லக்கி வீடு - 6

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
அவனுக்கு சற்று முன்னே ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்த வர்ணியின் மனத்திலோ உணர்வுகள் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கக் கண்ணை வேகமாய்த் துடைத்தபடியே கோவிலை நோக்கி ராக்கியை விரட்டிக் கொண்டிருந்தாள்.

மனம் முழுக்க உணர்வுகளின் வயப்பட்டிருந்தது. கஷ்டப்பட்டு படித்து முடித்து வெளியே வந்து ஒரு தொழில் ஆரம்பித்து மத்திய தர வாழ்க்கையை ஒவ்வொரு செங்கல்லாய் கட்டி முடித்ததற்கெல்லாம் இறுதி வரை அர்த்தமே இல்லையா? கடைசியில் அநாதை என்ற சொல்லில் தான் அவர்களின் அடையாளம் நின்று கொள்ளுமா?

பிரதீப்பின் வீட்டுக்கு பூஜாவை பிடிக்கவில்லை என்றதும் மனம் லேசாய் வலித்தது தான். அதை தாங்கள் பின்னணியோ செல்வாக்கோ பணமோ இல்லாதவர்கள் என்ற அர்த்தத்தில் தான் மறுக்கிறார்கள் என்பதளவில் தான் வர்ணியின் மனது எண்ணியிருந்தது. ஆனால் இன்றைக்கு கடைக்கு வந்த அந்த மனிதரையும் அவரது உறவுகளையும் நேரில் பார்த்தபோது உலகத்தின் பாசாங்குகள் தங்களை தோலுரித்து கோரப்பற்களை வெளிக்காட்டியதைப் போல இருவருமே உறைந்து நின்று விட்டார்கள்.

ஏனெனில் அந்த மனிதருக்கும் அவர் உறவுகளுக்கும் அவர்கள் மேல் இருந்தது இருந்தது அப்பட்டமான வெறுப்பும் அசூசையுமே! அவர்கள் இருவரையும் மனிதர்களாய் கூட எண்ணிப் பார்க்கவில்லை. வீட்டுக்குள் தற்செயலாய் வந்து விட்ட சொறி கொண்ட தெருநாயை அடித்து விரட்டும் ஆக்ரோஷம் மட்டுமே அவர்களின் மனிதத்தனத்தையும் குணத்தையும் மறைத்து அங்கே வெளிப்பட்டிருந்தது. தங்களைக் குறித்த உருவகத்தை வலுக்கட்டாயமாய் தளவாடியில் பார்க்க வைக்கப்பட்ட அந்தக்கணம் அவளுக்கு இன்னுமே உடலை நடுங்க வைத்தது. பூஜாவின் கையை இறுகப் பற்றிச் கொண்டு அந்தக்கணத்தைக் கடக்க அவர்கள் தங்களுக்கு தைரியத்தை மானசீகமாய் பரிமாற முயன்றபடி உறைந்து நின்ற கணம் வர்ணிக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது.

இனிமேல் இந்த திருமணம் நடக்காது.

பூஜா நிச்சயம் சம்மதிக்கப் போவதில்லை.

பிரதீப் பயந்தாங்கொள்ளி தான் என்றாலும் அவனது காதலை என்றைக்குமே வர்ணி சந்தேகப்பட்டதில்லை. அவனது காதலும் நிஜம் பூஜாவும் காதலித்தது நிஜம்.. ஆனால் இவர்கள் மனதில் இருக்கும் தங்களின் பிம்பத்தைப் பார்த்த பிறகு சர்வ நிச்சயமாய் பூஜா இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். பூஜாவின் முகத்தைப் பார்த்தபோதே புரிந்து போனது அவளுக்கு.

சரி இது போகட்டும்…இந்த காயம் அவளை இனிமேல் இன்னொரு வாழ்க்கை குறித்து யோசிக்க அனுமதிக்குமா? வர்ணியே யோசிப்பாளே.. ஒவ்வொரு வீட்டிலும் போய் வாழ்க்கை பிச்சை வாங்கித்தான் வாழ வேண்டும் என்றால் அப்படியொரு வாழ்க்கையே அவளுக்கு தேவையில்லை என்று வர்ணியே முடிவெடுக்கும் போது பூஜா இலகுவில் இதை கடந்து சென்று விடுவாளா?

யார் யாரோ சுற்றி நின்றார்கள். பலர் தடுக்க பார்த்தார்கள். "பாவம் யாருமில்லா பெண்கள்" என்றார்கள், சிலர் தடுக்கவும் பிரயத்தனமில்லாமல் பரிதாபமாய் வேடிக்கை பார்த்தார்கள்.. முகங்கள் முகங்கள் எல்லாமே முகங்கள், கடலலை போல நெளிந்து வளைந்து பிம்பங்கள் ஓட அது யார் எவர் என்று பிரித்தறியும் ஆற்றலை அவளது மூளை எப்போதோ நிறுத்திக் கொண்டு விட்டிருந்தது.

எல்லாம் முடிந்தது. தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று தான் வர்ணி வாய் திறந்தாள்.

ஆனால் கையை ஓங்கிக் கொண்டு அவர் வந்த போது நடுங்கிப் போனாள்.

செவிப்பறை கிழிந்து உதட்டோரம் ரத்தம் வழியப் போகிறது என்று ஒரு பிரமை உறைந்து நின்றவளின் மனதில் ஓட, பூஜா அவளை அனிச்சையாய் தனக்குப் பின்னே மறைத்துக் கொள்ள, லக்கி ஆன்ட்டியின் "டார்லிங்" என்ற அலறலும், முகங்களின் அலையை நீந்தி விலக்கி பரிதவித்து ஓடி வந்த அவரும் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிய, "ஐயோ ஆன்ட்டி" என்று பூஜாவை உதறிக்கொண்டு ஓட அவளது உள்ளுணர்வு உந்திய அந்த கணம் தான் அவன் உள்ளே வந்தான்.

முதலில் அந்த மனிதரின் கையைப் பிடித்து தடுத்து விட்டு அம்மாவையும் பாதுகாத்துக் கொண்டவன் உள்ளே வந்து நிமிர்ந்து நிற்க, மிரட்டும் அவனது உடல்மொழிக்கு மேலதிகமாக கோபத்தில் சிவந்த விழிகள் எல்லாரையும் காலத்தை உறைய வைப்பதைப் போல நிற்கும் இடத்திலேயே உறைந்து நிற்க வைத்தது.

பளீர்! பிரதீப் கன்னத்தை அதிர்ந்து பற்றிக் கொண்ட அந்த கணம் தான் அவள் அவ்வளவு நேரமும் அமிழ்ந்து போய்க்கொண்டே இருந்த சதுப்பு நிலம் அவளை வெளியே துப்பி விட்டது போல அவளும் சுய உணர்வுக்கு வந்தாள் வர்ணி.

சாஹி செய்ததை சத்தியமாய் அவளுக்கே நம்ப முடியவில்லை.

