Thank you!

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
ஹாய் மக்களே.. அகவிழி படிச்சு முடிச்சிருப்பீங்க.. என்னாலயும் இன்னும் அவர்களுக்கெல்லாம் பிரியாவிடை கொடுக்க முடியலை. மார்ச் ல ஆரம்பிச்சு ஜுலை வரை நீண்ட பயணம்..என்னுடைய வரலாற்றிலேயே நீளமான கதையா மாறிருக்கு. முதல் அத்தியாயத்தில் இருந்து என்னுடன் கூடவே வந்து, பொறுமையா எனக்காக வெயிட் பண்ணி திரியை ஜெக ஜோதியா வச்சிருந்த என் டார்லிங்ஸ்கு முதல் பெரிய பெரிய பெரிய நன்றி. நீங்கல்லாம் கொடுத்த ஆதரவும் அன்பும் இல்லைன்னா இந்த பயணம் சாத்தியப்பட்டிருக்காது. நீங்க கேட்ட கேள்விகளும் உங்களுடைய கமெண்ட்ஸ் எல்லாமும் தான் தொடர்ந்த அத்தியாயங்களா மாறிற்று.

ஒரு வழியாய் எழுதி முடிச்சதும் ஹப்பா எனக்கு வந்த செய்திகளையும் பாராட்டுகளையும் நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை.. ஒரு மாதிரி திகைச்சு போய் இருந்தேன் போனவாரம்..லவ் யூ ஆல் <3 அதுவும் எனக்கு முக்கியமான தருணத்தில் கிடைத்த இந்த அன்பு எவ்வளவு பெறுமதியானது என்று உங்களுக்கு தெரியாது. கிண்டிலில் இருக்கும் வரை நானா எப்போ முடியுதோ வருவேன்.. அங்கே போஸ்ட் செய்வேன்..மீதியை அல்கரிதம் பார்த்துக்கொண்டது. அங்கிருந்து வெளியே அனுப்பப்பட்டதும் ஒரு மாதிரி என்ன செய்றதுன்னு தெரியலை.. வாசகர்களை எங்கே சந்திப்பது? அப்படி எழுதுவது வாசகர்களை போய் சேரலைன்னா எதுக்குமே உபயோகம் இருக்காது. சரி விட்டுடுவோமா என்று கூட நினைத்தேன்.. வேலை- என்னுடைய வளரும் 2 வயது குழந்தை -வீடு இதெல்லாம் தாண்டி என்னால் இதையும் தாங்கி பிடிக்க முடியுமான்னு எனக்குள்ளே ஒரே யோசனை. ஆனா நீங்க கொடுத்த பின்னூட்டங்கள் வழியே கொடுத்த உறுதி நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னது போலிருந்தது. நன்றி என்ற ஓரு சொல் போதாது மக்களே

இப்போ அகவிழிக்கு வருவோம்.

