அத்தியாயம் 20
நீதானே என் செல்களுக்கு உயிர் கொடுக்கும் ஆக்சிஜன்!
“சரி சொல்லுங்க! என்னை எதுக்காக பார்க்க வந்தீங்க மிஸ்டர் விஜய்?” எனக் கேட்டான் ராஜா.
“மிஸ்டர்லாம் வேணாமே! எனக்கும் கிட்டத்தட்ட உங்க அக்கா பசங்க வயசுதான். விஜய்னே கூப்பிடுங்க”
“பேர் சொல்லிக் கூப்பிடறதெல்லாம் இருக்கட்டும்! எதுக்கு என்னைப் பார்க்கனும்னு ஆபிஸ்ல அப்பாயிண்ட்மேண்ட் எடுத்திருந்தீங்க?”
“என்னைத் தெரியுதா உங்களுக்கு?”
“என் கிட்ட கொடுக்கப்பட்ட உங்களோட நேம் கார்ட்ல பேர பார்த்ததும் லேசா சந்தேகம் இருந்தது. நேருல பார்த்ததும், எங்கக்கா வீட்டு மாடில குடி இருந்தவன்னு தெரிஞ்சுடுச்சு” என்றவனின் குரலில் மருந்துக்கும் சிநேக பாவம் இல்லை.
இவனது வேலையில் அடிக்கடி கஸ்டமர்களைப் போய் பார்த்துப் பேசுவது உண்டு. அப்படித்தான் அன்றைய தினம் அவனுக்காக மீட்டிங் ஒரு கபேயில் அரேஞ் செய்யப்பட்டிருந்தது அவர்கள் நிறுவனத்து அட்மின் ஸ்டாபினால்.
“உங்க கிட்ட நான் நிறைய பேசனும்! முதல்ல காபிய குடிங்க மது மாமா”
“மது மாமாவா?”
“உங்க ஷாலுவ நான் அப்படித்தான் கூப்பிடுவேன்” என்றவனை ஆழ்ந்து நோக்கினான் ராஜா.
“ஓஹோ!!” என்றவன் நிதானமாக விஜயைப் பார்த்தபடியே காபியைப் பருகினான்.
ராஜாவின் துளைக்கும் பார்வை அவன் மேல் பாய்வதை உணர்ந்தாலும் சாதாரணமாக அமர்ந்திருந்தான் விஜய். காபியைப் பருகிய ராஜா, மெல்ல எழுந்து கொண்டான்.
“எங்க வீட்டு ஷாலுவ பத்தி கண்டவங்க பேசறத கேக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல!”
எங்க வீட்டு எனும் வார்த்தைகளை அழுத்தி உச்சரித்தவன், ஓரடி எடுத்து வைத்திருப்பான்.
“உங்க வீட்டு ஷாலுவ எங்க வீட்டு மதுவா அனுப்பி விடுங்கன்னு கேக்கத்தான் இந்தச் சந்திப்பு! மிஸ் ஷாலுவ மிஸ்சஸா மாத்த முடியாம நீங்க எல்லோரும் தவிச்சு நிக்கறீங்கன்னு தெரிஞ்சுத்தான் உங்கள பார்க்க வந்திருக்கேன்! உங்க கூடவே என்னென்னிக்கும் மிஸ்ஸாவே அவள வச்சிக்க ஆசைப்படறதா இருந்தா, பை ஆல் மீன்ஸ் கிளம்பி போங்க” என்றான் விஜய்.
முகம் இறுக்கமாகி விட, மீண்டும் வந்து விஜய்யின் முன்னே அமர்ந்தான் ராஜா.
“என்னடா மிரட்டறியா? உன் தங்கச்சி காட்டுன காதல் படம் போதாதுன்னு நீ வந்திருக்கியா இப்போ படம் காட்ட? கொன்னுப் புதைச்சிடுவேன் பார்த்துக்கோ! எங்க வீட்டு மகாலெட்சுமிடா அவ! கண்ட நாய்க்குத் தூக்கிக் குடுத்துருவோம்னு நெனைச்சியா?” எனக் குரலை உயர்த்தாமல் கோபத்தைக் காட்டினான் ராஜா.