அந்த மனிதரின் ஆக்ரோஷத்தை நிறுத்தி அம்மாவை பாதுகாத்துக் கொண்டு அங்கே யாரும் இருக்கக்கூடாது என்று மிரட்டி விட்டு போயிருந்திருக்கலாம். அவன் அப்படி செய்யவில்லை. பூஜாவுக்காய் செய்யாவிட்டாலும் நியாயத்துக்காய் அவன் பிரதீப்பை கேள்வி கேட்க, அவன் அடிவாங்கியதில் குமுறி அழுதபடி அருகே ஓடினாலும், பிரதீப்பின் பக்கம் செல்லாத பூஜாவைப் பார்த்ததுமே அவள் மனதில் நினைத்தது வர்ணிக்கு உறுதியாகி விட்டது.

இனிமேல் இவள் பிரதீப்பை சேரவும் மாட்டாள். அவனைக் கடந்து செல்லவும் மாட்டாள்.

ஆசை ஆசையாய் பதிவுத் திருமணமே ஆனாலும் எந்த குறையும் இருக்கக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒழுங்கு செய்து கொண்டிருந்தவளுக்கு இப்போது பெரும் சோகம் மனதைக் கவ்விற்று.. நேரே நின்று கொண்டிருந்த குமாரை அனிச்சையாய் பார்க்க ஆண்டாண்டுகளாய் அவர்கள் பேசிக்கொள்ளும் பரிபாஷை அப்போது அவனும் அதையே உணர்வதை சொல்லிற்று.. வர்ணியின் தோள்கள் தளர்ந்தன.

குமாரோ பிரதீப்பை சாஹி கேள்வி கேட்பதையே ஒருகணம் பார்த்திருந்தவன் விடுவிடுவென வெளியேறிப் போக வர்ணிக்கும் இயலாமையில் அழுகை தான் வந்தது. பிரதீப் ஒத்துக்கொள்வதோ அவனது தந்தையாரும் உறவினர்களும் செய்வதறியாமல் கத்துவதோ எதுவும் அவள் மனதைத் தாக்கவில்லை. தன்னுடைய நண்பியின் ரணப்பட்ட மனதையும் கண்கூடாய் தெரிந்த அவளது எதிர்காலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டு கையாலாகாதவளாய் அங்கே நின்று கொண்டிருந்தாள்.

மீண்டும் குமார் வந்தான். இப்போது அவன் கண்ணில் சிரிப்பு இருந்தது. வர்ணியை நோக்கிய ஒற்றைக் கண்சிமிட்டல். அவ்வளவே தான்.. வர்ணியின் தலைக்குள்ளும் மின்னல் வேகத்தில் சில்லுகள் சுழல அவளுக்கும் 'இதோ இதோ இது தான் சரியான தருணம். இதை மட்டும் விட்டோம் என்றால் இவளுடைய வாழ்க்கையில் இப்படியொரு தருணம் வராமலே போய்விடலாம்' என்று எண்ணம் தொற்றிக்கொள்ள பார்வை இப்போது பார்வதி ஆன்ட்டியிடம் படிந்திருந்தது.

இந்த டாஸ்க்குக்கு சரியானவர் இவர் தான்.. அவருக்கு பூஜாவுக்கு நல்லது நடக்கவேண்டும் அதை நாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று அவளுக்குத்தான் தெரியுமே..

சாஹியிடம் குமார் மாலையை நீட்டிய அந்த கணம் மோதி விழுவதைப் போல பார்வதி ஆன்ட்டி மேல் இவள் விழுந்து ஆன்ட்டியை சாஹிக்கு அருகில் தள்ளிவிட சாஹியோடு மோதப் பார்த்தவர் சுதாகரித்து நிமிர்ந்தபோது அவள் எதிர்பார்த்ததைப் போல மாலைகளையும் கண்டு விட்டார்.

"சரி சரி.. அது தான் அவனே ஒத்துக்கிட்டான். அதுக்கப்புறம் என்ன? பூஜா இங்கே வா இதை பிடி.. தம்பி நீ இதை பிடி" என்று இருவரின் கையிலும் அவர் மாலைகளை கொடுக்க பூஜா வாங்கவில்லை.

"அட வாங்கிக்க.." என்று மிரட்டி அவரே தான் அவளது கையைப் பிடித்து மாலையை வாங்க வைத்தார் வர்ணியும் அதற்குள் ஓடி வந்து நின்று விட, "எல்லாரும் மாத்திக்கோங்க மாத்திக்கோங்க" என்று சொல்ல ஆரம்பிக்க பூஜாவுக்கு அங்கே மறுக்க முடியவில்லை. வர்ணி எதிர்பார்த்ததைப் போலவே..விழிகளில் நீர் பொங்க அவளது மறுப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

அதை பிரதீப்பும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், அவசரமாய் அவளது கழுத்தில் மாலையைப் போட்டவனின் விழிகளால் அவளை இறைஞ்சலானான். யுகங்களாய் நீடித்த கணங்களின் பின் பூஜா ஒரு வழியாய் அவனது கழுத்தில் மாலையைப் போட்டு விட்டாள். தலைக்கு மேல் அழுத்திக் கொண்டிருந்த மலையே அகன்றது போல இருவரையும் அணைத்து வாழ்த்திவிட்டு வர்ணி விலகிக்கொள்ள அதன் பிறகு நடந்தது எதுவுமே அவளது கட்டுப்பாட்டில் இல்லை..

பொங்கிய சிரிப்போடு இதற்கெல்லாம் காரணமானவனை ஓரக்கண்ணால் இப்போது புதிதாய் முளைத்திருந்த வாஞ்சையோடு பார்த்தாள் அவள்.

அவனது அதிர்ந்த முகபாவத்தைப் பார்க்க அவளுக்கு கொஞ்சம் பாவமாய் இருந்தது தான் ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லையே.. அவன் அந்நியன் என்ற எண்ணமே இப்போது அவள் மனதில் சுத்தமாய் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் அவனை உபயோகித்துக் கொண்ட குற்றவுணர்வு.. ம்ஹ்ம்.. சுத்தமாய் இல்லை!

சிரித்துக் கொண்டே உடை மாற்றி மேக்கப் போட்டுக்கொள்ள ஓடி விட்டவள் அவன் எப்படியும் கோவிலுக்கு வரமாட்டான் என்று தான் குழந்தைகளை ஆள்கடத்தல் செய்து பெற்றோரை அழைப்பது போல, லக்கி ஆன்ட்டியைக் கடத்திக் கொண்டு அவனை அழைத்து வரும் பொறுப்பையும் குமாரிடம் கொடுத்து விட்டு பறந்து விட்டாள்.
 
Author: Ush
Article Title: லக்கி வீடு - 6
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
இப்போது கடுங்கோபமாய் வருகிறானே.. அடித்து விடுவானோ என்று சின்னதாய் ஒரு பயம் வேறு.. விடு விடு பார்த்துக்கலாம். அவன் அந்தக்கணம் தலையிட்டிருக்காவிட்டால் அவர்களுக்கு என்ன ஆகியிருக்குமோ? அவன் இல்லாமல் திருமணம் நடப்பதா? என்ன ஒன்று.. பல்லைக்கடித்துக் கொண்டு திட்டுவான்.. அதற்கெல்லாம் பயந்தா முடியுமா?