அன்வி கூட வாசகரும் அந்த தெரியாத உலகத்துக்குள்ளே போகணும்.. அன்வி தான் நம்ம எல்லாரும். சம்பந்தமே இல்லாம சுத்திட்டிருக்கற நம்மை யாராவது பிடிச்சிட்டு போய் அகவிழியில் விட்டா என்ன எப்படி ரியாக்ட் பண்ணுவோமோ அப்படி நினைச்சு தான் அந்த சீன்ஸ் எல்லாம் உருவானது.. அன்வி தான் நம்ம..அவளை பற்றி அதிகம் பேசவேண்டியதில்லை.. அவளோட சிரிப்பு, சந்தோசம், ஆர்வம், பயங்கள் , சமயங்களில் ஆர்வக்கோளாறு எல்லாமே நமக்குள்ளே இருப்பது தானே
View attachment 1280
என் அகி ... ஒரு இரும்பு ஆபீசர், மிஷன் மட்டும் தான் அவனுக்கு தெரியும். ஆனா உள்ளே அவன் மனசு பட்டர் மாதிரின்னு அவருக்கே தெரியாது. ஹி ஹி ஆபத்தை தேடிப்போய் அதை ஆராய்ச்சி பண்றவனா இருந்தவனை தொடர்ந்த அவனுடைய அனுபவங்கள் பண்படுத்திக்கொண்டே வர இப்போ கிளியின் கழுத்தில் உள்ள ஆரம் மட்டுமே தெரியற அர்ஜுனா இறுகி போய்ட்டான்.
போறோம்..இந்த ஜுனியர்களை வச்சு கேஸை முடிக்கிறோம்..கிளம்பறோம்னு உள்ளே வந்தவன் மொத்த பேரையும் கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கிட்டான். எங்கே இந்த புள்ளை அவளும் மாட்டி மொத்த ப்ராஜெக்டையும் தலைகீழா கவுத்து விட்டுருவாளோன்னு கவனிக்கிறேன்னு நினைச்சு நினைச்சே அங்கே போய் விழுந்துட்டார் சார். பாவம் ஜாக்கிக்கு இவன் அவிச்ச சிக்கனை கொடுத்தே ஓட வச்சிட்டான்.. பிரைட் சிக்கன் கொடுத்திருந்தா ஒருவேளை இருந்திருப்பானோ என்னமோ? எது அப்படியோ அவனை மறுபடி இளக வைக்க அன்வி வந்தாச்சு. அவளுக்கு வரப்போகும் பிரச்சனைகள்ல டென்ஷானாகியே கூடிய சீக்கிரம் மொட்டையாக வாழ்த்துக்கள்

View attachment 1281
துருவ் - இந்த பெயர் மேல எனக்கு ஒரு கிரேஸ் இருக்கு. இப்போ தான் ரெண்டு வேற கதைகளிலும் இதே பேர் வந்திருக்குன்னு ஞாபகம் வருது .. உணர்வு பூர்வமா யாரு குழந்தைன்னு கேட்டா அதி தான்னு நான் சொல்லுவேன். துருவ் மாதிரி உறுதியா தைரியமா , இயல்பா சந்தோஷமா வாழ்க்கையை எதிர் கொள்ளறது எல்லாராலும் முடியாது. அவங்க ரெண்டு பேருமே..சமமான சாதனையாளர்கள் ஆனா அந்த மன உறுதியும் நிதானமும் துருவ்வை ஒரு படி மேலே தான் வைக்கும் <3
View attachment 1282
என்ன சொல்ல அவன் உயிரா மமதியை லவ் பண்ணினான். சந்தோஷமா வாழ்ந்தான், அவனுடைய உலகமே மமியா தான் இருந்திருக்கு. அந்த குறுகிய கால வாழ்க்கைல மமிதா சாதிச்சதும் பூமில விட்டுப்போன கால்தடங்களும் நிறைய நிறைய.. அப்படி ஒருத்தியை லவ் பண்ணி வாழ்ந்தவன், ஒரு வருடம் கூட ஆகாமல் இன்னொரு வாழ்க்கையை எப்படி யோசிப்பான்? எல்லாரும் பீல் பண்ணினீங்க.. ஆனா இந்த பாயின்ட்ல வாழ்க்கை முடியாது மக்களே ..ஒரு ஐந்து ஆறு வருஷம் கழித்து அவனும் மீண்டும் காதலில் விழலாம், சந்தோஷம் திரும்பலாம்.. இல்லை இதுவே போதும்னு இருக்கவும் செய்யலாம்..உங்களுக்கு பிடிச்சதை போல கற்பனை பண்ணிக்கோங்க

