன் ஏன் இப்படி குசுகுசுன்னு பேசறான்’ என நினைத்தவள், அவனை மெல்ல நெருங்கினாள். கார்ப்பேட் தரையின் உபாயத்தால் அவனுக்கு இவள் வந்த சத்தம் கேட்கவில்லை. மிகத் தெளிவான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தான் சரவணன்.
“இது நம்மளோட பத்தாவது கடை! ஓப்பனிங் செரமெனி ரொம்ப கிராண்டா இருக்கனும்! இப்போ ட்ரேண்டிங்ல இருக்கற தமன்னாவ ஓபேனிங்குக்கு புக் பண்ணுங்க! ஃப்ர்ஸ்ட் டே ட்ரிங்க்ஸ் தவிர ஃபூட் ஐட்டம்சுக்கு இருபது பர்சண்ட் டிஸ்கவுண்ட் குடுக்க அரேஞ் செய்ங்க! அதோட தமன்னா படம் போட்ட மக் ஒரு பிஃப்டி டிசைன் பண்ண சொல்லுங்க! ஏர்லி பெர்ட்டா மினி’ஸ் காபிதியாம் மெம்பர்ஷிப் எடுக்கற ஐம்பது பேருக்கு தமன்னா கையால மக் குடுக்கறதா நம்ம இன்ஸ்ட்டா பேஜ்ல அனவுன்ஸ் பண்ணுங்க! இப்போதைக்கு என்னால எங்கயும் மூவ் பண்ண முடியாது! எதுனாலும் கால் பண்ணாம மெயில் மட்டும் பண்ணுங்க! அவசியம்னா இப்போ மாதிரி நானே மெய்ல் பார்த்துட்டு கால் பண்ணறேன்! நெக்ஸ்ட் பெங்களூர்ல திறக்கப் போற மினி’ஸ் காபிதியாம்கு இடம் தேடற வேலையையும் மறந்துடாதீங்க! ஐ நீட் டூ கோ! பாய்” எனப் பேசியவன் விசிலடித்தபடியே திரும்பிப் பார்க்க, அங்கே பத்ரகாளியாய் நின்றிருந்தாள் ஷாமினி!!!!!

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 20
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.