லக்கி வீடு - 1

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
அவசர அவசரமாய் குளித்து வழக்கமாய் அவள் அணியும் அயர்ன் செய்து வைத்திருந்த செட்களில் மீதியாய் இருந்த ஒரேயொரு பெப்லம் டாப் கூட ஒரு சாஃப்டான பலாஸோ பான்ட்டையும் இழுத்தெடுத்து அணிந்து கொண்ட வர்ணி தன்னுடைய நீளக்கூந்தலை விரலால் கோதிக்கொண்டே ஓடி வர, அவர்களிடம் இருந்த ஒரே ஒரு கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு கண்ணுக்கு மை தீட்டிக்கொண்டிருந்தாள் பூஜா.

"என்னை எழுப்பி விட்டிருக்கக் கூடாதா எருமை?" அவளை என்று கடித்தபடி அவசர அவசரமாய் தலை வாரினாலும் அவளுடைய கண்கள் பூஜா புதிதாய் வாங்கி வைத்திருந்த டின்டட் சன்ஸ்கிரீனை குறி வைத்திருந்தன.

"விடிய விடிய எவனோ எவனையோ கொலை பண்றதை பார்த்துட்டிருந்துட்டு காலைல என்கிட்ட வராத சொல்லிட்டேன்." என்று கோபமில்லாமல் முறைத்தபடி பூஜா நகர

"நீ மட்டும் உன் ஆள்கிட்ட மிட்நைட் வரை கடலை போடுற... அது சரியா?" என்ற வர்ணி இப்போது அந்த டியூபை எடுத்து கொஞ்சமாய் முகத்தில் தடவிப்பார்த்தாள். பிடித்திருந்தது. யார் எதை வாங்கினாலும் அந்த வீட்டில் எல்லாமே பொதுச் சொத்தே.

"நான் என் ஆள்கிட்ட தானடி கடலை போடறேன்..." என்று அங்கிருந்தே முறைத்தாள் பூஜா

"அப்போ நானும் என் டிவில தானே பார்க்கிறேன்” என்று இவளும் பதிலுக்கு முறைக்க

“உன்கிட்ட மனுஷன் பேசுவானா? பேக்கரி வண்டி வந்திடும் நான் கிளம்புறேன்..நீ இங்கேயே நில்லு" என்றபடி பூஜா வாசலை நோக்கி நடக்கலானாள்

அச்சோ என்று வர்ணியும் அவசரமாய் எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தாள். அடித்துப் பிடித்துக்கொண்டு இருவரும் ஓடி வர, "மெதுவா மெதுவா உங்க சத்தத்திலேயே நான் இடிஞ்சிருவேன்" என்று பயமுறுத்தியது அந்த பழைய அப்பார்ட்மென்ட் கட்டடம்.

"வர்ணி... பூஜு..." என்ற பெண் குரலில் நடந்து கொண்டிருந்த இருவரும் புன்னகையோடு திரும்ப, "அவல் செஞ்சேன் ரெண்டு பேரும் சாப்பிடுங்க... இவரை வேலைக்கு அனுப்பணும் நின்னு பேச நேரமில்லை" என்றபடி வாம்மா மின்னல் என்பது போல வந்த நித்தியா அக்கா வந்து போன தடமாய் இருவர் கையிலும் அந்த டிபன் பாக்ஸ் மட்டும் தான் மீதமிருந்தது. அவர் அதற்குள் ஜீனியாய் மாயமாயிருந்தார்

‘அப்பாடா இன்றைக்கு அந்த காய்ந்து போன பேஸ்ட்ரியில் இருந்து விடுதலை’ என்று எண்ணிக்கொண்டு இப்போது இரண்டு மடங்கு உற்சாகமாய் ஓடியவர்கள் பார்க்கிங் பக்கமாய் ஓடி வர, அந்தோ பரிதாபம் மண்ணில் உருண்டு கிடந்தது ராக்கி.

அது வர்ணியின் ஸ்கூட்டி தான்.