தெரஸ்.. ஏஜென்ட் டீனான்னு நீங்க கொடுத்த பெயர் அப்ட். ஸ்வீட்டான பூக்களை விரும்பும் தியான ஆசிரியையை தாண்டி இத்தனை வருடங்களில் ஆர்மியில் இருந்து அகவிழிக்கு நேரடியாய் வந்து சேர்ந்த ஒரே அலுவலர். அகஸ்தியாவின் A 1 பாதுகாப்பு வட்டத்தில் முதலாவது அலுவலர். ஆனால் இது வரை நேரடியாய் அவளுக்கு மிஷன்களின் சுடுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அந்த எட்டுப்பேர் விஷயம் அத்தனை சுலபம் இல்லை..அவங்க மீண்டு வரட்டும் <3 தர்ஷனை தூக்கி மிஷனில் ஒன்றாய் போட்டால் சின்ன கோடு பக்கத்தில் பெரிய கோட்டை போட்டதாகி விடும் என்று அகிக்கு மனு கொடுக்கலாம் 😂
View attachment 1283
 
Author: Ush
Article Title: Thank you!
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
எல்லா பாட்ச்லயுமே ஒரு கீதன் இருப்பான். தனியாவே சுத்திட்டிருக்க பிடிக்கும். அவனுக்குன்னு ஒரு உலகம்.. ஆனா சைலன்ட்டா மொத்த பேரையும் கேர் பண்ணுவான்.பயங்கர ஷார்ப்பா இருப்பான். அவனுக்கு கோபம் வந்தா மொத்த பேரும் கப் சிப்ப்னு சைலன்ட் ஆகி அவன் சொல்றதை பண்ணிருவோம். ஒண்ணுமே தெரியாம நான் உங்க க்ரூப்ல இல்லடான்னு சுத்தறவன் தான் நல்லா யோசிச்சு பார்த்தா அந்த க்ரூப்பை அவங்களுக்கே தெரியாம தலைமை தங்குறவனா இருப்பான்.
View attachment 1286

இயல்- நீங்க கவனிச்சிருந்தீங்கன்னா தெரியும். இந்த வருஷ பாட்ச் ஓட முதுகெலும்பே இவள் தான். எப்போவும் எல்லார்லயும் நல்லதை மட்டுமே பார்க்கற அழகி, இருக்கும் இடத்தை ஜாலியா வச்சிருப்பா.. அவளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒண்ணுன்னா சண்டை போடறதுல இருந்து தப்புன்னா உடனே மன்னிப்பு கேட்டு சேர்க்கறது வரை.. ஆரம்பத்தில் இருந்து அங்கே உருவான நட்புறவுகள், இயல் இல்லைன்னா உருவாகியிருக்குமோ தெரியாது. அவளால தான் பிரியாணி குரூப் பார்ம் ஆனது, கீதனை பிடிச்சு இழுத்துட்டு வந்து காதல்ல விழுந்தா.. எப்போவும் கருப்பில் சுத்துறாங்கவங்க மத்தியில் ஒரு கலர்புல் பெண், கிட்டத்தட்ட ஜுனியர் தெரசா..இவளுக்கும் துப்பாக்கி சுடுவது ரொம்ப பிடித்திருந்தது கவனிச்சீங்களா?
View attachment 1285

ஷெர்லின்..அவளை போலவும் கண்டிப்பா ஒரு டாப்பர் இருப்பாங்க.. நம்ம பேசற ஜோக்ஸ் கூட புரியாம அப்பாவியா, புத்தகமே உலகம்னு சுத்துவாங்க.. என்ன திருட்டுத்தனம் பண்ணினாலும் இவங்களை சேர்த்தா கண்டிப்பா மாட்டிப்போம்..ஆனாலும் விட முடியாமல் அவங்களை எப்படியோ கூட கூட்டிட்டு சுத்துவோம்.. தர்ஷு அப்படிதான் அவளை கூடவே கொண்டு சுத்திட்டிருக்கான். ஆனா புத்திசாலித்தனம் விசுவாசம், தான் சார் இடத்துக்காய் எதுவும் செய்யக்கூடிய உறுதி அவ கிட்ட இருக்கும். அவங்களோட அம்பித்தனம் தான் அவங்களுக்கு அழகே