ஆனாலும் இவன் பார்க்கத்தான் கரடி மாதிரி இருக்கான். சரியான டெடி பேர்!

அவள் சிரிப்பதை பார்த்து எதுவும் புரியாமல் வண்டியில் போகும் உற்சாகத்தில் சிரித்துக் கொண்டே வந்த லக்கி ஆன்ட்டியை வாஞ்சையாய் பார்த்தாள் வர்ணி.

"மேனேஜர்.. நீங்களும் டிரஸ் மாத்திக்கிறீங்களா?"

"ஏன் இது நல்லாத் தானே இருக்கு" என்றார் அவர் தன்னுடைய உடையை குழப்பமாய் பார்த்தபடி

"பூஜாக்கு கல்யாணம் பண்ண போறோம் ஆன்ட்டி. இப்படியேவா வரப்போறீங்க?" என்று அவள் சிரிக்க

"சேலை சேலை.. சாஹி சாஹி" என்று அவர் தடுமாறலானார்

லேசாய் மனதில் ஊசி குத்த சிரிப்பை வரவழைத்தபடி அவர் கையை பிடித்து ஆட்டியவள் "நான் நித்யாக்கா கிட்ட சொல்லி விட்டேன், அவங்க உங்களுக்கு சேலை கொண்டு வருவாங்க.. கோவிலுக்கு போனதும் மாத்திக்கலாம்" என்று சமாதானம் செய்தாள். பிறகு எப்போதுமே நிறுத்த கஷ்டப்படுவதைப் போல ராக்கி மக்கர் செய்ய எப்படியோ அவளும் குதித்து ஸ்கூட்டரும் ஆன்ட்டியும் கவிழாமல் கடைசி செக்கனில் அவர்களையும் இறுகப் பிடித்து இறக்கி விட்டாள். அவருக்கு அதுவும் உற்சாகம் கொடுத்திருக்க வேண்டும் கலகலவென சிரிக்க ஆரம்பிக்க வர்ணியை முறைத்துக் கொண்டு முன்னே வந்து நின்றான் சாஹி.

"ஹாய்" என்று வெள்ளைக்கொடியை அசைத்தாள் வர்ணி

அவன் கண்டுகொள்ளவே இல்லை "அறிவிருக்கா உனக்கு.. இந்த ஓட்டை வண்டில அம்மாவை அழைச்சிட்டு வர்ற.." என்று தான் ஆரம்பிக்கவே செய்தான்.

அவளுக்கு கொஞ்சம் நல்ல காலம் இருந்தது போலும். "அடியேய்.. என்னடி என்னை விட்டுட்டு நிச்சயதார்த்தம் பண்ணிட்டு வந்துட்டீங்க.. சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்ல" என்று ஆபத்பாந்தவராய் பெரிய பையோடு நித்யாக்கா பைக்கில் கணவரின் பின்னிருந்து இறங்கி அவளை நோக்கி ஓடி வர

சாஹியின் முகம் அஷ்ட கோணலானதைப் பார்க்காதது போல நித்யாக்காவை விழிகளால் எச்சரித்தாள் அவள்.

அவர் எங்கே பார்த்தார்? "இந்தா பேக்.. இதை தானே ரெடி பண்ணி வச்ச?" என்ற படி அவர் கையில் பதிவு திருமணத்துக்கு பூஜாவை தயார் செய்ய நேற்று எடுத்து வைத்திருந்த பையை திணித்தவர் சாஹியைப் பார்த்து அப்பாவியாய் சிரித்து வர்ணியின் காதுக்குள் "இவன் தான் அவனா?" என்று வேறு கிசுகிசுக்க சாஹி கேட்டுவிட்டான் என்று அவனது மாறிய முகமே சொல்லி விட்டது.

நித்யா அக்காவுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். அசடு வழிந்து அருகில் மூவரையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்த லக்கி ஆன்ட்டியைப் பார்த்து "அடடே இவங்க தான் மேனேஜரா?" என்று புன்னகைத்து "உங்களுக்கு ஒரு பட்டு சேலை கொண்டு வந்திருக்கேன்மா.. மாத்திக்கலாம் வாங்க" என்று அழைக்க அவரும் இயல்பாய் "வளையல் வச்சிருக்கியா கல்யாணத்துக்கு வெறுங்கையோடு போக முடியாது" என்று கொண்டு இயல்பாய் நித்யா அக்காவோடு கிளம்பி விட மேலும் ஒரு செக்கன்ட் இங்கே நின்றால் கூட அவளுக்கு தான் சேதாரம் ஆகும் என்று தெரியாதா என்ன?

"சாஹி சார்.. இன்னிக்கு எங்களோட தீம் பிங்கும் வெள்ளையும். நீங்களும் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கலாம்" என்று ஏற்கனவே கோப மூச்சுக்களை விட்டுக்கொண்டிருந்த கரடியின் வயிற்றில் கம்பியால் குத்தி விட்டு பறந்தே விட்டாள் வர்ணி.சிக்குவேனா நானு!

அவன் அங்கே கோவிலில் தங்களோடு நிற்பதே அவளுக்கு பெருத்த உற்சாகத்தைக் கொடுத்தது.

மாலில் அவர்களோடு கூட வந்தவர்கள் பரிச்சயமான சிலருக்கும் தகவல் கொடுத்திருக்க வேண்டும் அங்கே இன்னும் இரண்டு மூன்று தலைகள் அதிகமாய் தெரிந்தன.

நவீன் அண்ட் கோ, குமார், சதாசிவம் அங்கிள், நித்யாக்காவின் நந்தன் அண்ணா என்று எல்லாரும் கல்யாண வேலைகளை கவனிக்க அவளுக்கு ஒரு வேலையும் இல்லை.

உள்ளே போய் பூஜாவை உணர்ச்சி வசப்படுத்த மனதில்லாமல் சின்னதாய் அந்த இடத்தை கிடைத்த பொருட்களை வைத்து அலங்காரம் செய்து கொண்டிருந்தவள் உற்சாகமாய் அவனிடம் போய் போய் பேசிக் கொண்டிருந்த மக்களுக்கு அவஸ்தையாய் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டு நின்று கொண்டிருந்த சாஹியில் அடிக்கடி படிந்து விலகியது அவளுக்கே தெரிந்திருக்காது.

பெண் தயாராகி வரும் வரை உட்கார்ந்திருந்த ஆன்ட்டிகள் ஏதோ ரகசியமாய் பேசிக்கொண்டிருக்க அந்தப்பக்கம் வேண்டுமென்றே போனவளுக்கு அச்சொட்டாய் எல்லாமே கேட்டது

"அச்சோ நீங்க பார்த்திருக்கணும் அக்கா.. அந்த ஆளு வர்ணியை அடிக்க வந்தானா,, சாஹிக்கு தாங்க முடியலை. எங்கே இருந்து உள்ளே வந்தான்னு தெரியலை. புகை மாதிரி இருந்துது. பளீர்னு சத்தம் கேட்க மாப்பிள்ளை கன்னத்தைப் பிடிச்சிட்டு நிக்கிறாரு."