அந்த ராக்கிக்கு வர்ணியை விடவுமே அதிக வயதிருக்க கூடும்.

"எவன்டா அவன் பேபியை கீழே தள்ளுனது?" என்று வர்ணி பதறிக்கொண்டு போய் வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்து பார்க்க ஒரு வழியாய் ராக்கிக்கு உயிர் வந்து விட்டது.

பூஜா பின்னால் தொற்றிக்கொள்ள வீதி சமிக்ஞைகள் இருந்தும் யாரும் பின்பற்றாத வீதியில் ஒரு வழியாய் ராக்கியை விரட்டி அவர்கள் பரமேஸ்வரி மாலுக்கு வந்து சேர நேரம் ஏழு ஐம்பது.ஹப்பாடா பேக்கரி வண்டி காலை எட்டுக்குத் தான் வரும். ஆசுவாச பெருமூச்சோடு இம்முறை ராக்கி விழுந்தாலும் அடிபடாத இடமாய் பார்த்து நிறுத்தி விட்டு இருவரும் மாலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

மால் என்று அந்த கட்டடத்தை சொல்வதற்கு கூட கொஞ்சம் கூச்சம் தான். பழைய கடைத்தொகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம்... ஆங்காங்கே கழன்று விழப்போகிறேன் என்ற நிலையில் கம்பிகளும் வயர்களும் தொங்கும். இளைஞர்களை ஈர்க்க எதுவுமே இருக்காது. ஆக அங்கே வருவதெல்லாம் அருகில் கடை வைத்திருப்பவர்களும் சுற்றுவட்டாரத்தில் பொழுது போகாமல் இருக்கும் முதியவர்களும் தான். எல்லாருக்குமே வருபவர்களில் பெரும்பாலானோரை தெரிந்தே தான் இருக்கும். ஆக மொத்தம் அது ஒரு அரசமரத்தடியின் அப்கிரேடட் வர்ஷன் தான் அந்த பரமேஸ்வரி மால்.

இருவரும் அந்த மாலின் நுழைவாயிலை அடைந்த அந்தக்கணம் வாசலில் வந்து உருண்டது பல வர்ண நூல் பந்து. இருவரும் ஓரடி துள்ளி விலக அவர்களின் கண்கள் சொல்லி வைத்தாற்போல எதிரே இருந்த பூக்கடையைத் தொட்டன. அவர்கள் எதிர்பார்த்ததை போலவே அங்கே ஆக்ரோஷமாய் நின்று கொண்டிருந்தார் சிவபெருமான்.

காமெடிக்கு இல்லைங்க நிஜமாவே அவர் பெயர் சிவபெருமான் தான். அது மட்டுமில்லை அவருக்கு பக்கத்தில் கோபத்தோடு முறைப்பவர் அவர் சக தர்மினி பார்வதி.

"இன்னிக்கு யார் யாரை வெளிநடப்பு பண்றாங்க?" என்று வர்ணியின் காதை கடித்தாள் பூஜா.

"அடுத்த பால் போடட்டும் வெயிட் பண்ணு அப்போ தான் தெரியும்" என்று கண்கள் பளபளக்க வர்ணி சொல்ல, அதற்குள்ளே அங்கே வந்திருந்த இரண்டு முதியவர்களும் இவர்களை கண்டதும் வரவேற்பாய் ஒரு ரகசிய சிரிப்போடு சண்டையையே ஓரக்கண்ணால் பார்த்திருந்தனர்.

"தொழில் பண்ற பொருளை எல்லாம் தூக்கி போடுற? அறிவில்லை? இனிமே நீ எதையும் தொடக்கூடாது. இதெல்லாம் என் அப்பா கொடுத்தது" என்று பார்வதி ஆன்ட்டி சண்டைக்கு நிற்க, "இன்றைய கள நிலைவரப்படி சிவன் தான் வெளியே போவார் போலிருக்கு" என்று வர்ணி பூஜாவின் காதை கடித்த மறுகணம், "சொல்லி காட்டுறேல்ல?... உன் கடையில மனுஷன் இருப்பானா?" என்று முறைத்தபடி வெளிநடப்பு செய்தார் பெருமானார்.