View attachment 1287
கவி- ஜாலியான ஆல்ரவுன்டர் காரக்டர், சிரிச்சு சிரிச்சே இலக்கை நோக்கி கூட்டிட்டு போற நல்ல தலைவன்.. அகஸ்தியா சொல்வானே என் தளபதின்னு.. ரொம்ப பொருத்தமான ஒருவன். இயல் அவங்களுக்கு ஜெல்லா இருந்தால், கவி அவங்களை இலக்கை நோக்கி விளையாட்டாவே அழைச்சிட்டு போனவன். என்ன டாஸ்க்கா இருந்தாலும் இயல்பா தலைமைத்துவத்தை எடுத்துக்கறது அவனால முடிந்தது.
View attachment 1288
 
Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
தர்ஷு.. கண்டிப்பா எல்லா பாட்ச்லயும் இப்படி ஒருத்தன் இருப்பான்.. ஹான்ட்ஸம்மா இருப்பான், ஷார்ப்பா இருப்பான், கூடவே ஹெட் வெயிட், அகராதி, ஓவர் கான்பிடன்ஸ்..ஒரு க்ரூப்போட மட்டும் தான் சேருவான்.. நம்மையெல்லாம் ஒரு ஆளா கூட மதிக்காத போல தெரியும். ஆனா ஒரு பிரச்சனை நடக்கும் போது நம் பெயரை சொல்லி கூப்பிட்டு நமக்கே தெரியாத ஆங்கிள்ல போற போக்குல உதவி பண்ணிட்டு போகும் போது தான் நமக்கு அவனை புரியும்..ஓஹோ இவன் எல்லாத்தையும் பார்த்துட்டே தான் இருக்கான்! தர்ஷு அப்படி பட்ட ஒருத்தன் தான்.

View attachment 1291

நிறைய பேர் குறைந்த பட்சம் அவன் விருப்பத்தை தெரசாவுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம்னு பீல் பண்ணீங்க..என்னோட பக்கத்ததுல இருந்து நான் சொல்றேன்.

அவன் அகவிழியில் பார்த்த ஆசிரியர்களில் தெரஸா வித்யாசமா இருந்தாங்க.. அழகா இருந்தது ஒண்ணு, இரண்டாவது அவங்க ரொம்ப சாப்டா, feminine ஆ இருந்தாங்க.. ஒரு இன்டலிஜென்ஸ் அக்காடமியில் ஒருத்தி வந்து தியானம் பற்றி சொல்லிக்கொடுக்கிறான்னா நம்ம ஒரு நிமிஷம் நின்று பார்ப்போம்.. வித்தியாசமான காம்போ இல்லையா? அவனும் அப்படித்தான்.. அவனுக்கு சும்மாவே நான் ஹான்ட்ஸம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்றொரு ஓவர் காண்பிடண்ஸ்.. அவங்களை அவனுக்கு பிடிச்சிருந்ததும் ஒரு ஜாலியான சவாலா எடுத்து தான் flirt பண்ணினான். அந்த ஷூட்டிங் ஸீன் வரை தெரஸ்ஸா…சொல்லிட்டு சேர்க்கவா வேணாமான்னு டீஸ் பண்றது போல மிஸ் அப்படினு முடிப்பான்.
View attachment 1292

ஆனா அந்த ஷூட்டிங் நடந்தப்போ ஓவர் கான்பிடன்ஸ் தர்ஷு ஒரு வேஸ்ட் பீசா ஆயிட்டான். அவனால எதுவுமே உதவி செய்ய முடியலை.. தெரசா தான் அவனையம் அன்வியையும் காப்பாத்திட்டு அவ்வளவு பிளட் லாஸ் ஆனா போதும் பல்லை கடிச்சிட்டு ஏஜி வர்றவரை இருந்தா. அந்த லாஸ்ட் மினிட்ல அவளால இயங்கவே முடியலைன்னாலும் உணர்வோட அவன் கூட இருக்கணும்னு கூடவே இருந்த தெரசாவோட இன்னொரு முகத்தை அவன் அப்போ தான் பார்த்தான். அதுக்கப்புறம் ஏஜி வந்தப்போவும் சரி அதுக்கப்புறமும் சரி அவன் எங்கேயும் தெராசான்னு சொல்லல..மிஸ் மட்டும் தான் சொல்றான். அவங்க மேல இப்போ தான் அவனுக்கு பெரிய மரியாதை வந்திருக்கு..அது லவ்வான்னு எனக்கு தெரியலை மக்களே..