"நான் தான் சொன்னேனே.. அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ இருக்குன்னு.. இல்லைன்னா சண்டை வருமா? அவன் இதுவரை எந்த வயசு பொண்ணுக்கிட்டயாவது வாய் திறந்து பேசியிருப்பானா? இவகிட்ட மட்டும் தான் சண்டை போடுறான். அம்மாவையுமே இவ கிட்டத்தான் விட்டு வச்சிருக்கான்..வர்ணி கொஞ்சம் விளையாட்டு தனமா இருந்தாலும் அவனுக்கு பொருத்தமா தான் இருப்பா..நடந்தா நல்லாருக்கும்!"

என்ன நல்லாருக்கும்? ..இது மட்டும் அவன் காதில் கேட்கணும்.. மொத்தப்பேரையும் தூக்கி போட்டு மிதிப்பான். கதை வசனம் எழுதறதுக்கு ஒரு நியாயம் வேணாமாடா? என்று தலையில் கையை வைத்த படி அதற்கு மேல் கேட்க திராணி இல்லாமல் வர்ணி அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டாள்.

ஒருவழியாய் பூஜா தயாராகி வர லக்கி ஆன்ட்டி நித்யா அக்காவின் பிங்க் பட்டுப்புடவையை அணிந்து கொண்டு கியூட்டாய் கை நிறைய கண்ணாடி வளையல்களோடு சந்தோஷமாய் சுற்றிக் கொண்டிருக்க தன்னோடு அவரை பிடித்து வைத்துக் கொண்டாள் வர்ணி. அதற்கு ஒரு உள்நோக்கமும் இருந்தது. அவர் வெளியே போனால் சாஹி அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு போய் விடுவானோ என்ற பயம் தான், வேறென்ன? குழந்தையின் உற்சாகத்துடன் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டு சந்தோஷமாய் சுற்றியவருக்கும் அங்கிருந்து அகலும் எண்ணமே இல்லை.

ஒரு அறையில் ஞானம் பெற்றுவிட்டான் போலும்.. தெளிவாய் ஒரு கன்னத்தில் சிவப்போடு மணமேடையில் உட்கார்ந்திருந்தபடி வர்ணியைப் பார்த்து சிரித்த பிரதீப்பைப் பார்க்க இப்போது அவளுக்கும் சிரிப்பு வந்தது. ஒரு வழியாய் தாலி கட்டப்பட நெகிழ்ந்து போய் மலர்களைத் தூவி வாழ்த்தினாள் வர்ணி.

"வர்ணிம்மா யாரையும் போக விடாத நானும் குமாரும் போய் சாப்பாடு எடுத்துட்டு வர்றோம்" என்று நந்தன் அண்ணா சொல்லிக் கொண்டு போக தான் அவளுக்கு உணவு விஷயமே ஞாபகம் வந்தது. கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லையே! என்னதான் நித்யா அக்கா உறவாடினாலும் ஒரு சின்ன தலையசைப்போடும் புன்னகையோடும் கடந்து விடும் நந்தன் அண்ணா இப்போது முன்னே நின்று பம்பரமாய் சுழன்றதையும் இப்போ அவரே உணவை ஏற்பாடு செய்ததையும் பார்த்திருந்த வர்ணிக்குள் விவரிக்க முடியாத பல உணர்வுகள்!

மாப்பிள்ளையும் பெண்ணும் ஓரமாய் ஒரு தூணில் இருந்து பேசிக் கொண்டிருக்க லக்கிஆன்ட்டியை நித்யாக்கா தங்களுடைய கும்பலுக்குள் பிடித்துக் கொள்ள ஏனோ யாருடனும் கலக்க மனதில்லாமல் தூணோடு சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் வர்ணி.

"ஏய்.. எல்லாம் பிளான் பண்ணி பண்ணிட்டல்ல.." என்று நக்கல் செய்த படி அருகில் வந்து அமர்ந்தான் நவீன்.

"ஷ்.. உங்கண்ணன் கேட்டா தொலைஞ்சோம்" என்று சிரித்தவளுக்கு அவனது வருகையை நினைத்து இப்போதும் சிரிப்பு வந்தது. "ஏன்டா உள்ளே வந்து பேச மாட்டியா? வரும் போதே கத்திட்டு வர்ற.. எவ்ளோ முக்கியமான சண்டை போயிட்டு இருந்தது., சிரிச்சு தொலைச்சிட்டேன்டா.."

"அந்த அசிங்கத்தை ஞாபகப்படுத்தாதே.. உள்ளே வந்ததும் சாஹி அண்ணனை பார்த்ததும் திகைச்சிட்டேன்.." என்று அவன் அசடு வழிய சிரிக்க

"ஹா ஹா தாங்க்ஸ்டா.." என்று மனதார சொன்னாள் வர்ணி.

"அதை சாஹி அண்ணாக்கு சொல்லு" என்றான் அவன் நன்றாய் சாய்ந்து கொண்டு.

"நான் ஏன் சொல்லணும்? அவர் பூஜாக்கு தானே செஞ்சார்.. இதுவே எனக்குன்னா அவர் ஓடியே போயிருப்பார்" என்று தோளைக் குலுக்கினாள் வர்ணி

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
"பாவம் அவரை வில்லன் மாதிரியே பில்டப் பண்றதே உனக்கு வேலையா போச்சு." என்று அவன் பதிலுக்கு நொடிக்க

"உங்கண்ணன் எனக்கு பண்ணது வில்லன் வேலை இல்லையா?" அவளுக்கு இன்னும் அவன் துரத்திய அவமானம் போகவில்லை.

"அது உன் தப்புத்தான். அவர் தான் ஆயிரம் தடவை சொன்னார்ல உன்னை வர வேணாம்னு.. டபிள் மடங்கு பீஸ் வேற கேட்டார்.. நீ தான் புரிஞ்சுக்கலை"

"என்ன புரிஞ்சுக்கலை?"

"ஏய் நீ என்ன லூசா? அங்கே வர்ற பசங்க எல்லாரும் நல்லவங்க கிடையாது.. அதுவும் காலைல வர்றவங்க வேலை வெட்டிக்கு போகாம சுத்திட்டிருக்கிற குரூப்,, அது தான் பொண்ணுங்களை நம்ம சேர்க்கறது கிடையாது" என்று அவன் உண்மையை சொல்ல வர்ணிக்கு விழிகள் தெறித்து விழுவது போலாயின..

"அநியாயமா இருக்கு!”

"ஒழுங்கா யோசிக்கவே மாட்டியா? என்று கடிந்தவன் பொண்ணுங்களை கூப்பிட்டால் அவங்களுக்கு பாதுகாப்பான சூழலை கொடுக்கணும். அதுக்கு நிறைய பேர் வேலை செய்யணும் அப்போ தான் கவனமா பார்க்க முடியும்.. இங்கே திறந்த மால், பெரும்பாலும் இருக்கறது அண்ணன் மட்டும் தான் அவரால எப்படி எல்லாத்தையும் சமாளிக்க முடியும்?” என்று தலையசைத்தான்

"ஆனாலும் அப்படி அடம் பிடிச்சு துரத்துற அளவுக்கு ஒரு நாளிலேயே என்ன நடந்துரும்?" வர்ணிக்கு இன்னும் நம்ப முடியவில்லை.