பரமேஸ்வரி மாலின் காலைகள் மின்சாரம் இல்லாமல் ஆரம்பமானாலும் ஆகும், ஆனால் இந்த ஒரு காட்சி இல்லாமல் ஆரம்பமானதே கிடையாது. யார் வெளியே போகிறார் என்பது மட்டும் தான் மாறிக்கொண்டிருக்கும். மற்றபடிக்கு சண்டைகள் எப்போதுமே அந்த பூக்கடையில் மாறிலியே.

வேக வேகமாய் போருக்கு போவபர் போல போனவரை கண்டு பொங்கிய சிரிப்பை வெளிக்காட்டாமல் இருக்க பின்புறமாய் திரும்பிய வர்ணி அவர்களுக்கு பின்னே முறைத்தபடி நின்ற நெடியவனை கண்டு பக்கென்று அதிர்ந்து தான் போனாள்.. இவ்வளவு நேரமும் இவன் இங்கேயா இருக்கிறான்? என்ன ஒட்டுக்கேட்கிறானா என்று பொங்கிய மனது அவன் வழியை குறிப்பாய் பார்க்க அசடு வழிந்து பிறகு கோப முகத்தை பூட்டிக்கொண்டு விடுவிடுவென தங்களுடைய கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பரமேஸ்வரி மாலின் இடப்பக்கம் முதலாவது கடை, இலக்கம் நூறு, வாசலில் தொங்கும் பூச்சாடிகளில் பசிய கொடிகள் வெவ்வேறு நீளங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் டார்லிங் கபேயை நீங்கள் முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விடுவீர்கள். அது தான் வர்ணியும் பூஜாவும் பங்குதாரர்களாய் நடாத்தும் காபி ஷாப். அங்கே முதலாளிகளும் அவர்களே, தொழிலாளர்களும் அவர்களே..

காலங்கார்த்தால இவன் மூஞ்சில முழிச்சு அசிங்கப்பட்டுட்டேனே என் நாள் விளங்குமா என்று கொதித்தபடி கடையை திறந்து முன்னே இருந்த அரைச்சுவரை சற்று பலத்துடனேயே அடித்து பூட்டியவள் திரும்பி பார்த்தால் அவன் போயே விட்டிருந்தான்.
 

Author: Ush
Article Title: லக்கி வீடு - 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
View attachment 1294

அவர்கள் இருவரையும் கண்டதும் காபிப்பிரியர்கள் வரிசை கட்டிக்கொள்ள

"எதுக்கு இப்போ நம்ம வர்ணி பாப்பா கோபமா போகுது?" என்று கிசுகிசுத்தார் ஒருவர்.

"அது ஒண்ணுமில்லை... போன வாரம் சாஹியோட ஜிம்முக்கு போயிருக்கா? அவன் விரட்டி விட்டுட்டான் அந்த கோபம் தான்" என்று இன்னொரு தாத்தா பதிலுக்கு கிசுகிசுக்கிறேன் என்று உரத்த குரலில் சொல்ல நமுட்டு சிரிப்போடு இவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ஆர்டர் எடுக்க ஆரம்பித்திருந்தாள் பூஜா.

தண்ணீர் ஸ்பிரே பாட்டிலை எடுத்து மரங்களுக்கு அடிக்க ஆரம்பித்த்தவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இவர்களாவது பரவாயில்லை, ஒன்பது மணிக்கு மேல் மாலுக்கு வந்து சேரும் ஆன்ட்டிகள் அதற்கு மேலும் கண் மூக்கு காத்து வைத்து அவனை ஒரு ஆன்ட்டி ஹீரோவாயும் வர்ணியை அவனிடம் வதைபட்ட அபலையாகவும் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு வாரமாய் பரமேஸ்வரி மாலின் பெஸ்ட் செல்லர் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் காரணமானவனை நினைக்கவே அவளுக்கு கடுப்பு உச்சத்துக்கு ஏறியது. ஆனால் அவனோ அவளை நினைவில் வைத்திருக்கிறானோ என்று கூட தெரியவில்லை... அவனுக்கு மனிதர்களே மொத்தமாய் அலர்ஜியாய் இருக்க வேண்டும். இதுவரை ஒருவரோடும் அவன் நின்று பேசி வர்ணி பார்த்ததே இல்லை.