இன்னொரு தரம் இப்படி உதவி செய்யமுடியாதா நிலைல நிக்க கூடாதுனு அவனே துப்பாக்கி சுட கத்துகிறது, அந்த ஆக்சிடண்ட்க்கு அப்புறம் அவன் முன்னாடி இருந்த தர்ஷன் இல்லை. ஓவர் காண்பிடன்ஸ், cocky பிஹேவியர் எல்லாம் போய்டுச்சு..அவன் எல்லாத்தையுமே கூர்மையா நோட் பண்ணுவான்..இயலுக்கு முன்னயே அன்வியை கண்டு பிடிச்சது அவன் தானே..அவனுக்கு பிடிச்ச மிஸ் என்ன பூ என்ன கலர் இதெல்லாம் அவனோட இயல்புனால அவன் கவனிச்சது தான். கடைசில அவங்க திரும்பி வரப்போறாங்கன்னதும் மற்ற எல்லாரையும் விட தெரசாவை எது சந்தோஷப்படுத்தும்னு அவனுக்கு தெரிஞ்சிருந்தது..அது லவ்வாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.. முன்னாடி இருந்தவனா இருந்திருந்தா நான் தான் செஞ்சு கொடுத்தேன்னு தெரசா கிட்ட பதிவு பண்ணியிருப்பான் எப்படியாவது..இப்போ இருக்கறவனுக்கு க்ரெடிட்ஸ் தேவையில்லை.அவங்க சந்தோஷம் மட்டும் போதும்.. மறுபடி சொல்றேன்..லவ்வா கூட இருக்கலாம். ஆனா இந்த புள்ளியில் அது தர்ஷுவுக்கே தெரியுமோ தெரியாது. அவனுக்கு இப்போ தான் இருபத்து மூன்று..அவன் தன்னை புரிஞ்சுக்க, முடிவெடுக்க நிறைய காலம் ஆகும்.. நாம் அகவிழில அவனுக்கு நடந்த அழகான இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் வகை ஞாபகமா அதை கடந்தால் தான் அது அழகா இருக்கும்னு நான் நினைச்சேன். <3

View attachment 1293

கடைசியா ஜாக்கி /பிரின்ஸ் - நீங்க கண்டு பிடிச்சிருப்பீங்க . . அது அகவிழி காம்பசுக்கான என்னோட குறியீடு தான் . . காம்பஸ் எல்லாரையும் அணைத்துக்கொண்டது . உருமாற்றியது . ஆனால் அது அங்கேயே தான் இருக்கும் . .இன்னும் வரப்போகும் தலைமுறைகளை பார்த்தபடி . . நமக்கு புரியாத தெரியாத ரகசியங்களை தனக்குள் கொண்டபடி

இவங்களை தவிர மனு, கிறிஸ்டோ, சஜன், தேவ் இன்னும் நிறைய பேர். :love: ஒரே மாதிரி கதைல வரணும்னு நான் define பண்ணி வச்சிருந்தேன்.. உங்க கூட எல்லாவற்றையும் பகிர்ந்து அவங்களை வழியனுப்பி வைக்கலாம் என்று நினைத்தேன்.

என்றாவது ஒரு நாள் நீங்களும் எங்கேயாவது ஹாலோவீன் பார்ட்டியில் இருக்கும் போது உங்களுக்கு முன்னே முகமூடிகளோடு இருந்து சிரிக்கும் குரூப் இவங்களா கூட இருக்கலாம்..