வலது கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட விஜய், ராஜாவை நிமிர்ந்து பார்த்தப் பார்வையில் அனல் தெறித்தது.
“என் தங்கச்சி காதல் படம் காட்டினாத்தான்! இல்லைன்னு நான் சொல்லல! உங்க அக்கா மகனுங்க என்ன செஞ்சிருக்கனும்? ஸ்கூல் படிக்கற புள்ளைமா நீ! ஒழுங்கா படிப்ப பாருன்னு எடுத்து சொல்லிருக்கனுமா இல்லையா? அதை விட்டுட்டு, அவ போன்ல க்ரேடிட் இல்லைன்னு சொன்னதும், இன்னும் பேசனுமேன்னு டாப் அப் பண்ணி விட்டது உங்க வீட்டுப் பசங்களோட தப்பு! சாப்பிட காசு இல்லைன்னு சொன்னதும், காசு போட்டு அவளுக்கு ஆசைய உண்டாக்கனது உங்க அக்கா பசங்களோட தப்பு! அவ கொழுப்பெடுத்து ஆடுனா, இவனுங்களுக்கு எங்க போச்சு புத்தி? எப்போ தப்புன்னு ஒன்னு நடந்தாலும் பொண்ணுங்கள மட்டும் ஏன் மது மாமா ஈசியா கை காட்டிட்டு தப்பிச்சிடறீங்க? இங்க நடந்ததுல ரெண்டு சைடும் தப்பிருக்கு! ஒரு கை தட்டுனா ஓசை வராது!! இங்க ஆறு கை தட்டிருக்கு! மூனு பேருமே தப்புத்தான்”
“உன் தங்கச்சியால எங்க மகேன் விஷத்த குடிச்சிட்டு சாகக் கிடந்தான்டா! இப்போ வந்து பெரிய ஹேர் மாதிரி ரெண்டு பக்கமும் தப்புன்னு பேசற! உசுரு போனா வாராதுடா! வராது”
அந்தச் செய்தி இடியாய் இறங்கியது இவனுள்ளே.
“மகேன் இப்போ எப்படி இருக்கான்?” எனக் கேட்டவனின் குரல் தளர்ந்து ஒலித்தது.
“கஷ்டப்பட்டுத்தான் காப்பாத்துனோம்! இப்போ மரீன்ல வேலைப் பார்க்கறான்” என்றவனின் குரலில் அவ்வளவு ஆதங்கம்.
“இந்த விஷயத்துனால பாதிக்கப்பட்ட உங்க மகேன் மரீன்ல வேலைப் பார்க்கறான். எங்கம்மா, இன்னும் ஒரு முழு மனுஷியா வாழ போராடிட்டுத்தான் இருக்காங்க”
முகம் கசங்க, தளுதளுத்தக் குரலில் பேசியவனை அதிர்ச்சியாகப் பார்த்தான் ராஜா.
“அன்னைக்கு மயங்கிட்டாங்கன்னு மட்டும் மது சொன்னா! அதுக்குப் பிறகு எங்களுக்கு இருந்த பிரச்சனைல உங்கள பத்தி எதையும் தெரிஞ்சுக்கல. என்னாச்சி அம்மாவுக்கு?”
“மனோ அங்கிள் பேசனதை தாங்கிக்க முடியல அவங்களால! தன் வளர்ப்பு தப்பா போச்சேன்னு ரொம்ப உடைஞ்சிட்டாங்க! ஏற்கனவே ஹார்ட்ல ப்ளாக் இருந்தது. அதிர்ச்சில மயங்கி விழுந்தவங்களுக்கு ஸ்ட்ரோக் வந்து ஒரு பக்க கை கால் இழுத்துக்குச்சு! ரொம்ப நாளா எல்லாமே பெட்லதான். இப்போத்தான் கொஞ்சம் மெதுவா நடக்கறாங்க! வார்த்தைகள் இன்னும் குளறலாத்தான் வருது! அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வாழ்க்கை எங்களுக்கும் சுலபமா இருக்கல மது மாமா!”
ராஜாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இரண்டுப் பக்கமும் சேதாரம்தான். இப்பொழுது புதிதாய் ஏன் இவன் வந்து ஆறி வரும் ரணத்தை மறுபடி கீற வேண்டும் என யோசித்தான். விஜயின் உரிமையான மது எனும் அழைப்பு, அவளுக்காகப் பேச வந்தது எனப் பார்க்கும் போது, ஷாலு இவனைக் காதலித்திருப்பாளோ எனும் சந்தேகம் வந்தது. ஆனாலும் அதை நம்பவே முடியவில்லை ராஜாவால். அவள் திருமணத்துக்கு மறுக்கிறாள் என்பதுதானே அவனது அம்மாவுக்கும் மாமாவுக்கும் தீராத தலைவலியாக இருந்து வருகிறது! இன்னும் கொஞ்ச நாட்கள் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறாளோ என எண்ணியவனுக்கு, ஓசைப்படாமல் அவள் காதலில் விழுந்திருப்பாளோ என இப்பொழுது சந்தேகம் வந்தது.
“உங்கம்மாவுக்கு நடந்தத கேட்டு எனக்கு வருத்தமா இருக்கு விஜய்! எதிரிக்குக் கூட அப்படி ஒரு நிலை வரனும்னு நாங்க நினைக்க மாட்டோம்! சீக்கிரமா அவங்க பழைய நிலைக்கு வரனும்னு நான் வேண்டிக்கறேன்!”
“தேங்க்ஸ் மது மாமா”
“நடந்தத எல்லாம் விடு! இப்போ எதுக்கு என்னைத் தேடி வந்திருக்க? ஷாலுக்கு உன் மேல லவ்வுன்னு மட்டும் சொல்லாதே! அவ லவ்வுல இருக்கற அறிகுறி ஒன்னையும் நான் இது வரை பார்த்தது இல்ல!”
“நானும்தான் பார்த்தது இல்ல” எனச் சன்னமாக முனகியவன்,
“அப்போ ஏன் இன்னும் அவ கல்யாணம் பண்ணிக்காம உங்களுக்கு ஆட்டம் காட்டறா?” எனக் கேட்டான்.
“அதுக்குள்ள கல்யாணம், புள்ளக் குட்டின்னு கமிட்மேண்ட் வேண்டாம்னு இருக்கலாம். வேலைல இன்னும் கொஞ்சம் திடமா கால் ஊணலாம்னு இருக்கலாம்! எத்தனையோ இருக்கலாம் இருக்கு விஜய்!”
“அதுல ஒன்னா விஜய் மேல நேசம் இருக்கலாமோன்னு கொஞ்சம் நினைச்சிப் பாருங்களேன்! அவளும் நானும் ஒரே காலேஜ்லதானே படிச்சோம்! ஒன்னாதானே பஸ்ல போனோம்! மதுவுக்கு மொட்டை மாடில வச்சி நான்தானே பாடம் சொல்லிக் குடுத்திருக்கேன்! அவ கூட சேர்ந்து பேட்மிண்ட்டேன் விளையாடிருக்கேன்!”
“அதெல்லாம் நண்பர்கள் கூடத்தான் செய்வாங்க! அவ உன் கிட்ட லவ் சொன்னாளா? அத சொல்லு முதல்ல!”
தலையை இடம் வலம் ஆட்டியவன்,
“என்னையும் சொல்ல விட்டது இல்ல! அந்தச் சம்பவம் நடந்த பிறகு அவள பார்க்க வந்திருக்கேன் ஒரு முறை! பேச ட்ரை பண்ணப்போ, ஐ ஹேட் யூன்னு சொல்லிட்டா” என்றான் இவன்.