அவளை நம்பாத பார்வை பார்த்தவன் "உனக்கு தெரியாதா?" என்று கேட்டான்

"தெரியாம தானே கேட்கிறேன்."

"பின்னாடி இருந்தவன் உன்னை போட்டோ எடுக்க முயற்சி பண்ணினான் லூசு"

"எதே!" அவள் அதிர்ந்து விட்டாள்..முதன் முதலாய் ஜிம் போன குஷியில் எல்லாவற்றையும் தொட்டு தடவி சந்தோஷமாய் சுற்றியவளுக்கு பார்வைகள் உறுத்தத்தான் செய்தது. அவள் கண்டுகொள்ளவில்லை!

"சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம எந்த உலகத்துல இருக்கே நீ? உன்னை விரட்டி விட்டுட்டு அப்புறமா அவனையும் மெம்பர்ஷிப்பை கேன்சல் பண்ணி அனுப்பியாச்சு" என்றான் நவீன்

"அதான் அவனை அனுப்பியாச்சே..அப்புறம் ஏன் என்னையும் அனுப்பணும்?"

"எங்களுக்கு பொண்ணுங்களை பாதுகாப்பா வச்சு டிரெயின் பண்ணற கப்பாசிட்டி கிடையாது. நீ ஆண்கள் மட்டும்னு எங்கே போட்டிருக்கு, போர்டை காட்டுன்னு லந்து பண்ணதால ஆர்டர் பண்ணிய போர்டு வரும் வரை தான் உன்னை உள்ளே விடறதுன்னு முன்னாடியே பிளான் போட்டுட்டோம்..அன்னிக்கு போர்டும் வந்துடுச்சு!” என்று அவன் சிரிக்க

"போடா" என்று கடுப்பாய் சொல்லிவிட்டு கோபமாய் நடைபோட்டவளை போட்டோ எடுக்க யாரோ இழுத்துப் போனார்கள்.

ஆன்ட்டியை இவள் அழைக்க அவரோ சாஹியை அழைக்க தூணுக்கு பின்னே ஒளிந்து கொண்டாள் வர்ணி.

உர்ர்ர் முகத்தோடேயே வந்து தம்பதிகளை வாழ்த்துவதையும் அவர்களும் நெகிழ்ச்சியாய் அவனுக்கு நன்றி சொல்லியதையும் பார்த்திருந்தவளுக்கு இப்போது அவனோடு கோபம் கொள்ள அவளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நினைக்கவே சிரிப்பு வந்து தொலைத்தது. எல்லா தப்பும் இவள் மேலே தானே

அப்படியும் சொல்ல முடியாது. இவனை விட ஒரு செங்கல் சிறப்பாய் பேசும்.. வாய் திறந்து இது தான் பிரச்சனை என்று சொல்லியிருந்தால் அவள் பேசாமல் போயிருப்பாளே

அஹீம் சொல்லியிருந்தால் உடனே பெண்கள் என்றாலே இந்த பிரச்சனை வருமென்று நீ எப்படி சொல்லலாம், என் உடலை செக்ஷுவலைஸ் பண்ணுகிறாயா? என்று நீ சண்டைக்கு போயிருப்பாய் என்று அறிவு நக்கல் செய்ய இதழ்களை கடித்தாள் வர்ணி.

அங்கே மேடையில் லக்கி ஆன்ட்டி ஒரு புறமும் சாஹி ஒருபுறமும் போய் போட்டோவுக்கு போஸ் கொடுக்க நிலையெடுக்க சரியாய் அந்த போட்டோ எடுக்கப்பட முன்னர் ஓடி வந்து ஆன்ட்டியின் பக்கத்தில் நின்று கொண்டாள் வர்ணி. சாஹி அவளை பார்வை பார்த்தான் தவிர எதுவும் ஆட்சேபிக்கவில்லை.. திட்டியே ரொம்ப டயர்ட் ஆகி விட்டிருப்பான் போலிருக்கு! என்று உள்ளுக்குள் சிரித்தவள் அப்படியே பூஜாவை பார்க்காமல் நழுவி ஓடியே விட்டாள்.

அதன் பிறகு சாப்பாடு வந்து விட்டது . எல்லாரும் கோவில் மடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு , அதன் பிறகு பாயாசம் போல மஞ்சளாய் ஒன்றை நித்யாக்கா பரிமாற அவரை அரண்டு பார்த்தனர். அவரோ "கேசரி கிண்டிக் கொண்டிருந்த போது வர்ணி கால் செய்யவும் அப்படியே சட்டியோடு கொண்டு வந்து விட்டேன்..பதம் தான் தப்பா போச்சு, டேஸ்ட் நல்லாருக்கு சாப்பிடுங்க " என்று அசடு வழியே சிரிக்க அவரை கலாய்த்த படியே உண்டதும் அன்றைய இனிய நினைவுகளில் ஒன்றானது.
இப்போது அவ்வளவு பழக்கமில்லாதவர்கள் எல்லாரும் போய்விட்டிருக்க நெருக்கமானவர்கள் மட்டுமே மிஞ்சியிருந்தார்கள். வர்ணி மெல்லிய புன்னகையோடு அமர்ந்திருந்தவள் எதிரே அமர்ந்திருந்த பூஜாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன தான் குழப்பம் வந்தாலும் மாலை மாற்றி நிச்சயதார்த்தம், பிறகு கோவிலில் திருமணம் என்று முறைப்படியே அவர்களை உண்மையில் ஆசீர்வதிக்கும் மனிதர்களோடு எல்லாம் அமைந்து விட்டது.. இதை விட வேறு என்ன ஆசீர்வாதம் வேண்டும் அவளுக்கு ?

அப்படியே நாலு மணிக்கு பதிவாளர் அலுவலகத்துக்கு போய் திருமணத்தை பதிவும் செய்து விட்டால் எல்லாம் நிறைவாகி விடும். என்று யோசித்துக்கொண்டிருந்தவள் திடும்மென நேரத்தை "நாலு மணி நாலு மணி" என்று பதறிப்போனவள் “பிரதீப் நாலு மணி” என்று கத்தி விட

அவனும் பதறிப்போய் பூஜாவை இழுத்துக் கொண்டு வர,

"நானும் நேரத்தையே பார்க்கலைடி.. அரை மணி நேரம் தான் இருக்கு.. டைமுக்கு போயிடுவோமா? கால் பண்ணி நேரத்தை மாத்தணுமா?"

அதை கேட்கும் போதே வர்ணிக்கு அதில் உடன் பாடில்லை..சந்தோஷமான நாளில் அது மட்டும் ஏன் கருப்புள்ளியாய் மாற வேண்டும்?

ஆனால் நிலைமை கொஞ்சம் அவர்களுக்கு எதிராய் தான் இருந்தது. மாலில் இருந்து கோவிலுக்கு நடந்தே வந்ததால் யாரும் வாகனங்களைக் கொண்டு வரவில்லை வர்ணியைத் தவிர..