மீண்டும் நன்றி நன்றி மக்களே.. லவ் யூ ஆல்..மீண்டும் சந்திக்கும் வரை :love:
 
Mano Ramesh

Member
May 28, 2026
18
1
18
சும்மாவே இவங்கள எல்லாம் கொஞ்ச நாள் மிஸ் பண்ணுவேன் இப்போ இந்த போஸ்ட் trigger that feeling even more. இப்போ தான் sharon கூட சேர்ந்து படிச்சிட்டு அன்வி அதியை வெறும் கோப உணர்ச்சியை மட்டும் உணர்ச்சி ஆப்ல இன்ஸ்டால் பண்ணி இருப்பான் போல ஒரு நாள் புடிச்சு uninstall பண்ணி விட்டனுன்னு சொன்னதை எல்லாம் படிக்கும் போது சொன்னதை செஞ்சுட்ட அன்வின்னு இருந்தது. Again registering It was a wonderful Journey, a much needed break for me from the world around me. Thank you once again for the bunch of lovely characters. Btw by seeing the AI photos. I feel Geethan and Sherlin can easily pass as aani Danny siblings.
 
Thanks mano.. Aww ❤️

This AI naan context kodutha for some reason ithu north india nu register panni ellaaraiyum white wash pannuthu 😭 athuku mela time illai naan appadiye vittuten.. Yeah rendu perkum curly hair 😂
 
Aug 4, 2024
13
0
18
அருமை மா. நாங்கள் உணர்ந்த விதம் சரியானதா என்பதை உணர உங்கள் விளக்கம் உதவியது. நாங்களே பயிற்சி முடித்து நண்பர்களை விட்டு பிரிந்தது போன்ற உணர்வு. விரைவில் புதிய கதையுடன் வர வேண்டும்.
 
Mano Ramesh

Member
May 28, 2026
18
1
18
Thanks mano.. Aww ❤️

This AI naan context kodutha for some reason ithu north india nu register panni ellaaraiyum white wash pannuthu 😭 athuku mela time illai naan appadiye vittuten.. Yeah rendu perkum curly hair 😂
Kavi looks more tamil than anyone else. Antha prompt seems an effective one.
 
Aug 3, 2024
52
-6
43
Same here. halloween vantha I used to wear black and black to office. Intha year will remember all these people
.
இவனுங்க யூனிபார்ம் போடாத நேரத்துல கூட மோஸ்ட்லி கருப்புல தானே திரிவானுங்க... 🖤

நானும் அன்னைக்கு லூனா கெட்டப் ல கருப்பஸ்ஸா தான் சுத்த போறேன் 🙌🙌
 
  • Haha
  • Love
Reactions: Ush and Mano Ramesh

Sharon

New member
Jul 14, 2026
5
0
3
Oh my heart ❤️
Such a Cute story❣️❣️❣️
As a reader, naanum AgaVizhi training la oru part madhiri feel pana vachuteenga😇😎
We will also miss this hilarious batch😂🥰

Accident prone Anvi um, Avasara Udhavi Agasthiya um.. arumaiyaana pair😎

Avar rules podrathum.. ivanga tricks ah adhai break panrathumaai.. paavam bha AG😁😜

"Do it, I dare you..." la thodangi
"Idhu veliya pochu nee setha .. " varai evlo serious mode muyarchi panalum, Adhi Cute dan pa❤️

That "Anvi ma ena panreenga?" padikumpodhe enamo perusa varapoguthu nu ready aanalum, "Idhu library ae ila, information centre" padikumpodhu.. kubeer siripu.. kooda travel la irundhavanga elam thirumbi pakura range la🤣🤣🤣

"Arakiyae... " Gap vitu, "Arakanae... " Naal muzhaka enaium Sid Sriram kanakka paadaviteenga😜 Unfortunately, andha paatu la andha oru rendu varthai thaan therium, feeling bad for my colleagues🤪

"Aadhitya karikaalar ... Apdiye Aiswarya Rai kooda flashback poraar" idhu elam ena vidhama ponmozhigal theriuma😳..I can never get over it😄

That thanni satham kekudhu.. aamam kekudhu kekudhu moment elam.. Anvi ah parthu , adeiii aniyayam panra man nee irundhuchu🤩🤩🤩