“இதுல எங்கயும் எங்கக்கா மகளோட லவ்வு தெரியலையே? பின்ன எதுக்கு தெண்டத்துக்கு என் கிட்ட பேச இங்க வந்திருக்க நீ?”
“ஒன்னு யோசிங்க மது மாமா! லவ் இருக்கப் போய்தானே ஹேட் வருது! சும்மா ஒருத்தன பார்த்து ஐ ஹேட் யூன்னு சொல்லிட்டுப் போவாங்களா?” எனக் கேட்டான் இவன்.
‘அதானே!’ என ராஜாவின் மனமும் ஒத்தூதியது அவன் கூற்றுக்கு.
“நான் அவள லவ் பண்ணறேன்னு மதுவுக்கு நல்லாவே தெரியும்! ஆனா அவளோட நேசத்த வாய் வார்த்தையா என் கிட்ட காட்டிக்கிட்டது இல்ல அவ. என்னைப் பார்க்கற பார்வைல பாசம் இருக்கும். என் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துப்பா! அடிக்கடி சண்டைப் போடுவா! அவளோட ஒவ்வொரு செயலிலும் காதல் தெரியும். ஆனா அதை நேரா என் கிட்ட சொல்ல அவ விரும்பியது இல்ல, மது மாமா! அவங்கப்பா மேல அவளுக்கு அவ்ளோ பாசம்! படிக்கற வயசுல என்ன லவ்வுன்னு அவர் கேட்டுருவாரோன்னு பயம் இருக்கும் போல உள்ளுக்குள்ள! என்னோட எதிர்காலத்த பத்தி பேசறப்போ அவ்ளோ ஈடுபாட்டோட கேட்டுக்குவா! நெறய ஐடியாவும் குடுப்பா! என் எதிர்காலத்துல அவளும் இருப்பாங்கற பிம்பத்த நான் காட்டறப்ப, அவ மறுத்து ஒரு வார்த்தைப் பேசனது இல்ல!”
அவனைப் பேச விட்டு அமைதியாகவே அமர்ந்திருந்தான் ராஜா.
“அப்ப படிப்ப மட்டும்தான் முடிச்சிருந்தேன்! வேலை இல்ல, அம்மாவோட ஹேல்த் சரியில்ல! வாடகை வீட்டுல, ரொம்பக் கஷ்ட ஜீவனம். காத்திரு எனக்காகன்னு சொன்னேன்! ஹேட் யூன்னு போய்ட்டா! என் மேல் விழுந்த அவளோட கண்ணீர் துளி மட்டும்தான் எனக்கான ஆறுதல். அந்தக் கண்ணீர் துளிதான் எனக்கு அவ குடுத்த நம்பிக்கை. மது அப்பா கிட்ட பொண்ணு கேட்டு வந்து நிக்கனும்னா நான் ஒரு நல்ல நிலைல இருக்கனும். இல்லைனா என்னையும் என் தங்கை மாதிரி பணத்துக்காக வந்திருக்கேன்னு நெனைச்சிடுவீங்க! இப்போ உங்கள விட நான் நல்ல பொருளாதார நிலைல இருக்கேன்! அவ மேல கொள்ளைக் காதல வச்சிருக்கேன்! எனக்கு மதுவ குடுத்திருங்க மது மாமா” எனக் குரலில் கெஞ்சலுடன் கேட்டவனை ஊடுருவிப் பார்த்தான் ராஜா.