"அச்சோ என் காரும் சர்வீஸ்ல இருக்கேப்பா" என்று சதாசிவம் அங்கிள் பதற நந்தன் அண்ணாவையும் காணோம்.

"அக்கா நந்தன் அண்ணா எங்கே?" என்று அவசரமாய் வர்ணி நித்யாவை கேட்க

"பக்கத்துல தான் போனார் ஏன்டி.." என்று கொண்டே வந்தவருக்கு சுத்தமாய் நினைவில்லை

"நாலு மணி.." என்று இவள் நினைவு படுத்தத்தான்

"அச்சோ நாலு மணி" என்று அவரும் பதறி போனோடு ஓட சொல்லி வைத்தால் போல எல்லாரும் சாஹியை திரும்பி பார்த்தார்கள். நவீன் ஏற்கனவே அவனிடம் "அண்ணா சாவி கொடுங்கண்ணா.. நான் ஓடிப்போய் காரை எடுத்துட்டு வர்றேன்.. ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் ..வீடு அவ்ளோ தான்.வேறே எங்கேயும் போக மாட்டேன் " என்று கேட்டுக்கொண்டிருந்தான். வர்ணி நிற்க நேரமில்லாமல் ராக்கியை உயிர்ப்பிக்க ஓடினாள் .. அது வேலை நிறுத்தம் செய்தது.

இந்தப்பக்கம் மறுப்பாய் உயர்ந்த சாஹியின் கை பூஜாவும் பிரதீப்பும் அவசரமாய் வர தளர்ந்து கீழிறங்க நவீன் அதற்குள் சாவியை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டிருந்தான்.

இரண்டே நிமிஷத்தில் சாஹியின் கார் சீறிக்கொண்டு அங்கே வர யாரோ தம்பதியினரையும் சதாசிவம் அங்கிளையும் பின் சீட்டில் ஏற்றினர்.. வர்ணி இன்னும் ராக்கியோடு போராடிக் கொண்டிருந்தாள்,

"ஸ்டார்ட் ஆகு ஸ்டார்ட் ஆகு.."

கார் கொஞ்சமென்றால் புறப்பட்டிருக்கும்.. வேகமாய் வெளியே வந்த சாஹி சாரதி பக்கக் கண்ணாடியைத் படபடவென தட்டினான்..

"அண்ணா வேகமா வந்துடுவேன்." நவீன் யன்னலை மட்டும் திறந்து கேட்க

"இறங்கி வாடா.." என்று பல்லைக்கடித்தான் சாஹி

"தம்பி நேரமாகுதுப்பா.." என்று யாரோ ஒருவர் அவனுக்கு பரிந்து வர

நவீனும் அதே நேரம் சாஹிக்கு பயந்து வெளியே வர .. "லைசென்ஸ் இருக்காடா உன்கிட்ட..பெரிய இவன் மாதிரி போற?" என்று உறுமியவன் நவீன் பதிலுக்கு அசடுவழிய கொலைவெறியாய் அவனை முறைத்து விட்டு டிரைவர் ஆசனத்தில் தானே ஏறிக்கொண்டான்.

"அது தானே பார்த்தேன் நம்ம சாஹி தங்கம்" என்று குரல்கள் இப்போது அவன் புகழை மீண்டும் பாட ஆரம்பித்தன.

சீறிக்கொண்டு புறப்பட்ட கார் ராக்கியின் அருகில் பிரேக்கிட கதவு திறந்தது.

வர்ணி எதிர்பார்ப்பாய் நிமிர்ந்து பார்க்க.. "தனியா என்னால போக முடியாது. வந்து ஏறு.." என்று அவன் முறைக்க உள்ளே பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு குமிழியிட்ட மகிழ்வோடு முன் சீட்டில் தொற்றிக் கொண்டாள் வர்ணி.

சிரித்தால் அடித்தே விடுவான் என்று வர்ணி பம்மிக்கொண்டே முகத்தை வைத்துக்கொள்ள அவன் அவளை ஒருமுறை உற்றுப்பார்த்ததில் இன்னும் சிரிப்பு வந்து விட ஜன்னலோரம் திரும்பியவள் வாயையும் திறக்கவில்லை இந்தப்பக்கமும் திரும்பவில்லை.

பூஜாவின் கல்யாணத்துக்கு இன்னொரு கிளைமாக்ஸ் இருந்தது போலும்.. அரசியல்வாதி யாரோ போவதற்காக பிரதான வீதி மூடப்படப்போவதாகவும் அவர் நிற்கும் பகுதி மூடப்பட்டு விட்டது வேறு வழியில் வருகிறேன் சீக்கிரம் போங்கள் என்று போனில் நந்தன் அண்ணா தகவல் சொல்ல கார் சீறிப்பறந்தது.

எதிரே வீதி மூடப்படும் காப்பில் நழுவிக் கொண்டு கார் மறுபுறம் சென்று இன்னும் வேகம் கூட்டி பறக்க குதூகலமாய் கை தட்டி விட்டவள் அவனது ஓரப்பார்வையில் அப்படியே அமைதியாய் மடிந்து உட்கார கொண்டு விட்டாள். ஒரு வழியாய் அவர்கள் ரெஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு போன போது சரியாய் நேரம் நான்கு மணி.

"என்னப்பா ஐஞ்சு நிமிஷமாவது முன்னாடி வரவேணாமா? நீங்க தான் கடைசின்னு நேத்தே சொன்னேனா இல்லையா? நாலே காலுக்குள்ள வேலை முடியலைன்னா என்னை கேட்காதீங்க..இப்போ சாட்சி கையெழுத்து போடறவங்க வாங்க" என்று அவர் கூப்பிட அங்கே சதாசிவம் அங்கிள் மட்டும் தானே இருந்தார் இன்னொரு கையெழுத்தை போட வேண்டிய நந்தன் அண்ணா இன்னும் வரவில்லையே..

"என்னப்பா , ரெண்டாவது ஆள் எங்கே? தாமதம் பண்ண முடியாது.. இல்லைன்னா இன்னொரு நாளைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்குங்க.." அவர் கறாராய் கடுகடுக்க

"நான் போடறேன்" என்ற வர்ணி விடுவிடுவென முன்னே வந்தாள். பூஜாவுக்கு அவள் செய்யாமல் வேறே யார் செய்வார்கள்..

"ஐடியைக் கொடும்மா.." என்று அவர் கேட்கவும் தான்

அச்சோ ஐடியை ராக்கிக்குள் விட்டு விட்டு வந்து விட்டேனே.. என்று உறைத்தது. இவ்வளவு செய்தும் கடைசியில் என்று அவள் கண்கலங்க.. அவள் முன்னே பதிவாளரிடம் ஒரு ஐடி நீண்டது. கலங்கிய கண்ணோடு வர்ணி சிரிக்க முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்பித்து கொள்ளாமல் சாஹி பதிவாளரின் முன்னே நின்றிருந்தான்.