பச் யாரோ எவனோ என்னவோ ஆகிறான்..நமக்கென்ன என்று தலையில் தட்டிக்கொண்டு அவள் கடமைக்கு மீண்டு விட்டாள். அதன் பிறகு நேரம் நகர நகர பரமேஸ்வரி மாலும் பிசியாக ஆரம்பித்தது.

பேக்கரி வண்டி வந்து உணவு வகைகளை இறக்கி விட்டு போக, எல்லாவற்றையும் கண்ணாடிப்பெட்டிக்குள் காட்சிப்படுத்தி விட்டு டார்லிங் காபேயின் அன்றைய ஸ்பெஷல் மெனுவாக “go cholesterol latte” அவள் போர்டில் எழுதி முடிக்கவில்லை..முன்னே இருக்கும் போட்டி ஐஸ்க்ரீம் கடை Honey and bubloo வில் go cholesterol ஐஸ்க்ரீம் புதிதாய் மெனுவில் முளைத்திருந்தது,

அடேய்களா! எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த ரெசிப்பியை கண்டு பிடிச்சு மண்டையை உருட்டி ஒரு பேரை கண்டு பிடிச்சா இவனுங்களுக்கு கொழுப்பை பாரு

உங்களுக்கு வெக்கமே இல்லையா என்று வர்ணி முறைக்க எதிரில் இருந்த குமாரும் பாலுவும் முகம் முழுக்க குறும்போடு “நாம வளரணும் , கூட சேர்ந்து எல்லாருமே வளரணும் வர்ணி, தண்ணியா சாப்பிடுறவங்களுக்கு டார்லிங், ஐஸ்க்ரீமா சாப்பிடுறவங்களுக்கு நம்ம ஹனி எப்படி?”

பதில் சொல்லாமல் முறைத்தவள் திரும்பி வந்து விட்டாள். இது ஒன்றும் புதிதும் இல்லை, ஒரு கடைகளிலும் யார் புதிதாய் கண்டு பிடித்தாலும் மற்றக்கடை அதை சுட்டு விடுவார்கள்

அன்றைக்கு வியாபாரம் கொஞ்சம் மந்தமாய் தான் நகர்ந்து கொண்டிருந்தது. வார நாள் இல்லையா? பக்கத்தில் கடைகளுக்கு வருபவர்கள் மாலை எட்டி ஒரு பார்வை பார்த்து அங்கிருக்கும் தோழர்களுக்கு ஹாய் சொல்லி காபியோ ஐஸ்க்ரீமோ சாப்பிட்டுக்கொண்டு திரும்புவது தான் பலரின் ரூட்டின்.

கல்யாணம் குழந்தை, இறப்பு, நோய் என்று தங்கள் வாழ்வின் அனைத்து நிலைகளையும் பேச்சோடு பேச்சாய் பகிர்ந்து கொண்டு செல்வார்கள். இங்கே வந்தே ஒரு வருஷமே தான் ஆகியிருந்தும் அவளும் அந்த மனிதர்களோடு அங்கேயே பிறந்து வளர்ந்ததை போலத்தான் உணர்ந்தாள்.

வரிசையாய் ஆர்டர் எடுத்துக்கொண்டே வந்தவள் அவளுக்கு முன்னே அசட்டு சிரிப்போடு நின்று கொண்டிருந்த நவீனை கண்டதும் பொய்க்கோபமாய் முறைக்கலானாள்.