“அவள விட்டு ஆஸ்த்திரேலியால வேலைப் பார்த்தப்ப ஒவ்வொரு செகண்டும் உள்ளுக்குள்ள செத்துட்டே இருந்தேன் மது மாமா! நான் ஒரு நிலைக்கு வரதுக்குள்ள எங்க அவளுக்குக் கல்யாணம் செஞ்சி வைச்சிருவீங்களோன்னு பயந்துட்டே இருப்பேன்! அந்தப் பயத்துல இருந்து என்னைத் திசைத் திருப்பவும், மதுவ நெருங்கனும்னா இன்னும் பெரியாளா வரனும்ங்கற வெறியிலும் நான் நாயா, பேயா வேலை செஞ்சிருக்கேன்! இந்த பொசிஷனுக்கு நான் இவ்ளோ சின்ன வயசுல வந்திருக்கேன்னா அதுக்குக் காரணம் மது மட்டும்தான். அவ எனக்குக் கிடைக்கனும்ங்கற எண்ணம் மட்டும்தான்”
இன்னும் ஏதும் வேண்டுமா என வெய்ட்டர் வர, இருவருக்கும் இன்னொரு கப் காபி ஆர்டர் செய்தான் விஜய்.
“மேல சொல்லு” எனக் கதை கேட்பது போன்ற நக்கல் பாவனையில் சொன்னான் ராஜா.
“கல்யாணத்துக்கு மதுவோட மறுப்பையும், அவ அப்பாவோட முயற்சியும் நான் மறைமுகமா கவனிச்சுட்டேத்தான் இருக்கேன். அவளோட பார்ட் டைம் படிப்பு முடிய சில மாதங்கள்தான் இருக்கு. அது முடிஞ்சதும் இன்னும் தீவிரமா களத்துல இறங்குவாரு மனோ அங்கிள்னு தெரியும். மதுவுக்கு உங்க மேல ரொம்ப அட்டாச்மெண்ட். அவ சந்தோஷத்துக்காக நீங்களும் எதையும் செய்வீங்க. அதான் உங்க கிட்ட வந்திருக்கேன் எங்கள சேர்த்து வைக்க ஹெல்ப் கேட்டு! மது அவங்கப்பாவ மீறி எந்த முயற்சியும் செய்ய மாட்டா! எங்களுக்காக போராடறதுனா, அது நானாத்தான் இருக்கனும்! ப்ளீஸ் மது மாமா” எனக் கிட்டத்தட்ட கெஞ்சியவனை இறுக்கத்துடனே பார்த்திருந்தான் ராஜா.
“எங்க மாமா ஒத்துக்கவே மாட்டாரு! இது சரி வராது”
ராஜாவைக் கூர்ந்து நோக்கிய விஜய்,
“என்னோட சந்தோஷம் மது கிட்டத்தான் இருக்கு. அவளோட சந்தோஷம் என் கிட்ட இருக்குன்னு நிரூபிச்சிட்டா, எங்களுக்கு உதவி செய்வீங்களா?” எனக் கேட்டான் இவன்.
யோசனையாகிப் போனான் ராஜா. வற்புறுத்தி, இமோஷனலாகப் பேசி, மிரட்டி மதுஷாலினியின் திருமணத்தை முடிக்கலாம். ஆனால் திருமணம் மட்டுமா இவர்களது இலக்கு? அவளது சந்தோஷம்தானே இவர்களுக்கு முக்கியம். விஜய் சொன்னது போல, அவளது சந்தோஷம் விஜயிடமிருந்தால் இன்னொரு திருமணம் அவளுக்கான ஆயுள் தண்டனையாகி விடாதா எனச் சிந்தனையாகிப் போனான். ராஜாவால் விஜய்யை அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவன் மேலும் அவன் குடும்பத்து மேலும் இருந்த வெறுப்பை ஒதுக்கி வைத்தவன், விஜய்யை ஆராயும் பார்வைப் பார்த்தான்.
அழகனாய் இருந்தான். ஆரோக்கியமாய் தெரிந்தான். பதவி இருக்கிறது. பணம் இருக்கிறது. கண்களில் கயமைத் தெரியவில்லை. மது என உச்சரிக்கும் போதே, வார்த்தைக்கு வலிக்குமோ என்பது போல மென்மையாய் உச்சரித்தான். ஆனாலும் ராஜாவுக்கு இன்னும் விஜயைப் பற்றி அவனே அறியாமல் விசாரிக்க வேண்டி இருந்தது.