"என்னப்பா ஒவ்வொருத்தரா நினைச்சு நினைச்சு வரீங்க.." என்று அவர் கடுப்பாக

"உங்களுக்கு சாட்சியும் ஐடியும் தானே தேவை" என்றவனின் குரலில் அவளே பயந்து விட்டாள்

"பயில்வானைக் கொண்டு வந்து மிரட்டுறாங்க" என்று முணுமுணுத்தாலும் அவனது ஐடியை வாங்கி பதிவுகளை செய்தவர் கையொப்பம் வாங்கி முடிக்க சாஹியும் சதாசிவம் அங்கிளும் கையொப்பம் போட்டார்கள். உர்ரென்று முகம் வைத்தாலும் தம்பதிகளை வாழ்த்தி கை கொடுத்து விட்டு அகன்றார் பதிவாளர்.

வர்ணிக்கு மனம் முழுக்க ஒரு மாதிரி நெகிழ்ந்து போயிருந்தது.

பூஜாவும் பிரதீப்பும் அவனுக்கு மாறி மாறி நன்றி சொல்ல தலையசைத்து விட்டு அவன் வெளியே நடக்க அப்போதுதான் டிராபிக் தடைகளை கடந்து வந்து சேர்ந்திருந்த கூட்டம் அவர்களை சுற்றி வாழ்த்துகள் சொல்ல "இந்தாப்பா ஆபீஸ் பூட்டப்போறோம்.. கொஞ்சம் வெளியே போறீங்களா" என்று கேட்கப்பட்டதும் தான் அசடு வழிய எல்லாரும் வெளியே வந்தார்கள்.

"உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. அம்மாவைப் பத்தி கவலையே படாத.. நம்ம எல்லாரும் தான் இருக்கோம். சமூகம் என்றால் அப்படித்தான். நல்லதும் கெட்டதும் இருக்கும் நம்ம தான் ஒருவரை ஒருவர் தாங்கிக்கணும்,," என்று முதுகில் தட்டி விட்டு போக சாஹிக்கு கண் பனித்ததோ இல்லையோ பின்னேயே வந்து கொண்டிருந்த வர்ணிக்கு கண் கலங்கியது.

சாரி மக்களே லேட் ஆயிட்டு ,,ஒரு வழியா கல்யாணம் முடிந்து விட்டது . .
 
kris

New member
Jul 28, 2026
2
0
3
அடப்பாவமே கடைசில எங்க ஹீரோவ சாட்சி கையெழுத்தும் போட வச்சுட்டாய்ங்க😛😛😛
"பம்மல் கே சம்பந்தம்" படத்துல வர்ற கல்யாணத்தை மிஞ்சிருச்சு பூஜாவோட கல்யாணம் சூப்பர் 🤩🤩🤩
 
NirmalaR

Member
May 22, 2026
3
0
13
சாஹி - நீ மாமனிதன் பா , உனக்குள்ளே ஒரு நல்ல மனிதன் இருக்கிறான் .அது உனக்கே தெரியல .
வர்ணி - ஜாலியா இருந்தாலும் அவ இன்னும் சரியாகலைனு தோணுது .
லக்கி - ஆண்ட்டி சூப்பர் . அவங்கள மத்தவங்க தங்களோட சேர்த்துக்கறதும் அருமை ‌.
 
Gayathri

New member
Jul 22, 2025
6
-3

Hero "romba policea" thaan iruparu pola....but finally siripu police ayitaru....nice epi
 
Aug 3, 2024
52
-6
43
செம எபி.. 😍
மற்ற எல்லாருடைய பங்களிப்பை விட சாஹியின் involvement தான் அதிகமா இருக்கே.. கோவில்ல போட்டோக்கு போஸ் கொடுக்கறதென்ன.... கார்ல கூட்டிட்டு போறெதென்ன... ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சைன் போடறதென்ன.. கலக்கிட்ட தம்பி.. 🤣

அம்மாவோட மகிழ்ச்சியும் கூட அவனுக்கு ஒரு காரணமா இருந்திருக்கலாம்.
 
Sharon

New member
Jul 14, 2026
5
0
3
Parameshwari Mall munnadi, banner la poothoovura pose la Saahi nikka, manamakkal aaseervatham vaangurathu matum dan missing🤪.. Naveen, you can do it🫢 Saahi! Vidhi Valiyadhu man😂😂😂
Mr.Pradeep, Kumar aala thapichutan, ilaina Devadas dan😏

Lucky aunty ah kadathina varai seri, Rocky la kadathina idea va nenacha dan😆, Varni ku munna Poi Saahi miratinadhu🤣🤣🤣, Kidnapper ulla mariyadhai poche paa😇

Yaaro oru romantic novel author andha maal makkal kulla podhanju irukanga.. ivanga love story ah coffee oothi valakuranga😁 Saahi kannu la matum sikkidatheenga🫡 (but naanga elam unga supporter😇😎🤩)
 
Mano Ramesh

Member
May 28, 2026
18
1
18
Yet another தெய்வீக லெவல் எபிசோட். Wholesome first part பூஜா இப்படி தான் யோசிப்பான்னு நினைச்சேன். அதையே வர்ணி ரியாக்ஷன் கூட இப்படி தான் இருக்கும்னும் தெரியும் அந்த ஃபீல் ல உள்ள போக போகவே வண்டில இருந்து குதிச்சி வண்டியை நிறுத்தி White Pink theme ன்னு வேற அவன்கிட்ட சொல்லி வர்ணி அல்டிமேட்.

கல்யாணமே பண்ணி வெச்சுட்டு தனியா போக மாட்டேன்னு அதான் சதாசிவம் சார் இருந்தாருள்ள அப்பறம் என்ன தனியா அவளை வேற கார்ல கூட்டிட்டு போற சாஹி.

Anti ஹீரோ - அபலை நாயகி trope ல இருந்து மோதல் to காதல் trope க்கு ஆண்டிகள் எல்லாம் முன்னேறிட்டாங்க. நீ எப்போ Crime திரில்லர் ல இருந்து Rom - Com ற்கு upgrade ஆகுறது வர்ணி.

Lucky aunty தான் ஹைலைட் வளையல் எடுத்துட்டு வந்தியால இருந்து photo வரை
 
Mathy

Active member
Aug 4, 2024
36
-47
33
Super epi 💖💖💖💖
ஆக்ஷன், அதிரடி, விறுவிறுப்பு, நெகிழ்ச்சின்னு பல திருப்பங்களோட கல்யாணம் முடிஞ்சுடுச்சு 🤩🤩🤩

வர்ணி பயங்கர சைட்டா இருக்கே 🤪🤪 அது கூட பரவாயில்லை கடனேன்னு வந்தவனை டிரஸ் கோட்ல வர சொன்ன பார்த்தியா உனக்கு தில்லு ஜாஸ்தி தான் 🤣🤣🤣
குடும்பமா நின்னு வேற போட்டோ 🥰

கடைசில சாஹி கையெழுத்து போட்டு தான் முடிச்சு வச்சிருக்கான் 😍😍😍
 
Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
Ipdi oru kalayanatha panni parkanum asa varuthe enaku 🤩😂♥️ lovely episode sis..
ஹாஹாஹா சொன்னா ஆட்களை அனுப்பி விடறேன் 😂 தாங்க்ஸ் டா

அடப்பாவமே கடைசில எங்க ஹீரோவ சாட்சி கையெழுத்தும் போட வச்சுட்டாய்ங்க😛😛😛
"பம்மல் கே சம்பந்தம்" படத்துல வர்ற கல்யாணத்தை மிஞ்சிருச்சு பூஜாவோட கல்யாணம் சூப்பர் 🤩🤩🤩
ஹி ஹி தாங்க் யூ . .இதெல்லாம் ஹீரோவோட கடமை இல்லையா ?