Mukiyama Jackie engira Prince. " Idhuku idhu Kazhugunae therila", " Idhu dan unga paravaabimaanama", " idhuku Pressure, diabetics elam Iruku nu enaku epdi therium" , " Inime dan nama gavanama irukanum, idhu Jackie ku theriuma".. ipdi Jackie Jokes ilaina.. Prince paridhabangal nu Thani ah izhapeedu ketu case podra range ku ivanga love ku adivangi hospital elam poi iruku...Gap la Kazhugu kadathal vera..Thyagi😂🤣😂

Doberman to Ishthaari Paambu to Dino, idhuvallavo valarchi😆

Anvium Iyalum pesikura scenes elame, especially that kitchen sequence, reminds me of a beautiful quote that we share with our uyir natpus "To have a friend with same mental disorder, bliss nae"😉

Pluto rendu line serthaar pola Iyal kita pesura pola oru scene kuduthruukalam😆 BTW that peyar kaaranam😬

"Cooking time depends on the type of potato.." oru samaiyal scientist ah I couldn't agree more , I trust you bro😎😎😎
Terror peice ah intro aana, Shae alias Sheguevara alias Sherlin kooda, andha multi pot biriyani ah saptum.. "Thirumbi varuven" sonathelam... Utchakattam🤣🤣

Indha gang seidha comaalis cooking, Doravin payanangal, trekking nu elamae laughter riot.❣️🤩❤️

Nee NIB la irundha unakum nalladhilai, naatukum nalladhilai... How true🤣🤣🤣

Oru love triangle kooda ilai.. Friends kula traitors ilai...✨✨✨

Dhuruv, Dharshan, Teras, Madhu nu ... Rendu scene la vandhu verpethum Vendhan varai🤩

Ipdi kutty kutty ah motha kadhaium, wholesome ji💜 Thank you for creating this Agavizhi universe😊😊😊
 
😂 🤣 😅 😁 😆 😄 😀 😹
 
Indha gang seidha comaalis cooking, Doravin payanangal, trekking nu elamae laughter riot.❣️🤩

Nee NIB la irundha unakum nalladhilai, naatukum nalladhilai... How true🤣🤣🤣

Oru love triangle kooda ilai.. Friends kula traitors ilai...✨✨✨

Dhuruv, Dharshan, Teras, Madhu nu ... Rendu scene la vandhu verpethum Vendhan varai🤩

Ipdi kutty kutty ah motha kadhaium, wholesome ji💜 Thank you for creating this Agavizhi universe😊😊😊
Hey Sharon!
Thank you so much da❤️ evlo gnabagam vacchirukeenga!
Sirichitte irunthen padikum pothu.
naamala ezhuthinom awww feel than.. author for the last three months " romba over aa than porompo? aang povom enna panniduvainga" mode la irunthirukkiraar nu appaddama therithu 🤣🤣🤣 kannai mooditte oru flow la poirukenrathu book ai last la edit panna start panninappo than therinjathu. I won't regret though.
🤣🤣Kathaila ellaraiyum assault a kalaaichu attack pannittu real lifelayum athaiye apply pannathaala en veedu and friends in full gant u :p Need Agavizhi detox 😬
AG hehe avanai ennamo strict aana officer aa kaamika naan genuine aa attempt panninen..avanuku than serkkai sariyillai ..kettu poittan 😆
Jackie paridhabangal hahahaha so true ..ippovum athu senjotru kadan theerkka seradha idam sernthu nu paadittu irukaradha thagaval :D
Thank you sooooo much da
Love
Ush
 
Ush

Well-known member
Feb 8, 2026
36
3
93
இவனுங்க யூனிபார்ம் போடாத நேரத்துல கூட மோஸ்ட்லி கருப்புல தானே திரிவானுங்க... 🖤

நானும் அன்னைக்கு லூனா கெட்டப் ல கருப்பஸ்ஸா தான் சுத்த போறேன் 🙌🙌
naanu unga rendu pinnadiyum beatrix get up la varuven