“எப்படி நிரூபிப்ப நீ?” எனக் கேட்டான் ராஜா.
“இது நான் வேலை செய்யற கம்பேனியோட எச்.ஆர் நேம் கார்ட்! ஐ.டி டீம்ல இருந்து ஒருத்தங்க இப்போத்தான் லெட்டர் போட்டாங்க! மூனு மாசத்துல அவங்க வெளியாகறப்ப, மதுவும் ஸ்டடிச முடிச்சிருப்பா! மதுவ அந்த வேலைக்கு நான் சேர்த்துக்கறேன். என் கிட்டத்தான் வர போறான்னு சொல்லாம, அனுப்பி வைங்க! அவ முடிவெடுக்கட்டும் நான் வேணுமா வேணாமான்னு! நான் வேணும்னு முடிவெடுத்துட்டான்னா, யார் தடுத்தாலும் நான் நிக்க மாட்டேன்”
“என்னடா? தூக்கிடுவியா எங்க வீட்டுப் பொண்ண?”
“நிக்க மாட்டேன்னுதானே சொன்னேன்! விழுந்துடுவேன்! கால்ல விழுந்துடுவேன் மது மாமா! அவ அப்பா காலுல சாஷ்டாங்கமா விழுந்துடுவேன்”
எவ்வளவு அடக்கியும் சிரிப்பு வந்து விட்டது ராஜாவுக்கு. வாய் விட்டுச் சிரித்து விட்டான் இவன்.
“ஷாலுவ உன் கிட்ட அனுப்பி விடறேன். ஏன்னா அவளுக்கும் ஒரு க்ளோஷர் வேணும்! உன் கிட்ட பழகிருக்கா! அத அவளாவே முடிச்சும் விட்டிருக்கா! அது அடி மனசுல நின்னு உறுத்துதோ என்னமோ! அதான் கல்யாணத்துக்கு முழு மனசா சம்மதிக்க முடியல அவளால! உன்னைப் பார்த்துட்டா, தெளிவாகிடுவா! உன்னை முழு மனசா வேணாம்னு சொல்லிட சான்ஸ் இருக்குன்ற காரணத்துக்காக அனுப்பி விடறேன்”
“அப்படி மட்டும் நடந்துட கூடாதுன்னு வேண்டிக்கறேன்! இல்லைனா நான் என்னைக்கோ ஒரு நாள் செத்துப் போறப்ப, வாழை மரத்தைத்தான் எனக்குக் கட்டி வச்சு சாங்கியம் பண்ணுவாங்க!” என்றவனின் குரலில் தெரிந்த உறுதியில் ஆடிப் போனான் ராஜா.
தன்னிடம் ராஜா சொல்லி இருந்த விஜய்யுடனான சில மாதங்களுக்கு முன்பு நடந்த சந்திப்பை அசைப் போட்டபடியே, பின் பக்கம் போட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தார் மனோகர்.
சற்று நேரத்தில் அவரைத் தொடர்ந்து வந்திருந்த விஜய்,
“அங்கிள்” என அழைத்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தார் மனோகர்.
“மதுவுக்கு அமைஞ்ச மாதிரி எங்களுக்கு ஒரு நல்ல அப்பா அமையல. இப்போ அவர் ஓரளவுக்கு திருந்தி வாழ்ந்தாலும், நாங்க வளந்தது கஷ்ட ஜீவனத்துலத்தான். காசு இருக்கறப்ப அஸ்மிக்கு அள்ளிக் குடுப்பாரு! இல்லாதப்ப தெரியாத மாதிரி இருப்பாரு! இல்லாமலே இருக்கறப்ப, ஆசை வராது அங்கிள்! கிடைச்சும் கிடைக்காம இருக்கறப்பத்தான் பேராசை முளைச்சிக்கும். அப்படியான சூழ்நிலைலத்தான் அவ தப்புப் பண்ணிட்டா! அவளுக்காக நான் சப்போர்ட் பண்ணிப் பேச வரல! மன்னிச்சிடுங்கன்னு கேக்கவும் வரல. அஸ்மிக்கும் எனக்கும் உள்ளது ரத்தப் பந்தம்! அவள என்னால என்னைக்கும் விட்டுட முடியாது!”