சாஹி - நீ மாமனிதன் பா , உனக்குள்ளே ஒரு நல்ல மனிதன் இருக்கிறான் .அது உனக்கே தெரியல .
வர்ணி - ஜாலியா இருந்தாலும் அவ இன்னும் சரியாகலைனு தோணுது .
லக்கி - ஆண்ட்டி சூப்பர் . அவங்கள மத்தவங்க தங்களோட சேர்த்துக்கறதும் அருமை ‌.
lol pavam en baby a kalaaikkathinga :D 😂
Yes. she is not okay
Hero "romba policea" thaan iruparu pola....but finally siripu police ayitaru....nice epi
he he thank you 😂

கையெழுத்தும் போட்டுட்டான் சாஹி😂
அருமையான கலாட்டா கல்யாணம்😂
herovukkaana kadamaiyai aatriyachu
hehe thank you!
Nice update
Thank you

Chasing marriage..awesome episode
haha thank you
செம எபி.. 😍
மற்ற எல்லாருடைய பங்களிப்பை விட சாஹியின் involvement தான் அதிகமா இருக்கே.. கோவில்ல போட்டோக்கு போஸ் கொடுக்கறதென்ன.... கார்ல கூட்டிட்டு போறெதென்ன... ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சைன் போடறதென்ன.. கலக்கிட்ட தம்பி.. 🤣

அம்மாவோட மகிழ்ச்சியும் கூட அவனுக்கு ஒரு காரணமா இருந்திருக்கலாம்.
hehehe avanoda involvement athigama aakkappattiruku :D
yeah..grumpy a irunthalum he is a sweet boy :p

விறுவிறுப்பான ஒரு அமளி துமளி கல்யாணம்
😃😆🤪
thank you 😂

Wow awesome
thank you

Parameshwari Mall munnadi, banner la poothoovura pose la Saahi nikka, manamakkal aaseervatham vaangurathu matum dan missing🤪.. Naveen, you can do it🫢 Saahi! Vidhi Valiyadhu man😂😂😂
Mr.Pradeep, Kumar aala thapichutan, ilaina Devadas dan😏

Lucky aunty ah kadathina varai seri, Rocky la kadathina idea va nenacha dan😆, Varni ku munna Poi Saahi miratinadhu🤣🤣🤣, Kidnapper ulla mariyadhai poche paa😇

Yaaro oru romantic novel author andha maal makkal kulla podhanju irukanga.. ivanga love story ah coffee oothi valakuranga😁 Saahi kannu la matum sikkidatheenga🫡 (but naanga elam unga supporter😇😎🤩)
en indha kolaveri.. avane paavam 😂😂
athe than.. Kumar illanna avan azhuthutte than irunthuruppaan.
hahahaha my dog's name is rocky too..andha name vachathum that scooter immediately got character 😂
haha you never know avan silent reader aa kooda irukalaam 😆

Yet another தெய்வீக லெவல் எபிசோட். Wholesome first part பூஜா இப்படி தான் யோசிப்பான்னு நினைச்சேன். அதையே வர்ணி ரியாக்ஷன் கூட இப்படி தான் இருக்கும்னும் தெரியும் அந்த ஃபீல் ல உள்ள போக போகவே வண்டில இருந்து குதிச்சி வண்டியை நிறுத்தி White Pink theme ன்னு வேற அவன்கிட்ட சொல்லி வர்ணி அல்டிமேட்.

கல்யாணமே பண்ணி வெச்சுட்டு தனியா போக மாட்டேன்னு அதான் சதாசிவம் சார் இருந்தாருள்ள அப்பறம் என்ன தனியா அவளை வேற கார்ல கூட்டிட்டு போற சாஹி.

Anti ஹீரோ - அபலை நாயகி trope ல இருந்து மோதல் to காதல் trope க்கு ஆண்டிகள் எல்லாம் முன்னேறிட்டாங்க. நீ எப்போ Crime திரில்லர் ல இருந்து Rom - Com ற்கு upgrade ஆகுறது வர்ணி.

Lucky aunty தான் ஹைலைட் வளையல் எடுத்துட்டு வந்தியால இருந்து photo வரை
hahhaa thanks girl 🥰
vaanara padai enna plan pannichunu theriyama thaniya poi maattipaana avan..athaan I am only the driver nu avalai koottitu ponaan.. kadaisila andha kuzhanthaiye neethan da nu aayiduchu :D
avalavathu paravalla..ange oruthan milk bottle oda suththittirukaan. avanai eppadi upgrade panrathunu author thinking
she is <3

Yappa oru epi la marriage, registration, saahi and varni misunderstanding clear, saahi thunaikku varniya kootitu poradhu,
good souls ellaroda cooperation and genuine participation , last la saahi ku kedacha insecurity clearance nu satisfying arusuvai virundhu
Sema epi 🥰🥰
thank you 🥰 but the after effects of this incident than kathaiyai kondu poga pothu paarppom

Super epi 💖💖💖💖
ஆக்ஷன், அதிரடி, விறுவிறுப்பு, நெகிழ்ச்சின்னு பல திருப்பங்களோட கல்யாணம் முடிஞ்சுடுச்சு 🤩🤩🤩

வர்ணி பயங்கர சைட்டா இருக்கே 🤪🤪 அது கூட பரவாயில்லை கடனேன்னு வந்தவனை டிரஸ் கோட்ல வர சொன்ன பார்த்தியா உனக்கு தில்லு ஜாஸ்தி தான் 🤣🤣🤣
குடும்பமா நின்னு வேற போட்டோ 🥰

கடைசில சாஹி கையெழுத்து போட்டு தான் முடிச்சு வச்சிருக்கான் 😍😍😍
hehe Thank you 🥰
ava sight adippaa aana seirathu therinju seirala nu ennala guarantee kodukka mudiyatghu :D
 
Mano Ramesh

Member
May 28, 2026
18
1
18
hahhaa thanks girl 🥰
vaanara padai enna plan pannichunu theriyama thaniya poi maattipaana avan..athaan I am only the driver nu avalai koottitu ponaan.. kadaisila andha kuzhanthaiye neethan da nu aayiduchu :D
avalavathu paravalla..ange oruthan milk bottle oda suththittirukaan. avanai eppadi upgrade panrathunu author thinking
she is <3

இவள வேற இன்னும் வளரவே இல்ல அதுக்குள்ள பிசினஸ் பண்றேன்னு வந்துட்டா ன்னு வேற சொல்லிட்டு இருக்கான் கஷ்டம் தான்