“டார்லிங் காபேயில் ஜிம் ப்ரோஸ்க்கு அனுமதியில்லை. பேசாம போய்டு” என்றவளின் கோபத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சிரித்தபடி

“அக்கா. உங்களுக்கு அவர் கூட தான் வாய்க்கால் தகராறு. நான் என்ன செஞ்சேன்?” என்று கேட்டான் நவீன்

“நீயும் அங்கே தானே இருக்க.”

ப்ச் இதெல்லாம் ஒரு காரணமா என்று அவளது கோபத்தை ஊதி தள்ளியவன் “பிசினஸ் வேற..பர்சனல் வேற.. கேட்டுக்கோங்க.. இப்போ ஆர்டரை எடுங்க..” என்று அவளை சரி செய்தும் விட்டான் நவீன்.

அவனை செல்லமாய் முறைத்தவள் விடுவிடுவென ப்ரோட்டீன் லாட்டேவை மட்டும் தயாரித்து டக்கென வைத்தாள்.

“அமெரிக்கானோ?” என்று அவன் கேட்க

“அதை அமெரிக்காவுல போய் வாங்கிக்க சொல்லு” என்றாள் வர்ணி முறைப்புடன்

“அக்கா பாவம்கா.” என்று அவன் சொல்ல

போடா. என்று விட்டாள் வர்ணி

பழிக்கு பழிவாங்கிவிட்டவளாய் குதூகளித்தவள் அவளுக்கு பின்னே ”பாவம் கேட்காதவங்களுக்கும் காபி கொடுக்கற வர்ணிக்கே இவ்வளவு கோவம் வருதுன்னா என்னவோ பாராதூரமா நடந்துருக்கு” என்று கதை வசனம் வேறு திசைக்கு நகர்ந்ததை காதில் கேட்டு மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டாள்.

இவங்களோட!!!

சற்று நேரம் போயிருக்கும்.

"டார்லிங் கபே?” என்று உரத்த குரலில் பெயரை படித்துக்கொண்டே வந்தவர் அவளின் முன்னே வந்து நின்று “ஹாய் டார்லிங் எனக்கு ஒரு காபி கிடைக்குமா? சர்க்கரை தூக்கலா..." என்று இயல்பாய் சின்னதாய் குறும்பும் கொஞ்சலும் கொண்ட குரலோடு ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி அவளின் முன்னே சிரிப்போடு நின்று கொண்டிருந்தார்.

அவரை பார்த்ததும் புன்னகை ஒட்டிக்கொள்ள “ஹாய் ஆன்ட்டி... இன்றைய ஸ்பெஷல் கோ கொலஸ்திரோல் லாட்டே... ட்ரை பண்ணி பார்க்கிறீர்களா?" என்று கேட்டாள் வர்ணி

பதிலுக்கு மெனு போர்டை ஒரு பார்வை பார்த்து "எனக்கு டயட் காபி எதுவும் வேணாம்..." என்று அவர் முகத்தை சுருக்க சிரித்து விட்டாள் அவள்.

அவர் பெயர் லக்கியாம். காபி குடித்த பிறகும் போகாமல் அங்கேயே சுற்றி வருபவர்கள், வர்ணி, பூஜா என்று எல்லாரையும் பிரண்ட் பிடித்து கலகலவென்று சுற்றிக்கொண்டிருந்தவர் அவ்வப்போது அவள் வாடிக்கையாளர்களுக்கு கலந்து கொண்டிருந்த காபியை எடுத்து உரியவரிடம் கொடுக்க, வெள்ளை மனமாய் செய்பவரை ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று பேசாமல் இருந்தாள் வர்ணி.

அடுத்து பார்வதி வந்து பேஸ்டி கேட்க, "டார்லிங் இதை எப்படி திறக்கிறது?" என்று பூட்டிய கப்போர்டை காட்டி இவளிடம் லக்கி கேட்டபோது தான் பூஜா இங்கே வந்து சந்தேகமாய் எட்டிப்பார்த்துவிட்டு திறந்து பேஸ்டியை எடுத்து கொடுத்தாள். அவளது கண்கள் கொஞ்சம் இவர் மேல் கண் வைத்திரு என்று ரகசியம் சொல்லிப்போக சம்மதமாய் இமை மூடித்திறந்தாள் வர்ணி.