விஜய்யின் முகத்தைப் பார்க்காமல் வெட்ட வெளியை வெறித்தபடி அமர்ந்திருந்தார் மனோகர்.
“பொண்ணு கேட்டு வந்தவன், அவனுக்குச் சாதகமா பேசாம பாதகமா பேசறானேன்னு ஆச்சரியமா இருக்கும் உங்களுக்கு. நான் பொய்யான உறுதிமொழிகள குடுக்க விரும்பல அங்கிள். அஸ்மி என் வாழ்க்கைல ஒரு அங்கம்னா, மதுதான் என்னோட வாழ்க்கையே! அவள அப்படிப் பார்த்துப்பேன், இப்படிப் பார்த்துப்பேன்லாம் பில்ட் அப் குடுக்க விரும்பல. எனக்குக் கட்டிக் குடுத்துட்டுத் தெரிஞ்சுக்கோங்க எப்படிப் பார்த்துப்பேன்னு! நீங்க ஹ்ம்ம்னு சொல்லாம அவ என் மனைவியா வர மாட்டா! எப்பவுமே என் அப்பாத்தான் எனக்கு எல்லாம்னு சொல்லிட்டே இருப்பா மது! அது போலவே அவ எனக்குப் பெத்துக் குடுக்கற மகளும் சொல்லனும்கறது மட்டும்தான் என்னோட பெரிய ஆசையே அங்கிள். பழசெல்லாம் மறக்க முடியலைன்னாலும், உங்க மகளுக்காக ஒதுக்கி வச்சிட்டு எங்கள சேர்த்து வைங்க அங்கிள்!”
அவன் காதலுக்கு அவளையே அறியாமல் ஆப்பு வைத்தத் தங்கையையே விட்டுத் தராதவன், ஆசை ஆசையாய் காதலித்து மணக்கப் போகும் தாரத்தையா விட்டு விடுவான் எனத் தோன்றியது மனோகருக்கு. அந்தச் சம்பவம் நடக்கும் முன்பு, அவருக்கும் விஜய்யை நிரம்பவே பிடிக்கும் அல்லவா! மகள் மீது கோபத்தைக் காட்டி விலகி நின்றவருக்கு, இரவெல்லாம் அவளது கண்ணீர் முகம்தானே மன நிம்மதியைக் கெடுக்கிறது. மகேனுக்காகவும், மகேஷூக்காகவும் அவர் யோசிக்க, அவர்களோ தங்கைக்காக இவரிடமே சிபாரிசுக்கு வருகிறார்களே! தன் பிள்ளைகளை நினைத்து மெல்லிய முறுவல் பூத்தது மனோகருக்கு.
விஜய்யை நிமிர்ந்துப் பார்த்தவர்,
“காதலுக்காக என் காலுல விழுவேன்னு சொன்னியாமே? எங்க விழக் காணோம்!” எனக் கேட்டார்.
“மருமகன் மாமனாரு காலுல விழுந்தா, மாமனாருக்குத்தான் இழுக்கு! அதனால” எனச் சொன்ன விஜய் அவரை ஆரத் தழுவிக் கொண்டான்.
அவரும் புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டார்.
என்னதான் நடக்கிறது என எட்டிப் பார்க்க வந்த ராஜா,
“இங்க பாருங்கடா அநியாயத்த! பொண்ணுப் பார்க்க வந்துட்டு, மாமனார கட்டிப் புடிச்சுக்கிட்டு நின்ன ஒரே மாப்பிள்ளை இவனாத்தான் இருப்பான்!” எனச் சொல்லி கலகலவென சிரித்தான்.

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 20
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.