துருதுறுப்பாய் ஓடிக்கொண்டிருந்தவரை பார்த்து "நீங்க யாரு இங்கே உங்களை பார்த்ததே இல்லையே..." என்று பார்வதி அவரை கேட்கவும்,

"என் பெயர் லக்கி. நான்... நான்... இன்னைக்கு காலைல தான் வந்தேன்... இங்கே டார்லிங் கூட பார்ட் டைமா ஒர்க் பண்றேன்" என்று உற்சாகமும் சிரிப்புமாக வர்ணியை கைகாட்டி லக்கி ஆன்ட்டி சொல்லவும்

எதே என்று திகைத்துபோனாள் வர்ணி.


வருவார்கள்
 
Aug 3, 2024
52
-6
43
வாய்க்கா தகராறு செய்றவன் தான் ஹீரோவா🤭
தலைப்புல வர்ற லக்கிக்கு வயசு 60 ஆ 😳

பொண்ணுங்க ரெண்டு பேரும் கலகல..
நிறைய கேள்விகள் இருக்கு
Interesting start 🤩
 
  • Love
Reactions: Ush and Mano Ramesh
Aug 3, 2024
52
-6
43
Wow what a quick come back. எல்லாரும் ஒரு curiosity create pannum characters ஆகவே இருக்காங்க. Looking forward to see how this universe evolve
ஆமா
அகவிழி காட்டுல இருந்து இந்த புராதனமான மாலுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க உஷ்
 

Mano Ramesh

Member
May 28, 2026
18
1
18
ஆமா
அகவிழி காட்டுல இருந்து இந்த புராதனமான மாலுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க உஷ்
அந்த மால் ஏதோ Spencer plaza mathiri வாழ்ந்து கெட்ட ஜமீன் பில்டிங் மாதிரி இருக்கு
 

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
லக்கி ஆன்டி (பாட்டின்னு சொல்லுனுமோ) செமையா இருக்கே😁வீட்டில கோச்சிட்டு வந்துட்டீங்களோ🤔
ஹாஹா அறுபது தானே அவங்க . . ஆன்ட்டி தான் :love:
Interesting ush sis
நன்றி நன்றி ரம்யா :love:
இந்த பிள்ளைகளுக்கு
லக்கி லக்கியானு பாப்போம்
ஹா ஹா இவங்களுக்கு ஆன்ட்டி லக்கியா ? லக்கிக்கு இவங்க லக்கியான்னு பார்ப்போம் :D :love:
Interesting start 🤩🤩

Thank you!!!:love:
 

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
Wow what a quick come back. எல்லாரும் ஒரு curiosity create pannum characters ஆகவே இருக்காங்க. Looking forward to see how this universe evolve
Hey Welcome welcome .. I am looking forward to see that too :love: :love:
வாய்க்கா தகராறு செய்றவன் தான் ஹீரோவா🤭
தலைப்புல வர்ற லக்கிக்கு வயசு 60 ஆ 😳

பொண்ணுங்க ரெண்டு பேரும் கலகல..
நிறைய கேள்விகள் இருக்கு
Interesting start 🤩
hero ku ilakkaname athaana :love: thank you and a big welcome! ♥️
Whattt a surprise 🤩
Characters ellam sema interesting ah irukanga sis 😍.. Parameswari mall la nikkurathu pola iruku.. ♥️
vaango vango..enakume surprise than haha ♥️ happy to see you all back here
Wow awesome
Thank you
Superb start😍
யாரு indha aunty
Opposite shop ஓட spy யா
வர்ணி ya நோட்டம் vida vandha மாமியாரா
Saahiyoda thaan வாய்க்கா தகறாரா
vanakkam vaanga..Spy aaaa? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: agavizhi mudinthu vittathu manna
irukkalaam.. ♥️
Varni - sahi next journey start .
yesss ♥️